காஷ்மீரைச் சேர்ந்தவர் இந்தி நடிகை மினிஷா லம்பா (26). பொழுதுபோக்கிற்காக மாடலிங் செய்ய வந்த இவர் பின்னர் இந்திப் படவுலகில் நுழைந்து `யஹான்', `கிட்னாப்', `வெல்டன் அப்பா' போன்ற படங்களில் நடித்து பிரசித்தி பெற்றார்.
கடந்த மே மாதம் இவர் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்து மும்பை விமான நிலையம் வந்திறங்கியபோது, ரூ.50 லட்சம் நகைகளுடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர்.
இப்போது மறுபடியும் அவர் விமான நிலையத்தில் சிக்கலில் மாட்டிக்கொண்டார். இம்முறை அவர் மாட்டிக்கொண்டது மும்பையில் அல்ல. துபாய் விமான நிலையத்தில்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் துபாய் விமான நிலையத்தில் போய் இறங்கியபோது குடியுரிமை அதிகாரி ஒருவர், அவர் துபாயில் தங்க உள்ள லாட்ஜ் பற்றிய விவரங்களை கேட்டார்.
அதற்கு அவர், "எனக்கு நினைவில் இல்லை. விமான நிலையத்தில் காத்திருக்கிற எனக்கு வேண்டிய ஒரு நபருக்கு அது தெரியும்'' என கூறிவிட்டு செல்போனில் உள்ள விவரங்களை காட்ட முயற்சித்தார்.
ஆனால் அந்த அதிகாரியோ அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டையும் பறித்துக்கொண்டார். அத்துடன் அங்கிருந்த ஒரு நாற்காலியை காட்டி, நீ அதில் போய் உட்கார் என்று கூறி விட்டார்.
அங்கு இருந்த மூத்த அதிகாரி, அவரை சமாதானப்படுத்தி ஒரு வழியாய், நடிகையின் பாஸ்போர்ட்டை பெற்று ஒப்படைத்தார்.
இது தொடர்பாக நடிகை மினிஷா கூறுகையில், "இந்த ஆண்டு விமான நிலையங்களில் எனக்கு நேரமே சரியில்லை. மும்பைக்கு நான் திரும்பியபிறகு துபாய் சம்பவம் பற்றி புகார் செய்வேன்'' என்றார். இந்தச் சம்பவத்தால் துபாய் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?