SSLC girls first place in kashmir காஷ்மீரில் பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்கள் முதலிடம் பிடித்தனர்: ஆண்கள் வழக்கம்போல் கோட்டைவிட்டனர் SSLC girls first place in kashmir
ஸ்ரீநகர், டிச.16-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் முதல் 20 இடங்களை கைப்பற்றியுள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முதல் 20 இடங்களில் 70 சதவிகித இடங்களை மாணவிகளே கைப்பற்றியுள்ளனர். 269 பேர் முதல் 20 இடங்களை பிடித்துள்ளனர். அதில் 186 இடங்களை பெண்கள் கைப்பற்றினர். முதல் பத்து இடங்களை 68 பேர் பிடித்தபோது அதில் 55 பெண்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
49,358 பேர் தேர்வெழுதிய நிலையில் 31130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெமினா நகரை சேர்ந்த இக்பால் மெமோரியல் பள்ளியில் படித்த மாணவி காசர் ஜான், 99 சதவிகித மதிப்பெண்களை பெற்று முதலிடம் பெற்றார். 2ஆம் இடத்தை மூன்று மாணவர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் மூவரும் 500-க்கு 494 மதிப்பெண்களை பெற்றது சிறப்பம்சமாகும்.
...
SSLC girls first place in kashmir
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?