மாமியார் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு: அபுதாபி கோர்ட் உத்தரவு abudhabi court orders 50 thousand dinar compensation to miscarried woman
அபுதாபி, அக். 28-
மாமியார் மற்றும் மைத்துனர்கள் தாக்கியதில் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு கணவர் வீட்டாருக்கு அபுதாபி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அபுதாபியை சேர்ந்த ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று மாமியாருடன் அவருக்கு வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது அருகில் இருந்த 3 மைத்துனர்கள் மற்றும் ஒரு மைத்துனி தாய்க்கு பரிந்து பேசி அந்த பெண்ணை கண்மூடித் தனமாக தாக்கினார்கள். நான்கைந்து பேர் சூழ்ந்துக் கொண்டு தாக்கியதில் நிலைதடுமாறிய் அந்த பெண் கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவரது வயிற்றில் இருந்த 3 மாத கரு சிதைந்தது. இதனையடுத்து, அந்த பெண் கோர்ட்டை நாடினார்.
மாமியார் குடும்பத்தினர் 3 ஆண்டுகளாக தன்னை அடித்து, உதைத்து சீத்தரவதை செய்ததாகவும், தற்போது ஏற்பட்ட கருச்சிதைவுக்கு இழப்பீடாக அவர்கள் 1 லட்சம் திர்ஹம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கணவரின் குடும்பத்தார் 50 ஆயிரம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 85 லட்சம் ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மாமியார் மற்றும் 3 மைத்துனர்களுக்கு தலா 200 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?