Showing posts with label மாணவிகள். Show all posts
Showing posts with label மாணவிகள். Show all posts

Monday, 12 August 2013

ஆசிட் வீசி கொலை: வினோதினி வழக்கில் 20– ந்தேதி தீர்ப்பு நீதிபதி அறிவிப்பு acid attack vinodhini case 20th judgment judge announced

- 0 comments

ஆசிட் வீசி கொலை: வினோதினி வழக்கில் 20–
ந்தேதி தீர்ப்பு நீதிபதி அறிவிப்பு acid attack
vinodhini case 20th judgment judge announced

காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர்
வினோதினி. இவர் சென்னையில் சாப்ட்வேர்
நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த
ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது காரைக்காலுக்கு வந்துவிட்டு நவம்பர்
14–ந்தேதி சென்னைக்கு புறப்பட்டார். அவர்
பஸ் நிலையத்துக்கு செல்ல
வீட்டை விட்டு வெளியே வந்தபோது காரைக்காலை சேர்ந்த
சுரேஷ் என்ற வாலிபர் அவர்
மீது ஆசிட்டை விசினார்.
இதில் வினோதினி முகம் முழுவதும்
வெந்தது. அவர் சென்னை கீழ்ப்பாக்கம்
ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது இரு கண்களும் பார்வையிழந்தது.
தொடர்ந்து 1 மாதத்துக்கு மேலாக
சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென அவர்
உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சுரேஷ்
கைது செய்யப்பட்டார். வினோதினி காதலிக்க
மறுத்ததால் அவர் மீது ஆசிட் வீசியதாக அவர்
கூறினார். இந்த
வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட
கோர்ட்டில் நடந்து வந்தது. இன்றுடன்
வழக்கு விசாரணை முழுவதும் முடிந்தது.
அதையடுத்து வருகிற 20–
ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும்
என்று நீதிபதி அறிவித்தார்.

[Continue reading...]

Thursday, 30 May 2013

9 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் - 10 வகுப்பு தேர்வு

- 0 comments

10 வகுப்பு தேர்வு முடிவு: 498 மதிப்பெண்கள் பெற்று 9 மாணவிகள் முதலிடம் 10th result out first mark 498

 தமிழகத்தில் பத்தரை லட்சம் மாணவர்கள் எழுதிய 10-வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்ற ஈரோட்டைச் சேர்ந்த அனுஷா என்ற மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். இவர்தவிர மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

பொன்சங்கரி (ஈரோடு), தீபதி (மேலூர்), காயத்ரி (திருச்சி), மெர்சியா செரீன் (திருச்சி), சாருமதி (திருப்பத்தூர்), சோனியா (நெல்லை), யுவதுர்கா (சிதம்பரம்), வினுஷா (வேலூர்).

497 மதிப்பெண்கள் பெற்று 52 மாணவர்கள் 2-வது இடத்தை பிடித்தனர். 136 மாணவர்கள் 496 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பிடித்தனர்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 89 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger