டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஆறு பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இதனை கண்டித்து மாணவர்கள் பெண்கள் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினார்கள்.இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிக்கு எதிராக கடுமையானசட்டம் கொண்டு வந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. புதிதாக பாலியல் குற்றத் தடுப்பு திருத்த மசோதா தயார் செய்யப்பட்டது.இந்த மசோதாவின் சம்மத பாலுறவுக்ககான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்ததால் நிறைவேற்றவில்லை.முன்பு போல் 18 வயதையே நீடிக்க செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-செக்ஸ் க்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பதன் மூலம்கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி கருத முடியும். அது தவறான வழி. கற்பழிப்பு குற்றங்களை குறைக்கசெய்யாது. இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்கள் வயது வித்தியாசமின்றி நடக்கின்றன. நாட்டின் எங்கோ ஒரு மூலையில் 45வயது பெண்கூட கற்பழிக்கப்படுகிறாள்.வயதை குறைப்பதாலேயோ அல்லது கூட்டுவதாலேயோ எந்த வித்தியாசமும் ஏற்படப்போவது இல்லை. ஒருவருக்கு ஒட்டு போடும்வயது 18 என உள்ளது. எனவே அந்த வயதில் இருந்துதான் எல்லாம் துவங்க வேண்டும்.இவ்வாறு குஷ்பு கூறினார்.நடிகை பிரியாமணி கூறும்போது, திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதை இரண்டு ஆண்டுகள் குறைப்பதால் எந்த பெரிய வித்தியாசமும் வரப்போவதில்லை என்றார்.
[Continue reading...]