Tuesday, 19 March 2013

சாமியாரிடம் பிள்ளை வரம் வேண்டி வந்த பெண் கற்பழிப்பு

- 0 comments

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள பஹாரி கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண், திருமணமாகி ஆறேழு ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இன்றி மனவேதனையால் அவதிப்பட்டு வந்தார்.அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அடுத்த கிராமத்தில் உள்ள மந்திரவாதியிடம் வைத்தியம் செய்துகொண்டால் உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும் என்று கூறி அவளது நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தனர்.நாமும் தான் போய் பார்ப்போமே என்ற எண்ணத்தில் நேற்று முன்தினம் அந்த பெண், மந்திரவாதி மாம்ராஜ் குமாரின் ஆசிரமத்தை தேடிச் சென்றாள். அவளை தனியறைக்கு அழைத்துச்சென்ற மந்திரவாதி, மயக்க மருந்து தந்து அவளை கற்பழித்துவிட்டான்.மயக்கம் தெளிந்து வீட்டுக்கு சென்ற அந்த பெண் நடந்த சம்பவத்தை குடும்பத்தாரிடம் கூறி கதறி அழுதாள். இரவு முழுவதும் மனஉளைச்சலால் தூக்கமின்றி அழுதபடியே இருந்த அவள், வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டாள்.

[Continue reading...]

வௌிநாட்டு பெண் மானபங்கம்

- 0 comments

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்து நாட்டுப் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அவரது கணவரையும் கடுமையாகத் தாக்கியது. இதுதொடர்பான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த அதிர்ச்சி அலை ஓய்வதற்குள் மற்றொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது.இங்கிலாந்தில் இருந்து சுற்றுலா வந்த ஒரு பெண், ஆக்ராவில் உள்ள ஒரு ஓட்டலின் முதல் மாடியில் தங்கியிருந்தார். அப்போது அவரது அறையில் ஒரு நபர் அத்துமீறி நுழைந்து, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அந்தப்பெண் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குதித்துள்ளார்.இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger