Thursday, 29 May 2014

ஆந்திர சிறுமி பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு Andhra girl molested case judgement today

- 0 comments

ஆந்திர சிறுமி பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு Andhra girl molested case judgement today

 

திருச்சி, மே.29–

ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் மலர்(வயது 15 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு மே மாதம் சேலத்துக்கு ஒரு கும்பல் அழைத்து வந்தது. பின்னர் திருச்சியில் உள்ள ஒரு வீட்டிற்கு மலரை கடத்தி வந்து அடைத்து வைத்த போது அந்த கும்பலிடம் இருந்து தப்பிய மலர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி மலரை கடத்தியது விபசாரக்கும்பல் தலைவி ஆஷா (25), சக்திவேல் (38), பிரபு (31), வங்கதேசத்தை சேர்ந்த முகமது சபியுல்லா (30) மற்றும் துறையூர் அ.தி.மு.க. ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பொன்.காமராஜ் (42), தர்மா (30), காவியா (45), டிரைவர் சிவா ஆகியோர் என்று தெரிய வந்தது. இதை தொடர்ந்து 8 பேர் மீதும் சிறுமியை கடத்தி வந்து பலாத்காரம் செய்ததாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி 2–வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது வரை இந்த வழக்கில் 38 பேரிடம் சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் முடிந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரிடம் நீதிபதி ரகுமான் சாட்சிகளின் அடிப்படையில் கடந்த 19–ந் தேதி விசாரணை நடத்தினார்.

அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் இன்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இதையொட்டி கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோர்ட் வளாகத்தில் இன்று காலை முதலே பரபரப்பு நிலவியது.

...

http://oruwebs.blogspot.com

 

[Continue reading...]

மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி madras next karthi act komban movie

- 0 comments

மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி madras next karthi act komban movie

 

மெட்ராசுக்குப் பிறகு கொம்பனாக வரும் கார்த்தி madras next karthi act komban movie

Error! Filename not specified.

பிரியாணி படத்திற்குப் பிறகு 'மெட்ராஸ்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரேசா நடிக்கிறார்.

வட சென்னையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இதற்கிடையில் அடுத்தப் படத்திற்கான வேலையை விறுவிறுப்பாக தொடங்க உள்ளார் கார்த்தி.

குட்டிப்புலி படத்தை இயக்கிய எம்.முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். இப்படத்திற்கு 'கொம்பன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குட்டிப்புலி படத்தில் ஹீரோயினாக நடித்த லட்சுமி மேனன், இப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

...

 

[Continue reading...]

பிரதமர் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேர பாதுகாப்பு Prime Minister Narendra Modis wife Jashoda Modi gets 24x7 security cover

- 0 comments

பிரதமர் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேர பாதுகாப்பு Prime Minister Narendra Modis wife Jashoda Modi gets 24x7 security cover

 

பிரதமர் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேர பாதுகாப்பு Prime Minister Narendra Modis wife Jashoda Modi gets 24x7 security cover

 

அகமதாபாத், மே 30-

நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மனைவி பெயர் ஜசோதா பென் என தெரிவித்திருந்தார். முதன்முறையாக தனது மனைவி பெயரை மோடி வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவு வெளியானவுடன் மோடியின் மனைவிக்கு 7 நாட்கள், 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு சாதாரண உடையில் துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும், அவரது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் ஏதாவது உள்ளதா என எந்நேரமும் வாகனம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளரான திரிவேதி தெரிவித்துள்ளார். அவருடன் எப்போதும் ஒரு காவலர் உடன் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜசோதா தனது மூத்த சகோதரரான அசோக் மோடியுடன் உஞ்ஜாவில் சேர்ந்த ராம்ஜி மந்திருக்கு எதிரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

...


View article...

[Continue reading...]

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ராக்கெட்டில் பறந்து சென்ற மூவர் Three of the men who flew a rocket to the International Space Station

- 0 comments

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ராக்கெட்டில் பறந்து சென்ற மூவர் Three of the men who flew a rocket to the International Space Station

 

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ராக்கெட்டில் பறந்து சென்ற மூவர் Three of the men who flew a rocket to the International Space Station

 

மாஸ்கோ, மே 29-

ரஷ்யாவில் உள்ள கசகஸ்தானிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ரஷ்யா ஏவிய ராக்கெட் பறந்து சென்றது. இந்த ராக்கெட்டில் பயணம் செய்யும் மூவர் சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு நடத்த உள்ளனர்.

சோயஸ் பூஸ்டர் என்ற அந்த ராக்கெட் வியாழன் அதிகாலை 1:57 மணிக்கு தனது பயணத்தை துவக்கியது. கும்மிருட்டாக காணப்பட்ட மத்திய ஆசிய பகுதியின் மேல் அந்த ராக்கெட் பறந்து சென்றது. நாசாவை சேர்ந்த ரீட் ஒய்ஸ்மென், ரஷியாவை சேர்ந்த மேக்ஸ் சுராயேவ் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் க்ரெஸ்ட் ஆகியோர் இந்த ராக்கெட்டில் பயணம் செய்தவர்கள் ஆவார்கள்.

இன்னும் ஆறு மணி நேரத்தில் இந்த ராக்கெட் தனது சுற்றுப்பாதை மையத்தை அடைந்து அங்கேயே ஆறு மாதங்கள் தங்கியிருந்து ஆய்வு செய்யும். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முதல் அங்கு ஆய்வில் ஈடுபட்டு வரும் இரு ரஷ்யர்கள் மற்றும் ஒரு அமெரிக்கருடன் இந்த ராக்கெட்டில் செல்லும் மூவரும் இணைந்துகொள்வார்கள்.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டாலும் இரு நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

...


View article...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger