Wednesday, 14 December 2011

நான்கு நாட்கள் நடக்கும் ஜெனிலியா - ரிதேஷ் திருமணம்!

- 0 comments
 
 
 
 
 
நடிகை ஜெனிலியாவுக்கும் அவரது காதலர் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் வரும் பிப்ரவரி 5-ம் தேதி திருமணம் நடக்கிறது.
 
நான்கு நாட்கள் இந்த திருமணம விழா நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றனர். ரிதேஷின் தந்தை விலாஸ்ராவ் தேஷ்முக், இப்போதைய மத்திய அமைச்சர். மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்பதால் வெகு ஆடம்பரமாக திருமணத்தை நடத்த உள்ளனர்.
 
பிப்ரவரி 3-ந்தேதி மெகந்தியும், 4-ந்தேதி சங்கீத் நிகழ்ச்சியும் நடக்கின்றன. 5-ந்தேதி முகூர்த்தம் நடக்கிறது. 6-ந்தேதி திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
 
அரசியல் தலைவர்கள், தமிழ், இந்தி, தெலுங்கு நடிகர், நடிகைகள் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.
 
இதனால் திருமணத்துக்கு முன்னால் கைவசம் உள்ள படங்களை முடித்து விட ஜெனிலியாவும் ரிதேஷ்தேஷ்முக்கும் தீவிரமாக உள்ளனர்.



[Continue reading...]

ரஜினி குடும்பத்துக்கு கண்டனம் - பிறந்த நாள் விழாவில் பரபரப்பு

- 0 comments
 
 


பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்யப்பட்ட பிரமாண்ட பிறந்த நாள் விழாவில் ரஜினி குடும்பத்திலிருந்து யாரும் பங்கேற்காதது வருத்தத்தைத் தருவதாகவும், ஒரு ரசிகனாக இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.

இதனால் விழா மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சணக்கான ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ரஜினியின் பிறந்த நாள் விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு ரஜினி வராவிட்டாலும் ரஜினியின் குடும்பத்திலிருந்து யாராவது நிச்சயம் வருவார்கள் என்று தலைமை ரசிகர் மன்றம் உறுதி அளித்திருந்ததால் மும்பை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.

வந்த அனைவரும் ஏழை மக்களுக்கு வழங்க பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிப் பொருள்களையும் எடுத்துவந்திருந்தனர்.

ரஜினி குடும்பத்தினர் முன்னிலையில் இந்தப் பொருள்களை வழங்க ஆசைப்பட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் சற்று ஏமாற்றத்துக்குள்ளாகினர் ரசிகர்கள்.

அவர்களின் மனதைப் பிரதிபலிக்கும் வகையில் நடிகர் கருணாஸ், பகிரங்கமாக ரஜினி குடும்பத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

"இவ்வளவு பிரமாண்டமாக எந்த நடிகனுக்காவது விழா நடக்குமா.. ஆனால் என் தலைவனுக்கு மட்டுமாதான் நடக்கிறது. காரணம் ரசிகர்கள் அவர்மீது வைத்திருக்கும் அன்பு. இந்த விழாவுக்கு தலைவர் ரஜினி வராததில் தவறில்லை. காரணம் அவர் வந்தால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்திருக்காது.

ஆனால் அவர் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் வந்திருக்க வேண்டுமல்லவா... இவ்வளவு பேரும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் எத்தனையோ நிகழ்ச்சிக்குப் போகும் ரஜினி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வராததை நான் வெளிப்படையாகவே கண்டிக்கிறேன். நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அவரைத் தலைவராக ஏற்றவன் என்ற உரிமையுடன் இதனை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.


[Continue reading...]

கட்டுக்கடங்காத ரசிகர்கள்... விழாவுக்கு வரவில்லை ரஜினி!

- 0 comments
 
 
 
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ரஜினி பிறந்த நாள் விழாவுக்கு எக்கச்சக்கமாக கூடினர் ரசிகர்கள். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் ரஜினி கடைசி வரை நிகழ்ச்சிக்கு வரவில்லை.
 
இன்று காலையிலிருந்தே வள்ளுவர் கோட்டம் பகுதி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கும் ரஜினி பேனர்கள்.
 
ஒரு முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கே உரிய அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து வாயில்களிலும் பலத்த காவல் போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் மற்றும் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்தது.
 
மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் முதலில் கலை நிகழ்ச்சிகளும் பின்னர் நலத்திட்ட உதவி நிகழ்ச்சியும் நடந்தது.
 
எஸ்பி முத்துராமன், கலைப்புலி தாணு, டிஜி தியாகராஜன் பங்கேற்று உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் எந்த நேரத்திலும் ரஜினி வருவார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டனர்.
 
இரவு 8 மணிக்குள் நிகழ்ச்சி முடிக்கப்பட வேண்டும் என்று ரஜினியே தன் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் 9 மணியைத் தாண்டியும் நிகழ்ச்சி தொடர்ந்தது. கடைசி வரை ரஜினி வரவில்லை.



[Continue reading...]

தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஆசை! - அபிஷேக் பச்சன்

- 0 comments
 
 
 
நடிகர் தனுஷ் இயக்கும் இந்திப்படத்தில் நடிக்க, நான் ஆர்வமுடன் இருக்கிறேன், என்று பாலிவுட் பிரபல நடிகரும், நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். தனுஷ் இந்தி படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. கதாநாயனாக அபிஷேக்பச்சன் நடிக்கப் போவதாகவும், இதனால் தான் அவரை மும்பை சென்று, தனுஷ் சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.
 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததில் இருந்து தனுஷை எனக்கு தெரியும். 2003ல் அவரது மன்மதராசா பாடலை படத்தில் பார்த்தேன். செல்வா இயக்கத்தில் அவர் நடித்த படங்களையும் பார்த்து இருக்கிறேன். தனுஷ் சிறந்த நடிகராக இருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் நான் நடிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. அவை வெறும் செய்திகள் தான். தனுஷ் இந்திப் படம் இயக்கினால் அதில் நடிக்க மிகவும் சந்தோஷப்படுவேன். ஆனால் நாங்கள் அதுபற்றி எதுவும் விவாதிக்கவில்லை. தனுஷ் இயக்கும் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்தால் அது பெரிய கவுரவம், என்று கூறியுள்ளார்.



[Continue reading...]

தியேட்டருக்காக காத்திருக்கும் 30 படங்கள்!

- 0 comments
 
 
தமிழ் சினிமாவில் திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் சுமார் 30 படங்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. தமிழ் பட உலகில், எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு 30 படங்கள் தணிக்கையாகி, திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. ஆனால் தியேட்டர்கள் கிடைக்காததால், இந்த படங்கள் அனைத்தும் பெட்டிக்குள்ளேயே சுருண்டு கிடக்கின்றன.
 
காதல் பாதை, காதல் பயணம், கள்ளப்பருந்து, ஒரு சொல், அய்ம்புலன், நெல்லை சந்திப்பு, வெண்மணி, அமிர்தயோகம், மயில்பாறை, கிள்ளாதே, முத்தழகி, பயபுள்ள, தேனி மாவட்டம், தலப்புள்ள, தேன்மொழி தஞ்சாவூர், குருகுலம், மதுவும் மைதிலியும், உன்னதமானவன், திருமங்கலம் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், வவ்வால் பசங்க, ஆனந்த தொல்லை, அரிதாரம், போட்டுத்தள்ளு, உங்க வீட்டுப் பிள்ளை, பாவி, கை, ரிதினா நான் சுப்பிரமணியன் பேசறேன், ஆதி நாராயணா உள்ளிட்ட 30 படங்களும் தணிக்கைத்துறை அதிகாரிகளின் பார்வைக்குச் சென்று, தணிக்கை சான்றுகளுடன் திரைக்கு வர தயாராக இருக்கின்றன. ஆனால் தியேட்டர்கள்தான் கிடைத்தபாடில்லை.



[Continue reading...]

ஒய் திஸ் கொலவெறி, கொலவெறிடீ பாட்டு பாடி மாணவர்கள் ரகளை

- 0 comments
 
 
 
தாம்பரத்தில் இருந்து அகரம் தென் செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 51 ஏ) நேற்று மதியம் 12.15க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இருந்தனர். டிரைவர் சீனிவாசன், பஸ்ஸை ஓட்டினார். மாணவர்கள் சிலர் டிக்கெட் எடுக்கவில்லை. கண்டக்டர் தர்மலிங்கம், அவர்களை டிக்கெட் எடுக்கும்படி கூறினார். ஆனால் தொடர்ந்து தவிர்த்துவந்தனர். ஒரு கட்டத்தில் கண்டக்டர் டிக்கெட் எடுக்காவிட்டால் தன் வேலை போய்விடும் என்று கூறி மாணவர்களிடம் கெஞ்சி டிக்கெட் எடுக்க வைத்தார்.
 
அதன்பின் பஸ்சில் தட்டியபடி ''ஒய் திஸ் கொல வெறி கொலவெறிடீ'' என்று பாட்டு பாடி கலாட்டா செய்தபடி மாணவர்கள் சென்றனர். சிலர் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். சேலையூரை தாண்டி கேம்ப் ரோட்டில் பஸ் வந்தது. அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனம் அருகே டிரைவர் சீனிவாசன், பஸ்ஸை நிறுத்தினார். போலீசாரிடம் மாணவர்கள் தொல்லை தருவதாக கூறினார். மற்ற பயணிகளும் புகார் செய்தனர். இதையடுத்து போலீ சார், மாணவர்களை எச்சரித்தனர். அவர்களை யும் மாணவர்கள் கிண்டல் செய்தனர்.
அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம்,
 
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், பஸ்ஸில் இருந்து இறங்கி வேளச்சேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீ ஸார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினர். பஸ் பயணிகள், வாகனங்களில் செல்பவர்கள் போலீசா ருக்கு ஆதரவாக மாணவர்களை கண்டித்தனர். அதன்பின் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
 
இவர்கள் சேலையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் நண்பனை பார்க்க வந்தது தெரிந்தது. இவர்களது ரகளையால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து கண்டக்டர் தர்மலிங்கம், சேலையூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்



[Continue reading...]

ஜீன்ஸ், டீ சர்ட்டால் தமனாவுக்கு வந்த சிக்கல்

- 0 comments
 
 
நடிகை தமன்னாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. கடைசியாக வேங்கை என்ற படத்தில் நடித்தார். தற்போது 5 தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன. ராம்சரண் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்து வருகிறது. நேற்று படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
 
தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார். ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில் நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. அவர்கள் கோவில் நிர்வாகத்தினரை கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை முடித்து விட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார்.
 
ராம்சரண் வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரை பார்க்க ஒவ்வொரு வரும் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ராம்சரண் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, எனது திருமணம் ஜனவரியில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. திருமண வரவேற்பை திருப்பதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.



[Continue reading...]

மம்பட்டியான் படத்துக்கு தடை விதிக்க கூடாது; தியாகராஜன் கோர்ட்டில் மனு

- 0 comments
 
 
 
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த நல்லப்பன் நடிகர் பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
எனது தந்தை அய்யா துரை என்கிற மம்பட்டியான் வாழ்க்கையை தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் "மம்பட்டியான்" என்ற பெயரில் சினிமா படம் தயாரித்துள்ளார். இந்த படம் தயாரிப்பது குறித்து மம்பட்டியானின் வாரிசான என்னிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. படத்தை தயாரிக்க உரிமையும் கொடுக்கவில்லை.
 
ஏற்கனவே மலையூர் மம்பட்டியான் என்ற பெயரில் வெளியான படத்தினால் எனது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இடையே பகை உணர்வு இருந்து வருகிறது. ஆகவே எனது கருத்தை கேட்காமல் படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு மம்பட்டியான் படத்தின் தயாரிப்பளார் நடிகர் தியாகராஜன் சார்பில் அவரது வக்கீல் ஆனந்தன் பதில் மனு தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மலையூர் மம்பட்டியான் படம் 1983-ம் ஆண்டு வெளியானது. அப்போது இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர் சிவானந்தத்திடம் இருந்து 2008-ல் "காப்பிரைட்" பெற்று மம்பட்டியான் என்ற பெயரில் படம் தயாரித்துள்ளேன். ஆகவே மனுதாரர் எனது படத்திற்கு எதிராக வழக்கு தொடர உரிமை கிடையாது. 2009-ம் ஆண்டு முதல் இப்படம் பற்றி விளம்பரம் செய்து வருகிறேன்.
 
அப்போதெல்லாம் மனுதாரர் படத்திற்கு எதிராக வழக்கு தொடரவில்லை. ஆனால் படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது விளம்பர நோக்கம் கொண்டது. மலையூர் மம்பட்டியான் படம் வெளியாகி 25 ஆண்டுகளாகி விட்டது. இப்போது தயாரிக்கும் மம்பட்டியான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்நோக்கம் கொண்டது.
 
ஏற்கனவே இந்த படத்தின் பெட்டிகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு விட்டது. வருகிற 16-ந்தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு தடை விதித்தால் வெளிநாட்டில் விற்கப்பட்ட படத்தின் பிரதி திருட்டு சி.டி.யாக இந்தியாவிற்குள் நுழைந்து விடும். இதன்மூலம் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்படுவேன். எனவே நல்லப்பன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு சென்னை 8-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி வினோபா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.



[Continue reading...]

மீண்டும் சீமானின் கோபம்! விஜய்க்கு பதில் கார்த்தி !!

- 0 comments
 
 
 
டைரக்டர் சீமான் கோபம் என்ற பெயரில் புதிய படத்தை எடுக்க அதிரடியாக களமிறங்கவுள்ளார். நாம் தமிழர் கட்சிப் பணிகள், அரசியல் பணிகள் என நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தாலும், அதிரடியான கதையுடன் ஒரு படத்தை இயக்கும் பணிகளிலும் அவ்வப்போது தீவிரம் காட்டி வருகிறார். இடையில் விஜய்யை வைத்து அவர் இயக்குவதாக இருந்த படம் ட்ராப் ஆகி விட்டதால், முன்பே யோசித்து வைத்திருந்த கோபம் என்ற தலைப்பிலேயே புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். தம்பி படத்தைப்போல பல மடங்கு வேகமும் அழுத்தமான காட்சிகளும் கொண்ட ஸ்கிரிப்ட் இது. இந்தப் படத்தில் நாயகனாக விஷால் அல்லது கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார் சீமான்.



[Continue reading...]

மீசையில்லாத போலீஸ்? ; சிம்புவை வம்புக்கு இழுக்கும் ஜீவா

- 0 comments
 
 
 
 
 
மிஷ்கினின் பல நாள் கனவுதானாம் இந்த முகமூடி. எதையும் 'மூடி' மறைக்காமல் பேசும் மிஷ்கின், துவக்க நாளான அன்றும் அப்படியேதான் ஆரம்பித்தார் தனது உரையை. இதுவரைக்கும் நான் பார்த்த ஹீரோக்களிலேயே இப்படி ஒரு டெடிக்கேஷனான ஹீரோவை பார்த்ததே இல்லை. ஜீவாவிடம் இந்த கதையை சொல்லணும்னு நினைச்சேன். என் ஆபிஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமான்னு கேட்டேன். அவ்வளவுதான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் ஆபிசில் இருந்தார் ஜீவா.
 
மிஷ்கின் 'இடம் சுட்டி பொருள் விளக்கிய' இந்த இடத்தில் ஒளிந்து கிடக்கும் உண்மைகள், ஆரம்பத்திலிருந்து இந்த முகமூடி பிரசவத்தை கவனித்தவர்களுக்கு மட்டும் சட்டென்று புரிந்திருக்கும். (புரியாதவர்களுக்கு சில டேக்ஸ். கமல், அஜீத், எக்ஸட்ரா...) போகட்டும். விஷயத்துக்கு வருவோம்.
 
முகமூடி பற்றி நிறைய பேசினார் மிஷ்கின். நான் சின்ன வயசிலே நிறைய காமிக்ஸ் படிச்சிருக்கேன். அந்த கதைகளை படமாக்கணும்னு அப்பவே எனக்கு கனவு இருந்திச்சு. தமிழில் வெளிவரப்போகும் முதல் பிரமாண்ட சூப்பர்மேன் கதையா இந்த முகமூடி இருக்கும். இந்த படத்தை இந்த ஒரு பகுதியோட முடிக்கிற எண்ணமும் எனக்கு இல்லை. முகமூடி பார்ட் ஒன், டூ, த்ரின்னு அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கும்னு நம்புறேன்.
 
இந்த படத்தில் ஜீவா கமிட் ஆனவுடன் குங்பூ கத்துக்கணும் என்றேன். எனக்கு ஏற்கனவே தெரியும். ரெண்டு வருஷம் அந்த சண்டையை நான் கத்து வச்சிருக்கேன் என்றார். என்னுடைய வேலை இன்னும் சுலபமாச்சு. ஜீவா 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிச்சு மே மாதம் திரைக்கு கொண்டு வந்துடலாம் என்றார்.
 
பின்னாலேயே பேச வந்த ஜீவா, 90 நாட்கள் என்ன, 120 நாட்கள் தருகிறேன் என்றார் மிஷ்கினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை போல. வழக்கமாக இருபெரும் நடிகர்கள் முட்டிக் கொள்ளும்போது இடம் கிடைத்தால் போதும். ஒரு வீச்சருவாவை செருகி பார்ப்பார்கள். இந்த முறையும் அதை மின்னல் வேகத்தில் செய்தார் ஜீவா.
 
மிஷ்கின் சார் அஞ்சாதே படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க என்னைதான் அழைச்சார். சரியா மீசை கூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிக்கறது? அதுக்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்பதால் அப்படத்தில் நடிக்கல என்றார்.
 
ஜீவாவின் 'ஒஸ்தி'யான பேச்சு புரியுதா பிரதர்ஸ்...?
 
பி(பெ)ண் குறிப்பு - இப்படத்தின் ஹீரோயின் பூஜா ஹெட்டே மிஸ் யுனிவர்சல் போட்டியில் மோதி முன்னேறி இறுதி வரைக்கும் வந்தவராக்கும்...!



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger