Monday, 16 December 2013

SSLC girls first place in kashmir காஷ்மீரில் பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்கள் முதலிடம் பிடித்தனர்

- 0 comments

SSLC girls first place in kashmir காஷ்மீரில் பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்கள் முதலிடம் பிடித்தனர்: ஆண்கள் வழக்கம்போல் கோட்டைவிட்டனர் SSLC girls first place in kashmir

ஸ்ரீநகர், டிச.16-

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் முதல் 20 இடங்களை கைப்பற்றியுள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முதல் 20 இடங்களில் 70 சதவிகித இடங்களை மாணவிகளே கைப்பற்றியுள்ளனர். 269 பேர் முதல் 20 இடங்களை பிடித்துள்ளனர். அதில் 186 இடங்களை பெண்கள் கைப்பற்றினர். முதல் பத்து இடங்களை 68 பேர் பிடித்தபோது அதில் 55 பெண்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

49,358 பேர் தேர்வெழுதிய நிலையில் 31130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெமினா நகரை சேர்ந்த இக்பால் மெமோரியல் பள்ளியில் படித்த மாணவி காசர் ஜான், 99 சதவிகித மதிப்பெண்களை பெற்று முதலிடம் பெற்றார். 2ஆம் இடத்தை மூன்று மாணவர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் மூவரும் 500-க்கு 494 மதிப்பெண்களை பெற்றது சிறப்பம்சமாகும்.
...

SSLC girls first place in kashmir

[Continue reading...]

Rajasthan judge daughter freed by Supreme Court to marry நீதிபதியின் மகளை காதலனுடன் அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

- 0 comments

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகளை காதலனுடன் அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Rajasthan judge daughter freed by Supreme Court to marry

சித்தார்த் முகர்ஜி என்ற இளைஞர் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தனது காதலி சுப்ரியா ரத்தோரை (30), உயர் நீதிமன்ற நீதிபதியான அவரது தந்தை ஆர்.எஸ். ரத்தோர் சட்டத்திற்கு விரோதமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வீட்டில் சிறை வைத்துள்ளார் என்றும், அவரை மீட்டு தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும், காதலர்களான நாங்கள் இருவேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், நீதிபதி ரத்தோர் அதை விரும்பவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார். வீட்டுச்சிறையில் இருந்த சுப்ரியா ரத்தோரும், இதுகுறித்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கும் உதவி கேட்டு மின்னஞ்சல் அனுப்பியும் இருந்தார்.

இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகளை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சுப்ரியா ரத்தோரை நீதிமன்றத்தில் இன்று போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சுப்ரியா ரத்தோர், எனது பெற்றோருக்கு எதிராக எந்த கோபமும் இல்லை. ஆனால், எனது காதலர் சித்தார்த் முகர்ஜியுடன் செல்ல விரும்புகிறேன். அவரையே நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் நீதிபதிகளிடம் கூறினார்.

இதையடுத்து சுப்ரியா ரத்தோரை தனது காதலர் சித்தார்த் முகர்ஜியுடன் அனுப்பி வைக்குமாறு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் கோர்ட்டில் இருந்து காதலனுடன் சுப்ரியா ரத்தோர் புறப்பட்டுச் சென்றார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger