Monday, 13 February 2012

வாரத்தில் 6 நாள் உங்களுடன்தானே எங்கள் தாய் இருந்தார்...'' ஆசிரியை உமாமகேஸ்வரி மகள் உருக்கம்

- 0 comments
 
 
 
என் தாய், தனது பள்ளி மாணவர்களை என் பிள்ளைகள் என்றுதான் கூறுவார். வாரத்தில் 6 நாட்களும் அவர் தனது பள்ளிப் பிள்ளைகளுடன்தான் கழித்தார். ஒரு நாள் மட்டுமதான் எங்களுடன் இருந்தார். எங்களை விட தனது பள்ளிப் பிள்ளைகளைத்தான் அவர் அதிகம் நேசித்தார் என்று சென்னை பள்ளியில் மாணவனால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கமாக கூறியுள்ளார்.
 
சென்னை பாரிமுனையில் உள்ள செயிண்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கடந்த 9-ந்தேதி மதியம் தனது மாணவனால் வகுப்பறையில் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 9வது வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
 
நாட்டையே அதிர வைத்து விட்டது இந்த கொடூரக் கொலைச் சம்பவம்.இன்று பள்ளியில் ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆசிரியையின் படத்திற்கு மலர் அஞ்சலியும், கண்ணீர் அஞ்சலியும் செலுத்தினர்.
 
நிகழ்ச்சியில் ஆசிரியையின் தாயார் அமிர்தம், கணவர் ரவிசங்கர், மகள்கள் சங்கீதா, ஜனனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி பேசுகையில்,
 
இந்த துயரமான சம்பவம் இனி எந்த காலத்திலும் நடக்க கூடாது. ஆசிரியைக்கு என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நாம் ஒரு நல்ல ஆசிரியரை இழந்து விட்டோம். இது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த தருணத்தில் மாணவர்கள் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும். நாம் சிறந்த மாணவனாக, பண்புள்ள மாணவனாக வர வேண்டும் என்பதுதான். இதுதான் ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு நாம் செய்யும் நன்றி கடனாக இருக்கும் என்றார்.
 
ஆசிரியை உமா மகேஸ்வரியின் மூத்த மகள் சங்கீதாவின் பேச்சுதான் அனைவரையும் உருக வைத்து கண்ணீர் விட வைத்தது.
 
அவர் பேசுகையில்,
 
எல்லா மாணவர்களும் கடவுளுக்காக இறக்க தயாராக இருக்க வேண்டும். என் அம்மா வாரத்தில் 6 நாள் உங்களுடன்தான் இருப்பார்கள். ஒரு நாள் தான் எங்களை பார்க்க வருவார். அவர் எங்களை விட உங்களைத்தான் அதிகம் நேசித்தார். என்னுடன் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் என் பிள்ளைகள் என்பார்.
 
ஆசிரியர் கண்டித்தாலும், திட்டினாலும் மாணவர்கள் கோபப்படக்கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். நான் ஒரு மாணவியாக சொல்கிறேன். ஆசிரியர்கள் அடிப்பதும், கண்டிப்பதும் நமது நன் மைக்காகத்தான் என கருத வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் பழகுகங்கள். அவர்கள் கண்டிப்பதை விரோதமாக கருதாதீர்கள் என்று அவர் பேச பலரும் கண் கலங்கினர்.
 
நிகழ்ச்சியில், ஆசிரியையின் மகள்கள் சங்கீதா, ஜனனி ஆகியோரின் மேல்படிப்பு உதவிக்காக பள்ளி சார்பில் அவர்களது பெயரில் ரூ. 5 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.



[Continue reading...]

நடிகை பூர்னாவுக்கு பொலிஸ் பாதுகாப்பு - படப்பிடிப்பில் ரசிகர்கள் கலாட்டா

- 0 comments
 



போலீஸ் பாதுகாப்புடன் பூர்ணா பட ஷூட்டிங் நடந்தது. வித்தகன், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூர்ணா.
இவர் நடிக்கும் புதியபடம் 'கருவாச்சி.' இப்பட ஷூட்டிங் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது என்றார் இயக்குனர்
'கருவாச்சி' பட இயக்குனர் ஏ.ஆர்.சிவா கூறியதாவது:
ஜாதி, பணம், ஈகோ என காதலுக்கு பல தடைகளை மையமாக வைத்து கதைகள் வந்திருக்கிறது. காதலுக்கு தடையாக காமம் இருக்கிறது என்பதுதான் இப்பட கரு. காமம் வென்றதா? காதல் வென்றதா? என்பது கிளைமாக்ஸ். இதை கேட்கும்போது விரசமான படமோ என எண்ணத்தோன்றும். ஆனால் இது முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகிறது. அகில் ஹீரோ. பூர்ணா ஹீரோயின். அஜெயன் வில்லன்.
இப்படத்தின் கதையை ரம்ஜான் மாதத்தில் பூர்ணாவிடம் சொன்னேன். நோன்பு முடித்துவிட்டு இரவு 10.30க்கு கதை கேட்க தொடங்கியவர் அதிகாலை 3 மணிவரை கேட்டார். உடனே நடிக்க ஒப்புதல் தந்தார்.
சேலம் பின்னணியில் கதை நடக்கிறது. சமீபத்தில் அங்குள்ள கண்ணன்குறிச்சி பஸ்நிலையம் அருகே ஷூட்டிங் நடந்தபோது 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கூடி விட்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம். அவர்கள் பாதுகாப்புடன் ஷூட்டிங் நடந்தது. ஜெயஸ்ரீ தயாரிப்பு. ஜோஸ்வா ஸ்ரீதர் இசை.
[Continue reading...]

இன்று காதலர் தினமாம்

- 0 comments
 
 

வாழ்த்துக்கள். {கணவன் - மனைவி உட்பட}


இன்று மட்டும்தானா காதலர்களுக்கு அர்ப்பணம்.எல்லா நாட்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுதானே.
இது போன்ற நாட்கள் ஒதுக்கலும் ,குறிப்பிட்ட நாளை கொண்டாட வைப்பதும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கண்டு பிடிப்புதான்.
அன்னையர் தினம்,நண்பர்கள் தினம் என புதிது புதிதாகக் கண்டு பிடித்தது தங்களின் அலங்கார,பரிசுப் பொருட்கள் விற்பனையை பெருக்கத்தான்.
அதற்கென பரிசுப்பொருட்கள்,வாழ்த்துக்கள் என தாயரித்து தள்ளிவிடும் தன்மைதானே அவர்களின் நோக்கம்.
காதலர்களுக்கு என ஒருதினம் ஒதுக்கலும் அவர்களின் சிறந்த வணிகப்புத்திதான்.
அன்று ஒருநாள் மட்டும் தான் காதலா?
அன்பு செலுத்த நாள் பார்ப்பது முறையா?
தோல்வியுற்ற லைலா-மஜ்னு,அம்பிகாவதி-அமராவதி,ரோமியோ-ஜூலியட் போன்ற இணிகளை மட்டும் காதல் சின்னமாக்குவது முறையா?
காதலில் வென்று வாழ்வை நடத்தியவர்களைத்தானே காடலின் சின்னமாக,உதாரணமாகக் காட்ட வேண்டும்.


அம்பிகாவதி- அமராவதி காதல் வெற்றியடந்தால் அதன் பின் நாட்டை விட்டு வாழ்வை வேறு நாடு சென்று துவக்கினால் என்ன துன்பங்களை அவர்கள் அடைந்திருப்பார்கள்.அத்துயரங்கலுக்குப்பின்னரும் அவர்கள் மனதில் காதலுக்கு இடம் இருந்திருக்குமா?
மையலும் குடி கொண்டிருக்குமா?
எதார்த்த உலகை அவர்களின் காவியக்காதல் எதிர் கொண்டு பிழைத்திருக்குமா? அல்லது அமராவதி விலக்கு கேட்டு தனது மன்னராகிய தந்தையை அடைந்திருப்பாளா?
இங்கு தோற்றுப்போன காதல்கள் தான்சோகக் காவியங்களாகி இருக்கின்றன.
வெற்றியடைந்து இணைந்த காதல்கள் சோகவாழ்வாகியே மடிந்துள்ளன.


ஒன்றிரண்டு தப்பிமகிழ்ந்திருக்கலாம்.
அன்னையை நேசி,தந்தையை நேசி.
மகனை நேசி,மகளை நேசி.
முதலில் மனைவியை நேசி.
நேசிப்பதின் மறு வாழ்வுதானே காதலாகிப்போகிறது.
காதல் என்பது மனிதன் பாசத்தின் வெளிப்பாடு.
அதற்குத்தான் காதல் என்ற பெயர்.
ஆதலினால் காதல் செய்வீர் .
இன்று ஒரு நாள் மட்டுமா காதலர் தினம்.



[Continue reading...]

விஜயகாந்த்...புதுக் கூட்டணி குறித்து முடிவு?

- 0 comments
 
 
 
தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 21ம் தேதி நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஒரு கூட்டணியை முடித்து விட்ட நிலையில் அடுத்த கூட்டணி குறித்து முடிவு செய்ய இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்,
 
தே.மு.தி.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 21-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
 
இக்கூட்டத்தில் தே.மு.தி.க.வின் தலைமை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். இன்றைய அரசியல் நிலைமை குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் மேற்கண்ட கூட்டங்களில் ஆராயப்படும்.
 
ஆகவே தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான அழைப்பிதழ் அனுப்பப்படும். அழைப்பிதழ் பெற்றவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
தனித்துப் போட்டியிடுவோம் என்பதை கொள்கையாகவே கூறி வந்த விஜயகாந்த் பின்னர் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொண்டர்களைத் திருப்திப்படுத்தவும் கூட்டணி அரசியலுக்கு மாறினார். அதிமுகவுடன் போய்க் கூட்டு சேர்ந்தார். இது விஜயகாந்த்தை வித்தியாசமான அரசியல்வாதியாகப் பார்த்து வந்த நடுநிலை வாக்காளர்களை அதிர வைத்தது.
 
ஆனால் இந்தக் கூட்டணி அல்பாயிசில் போய் விட்டது. இதையடுத்து தற்போது அடுத்த கூட்டணிக்கு தேமுதிக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தபோது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் விஜயகாந்த் ஓடும் விமானத்தில் ஆலோசனை நடத்தினார்.
 
இந்தப் பின்னணியில் தற்போது தனது கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை அவர் கூட்டியுள்ளார். இக்கூட்டத்தின்போது ஸ்டாலின், கார்த்தியுடன் பேசியது குறித்து அவர் விளக்கி ஆலோசனை கேட்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger