மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்து நாட்டுப் பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அவரது கணவரையும் கடுமையாகத் தாக்கியது. இதுதொடர்பான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த அதிர்ச்சி அலை ஓய்வதற்குள் மற்றொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது.இங்கிலாந்தில் இருந்து சுற்றுலா வந்த ஒரு பெண், ஆக்ராவில் உள்ள ஒரு ஓட்டலின் முதல் மாடியில் தங்கியிருந்தார். அப்போது அவரது அறையில் ஒரு நபர் அத்துமீறி நுழைந்து, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அந்தப்பெண் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குதித்துள்ளார்.இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?