Tuesday, 22 November 2011

அதிமுக அமைச்சர் ���ீது பெண் டாக்டர�� வழக்கு

- 0 comments


திருச்சி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவராக பணியாற்றுபவர் ராணி. இவர் திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பரஞ்சோதி மீது, முதல் அமைச்சர் தனிப்பிரிபு மற்றும் திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து ஆகியோரிடம் புகார் கொடுத்தார்.

அதில், பரஞ்சோதியும் நானும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே என் குடும்பத்திற்கு பழக்கமானவர் பரஞ்சோதி. என் கணவருடன் பிரிந்து விவகாரத்து வாங்கி, ஆழ்ந்த வருத்தத்தில் நான் இருந்தபோது, ஆறுதல் சொல்ல வந்தவர் பரஞ்சோதி. அப்படி ஆறுதல் சொன்னவர் என்னுடன் நெருங்கி பழகி, திருமணம் செய்து கொண்டார்.

என்னை இரண்டாவது திருமணம் செய்த பின்னர், அவர் கேட்கும்போதெல்லாம் பணம் மற்றும் நகைகளை கொடுத்தேன். இந்நிலையில் அவரக்கு திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பு தந்தது. அப்போது என்னிடம் நான் ஜெயித்து மந்திரி ஆகிவிடுவேன். இரண்டாது மனைவி போன்ற விஷயங்ள் தலைமைக்கு பிடிக்காது, ஆகையால் நீ விலகிவிடு என்று என்னிடம் பரஞ்சோதி கூறினார். மேலும் சிலரை வைத்து மிரட்டினார் என்று புகாரில் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை திமுக தரப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் பரப்பினார்கள். ஆனால், காவல்துறையோ, முதல் அமைச்சரோ நடவடிக்கை எடுக்காததால், ராணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், காவல்துறையிடம் நேரடியாக புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு மனுவை தள்ளுபடி செய்தது.

இதற்குப் பின்னர் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து வழக்கறிஞர் இமயவள்ளி துணையோடு ராணி, திருச்சி ஜெ.எம் 4 நீதிமன்றத்தில் மாஜிஸ்ரேட் புஷ்பராணியிடம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்ரேட் புஷ்பராணி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உறையூர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டார்.


http://actressmasaala.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    அயர்லாந்து தலைந��ர் டப்ளின் இல் த��சிய நினைவெழுச்ச��� நாள்!

    - 0 comments


    அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் 27.11.2011, ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் Lantern Centre, No-17 Synge Street, Dublin - 8 ல் இலங்கையில் சிங்கள அரசினால் இதுவரை காலமும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும், எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சி நாள் நடை பெறவுள்ளது.

    இந்த நினைவு நாள் கூட்டத்திற்கு அனைத்து அயர்லாந்து வாழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு அயர்லாந்து தேசிய நினைவெழுச்சி நாள் ஒருங்கமைப்புக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.




    http://actressmasaala.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    உலக நாடுகளின் வய���ற்றில் புளியைக் கரைத்தது அமெரிக���க ஏவுகணை!

    - 0 comments


    ஆசியாவில் இனி ஆயுதப் போர் நடைபெறக்கூடாது.. அமெரிக்கா..!! சிறுபான்மை மக்கள் படுகொலைகள் முடிவுக்கு வரவேண்டும்..

    மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் அமெரிக்காவின் புதிய அதிவேக ஏவுகணை கடந்த வியாழனன்று வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டது. உலகத்தின் முக்கிய இலக்குகளை ஒரு மணி நேரத்தில் தொட்டுவிடக்கூடிய மேற்கண்ட ஏவுகணை அமெரிக்க இராணுவ பிரிவான பென்ரகனின் இன்னொரு இமாலய சாதனை என்று வர்ணிக்கப்படுகிறது. அட்வாண்ஸ் கைப்பசொனிக் வெப்பன்ஸ் என்று இது அழைக்கப்படுகிறது. கடந்த வியாழனன்று அதிகாலை 13.30 மணிக்கு ஹவாயில் இருந்து ஏவப்பட்டது. சுமார் அரை மணி நேர இடைவெளியில் பசுப்பிக்சமுத்திரத்தில் உள்ள 3700 கி.மீ தூர இலக்கை இது தகர்த்துத்தள்ளியது. இந்த ஏவுகணையானது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பறக்கக் கூடியது. உலகத்தில் இன்று பாவனையில் உள்ள அத்தனை ஏவுகணைகளையும்விட இது அதிவேகமானது. இந்த ஏவுகணையின் தலைப்பகுதியில் அணு குண்டை பொருத்த முடியும். இந்தப் பரிசோதனை மூலம் தொடர்ந்தும் உலக இராணுவ பலத்தில் அமெரிக்காவே முதலிடம் என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இது இவ்விதமிருக்க கடந்த வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். எதிர் காலத்தில் ஆசியா கண்டமானது அமைதி, நாடுகளோடு நாடுகள் சேர்ந்தியங்கும் ஒற்றுமைப் பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற ரக் பிரேரணை பற்றிய பேச்சுக்களை விபரமாக நடாத்தியுள்ளார். சிறீலங்காவில் நடந்தது போன்ற இன்னொரு உள்நாட்டுப் போர் இனி ஆசியாவில் இல்லை என்ற விவகாரத்தை அமெரிக்க அதிபரின் சந்திப்பு அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளது. சிறீலங்கா, இந்தியா போன்ற நாடுகள் தமது சிறுபான்மை இனங்கள் மீதான போரை நிறுத்த வேண்டிய பருவம் இதுவாகும். மறுத்தால் புதிய ஏவுகணை பதில் சொல்லும் என்ற மெல்லிய எச்சரிக்கை இதில் தேநீரில் பால் போலக் கலந்துள்ளது. மேலும் வல்லாதிக்க சக்திகளுடன் இணைந்து, அனுமதி பெற்றே வன்னிப் படுகொலைகளும் நடந்துள்ளன என்ற உண்மையையும் இந்த சந்திப்புக்கள் சொல்லாமல் சொல்லுகின்றன. இருந்தாலும் புதிய உலக ஏற்பாடு இனவாத சிங்களத்தைவிட தமிழருக்கே அதிக வாய்ப்பாக உள்ளது. சர்வதேச நிகழ்ச்சித்திட்டத்தை அறிந்து தமிழர்களும் நாடகத்தை ஆடினால் பல அரசியல் இலக்குகளை எட்டித்தொட முடியும்.


    http://actressmasaala.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    தேசத்துரோக வழக்��ு: சீமான் கண்டனம��

    - 0 comments


    கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகக் போராடியவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

    கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடிட வேண்டும் என்று கோரி கடலில் சென்று கறுப்புக் கொடி பிடித்துப் போராடிய மீனவர்கள் மீது நாட்டிற்கு எதிராக போர் தொடுத்துள்ளார்கள் என்றும், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தேசத் துரோகம் என்றும் அரசு வழக்குப் பதிவு செய்திருப்பது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கையாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கினால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும், அது தங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்றுதான் அப்பகுதியில் போராடிவரும் மற்ற மக்களுடன் இணைந்து மீனவர்களும் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தின் ஒரு அங்கமாக சற்றேறக்குறைய 500 மீன் பிடி படகுகளில் கூடங்குளம் ஒட்டிய கடற் பரப்பிற்குச் சென்று படகில் இருந்தபடி கறுப்புக் கொடி பிடித்து அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
    கடற்கரையில் இருந்து ஒரு கடல் மைல் தூரம், அதாவது 1.8 கி.மீ. தூரத்தில் படகை நிறுத்திக்கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால், அவர்கள் அணு மின் நிலையத்திற்கு மிகவும் அருகில் வந்து போராட்டம் நடத்தியதாகக் கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் மிக முக்கியமாக, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 121இன் கீழ், நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தார்கள் என்றும், பிரிவு 124ஏ-இன் கீ்ழ் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்றும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவைகள் பிணைய விடுதலைப் பெற முடியாத பிரிவுகள் ஆகும்.

    கூடங்குளம் அணு மின் நிலையம் என்பது அரசே குறிப்பிடுவதுபோல் அது மின் உற்பத்தி செய்யப்படுவதற்கான தொழிற்சாலை மட்டுமே. அவ்வாறிருக்க அதனை தேசமாக சித்தரிப்பது கேலிக்கூத்தல்லவா? கூடங்குளம் அணு மின் நிலையம் தங்களின் வாழ்விற்கும், வாழ்வாதாரத்திற்கும், எதிர்காலமே இல்லாத அளவிற்கு அச்சுறுத்தலானது என்பதால்தான் எதிர்த்துப் போராடுகிறார்கள். அது அரசமைப்புச் சட்ட ரீதியிலானதுதான். அவ்வாறிருக்க, போராடிய மீனவர்கள் மீதும், போராட்டக் குழு உறுப்பினர்கள் சுப. உதயகுமார், புஷ்பராயன், பங்குத் தந்தை ஜெயக்குமார் ஆகியோர் மீதும் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்வது சட்டப்படி எப்படி நியாயமாக நடவடிக்கையாகும்?

    போபால் விஷ வாயு வெளியேறி 30 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணமான நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை பத்திரமாக, பாதுகாப்பாக தப்பவிட்டது தேசத் துரோகமில்லையா? இந்த நாட்டின் குடிமக்களான தமிழக மீனவர்கள் 540 பேர் ஸ்ரீலங்கக் கடற்படையினரால் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டனரே அது இந்த நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போரா? அல்லது தங்களது வாழ்வுரிமை பறிபோய்விடும் என்ற அச்சத்தில் எங்கள் மீனவர்கள் போராடுவது நாட்டிற்கு எதிரான போரா? இன்று வரை தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து ஸ்ரீலங்க கடற்படை நடத்திவரும் தாக்குதல் இந்த நாட்டின் மீது அறிவிக்கப்படாத போரில்லையா? இதற்கெல்லாம் மத்திய அரசு பதில் சொல்லட்டும்.

    கூடங்குளம் போராட்டக் குழுவினர் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளிக்காமல், அது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்று காரணம் கூறி, மக்களின் அச்சங்களைப் போக்க முடியாத அரசு, இப்போது போராட்டத்தை ஒடுக்கும் நோக்குடன் செயல்படத் தொடங்கியுள்ளதையே இந்த வழக்குப் பதிவு வெளிப்படுத்துகிறது. கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்தினை சட்டத்தினை பயன்படுத்தி ஒடுக்கிவிடலாம் என்று அரசுகள் நினைத்தால், அந்தப் போராட்டம் மேலும் வலுமை பெறுமே தவிர, முடிந்துவிடாது. இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


    http://actressmasaala.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    கனடாஉயர்தரப் பா��சாலை தமிழ் மாணவர்கள் நடாத்திய மா���ீரர் நாள் நிகழ்��ு (படங்கள் இணைப்��ு)

    - 0 comments


    கனடா உயர்தரப் பாடசாலை தமிழ் மாணவர்கள் நடாத்திய மாவீரர் தின நிகழ்வு 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நோர்த்யோர்க்கில் உள்ள விமிக்கா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெருந்தொகையான மாணவர்கள் மற்றும் மக்கள் உணர்வோடு கலந்துகொண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.

    மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாவீரர் கல்லறைக்கு மலர் வைத்து இங்குவந்த மக்கள் அஞ்சலி செய்தனர். அதன்பின்னர் நோர்த்யோர்க் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பில் நடனங்கள் பேச்சுக்கள் கவிதைகள் பாடல்கள் போன்றவை இடம்பெற்றன. இந்த நிகழ்வில் மாணவர்களினதும் இளைஞர்களினதும் பங்களிப்பு அதிகமாக இருந்த்து. குறிப்பாக அங்கு பேசிய இளைஞர்களின் பேச்சுகளிலிருந்து பார்க்கும்போது, மாவீர்ர்களின் இலட்சியக் கனவான தமிழீழத்தை மீட்டெடுக்கும் விடுதலைப் போராட்டத்தை தங்கள் தோள்களில் சுமக்க தாயராகிவிட்டதை உணர்ந்துகொள்ளக்கூடியவாறிருந்தது.

    இறுதியாக மாவீர்ர் தியாகங்களை நெஞசில் நிறுத்தி அவர்கள் வழியில் தொடாந்து பயணிப்போம் என்ற உறுதிமொழியுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன. அதேவேளை அனைத்து கனடிய பல்கலை கழகங்கள் , கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளுடன் இணைந்து தமிழ் இளையோர் அமைப்பு பெரும் அரங்கில் மாவீரர் நினைவெழுச்சி வார தொடக்க நாள் நிகழ்வை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








    http://actressmasaala.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    யாழ் மாணவியருக்��ு கல்விகற்ப்பிக���கும் இராணுவத்தினர்!

    - 0 comments


    யாழ்.மாவட்டப் பாடசாலை மாணவர்கள் 1600 பேருக்கு பலாலி படையினரின் ஏற்பாட்டில் விசேட பாடப் பயிற்சி பட்டறைகள் நடைபெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.தர சாதாரணப் பரீட்சையில் இம் மாணவர்கள் தோற்றவுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

    யாழ்.கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவர்களுக்கான இந்தப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றன. இந்தப் பயிற்சி பகுப்புக்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 27 பாடசாலைகளின் 1600 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புக்களில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கான பயிற்சியை நடத்தியபோதும் இராணுவ உயர் அதிகாரிகள் சிலர் அவ்வப்போது குறுக்கிட்டு தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.

    ஆசிரியர்கள் சிலர் இராணுவத்தினரின் இந்த பயிற்சி வகுப்புக்கு பொரும் தொகையான மானவர்கள் கலந்து கொண்டது இது முதல் தடவை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இராணுவச் சீருடையில் மாணவர்களுக்கு மத்தியில் அலைந்து திரிந்த சில அதிகாரிகள் மாணவிகளுடன் பகிடி விட்டுச் சிரிக்கவும் தவறவில்லை.

    தம்மை ஒரு பெரிய ஹீரோவாகக் காட்டிக் கொண்டு தாமே தமிழர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் உயர்ந்த மனிதர்கள் என்பது போன்ற செயல்பாட்டில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக அங்கே சென்ற ஆசிரியர்களில் ஒருவர் அதிர்வுக்கு தெரிவித்தார். உலகில் பல நாடுகள் இலங்கை இராணுவம் புரிந்த போர் குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் எனக் கோரிக்கைகளை முன்வைக்கப்படும் நிலையில், இவர்களா தமிழ் மாணவர்களுக்கான கல்வித் திட்டங்களை முன்னெடுப்பது என்பது பெரும் அதிருப்த்திகளை ஏற்படுத்தியுள்ளது.

    தாம் நடத்திய இந்தப் பட்டறையை பல மணிநேரமாக வீடியோவில் பதிவுசெய்து அதனை இராணுவத்தினர் இறுதியாக எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோவானது இலங்கைக்கு ஏற்ற சர்வதேச பரப்புரைகளை மேற்கொள்ள ஏதுவான வீடியோவா அமையும் என்பதிலும் ஐயமில்லை.

    அதிர்வு


    http://actressmasaala.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    தமிழ் இளையோர் அம���ப்பினால் பிரித்தானியாவில் மாவீ��ர் வார தொடக்கம் ��ரம்பித்து வைக்க���்பட்டன (படங்கள் ���ணைப்பு)

    - 0 comments


    தமிழ் இளையோர் அமைப்பினால் 20/11/2011 பிரித்தானியாவின் தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்கும் மாவீரர் வாரம் நினைவுகோரல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தமிழர் வர்த்தக சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என பிரத்தியேக இடங்களில் மஞ்சள் சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு எமது தேசத்தின் சொத்துக்களான மாவீரர்கள் நினைவு கூறப்படுகிறார்கள். அனைத்து தமிழ் மக்களும் ஒருமித்த உணர்வோடு எமக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவில் கோரி அவர்களுக்கு உரிய அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளனர். வெம்ப்ளி, ஹரோ, ஈஸ்ட்கம், இல்போர்ட், லூசியம் என தமிழர்கள் எங்கெல்லாம் கூடி வாழ்கிறார்களோ அங்கெல்லாம் எம் மாவீரர்களை மறக்காமல் நினைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

    எமது தாயாக பூமியில் எமது மாவீரர்களின் கல்லறைகளை இடித்து அழித்தாலும் அவர்களின் துயிலுமில்லங்களை தரைமட்டமாக்கினாலும் அவர்கள் மீது எமது மக்கள் வைத்திருக்கும் அளப்பரிய உணர்வுகளை எவராலும் சிதைத்துவிட முடியாது. எங்கெல்லாம் எங்களுக்கு தடைகளோ அங்கெல்லாம் நாம் தடை உடைத்து எம் காவல் தெய்வங்களான மாவீரர்களை என்றும் போற்றி வழிபடுவோம்.

    பலதரப்பட்ட கலாச்சாரத்துடன் பல்லின மக்கள் வாழும் இந்த புலத்தில் வாழும் இளையோர்களாகிய நாம், இந்த விந்தை நிறைந்த உலக வல்லாதிக்கத்தின் நுன்னியங்களை அறிந்து அவர்களின் சமகால கோட்பாட்டுடன் ஒருங்கே பயணித்து சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையையும் அராயகத்தையும் உடைத்தெறிவோம். ஈனத்தனமான துரோகச்செயல்களில் இருந்து எம்மின மக்களை மீட்டெடுத்து எங்களது அண்ணாவின் சொல்லிற்கு அமைவாக இலக்கு நோக்கிய பயணத்தை உறுதிதளராது மேற்கொள்வோம்.












    http://actressmasaala.blogspot.com



  • http://girls-tamil.blogspot.com

  • [Continue reading...]

    அடுத்தவர் மனைவியை அபகரித்தாரா சினேகன்? பரபரக்கும் கோடம்பாக்கம்!!

    - 0 comments
     
     
     
    பிரபல பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் மீது என்ஜினீயர் ஒருவர் பரபரப்பான புகார் மனு கொடுத்துள்ளார். அதில், `எனது மனைவியையும், குழந்தையையும் சினேகன் அபகரித்துக் கொண்டார் என்றும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த புகார் கோடம்பாக்கத்தையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது..
     
    சென்னை மடிப்பாக்கம், சக்தி நகர், எழில் அவென்யூவை சேர்ந்தவர் பிரபாகரன் (34). என்ஜினீயரான இவர், தனியாக கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜமுனா கலாதேவி (27). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரபாகரன் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
     
    அதில், நான் சொந்தமாக தொழில் செய்து மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன். எனது மனைவி நடனக்கலை நிபுணராக உள்ளார். கீழ்கட்டளையிலும், வேளச்சேரியிலும் குடும்ப பெண்களுக்கு நடனக்கலை கற்றுக்கொடுக்கும் பயிற்சி பள்ளியை நடத்தி வந்தார். நாங்கள் இருவரும் காதல் பதிவு திருமணம் செய்து கொண்டோம். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி எங்களது திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம். எங்களின் இனிதான இல்லற வாழ்க்கையின் பயனாக சஞ்சனா ஸ்ரீ என்ற 5 வயது பெண் குழந்தை இருக்கிறாள். அந்த குழந்தையை யு.கே.ஜி. படிக்க வைத்துள்ளேன். பாம்பு புற்றுக்குள் கருநாகம் புகுந்ததுபோல, நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் எங்கள் குடும்ப நண்பரானது, எங்கள் இல்லற வாழ்க்கையையே இப்போது புரட்டி போட்டுவிட்டது. எனது மனைவியின் நடன பயிற்சி பள்ளியை சினேகன் திறந்து வைத்தார். அதுமுதல் எங்கள் குடும்ப நண்பரானார். எனது மனைவியை சினிமாவில் நடன இயக்குனராக உருவாக்குவதாக சினேகன் ஆசைவார்த்தை காட்டினார். எனது மனைவி ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. சினேகன் மூலம் நடன இயக்குனர் வாய்ப்பு வந்ததால், எனது மனைவிக்கு அதில் விருப்பம் ஏற்பட்டது. நானும் அதை எதிர்க்கவில்லை. சினேகன் நடித்த `உயர்திரு 420 என்ற படத்தில் எனது மனைவியை நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார். நாளடைவில் அவர்களுக்கிடையே உள்ள பழக்கம் தவறாக போனது.
     
    எனது மனைவியை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. நாளடைவில் எனது மனைவி, சினேகன் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக என்னைவிட்டு பிரிந்துவிட்டார். நானும், குழந்தை நலன் கருதி இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. இப்போது எனது குழந்தையையும், வீட்டில் நான் இல்லாத நேரத்தில் கடத்தி சென்றுவிட்டனர். எவ்வளவோ சமாதானப்படுத்தி பேசியும், எனது மனைவி என்னுடன் வாழ மறுக்கிறார். விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில், எனது மனைவி திரும்பி வந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். எனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச்சென்று எனது குடும்பத்தை சீரழித்த சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பிரபாகரன் கூறியுள்ளார்.
     
    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரபாகரன், `ரூ.20 லட்சம் பணம் தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரதட்சணை கொடுமை புகார் கொடுப்பேன் என்றும் எனது மனைவி மிரட்டுகிறாள். குழந்தையையும் என்னிடம் தர மறுக்கிறார். என்னையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுகிறார்கள் என்றார். தவறான உறவுக்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரபாகரன், `எனது மனைவியும், சினேகனும் ரூ.24 ஆயிரம் பில் வரும் அளவுக்கு செல்போனில் பேசியுள்ளார்கள். அதுதான் ஆதாரம். இருவரும் ஒன்றாக சுற்றுவதை பலரும் பார்த்துள்ளனர். நானே விருகம்பாக்கத்தில் உள்ள சினேகன் வீட்டுக்கு சென்றபோது, அங்கு என் மனைவி, சினேகனுடன் இருப்பதை கண்டுள்ளேன் என்று கூறினார். இந்த புகார் மனு மீது மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
     
    இந்த புகார் குறித்து கவிஞர் சினேகன் அளித்துள்ள பேட்டியில், பிரபாகரனின் விருப்பத்தோடுதான் அவரது மனைவியை நான் நடித்த படத்தில் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். ஒருநாள் தான் அவர் படப்பிடிப்புக்கு வந்தார். அதற்குள் பிரபாகரன் சந்தேகப்பட்டு சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இதனால் அவரது மனைவியை படப்பிடிப்புக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர்களது குடும்ப பிரச்சினையில், என்னை தேவையில்லாமல் இழுத்துள்ளார். என்மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார். அவரது மனைவியை நான் கடத்தவில்லை. அவரது தாயார் வீட்டில் இருக்கிறார். குழந்தையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்மீது கொடுக்கப்பட்டுள்ள பொய் புகாரை சட்டப்படி சந்திப்பேன். கமிஷனரை சந்தித்து நானும் புகார் மனு கொடுப்பேன், என்று கூறியுள்ளார்.



    [Continue reading...]

    மிஷ்கினின் முகமூடியில் நாகர்ஜூன் அப்பா நாகேஸ்வரராவ்!

    - 0 comments
     
     
     
    மிஷ்கின் இயக்கும் முகமூடியில் நாகேஸ்வரராவ் - பிரகாஷ் ராஜ் நடிக்க உள்ளனர். நந்தலாலா படத்தை தொடர்ந்து, டைரக்டர் மிஷ்கின் இயக்கும் படம் முகமூடி. ஜீவா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முதன்முறையாக நரேன் இந்தபடத்தில் வில்லனாக நடிக்கிறார். யு.டி.வி., நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் இப்போது தெலுங்கின் சாதனை நடிகர் நாகேஸ்வரராவ் முக்கிய வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த தகவலை படத்தின் இயக்குநர் மிஷ்கினே தெரிவித்துள்ளார். நாகேஸ்வரராவ் தவிர, முன்னணி கலைஞர் பிரகாஷ் ராஜ் மிக முக்கிய வேடத்தில் வருகிறார். இந்தப் படம் வரும் நவம்பர் 30ம் தேதி படப்பிடிப்புடன் தொடங்குகிறது.



    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger