Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Sunday, 26 January 2014

விந்தணு உற்பத்தியை பாதிக்கும் காரணிகள் tamil sex news

- 0 comments
விந்தணு உற்பத்தியை பாதிக்கும் காரணிகள்..! 

சுடுநீர் குளியல்: பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது. 

உள்ளாடை: அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும்.

மொபைல்: பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினாலும்,விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 

மன அழுத்தம்: மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும். 

போதிய உடலுறவு இல்லாமை: உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். அதில் ஒரு பிரச்சனை தான் விந்தணு உற்பத்தி குறைவு. எனவே அவ்வப்போது உடலுறவு கொள்வதன் மூலம், மன அழுத்தம் குறைந்து, விந்தணுவின் உற்பத்தியும் அதிகரிக்கும். 

ஆல்கஹால்: ஆல்கஹால் அதிகம் பருகினால், அவை டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும். 

புகைப்பிடித்தல்: சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும். ஆகவே அழகான குழந்தை பெற வேண்டுமென்று நினைத்தால், சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். 

சோயா பொருட்கள்: ஆண்கள் சோயா பொருட்களை அதிகம் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்திக்கு தடை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள ஐசோஃப்ளேவோன்ஸ், விந்தணுவின் எண்ணிக்கை, தரம் மற்றும் உற்பத்தியை பாதிக்கும். 

டிவி பார்த்தல்: பெரும்பாலான ஆண்கள் டிவி பார்க்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை நொறுக்கிக் கொண்டே பார்ப்பார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தியும் குறையும். மேலும்ஆய்வு ஒன்றில், நொறுக்கி தீனி சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்க்கும் ஆண்களின் விந்தணு உற்பத்தியை விட, தினமும் டிவியை அதிகம் பார்க்காமல், உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விந்தணுவின் உற்பத்தி அதிகம் உள்ளதாகவும் சொல்கிறது. 

லேப்டாப்: தற்போது லேப்டாப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு ஆண்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

[Continue reading...]

Sunday, 10 November 2013

கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம்: சினிமா டைரக்டர் கைது kerala kanyakumari district 5 woman cheating marriage cinema director

- 0 comments

கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம்: சினிமா டைரக்டர் கைது kerala kanyakumari district 5 woman cheating marriage cinema director

மேல்புறம், நவ. 10–

குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெவிதம்பி என்ற ஜஸ்டின் ரவி. சினிமா டைரக்டர். சமீபத்தில் வாச்சாத்தி என்ற படத்தை இயக்கி பிரபலமானார். இவருக்கும், வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த ஷிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஜஸ்டின் ரவி சென்னை சென்று விட்டார்.

மேலும் ஷிபாவிடமிருந்து நகை, பணத்தை வாங்கி சென்றதாகவும், அதன் பிறகு அவர், ஷிபாவின் குடும்பத் தேவைகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இது தொடர்பாக ஷிபா ஜஸ்டின் ரவியிடம் கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே ஷிபா ஜஸ்டின் ரவியின் பின்னணி குறித்து விசாரித்தார்.

அப்போது ஜஸ்டின் ரவி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணத்தை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. எனவே அவர், இதுபற்றி குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், கூறி இருப்பதாவது:–

சென்னையில் சினிமா இயக்குனராக இருக்கும் ஜஸ்டின் ரவிக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு 7 வயதில் குழந்தை உள்ளது. குடும்பச் செலவுக்கு ஜஸ்டின் ரவி பணம் தருவதில்லை. இதற்கான காரணம் பற்றி விசாரித்தப்போது அவர் ஏற்கனவே பாறசாலையைச் சேர்ந்த ஷைலஜா என்ற பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் இருப்பது தெரிய வந்தது.

மேலும் மார்த்தாண்டத்தை அடுத்த சித்திரங்கோட்டையைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

3–வதாக திருவனந்தபுரம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த பிந்து என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

4–வதாக திருவனந்தபுரம் புஜபுரையைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார்.

5–வதாக என்னை மணம் முடித்து ஏமாற்றி விட்டார். திருமணம் செய்த அனைவரிடமிருந்தும் நகை, பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து இருக்கிறார்.

இப்போது மீண்டும் ஒரு புதிய சினிமா கம்பெனி தொடங்கி சினிமாவில் நடிக்க புதுமுக பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். அவரிடம் பெண்கள் ஏமாந்து விடாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.

போலீசார் மனு மீது விசாரணை நடத்தியதில் ஜஸ்டின் ரவி ஏற்கனவே திருமணம் செய்த ஷைலஜா, அனிதா ஆகியோரின் புகைப் படங்கள் கிடைத்தது.

மேலும் அனிதாவும், தான் ஏமாற்றப்பட்டது பற்றி தனியாக குழித்துறை போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து ஜஸ்டின் ரவியை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்கான நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியபோது, ஜஸ்டின் ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து இன்று அதிகாலை குழித்துறைக்கு காரில் வருவது தெரிய வந்தது.

உடனே உஷாரான போலீசார் குமரி மாவட்ட எல்லையான களியக்கா விளை சோதனை சாவடியில் ஜஸ்டின் ரவி வந்த காரை தடுத்து நிறுத்தி அவரை பிடித்தனர்.

பின்னர் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

...

shared via

[Continue reading...]

ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்னிப்பு கடிதம் PM writes to Sri Lankan President on CHOGM Summit

- 0 comments

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்தி ராஜபக்சேவுக்கு பிரதமர் கடிதம் PM writes to Sri Lankan President on CHOGM Summit

புதுடெல்லி, நவ. 10-

இலங்கை தலைநகர் கொழும்புவில் 53 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் மாநாடு இன்று தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்தது. இந்த போரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்து ராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளதால், அந்த மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்று தமிழகம் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் நடக்கும் இந்த காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் அனைத்தும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்வாரா என்பது உறுதிசெய்யப்படாமல் இருந்தது. தற்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் 15-ம் தேதி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமானது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் ராஜபக்சேவுக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பிரதமர் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் எடுத்த முடிவையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த்தில் கலந்துகொள்ளும் முடிவை மாற்றியுள்ளார்.  

...

shared via

[Continue reading...]

Saturday, 9 November 2013

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் உடல் பயிற்சி செய்ய கூட சக்தி இழந்தவனாகி விட்டேன்: மைக் டைசன் வேதனை MIKE TYSON CLAIMS TOO MUCH OF INTERCOURSE MADE HIM UNFIT FOR EXCERICE

- 0 comments

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் உடல் பயிற்சி செய்ய கூட சக்தி இழந்தவனாகி விட்டேன்: மைக் டைசன் வேதனை MIKE TYSON CLAIMS TOO MUCH OF INTERCOURSE MADE HIM UNFIT FOR EXCERICE

நியூ யார்க், நவ.10-

இந்த பூமியில் யாருக்குமே அடங்காத- மகா மோசமான கெட்ட மனிதன் என்று நல்ல பெயர் எடுத்தவர் முன்னாள் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (47).

குத்துச் சண்டை உலகின் ஜாம்பவானாக வலம்வந்த பலரை வீழ்த்தி உலக சாம்பியனாக புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற டைசன், 58 போட்டிகளில் பங்கேற்று அவற்றில் 50ல் வெற்றி பெற்றவர்.

ஆனால், சொந்த வாழ்க்கையில் 3 மனைவிகளை திருமணம் செய்து விவாகரத்தும் செய்த இவர் பல அழகிகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். போதாக்குறைக்கு, 1991ம் ஆண்டில் டிசிரி வாஷிங்டன் என்ற 18 வயது பெண்ணை கற்பழித்த வழக்கில் 6 ஆண்டு சிறை தண்டனை பெற்று 3 ஆண்டு தண்டனை காலம் தள்ளுபடி செய்யப்பட்டு 1995ம் ஆண்டு டைசன் விடுதலை ஆனார்.

1996 மற்றும் 1997ல் இவாண்டர் ஹோலி ஃபீல்ட்டிடம் உலக சாம்பியன் பட்டத்தை பறி கொடுத்த இவர், அதன் பின்னர் வரிசையாக தோல்விகளை சந்தித்து குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், பிரபல ஆங்கில தொலைக் காட்சி சேனல் ஒன்றில் தனது மலரும் நினைவுகளை இம்மாதம் 16ம் தேதி பகிர்ந்துக் கொள்ளும் மைக் டைசனின் வாழ்க்கை வரலாறு விரைவில் புத்தகமாக வெளியாக உள்ளது.

தனது வாழ்வின் முக்கிய சம்பவங்களை இவரே பட்டியலிட்டு கூற லேர்ரி ஸ்லொமேன் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இன,மொழி,நிற பேதங்களை கடந்து பல பெண்களுடன் தான் நிகழ்த்திய காமக்களியாட்டங்களை மைக் டைசன் இந்த புத்தகத்தில் நடந்தது நடந்தபடியே பதிவு செய்துள்ளார்.

கற்பழிப்பு வழக்கில் சிக்கி சிறையில் தண்டனை அனுபவித்த வேளையிலும், தனது பழக்கத்தை கைவிட முடியாமல் சிறையில் பணியாற்றிய போதைப் பழக்க தடுப்பு பெண் அலுவலரிடம் தொடர்ந்து இன்பம் அனுபவித்த சாகசத்தையும் விவரித்துள்ளார்.

இதைப் போன்ற அதீத பெண்களிடம் உடலுறவு வைத்திருந்ததால் சிறையில் இருந்த போது உடற்பயிற்சி செய்ய கூட சக்தியற்றவனாகி விட்டேன் என்பதை வெளிப்படையாகவும் வேதனையுடனும் மைக் டைசன் தெரிவித்துள்ளார்.

...

shared via

[Continue reading...]

Wednesday, 6 November 2013

கின்னஸ் சாதனைகளை படைக்கும் மிக விலை உயர்ந்த கார் லண்டனில் ஏலத்திற்கு வருகிறது World most expensive car comes on London auction house

- 0 comments

கின்னஸ் சாதனைகளை படைக்கும் மிக விலை உயர்ந்த கார் லண்டனில் ஏலத்திற்கு வருகிறது World most expensive car comes on London auction house

லண்டன், நவ. 6-

தங்கம் மற்றும் விலை உயர்ந்த வைரத்தை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் உலகின் மிக விலை உயர்ந்த கார் அடுத்த ஆண்டு லண்டன் ஏல மையத்திற்கு வருகிறது. ஜெர்மன் பொறியாளர் ராபர்ட் குல்பென் வடிவமைத்துவரும் இந்த லம்பார்கினி அவெண்டாடர் எல்.பி. 700-4 என்ற சிறிய வகை மாதிரி கார் துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

22 காரட் 500 கிலோ கிராம் எடையுள்ள தங்கக்கட்டிகள், 25 கிலோ கிராம் விலையுர்ந்த வைரக்கற்களை கொண்டு பைபருடன் சேர்த்து இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 700 குதிரை திறன் கொண்ட என்ஜின் இந்த காரில் பொருத்தப்படுகிறது.

அடுத்த ஆண்டு லண்டன் ஏல மையத்திற்கு வரும் இந்த கார் 46 லட்சம் பவுண்ட்சுக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 46 கோடிக்கு விற்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த கார் உலகிலேயே மிக விலை உயர்ந்த மாதிரி கார், புல்லட்புரூப் வசதியுள்ள கார் மற்றும் மிக ஆடம்பரமான முத்திரை கொண்ட கார் என மூன்று பிரிவுகளில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது. 

...

shared via

[Continue reading...]

Tuesday, 5 November 2013

கனடாவில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டது Canada street names after Madras mozart A.R.Rahman

- 0 comments

கனடாவில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டது Canada street names after Madras mozart A.R.Rahman

டொரண்டோ, நவ.5-

கனடா நாட்டின் மர்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது.

பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் - ரக்ஹா ரஹ்மான்) தெரு என பெயர் சூட்டப்பட்டது.

அந்த பெருமைக்குரிய பெயர் பலகையுடன் அடக்கமே உருவாக இசைப்புயல் போஸ் தரும் காட்சியை படத்தில் காணலாம்.

...

shared via

[Continue reading...]

Monday, 4 November 2013

தோல் பிரச்னையால் அவதிப்படும் நயன்தாரா! Nayanthara suffered by skin problem

- 0 comments

தோல் பிரச்னையால் அவதிப்படும் நயன்தாரா!
Nayanthara skin problem

இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கிய நயன்தாரா தோல் சம்மந்தமான பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார்.
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் நயன்தாரா.

விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தாலும், தனக்கு ஏற்றவாறு தெரிவு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க அவர் பற்றி காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன, இந்நிலையில் நயன் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தோல் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாராம், இதற்கு காரணம் ஓவராக மேக்கப் போடுவது தானாம்.

குறிப்பாக அசைவ உணவு சாப்பிட்டால் நயனின் தோல் அலர்ஜி பிரச்சனை அதிகரித்து விடுகிறதாம். இந்த பிரச்சனைக்கு அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

இதேபோன்று அவதிப்பட்டு வந்த சமந்தாவும் 3 மாதங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தோல் பிரச்னையால் அவதிப்படும் நயன்தாரா! appeared first on Pirapalam.Com.

shared via

[Continue reading...]

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட இந்தியா தகுதி India qualify for Hockey World Cup

- 0 comments

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட இந்தியா தகுதி India qualify for Hockey World Cup

புதுடெல்லி, நவ. 4-

இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ள அணிகள் பட்டியலில் இணைந்துள்ளது.

நெதர்லாந்தில் அடுத்த ஆண்டு உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஜூன் மாதம் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் உலக ஹாக்கி லீக் தொடருக்கான அரையிறுதியில் இந்திய அணி 6-வது இடம் பிடித்தது. அதேசமயம் ஆசிய கோப்பை போட்டியில் தோல்வியடைந்ததால் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற முடியவில்லை.

இந்நிலையில், நியூசிலாந்தில் நடைபெற்ற ஓசியானியா கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கோப்பையை கைப்பற்றின.

இந்த அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்தன. இதனால் இந்திய அணி உலகக் கோப்பையில் பங்கேற்பது உறுதியானது. இதனை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. 

...

shared via

[Continue reading...]

காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு வானிலை அறிவிப்பு heavy rain Chennai lakes water flow increase water

- 0 comments

காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு heavy rain Chennai lakes water flow increase water

சென்னை, நவ. 4–

வங்க கடலில் இலங்கை அருகே உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து கன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் இன்றும் மழை பெய்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நேற்றிரவும், இன்று காலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 7 மி.மீட்டர் மழையும், சோழவரம் ஏரியில் 8 மி.மீட்டர், செம்பரம்பாக்கம் ஏரியில் 12 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இதனால் குடிநீர் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரிக்கு மழை நீருடன் சேர்ந்து கிருஷ்ணா கால்வாயில் 115 கனஅடி தண்ணீர் வருகிறது. புழல் ஏரிக்கு 156 கனஅடி தண்ணீரும், சோழவரம் ஏரிக்கு 58 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 154 கனஅடியும் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

...

shared via

[Continue reading...]

இசைப்பிரியா படுகொலை: இலங்கை மந்திரி டக்லஸ் தேவானந்தா கண்டனம் isaipriya killed sri lanka minister douglas devananda condemn

- 0 comments

இசைப்பிரியா படுகொலை: இலங்கை மந்திரி டக்லஸ் தேவானந்தா கண்டனம் isaipriya killed sri lanka minister douglas devananda condemn

கொழும்பு, நவ. 4–

இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என இலங்கை மந்திரி டக்லஸ் தேவானந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண் விடுதலைப்புலி இசைப்பிரியா. இலங்கையில் உள்ள தமிழ் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். வன்னியில் நடந்த இறுதி கட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால், அவரை கைது செய்த இலங்கை சிங்கள ராணுவம் நிர்வாணப்படுத்தி கற்பழித்து கொலை செய்ததை வீடியோ காட்சி மூலம் சேனல் 4 தொலைக் காட்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியது. இது உலக நாடுகளையும், தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த கொடூர ஈவு இரக்கமற்ற கொலைக்கு தமிழ் மக்கள் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் மந்திரி டக்லஸ் தேவானந்தாவும் இசைப்பிரியா கொலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரான இவர் பி.பி.சி. தமிழோசைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

''காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வர உள்ளனர். இந்த வேளையில் சேனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப் பிரியா படுகொலை தொடர்பான வீடியோ காட்சிகள் உலக நாடுகளை மட்டுமின்றி உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சேனல் 4 தொைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் ராணுவத்தினர் கைது செய்த காட்சியை ஒளிபரப்பி இருப்பது தமிழ் மக்களை எரிச்சலடைய செய்துள்ளது. நம்பிக்கைகளை தகர்த்துள்ளது. மனித நேயமுள்ளவர்களை உலுக்கியுள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் இசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும். இது குறித்த கடிதத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவுக்கு அனுப்பியுள்ளது.

முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். அதுவே இறுதிகட்ட போர் தொடர்பாக தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் படுகொலைகள் தொடர்பான அச்சங்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடை காண்பதாக அமையும்.

தமிழ் மக்களிடையே இருக்கும் சந்தேகங்களுக்கும், அச்சங்களுக்கும் நியாயமும், பரிகாரங்களும் காணப்பட வேண்டும். எனவே, எனது கோரிக்கைக்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் உண்மையை உலகுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கிறோம்'' என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மந்திரி டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

...

shared via

[Continue reading...]

Tuesday, 29 October 2013

Kudankulam reactor turbine stopped again

- 0 comments

The turbine of the Kudankulam Nuclear Power Project's first reactor which was resynchronized with the southern gridlast Friday, was stopped again on Tuesday "for a series of mandatory tests".

After the 1,000 MWe capacity reactor was synchronised with the grid for the first time with 160 MWe, last Tuesday at 2.45am, it was stopped at 5.40am the same day for tests stipulated by the Atomic Energy Regulatory Board (AERB). As the test results submitted to the AERB were found to be satisfactory, the 'Operational Team' of the KKNPP was given the green signal to resynchronize the turbine again on Friday night.

Since then, the turbine has been operational in order to generate electricity up to 300 MWe. "As we reached 300 MWe, we stopped the turbine manually for mandatory tests at 8pm," confirmed Site Director, KKNPP, R.S. Sundar.

Sources in the KKNPP said it might take a minimum of five days for resuming turbine operations.

[Continue reading...]

ரூ. 50 க்கு டெல்லி அரசு விற்கும் அழுகல் வெங்காயத்தை புறக்கணிக்கும் குடும்பத் தலைவிகள் delhi house wives reject rotten onions sold by government

- 0 comments

ரூ. 50 க்கு டெல்லி அரசு விற்கும் அழுகல் வெங்காயத்தை புறக்கணிக்கும் குடும்பத் தலைவிகள் delhi house wives reject rotten onions sold by government

புதுடெல்லி, அக். 30-

நாடெங்கும் வெங்காயத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

டெல்லி தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியின் தலையெழுத்தையே வெங்காய விலையுயர்வு மாற்றி அமைத்து விடுமோ? என்ற அச்சம் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை ஆட்கொண்டுள்ளது.

டெல்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதை தடுக்கும் வகையில் டெல்லிக்கு வரவேண்டிய வெங்காய லாரிகளை மத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தி விடுவதாக கூட ஷீலா தீட்சித் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், வெங்காய விளைச்சலுக்கு பெயர் பெற்ற நாசிக்கில் இருந்து டெல்லி அரசு சார்பில் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய ஷீலா தீட்சித் முடிவு செய்தார்.

தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசின் புதிய முடிவு தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் அவர் அனுமதி கோரினார். சரக்கு பற்றாக்குறையை போக்கவே வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் சந்தை விலைக்கே டெல்லியில் விற்கப்படும். அரசியல் ஆதாயத்துக்காக சலுகை விலையில் மக்களுக்கு விற்கும் திட்டம் எதுவும் அரசுக்கு கிடையாது என தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் ஷீலா தீட்சித் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வாக்குறுதியை ஏற்று டெல்லி அரசே நேரடியாக வெங்காயத்தை கொள்முதல் செய்ய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது. இதனையடுத்து, நாசிக்கில் உள்ள லசல்கான் வெய்காய சந்தைக்கு டெல்லி அரசு அதிகாரிகள் சென்றனர்.

இதனையடுத்து, நாளொன்றுக்கு 9000 டன் வெங்காயம் பயன்படுத்தப்படும் டெல்லிக்கு இன்று மட்டும 2 ஆயிரம் டன் வெங்காயம் வந்து சேர்ந்தது.

டெல்லி வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80-90க்கு விற்கப்படும் நிலையில் அரசின் சார்பில் 125 வேன்களின் மூலம் நேற்று வெங்காய விற்பனை தொடங்கியது.

டெல்லியின் 500 பகுதிகளை சுற்றி வந்த இந்த வேன்கள் ஒரு கிலோ வெங்காயத்தை 50 ரூபாய்க்கு விற்பனை செய்தன.

ஆயினும், இன்று தெருத் தெருவாக கூவி விற்கப்பட்ட இந்த வெங்காயம் சமைப்பதற்கு தகுதியற்று அழுகிப் போய் உள்ளதாக கூறும் சில பெண்கள் மலிவு விலையில் கிடைத்தாலும் இது தேவை இல்லை என்று ஒதுக்கிவிட்டு அதிக விலை கொடுத்தாவது நல்ல வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

டெல்லி மால்வியா நகரை சேர்ந்த குடும்பத் தலைவி ரேகா டண்டன் என்பவர் கூறுகையில் மலிவாக கிடைக்கிறது என்று நூறு ரூபாய் கொடுத்து 2 கிலோ வெங்காயம் வாங்கினேன்.

அதில் 1 கிலோ அழுகல் வெங்காயமாக உள்ளது. இதை விட 80 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயத்தை வெளி மார்க்கெட்டில் வாங்கியிருந்தால் எனக்கு 20 ரூபாய் மிச்சமாகியிருக்கும் என்று கூறினார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த டெல்லி அரசு அதிகாரிகள், வெங்காய லாரிகள் மழைபெய்த மாநிலங்கள் வழியாக வந்ததால் சற்று தரமற்றவை ஆகிப்போய் இருக்கக்கூடும் என்றனர்.

...

shared via

[Continue reading...]

அரசு அலுவலகங்களில் இனி யாகூ ஜிமெயில் பயன்படுத்த முடியாது Gmail Yahoo may be banned in government offices by year end

- 0 comments

அரசு அலுவலகங்களில் இனி யாகூ ஜிமெயில் பயன்படுத்த முடியாது Gmail Yahoo may be banned in government offices by year end

புதுடெல்லி, அக். 29-

அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் தரவு சேவைகள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்குவதை முற்றிலும் தடை செய்யவேண்டி வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் யாகூ, ஜிமெயில் வலைத்தளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அரசாங்கம் இனி தனது உத்தியோகபூர்வ தகவல்களுக்கு கொள்கை தேசிய தகவல் மையத்தின்(நிக்) இணையதளத் தொடர்புகளையே பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அரசாங்க அலுவலகங்கள் இந்த இணையதளத் தொடர்பை உபயோகப்படுத்துவதை அரசு கட்டாயமாக்க எண்ணியுள்ளது. இதன்மூலம் 5 முதல் 6 லட்சம் அரசு ஊழியர்கள் நிக் தகவல் தொடர்பை பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம், உத்தியோகபூர்வ ஆதாரங்களின்படி அரசாங்கத்தின் தகவல் பதிவுகள் பெருமளவில் பாதுகாக்கப்பட முடியும் என்று அரசு கருதுகின்றது.

இந்திய அரசாங்கத்தின் கொள்கை என அழைக்கப்படும் இந்தத் திட்டம் கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது. மற்ற அமைச்சரவைகளின் கருத்துகளும் இதுகுறித்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாத மத்தியிலிருந்து இறுதிக்குள் இந்த செயல்பாடுகள் தொடங்கக்கூடும் என்று மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத் தகவல்துறையின் செயலாளரான சத்யநாராயணா சிஐஐ உச்சி மாநாட்டின்போது நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த உட்கட்டமைப்பு வசதிகளுக்காக உடனடியாக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். ஆயினும், இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தும்போது இதன் முதலீடு 50 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி இத்தகைய தரவுத் தகவல்கள் கிளவுட் பிளாட்பாரம் எனப்படும் தொகுப்பில் சேமித்து வைக்கப்படும். அதனால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தங்களுடைய துறை குறித்த தகவல் தொகுப்புகளை எளிதில் கையாள முடியும் என்றும் சத்யநாராயணா விளக்கினார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜன்சி மற்றும் மத்திய புலனாய்வுத்துறை ஏஜென்சியின் முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்ததாரரான எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா மற்ற நாடுகளைக் கண்காணிப்பதை ஆதாரங்களுடன் விளக்கியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, உலக நாடுகள் தங்களின் தகவல் தொடர்புகள் குறித்த பாதுகாப்பில் வெளிநாட்டுத் தொடர்பு மையங்களான யாகூ, ஜிமெயில் போன்றவற்றை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்தவும் வழி வகுத்துள்ளது.

...

shared via

[Continue reading...]

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாராகிளைடிங் –ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு Thevar Jayanthi festival monitoring by paragliding drone

- 0 comments

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாராகிளைடிங் –ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு Thevar Jayanthi festival monitoring by paragliding drone

ராமநாதபுரம், அக்.29–

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாராகிளைடிங் மற்றும் ஆள் இல்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நேற்று தொடங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன்னில் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு தேவரின பக்தர்கள் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்நாள் ஆன்மீக விழாவாக முடிந்த நிலையில் 2–வது நாளான இன்று அரசியல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரவேசம் போன்றவை சொற்பொழிவாக நிகழ்த்தப்பட்டன. நாளை (30–ம்தேதி) குருபூஜை தினம் என்பதால் அரசியல் கட்சியினர், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையில் போலீசார் பல பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங் முகாமிட்டுள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து டி.ஐ.ஜி.க்கள், கண்காணிப்பாளர்கள், கூடுதல் உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தின் பதற்றமான பகுதிகள் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதன் ஒரு முயற்சியாக வானில் பறந்து கண்காணிக்கும் வகையில் பாராகிளைடிங் பாராசூட் வரவழைக்கப்பட உள்ளது. சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த மணிக்கண்ணன், தான் பாராகிளைடிங் மூலம் கண்காணிப்பு பணியை செய்ய உள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகணன் கூறியதாவது:–

பாராகிளைடிங் பாராசூட் இயக்க கற்றுத் தரும் பயிற்சியாளராக மணிக் கண்ணன், தனது பாரா கிளைடிங் பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வானில் பறப்பார். அவரது தலையில் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாழ்வாக பறக்கும் அவர் காமிரா மூலம் பதட்டம் ஏற்படும் இடங்கள், கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்றவை பற்றி வயர்லெஸ் மூலம் தகவல் கொடுப்பார். அதனை வைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று குற்ற நிகழ்வுகளை தடுப்பார்கள். இதுதவிர ஆள் இல்லா விமானமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பாரா கிளைடிங் பாராசூட் செயல்பாடு குறித்து அனைவருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பசும்பொன் செல்பவர் களை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச் சேத்தி, மானாமதுரை வழியாக செல்லும்போது அங்கு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லா விமானம் மூலம் அந்த பகுதியில் போலீசார் கண்காணிக்கிறார்கள். இந்த விமானம் மூலம் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முடியும். ரிமோட் மூலம் இந்த விமானத்தை இயக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்ப உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் முதுகலை தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் 6 பேரும் வந்துள்ளனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் போலீஸ் பாதூகப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னையில் இருந்தே கண்காணிக்கும் வகையில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் வெப் காமிராவும் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

...

shared via

[Continue reading...]

மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்திருக்கும் தாமரையை மறையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம் Hide lotus blooming in the pool in Madhyapradesh Congress letter to Election commission

- 0 comments

மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்திருக்கும் தாமரையை மறையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கடிதம் Hide lotus blooming in the pool in Madhyapradesh Congress letter to Election commission

போபால், அக்.29–

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 25–ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வருகிற 1–ந் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கட்சி மொத்தம் உள்ள 230 இடங்களில் 150 முதல் 160 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பெரிதும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மகா கவுசல். மால்வா, பந்தல் கண்ட் ஆகிய மண்டலங்களில் 40–க்கும் மேற்பட்ட குளங்களில் தாமரை மலர் பூத்துள்ளது. இந்த குளங்களில் தாமரை பயிரிடப்படுகிறது.

இந்த 40 குளங்களில் இருந்து தான் மத்தியபிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு தாமரை மலர்கள் அனுப்பப்படுகின்றன.

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னம் தாமரை என்பதால் இந்த குளங்களில் பூத்துக்குலுங்கும் தாமரை பூக்கள் காங்கிரசாரிடம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த தாமரை பூக்கள் தங்களுக்கு தோல்வியை ஏற்படுத்தும் வகையில் மாறி விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

இதையடுத்து மத்திய பிரதேச மாநில காங்கிரசார் நேற்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்துள்ள தாமரைகளை திரை போட்டு மறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் தேர்தல் நடந்த போது மாயாவதியின் பகுஜன் சமாஜகட்சியின் சின்னமான யானை சிற்பங்கள் எல்லாம் துணி போட்டு மூடப்பட்டன. அது போல தாமரை பூக்களையும் மூட வேண்டும் என்கிறார்கள்.

இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரசாரின் கோரிக்கை கேலிக்கூத்தாக உள்ளது. காங்கிரசின் சின்னம் கை என்பதால் நாட்டில் உள்ள எல்லாரது கைகளையும் மறைக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அப்படித்தான் காங்கிரசாரின் கோரிக்கை அபத்தமாக உள்ளது என்று பா.ஜ.க.வினர் கூறியுள்ளனர்.

...

shared via

[Continue reading...]

Monday, 28 October 2013

கிரிஷ் 3 படத்தில் வில்லனாக நடிக்க விரும்பினேன்: ஹ்ரிதிக் ரோஷன் தகவல் hrithik roshan wished to play villain role in krish 3

- 0 comments

கிரிஷ் 3 படத்தில் வில்லனாக நடிக்க விரும்பினேன்: ஹ்ரிதிக் ரோஷன் தகவல் hrithik roshan wished to play villain role in krish 3

மும்பை, அக். 29-

பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பில் வெளியான கிரிஷ் மற்றும் கிரிஷ் 2 ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்து வெற்றியடைந்தன.

இதனையடுத்து, ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கிரிஷ் 3 வரும் நவம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே நான் விரும்பினேன் என்று கதாநாயகனாக நடித்துள்ள ஹ்ரிதிக் ரோஷன் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற இப்படத்தின் அறிமுக விழாவில் அவர் கூறியதாவது:-

கிரிஷ் 3 படத்தில் வரும் வில்லன் கால் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நான் விரும்பினேன். இந்த கதாபாத்தித்திற்கு எனது நடிப்பின் வாயிலாக வலிமை சேர்க்க முடியும் என நான் நம்பினேன்.

ஆனால், எனது விருப்பத்திற்கு தடை போட்ட எனது தந்தையும் இப்படத்தின் இயக்குனருமான ராகேஷ் ரோஷன், கால் கதாபாத்திரத்தை நடிகர் விவேக் ஓபராவை மனதில் வைத்து உருவாக்கியதாக கூறி விட்டார்.

எனது தந்தையின் முடிவு மிகவும் சரியானது தான் என்பதை தனது நடிப்பின் மூலம் விவேக் ஓபராய் நிரூபித்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

[Continue reading...]

அஜித்திற்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் ajith and vijay fans

- 0 comments

அஜித்திற்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்

அஜித்தின் ஆரம்பம் பட வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

அஜித்தின் ஆரம்பம் தீபாவளி சரவெடியில் வெடிக்க தயாராகி விட்டது.

