Sunday, 25 September 2011

தினபலன் - 25-09-11

- 0 comments


மேஷம்

எதிர்பாராத உதவிகள் கிடைத்து மகிழும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தலைமைப் பதவிகள் உங்களை தானே தேடி வந்து சேரலாம்.

ரிஷபம்

முன்னேற்றம் காண முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். கரைந்த மேலும்படிக்க

http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசுவதை கண்���ித்து "பொங்கு தமிழ் அமைப்பினர் ஆ���்ப்பாட்டம்

    - 0 comments


    ஐ.நா.சபையில் ராஜபக்சே பேசுவதை கண்டித்து  பொங்கு தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்  ஐக்கிய நாட்டு சபையில், இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதை கண்டித்து, நியூயார்க் நகரில் "பொங்கு தமிழ்'' அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் போர் நடந்தபோது நடந்த குற்றங்கள் பற்றி ஐக்கிய நாட்டு சபையின் மேலும்படிக்க

    http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    மும்பை அணி "திரில்" வெற்றி

    - 0 comments


    மும்பை அணி திரில் வெற்றிமலிங்காவின் அதிரடி கைகொடுக்க, சாம்பியன்ஸ் லீக் போட்டியில், மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்" வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் பவுலிங்கில் சொதப்பியதால் சென்னை அணி, கடைசி ஓவரில் பரிதாபமாக வீழ்ந்தது.

    இந்தியாவில் மூன்றாவது மேலும்படிக்க

    http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    அமெரிக்காவின் ய��.ஏ.ஆர்.எஸ். செயற்கை கோள் கனடாவில் விழுந்தது - உயிர் ��ேதம் எதுவும் இல்லை

    - 0 comments


    அமெரிக்காவின் யூ.ஏ.ஆர்.எஸ். செயற்கை கோள் கனடாவில் விழுந்தது - உயிர் சேதம் எதுவும் இல்லைஅமெரிக்காவின் செயல் இழந்த செயற்கை கோள், கனடாவில் விழுந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் கேப் கானவரால் நகரில் இரு�்து 1991-ம் ஆண்டு 6 டன் எடை உள்ள மேலும்படிக்க

    http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    நேபாள விமான விபத���து; 10 இந்தியர்கள�� உட்பட 19 பேர் பலி

    - 0 comments


    நேபாள விமான விபத்து 10 இந்தியர்கள் உட்பட 19 பேர் பலிநேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை இமயமலை பகுதியில் குட்டி விமானம் மலையில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதில் 8 தமிழர்கள் உள்ளிட்ட 10 இந்தியர்கள் அடங்குவர்.

    இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதை ஒட்டிய மேலும்படிக்க

    http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    உள்ளாட்சி தேர்த��் :விஜயகாந்த் தல��மையில் புதிய கூட்டணி

    - 0 comments


    உள்ளாட்சி தேர்தல் விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணிஉள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பரபரப்ப�க எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) மேலும்படிக்க

    http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    தினபலன் - 26-09-11

    - 0 comments



    மேஷம்

    எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நாள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். அலைச்சல் சற்று அதிகரிக்கும். உத்யோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    ரிஷபம்

    இனிமையான நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். தொலைதூர மேலும்படிக்க

    http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    இங்கிலாந்தில் இன்னமும் சக்கைபோடு போடும் மங்காத்தா

    - 0 comments
     
     
    'தல' அஜித் குமாரின் 50-வது படமான மங்காத்தா இங்கிலாந்தில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
     
    அஜித் நடித்த படம் மங்காத்தா தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இங்கிலாந்திலும் மங்காத்தா சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
     
    இங்கிலாந்தில் கடந்த 31-ம் தேதி ரிலீஸ் ஆனதில் இருந்து இது வரை ரூ. 1. 24 கோடி வசூல் ஆகியுள்ளது. இன்னமும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் மட்டுமில்லை சிங்கப்பூர், மலேசியா, அமெரி்க்கா உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
     
    இங்கிலாந்தில் ரீலீஸ் ஆன முதல் வார இறுதியில் மங்காத்தா பாக்ஸ் ஆபீசில் 15-வது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் சல்மானின் பாடிகார்டும் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
     
    இதற்கிடையே, மங்காத்தாவின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ. 40 கோடியைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



    [Continue reading...]

    சந்திக்க 'டைம்' கேட்ட ராஜபக்சே-நிராகரித்த ஒபாமா! ;அவமானத்தில் ராஜபக்சே

    - 0 comments
     
     
     
    தன்னை சந்திக்க நேரம் கேட்ட ராஜபக்சேவை சந்திக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மறுத்து விட்டார். அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் யாரும் ராஜபக்சேவை சந்திக்கவில்லை. இதனால் இலங்கைக்கும், ராஜபக்சேவுக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது நியூயார்க்கில்.
     
    ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் நியூயார்க்கில் குவிந்துள்ளனர். இவர்களில் ராஜபக்சேவும் ஒருவர். ஆனால் திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் நிலையில் ராஜபக்சே மற்றும் அவரது குழுவினரின் நிலை உள்ளது. நியூயார்க்கை விட்டு வெளியேறக் கூடாது என்று அமெரிக்க அதிகாரிகள் ராஜபக்சேவுக்குத் தடை போட்டு விட்டனர். இதனால் பொறியில் சிக்கிய எலி போல மாறிப் போயுள்ளார் ராஜபக்சே.
     
    இந்த நிலையில் மேலும் ஒரு அவமானம் அவருக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ராஜபக்சே. ஆனால் நேரமில்லை என்று உடனடியாக பதில் வந்து விட்டதாம். இதனால் பெருத்த அதிர்ச்சியாகி விட்டார் ராஜபக்சே.
     
    அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் கூட ராஜபக்சேவை சந்திக்க மறுத்து விட்டனராம். தனியாகவெல்லாம் சந்திக்க முடியாது என்று கூறி அவர்களும் புறக்கணித்து விட்டனராம்.
     
    இதனால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், சீன, பாகிஸ்தான் தலைவர்களையும் மட்டும் பார்த்து பேசி திருப்தியடைய வேண்டிய நிலை ராஜபக்சேவுக்கு.
     
    அமெரிக்கா வாழ் தமிழர்கள், இலங்கையின் இனப்படுகொலை குறித்தும், போர்க்குற்றம் குறித்தும் தொடர்ந்து அமெரிக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். நியூயார்க் கோர்ட்டில் ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ராஜபக்சேவை சந்திக்க ஒபாமா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.



    [Continue reading...]

    டெண்டுல்கரை விமர்சித்த விவகாரம் : அந்த பல்டி அடித்தார் அக்தார்!

    - 0 comments
     
     
    பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப்அக்தர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் டெண்டுல்கரை விமர்சித்துள்ளார். தனது பந்தை சந்திக்க அவர் பயப்பட்டார் எனவும், டிராவிட், டெண்டுல்கர் ஆகியோர் அணி வெற்றியை உறுதி செய்யக்கூடிய வீரர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. டெண்டுல்கர் கருத்து தெரிவிக்க மறுத்தாலும் பல வீரர்கள் அக்தருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    அக்தர் புத்தகத்திற்கு பாகிஸ்தான் வாரிய தலைவர் இஜாஸ்பட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
     
    டெண்டுல்கர், டிராவிட்டை விமர்சித்தால் புகழ்பெறலாம் என்ற நோக்கில் அக்தர் இவ்வாறு நடந்திருப்பதாகவும், இவ்வாறு எழுதியிருப்பது முட்டாள்த்தனமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே டெண்டுல்கர் பற்றி விமர்சனம் செய்திருப்பதை அக்தர் மறுத்துள்ளார். இதுபற்றி கூறும் போது, டெண்டுல்கர் மிகச்சிறந்த வீரர். சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடன் ஒப்பிட நான் யார். என்னுடைய புத்தகத்தை தெளிவாக படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்.
     
    நான் குறிப்பிட்டிருப்பது, குறிப்பிட்ட ஆட்டத்தில், குறிப்பிட்ட சூழ்நிலையை மட்டும் தான். அப்போது முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வந்த டெண்டுல்கரால் பந்தை அடித்து ஆட முடியவில்லை. அப்போது அவரை நான் குறிவைத்து மிரட்டினேன். மற்ற போட்டிகளில் அவர் என்னை மிரட்டியி ருக்கிறார். அன்று அவர் எனது பந்துவீச்சை சமாளிக்க திணறினார் என்று தான் கூறினேன்.
     
    அதே போல தான் டிராவிட்டையும் குறிப்பிட்டேன். டிராவிட்டை டெஸ்ட் போட்டிகளில் அவுட்டாக்குவது கடினம். ஒருநாள் போட்டிகளில் அவர் வெற்றி நாயகன் தான். கடந்த 6 வருடங்களாக டெண்டுல்கரின் ஆட்டம் அதிசயப் படும் வகையில் உள்ளது என்று தெரி வித்துள்ளார்.



    [Continue reading...]

    சிம்பு பட விழாவுக்கு வரும் சல்மான்கானுக்கு கறுப்புக் கொடி

    - 0 comments
     
     
     
    சிம்பு "ஒஸ்தி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இது இந்தியில் ஹிட்டான தபாங் படத்தின் ரீமேக் ஆகும். தரணி இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கு இந்தி நடிகர் சல்மான்கானை அழைக்கப் போவதாக சிம்பு கூறியுள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
     
    அக்கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அங்கு நடந்த இனப்படுகொலை பற்றி சல்மான்கான் இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை.
     
    திரையுலகத்தினரின் தடையையும் மீறி இலங்கையில் சல்மான்கான் படப்பிடிப்புக்கும் சென்று வந்தார். எனவே சிம்பு ஒஸ்தி பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு சல்மான்கானை அழைக்க கூடாது. மீறி அவர் வந்தால் சல்மான்கானுக்கு கறுப்புக் கொடி காட்டுவோம். விழா அரங்குக்குள் நுழைந்து போராட்டமும் நடத்துவோம்.
     
    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger