கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மீது கல் வீச்சு: நெற்றி காயத்தால் பணிகள் பாதிப்பு Kerala Chief Minister hurt as protesters throw stones
கண்ணூர், அக். 27-
கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி இன்று போலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கண்ணூர் சென்றார். அங்கு அவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி ஜனநாயக முன்னணி அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் அவர் மீது திடீரென கல் வீசி தாக்கினர்.
அவர் காரில் வரும்போது இரண்டு பக்கமும் போராட்டக்காரர்கள் அவரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் பின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அப்போது கார் கண்ணாடித்தூள் பட்டு உம்மன் சாண்டியின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. மேலும் ஒரு கல் அடியும் விழுந்தது.
இந்த தாக்குதலின் போது அவருடன் மந்திரி கே.சி. ஜோசப்பும் உடன் இருந்தார். இச்சம்பவத்தால் கலக்கம் அடையாத உம்மன் சாண்டி அந்த போலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். மேற்கொண்டு அவரது நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. தாக்குதல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கேரள எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று இடது சாரி ஜனநாயக முன்னனி அங்கு போராட்டம் நடத்தி வருகிறது.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?