இந்நிலையில் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

இந்த பேனர் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த பேனரில் அஜித்துக்கு விஜய் வாட்ச் கட்டிவிடுவது போன்ற புகைப்படம் உள்ளது.

இணையதளத்தில் இந்த பேனர் போடப்பட்டவுடன் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் தீயா பரப்பி வருகின்றனர்.

மேலும் விஜய் ரசிகர்கள் ஆரம்பம் படத்தை ஆதரித்து வைத்துள்ள பேனரை பார்த்த அஜித் ரசிகர் மன்றத்தினர் உருகிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

shared via

[Continue reading...]

ஆந்திராவில் பலத்த மழை: 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது heavy rain andhra 4200 village flooded afloat

- 0 comments

ஆந்திராவில் பலத்த மழை: 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது heavy rain andhra 4200 village flooded afloat

ஐதராபாத், அக். 28–

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

மழை வெள்ளத்தால் ஆந்திராவில் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விசாகப்பட்டினம், விஜயநகரம், மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், மெடக், கரிம்நகர், கம்மம், பிரகாசம் உள்பட 14 மாவட்டங்களில் விவசாய பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழிந்தது.

மேற்கு கோதாவரியில் 1150 வீடுகள் இடிந்து தரை மட்டமானது. 2½ லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மூழ்கியது. விசாகப்பட்டினத்தில் 20 கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு பயிர்கள் அழிந்தது.

இதே போல், மெடக், கரிம்நகர், கம்மம் மாவட்டத்தில் நெல், பருத்தி, மிளகாய், மக்காச்சோளம் தண்ணீரில் மூழ்கி அழுகியது.

மழையால் மாநிலத்தில் ரூ.1727 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக வருவாய்துறை மந்திரி ரகுவீராரெட்டி கூறினார். நேற்று அவர் வெள்ளம் பாதித்த நல்கொண்டா மாவட்டத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு கூறியதாவது:–

மாநிலத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 521 மண்டலத்தில் 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. 22 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளது. 42 பேர் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணப் பணிக்காக ரூ.1600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜயநகரம் மற்றும் விஜயவாடா பகுதியில் பல்வேறு இடங்களில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் கோரப்பள்ளி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்பட 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மற்ற ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. மாநிலம் முழுக்க 85 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் ஒடிசாவில் பெய்து வரும் மழையால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 2½ லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

...

shared via

[Continue reading...]

Sunday, 27 October 2013

A promotion for Soori!

- 0 comments

A promotion for Soori!

Comedian Soori, better known as Parotta Soori, has been steadily making a mark in the industry! He has been having a wonderful 2013, with his movies Kedi Billa Killadi Ranga and Varutha Padadha Vaalibar Sangam have become huge hits, and his comedy portions have been well appreciated. The latest news is that, Soori's wife has delivered a bonny baby boy! Soori also has quite a number of movies in hand, including Maan Karate and Jilla.

Galatta.com wishes Soori and his family all the very best!

shared via

[Continue reading...]

மாமியார் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு: அபுதாபி கோர்ட் உத்தரவு abudhabi court orders 50 thousand dinar compensation to miscarried woman

- 0 comments

மாமியார் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு: அபுதாபி கோர்ட் உத்தரவு abudhabi court orders 50 thousand dinar compensation to miscarried woman

அபுதாபி, அக். 28-

மாமியார் மற்றும் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு கணவர் வீட்டாருக்கு அபுதாபி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அபுதாபியை சேர்ந்த ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று மாமியாருடன் அவருக்கு வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது அருகில் இருந்த 3 மைத்துனர்கள் மற்றும் ஒரு மைத்துனி தாய்க்கு பரிந்து பேசி அந்த பெண்ணை கண்மூடித் தனமாக தாக்கினார்கள். நான்கைந்து பேர் சூழ்ந்துக் கொண்டு தாக்கியதில் நிலைதடுமாறிய் அந்த பெண் கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவரது வயிற்றில் இருந்த 3 மாத கரு சிதைந்தது. இதனையடுத்து, அந்த பெண் கோர்ட்டை நாடினார்.

மாமியார் குடும்பத்தினர் 3 ஆண்டுகளாக தன்னை அடித்து, உதைத்து சீத்தரவதை செய்ததாகவும், தற்போது ஏற்பட்ட கருச்சிதைவுக்கு இழப்பீடாக அவர்கள் 1 லட்சம் திர்ஹம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கணவரின் குடும்பத்தார் 50 ஆயிரம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 85 லட்சம் ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மாமியார் மற்றும் 3 மைத்துனர்களுக்கு தலா 200 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டது.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger