Thursday, 31 October 2013

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.15 குறைந்தது: டீசல் விலை 50 காசு அதிகரிப்பு petrol price per liter rs 1.15 decrease

- 0 comments

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.15 குறைந்தது: டீசல் விலை 50 காசு அதிகரிப்பு petrol price per liter rs 1.15 decrease

புதுடெல்லி, அக். 31-

சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலையில் மாற்றம் செய்துகொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விற்பனை மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட மாதந்தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தலாம் என்று கிரித்பரிக் கமிட்டி தனது ஆய்வறிக்கையை பெட்ரோலியத் துறையிடம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் அதிகரிப்பதாகவும், இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேசமயம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.15 குறைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் வரிகளைப் பொறுத்து மாறுபடும்.

இந்த விலை குறைப்பின் மூலம் இன்று நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 குறைந்து ரூ.74.22-க்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.71.02 ஆகவும், கொல்கத்தாவில் 78.07 ஆகவும், மும்பையில் ரூ.74.22 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

டீசல் விலை சென்னையில் லிட்டருக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.56.61க்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் 53.10க்கும், கொல்கத்தாவில் 57.49க்கும், மும்பையில் 60.08க்கும் விற்பனை ஆகும்.

...

shared via

[Continue reading...]

மடோனாவின் 18 வயது நிர்வாணப் படங்கள் ஏலம் 9–ந்தேதி நடக்கிறது madonna 18 age photo auction 9 on going

- 0 comments

மடோனாவின் 18 வயது நிர்வாணப் படங்கள் ஏலம் 9–ந்தேதி நடக்கிறது madonna 18 age photo auction 9 on going

லாஸ்ஏஞ்சல்ஸ், அக். 31–

பாப் இசையின் ராணி என்று அழைக்கப்படுபவர் மடோனா. இளமைக் காலத்தில் தனது கவர்ச்சியாலும், இனிய குரலாலும் அமெரிக்க ரசிகர்களை கட்டிப்போட்டவர். தற்போது மனோடனாவுக்கு 55 வயது ஆகிறது. இப்போதும் அவர் மவுசு குறையாமல் இருக்கிறார்.

இந்த நிலையில் மடோனாவை 18 வயதில் எடுத்த நிர்வாணப் படங்கள் என்றால் கேட்கவா வேண்டும்? நியூயார்க் நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெரேமிபிராம்மெர் தனது அருங்காட்சியகத்தில் மடோனாவின் இளமை கால நிர்வாணப்படங்கள் வைத்துள்ளார். அவற்றை அவர் ஏலம் விடப் போவதாக அறிவத்துள்ளார். வருகிற 9–ந்தேதி 'ஆன்லைன்' மூலம் ஏலம் விடப்படுகிறது.

18 வயதில் மடோனா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடனம் பயின்றார். அப்போது அவர் 10 அமெரிக்க டாலருக்காக (ரூபாய் மதிப்பு 600) ஹெர்மன் குல்கென்ஸ் என்பவருக்கு நர்வாண போஸ் கொடுத்தார். மேலாடை இல்லாமலும் பலவித கோணங்களில் எடுக்கப்பட்டது. இது அவர் பிரபலமாவதற்கு முன் எடுக்கப்பட்டது. தற்போது அதற்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் ஏலத்துக்கு வந்துள்ளது.

இளமை காலத்தில் தான் நிர்வாண போஸ் கொடுத்ததை மடோனாவும் ஒப்புக்கொண்டார்.

இதற்கு முன் 1983–ல் மடோனா போட்டோக்களை 'பிளேபாய்' பத்திரிகையில் பிரசுரிப்பது தொடர்பாக சட்ட சிக்கல் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு 1985–ல் படங்கள் பிரசுரமானது.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger