கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் 10–ந்தேதியில் இருந்து ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வெடித்து சோதனை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் வெளியில் நடமாடவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு கூத்தங்குழி ஊருக்கு வடபுறம் உள்ள கடலோர பகுதியில் 3 குண்டுகள் வெடித்தன.
இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என்ன என்பது தெரிய வில்லை. அணுமின் நிலையத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கு சோதனை நடத்தப்படும் வெடிகுண்டுகள் வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இதுபற்றி போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கின்றனர் மக்கள்.