Img சென்னையில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை கடத்திய கும்பல் 50 லட்சம் கேட்டு மிரட்டல் Giving anesthesia in Chennai girl gang kidnapped 50 million asking Threat
சென்னை, டிச. 25–
அடையாறு சாஸ்திரி நகரைச்சேர்ந்த என்ஜினீயரிங் மாணவி ப்ரியா (19). கடத்தப்பட்டு இரவு முழுவதும் வீட்டில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி ப்ரியாவை மயக்க மருந்து கொடுத்து கடத்திய கும்பல் அவரை செக்ஸ் சித்ரவதை செய்ததா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:–
சாஸ்திரி நகரில் நேற்று முன்தினம் காலையில் ப்ரியா வழக்கம்போல தனது கல்லூரி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று திடீரென ப்ரியாவின் முன்னால் வந்து நின்றது.
கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி குண்டு கட்டாக அவரை காரில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர். மாலையில் ப்ரியா வீடு திரும் பாததால் பெற்றோர் கலக் கம் அடைந்தனர்.
ப்ரியா எங்கு சென் றாளோ? என்கிற பதட்டத்து டன் உறவினர்கள் வீடுகளி லும், அவரது தோழிகளிடமும் போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ப்ரியாவின் தந்தைக்கு மிரட்டல் போன் ஒன்று வந்தது. அதில் பேசிய வாலிபர், உங்கள் மகள் ப்ரியாவை நாங்கள்தான் கடத்தி வைத்துள்ளோம். ரூ. 50 லட்சம் கொடுத்தால் தான் அவரை உயிருடன் விடுவோம். இல்லையென் றால் ப்ரியாவை பிணமாகத் தான் பார்க்க முடியும் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
இதுபற்றி ப்ரியாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் தனிப் படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட் டனர்.
இரவு முழுவதும் தேடிப் பார்த்ததும் ப்ரியாவை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதனால் பதட்டம் அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று காலையில் ப்ரியாவின் தந்தை பணத்தை கொண்டு வந்து தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தார். அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள் என கூறி அவரை அலைக்கழித்த கடத்தல் ஆசாமிகள் கடைசியாக ராமாபுரத்துக்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறினர்.
இதையடுத்து நேற்று காலையில் கடத்தல் கும்பல் பணத்தை வாங்கும்போது போலீஸ் பிடியில் சிக் கியது.
ப்ரியாவை கடத்தியதாக பழனிச்சாமி, லோகநாதன், ராஜாமணி, முருகன், அஜய் ஆகிய 5 பேரை போலீசார் பிடித்தனர்.
இவர்கள் ப்ரியாவை கடத்திச் சென்று பெருங் களத்தூரில் ஒரு வீட்டில் சிறை வைத்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ப்ரியாவை போலீசார் அதிரடியாக மீட்டனர். அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார். எனவே கடத்தல் கும்பல் ப்ரியாவை செக்ஸ் சித்ரவதை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக 5 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''காதல் விவ காரம் காரணமாகவே இக்கடத்தல் சம்பவம் நடந் துள்ளது என்று நினைத்தோம். ஆனால் பணம் பறிக்கும் நோக்கத்திலேயே ப்ரியா கடத்தப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக் கைகளை எடுத்து வரு கிறோம்'' என்றார்.
சென்னையில் கிழக்கு கடற்கரைசாலை கடந்த சில நாட்களாகவே கடத்தல் களமாக மாறி வருகிறது. 2 வாரங்களுக்கு முன்னர் கூட இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டார். அப்போது இன்னொரு ஆட்டோ டிரைவர் விரட்டிச் சென்று அப்பெண்ணை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தார். அச்சம்பவத்தில் சம்பந்தப் பட்ட ஆட்டோ டிரைவர் மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சாதாரண சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
எனவே ப்ரியா கடத்தல் சம்பவத்திலும் அதே போன்று நடவடிக்கையை போலீசார் எடுத்து விடுவார் களோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கடத் தல் சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகளை தீவிரப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
...