Wednesday, 14 August 2013

இந்தியா ‘ஏ’ அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரை வென்றது India A team won by 50 runs

- 0 comments

இந்தியா, தென்ஆப்பிரிக்கா மற்றும்
ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகளுக்கிடையிலான
முத்தரப்பு கிரிக்கெட் தொடர்
பிரிட்டோரியாவில் நடைபெற்றது. இதில்
இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா-
ஆஸ்திரேலியா அணிகள், கோப்பையை வெல்ல
இன்று பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய
பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 243
ரன்களில் (49.2 ஓவர்) சுருண்டது. கடைசி லீக்
ஆட்டத்தில் இரட்டைச் சதம் விளாசிய ஷிகார்
தவான் 62 ரன்கள் விளாசினார். தினேஷ்
கார்த்திக் 73 ரன்கள் சேர்த்தார். இருப்பினும்
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்காததால்
இந்திய அணி 250 ரன்னை எட்டவில்லை.
கடைசி 5 விக்கெட்டுகள் 14 ரன்களுக்குள்
வீழ்ந்தது.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஜோஷ்
ஹாசில்வுட், நாதன் கவுல்டர் நைல் மற்றும்
ஹென்ரிக்ஸ் ஆகியோர் இந்திய
பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக
விளங்கினர். ஹாசில்வுட், கவுல்டர் நைல்
ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், மிடில்
ஆர்டரில் ரன்களை கட்டுப்படுத்திய ஆல்
ரவுண்டர் ஹென்ரிக்ஸ், 2 விக்கெட்டுகளும்
கைப்பற்றினர்.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால்
வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய
ஆஸ்திரேலிய அணிக்க, இந்திய
பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி, 53 ரன்கள்
எடுப்பதற்குள் 5
விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
விக்கெட்டுகளை காப்பாற்ற போராடிய
ஹென்ரிக்ஸ் (20), ஹாசில்வுட் (30), பெயின்
(47) ஆகியோரும் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி, 46.3 ஓவர்களில்
193 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 50 ரன்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி,
கோப்பையை கைப்பற்றியது.

[Continue reading...]

மடிப்பாக்கம் பகுதியில் கடும் தண்ணீர் பஞ்சம்: வீட்டு வாடகை ரூ.8000 , தண்ணீர் கட்டணம் ரூ.5000 madipakkam area water shortage Residential Rent Rs .8000 water fare of Rs 5000

- 0 comments

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்
போதுமான மழை பெய்யாததால் தண்ணீர்
பிரச்சினை தலை தூக்கி உள்ளது.
சென்னையை பொறுத்த வரை நிலத்தின்
விலை தங்கத்தை போல் நாளுக்கு நாள்
உயர்ந்து கொண்டே போகிறது இட
பிரச்சினை மற்றும் விலை உயர்வு காரணமாக
பிளாட் வீடுகள் அதிகமாகி உள்ளன.
அரை கிரவுண்டு இடம் இருந்தால் அதிலும் 4
வீடுகளை கட்டி விடுகிறார்கள் தண்ணீர்
தேவைக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில்
ஏராளமான ஆழ்துளை கிணறுகள்
போடப்படுகிறது.
சென்னையில் ஆழ்துளை கிணறுகளின்
எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல்
இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றின்
மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.
ஆனால் அதற்கு ஏற்ப பூமிக்கு அடியில்
தண்ணீர் செல்ல வழியில்லை. நில பரப்புகள்
கான்கிரீட் தளங்களாக
மாறி வருவதே இதற்கு காரணம்
இப்போது மழையும் எதிர் பார்த்த
அளவு பெய்யாததால் பல இடங்களில்
நிலத்தடி நீர் வறண்டு விட்டது.
மடிப்பாக்கம், கீழ் கட்டளை பகுதியில்
ஆள்துளை கிணறுகள் வறண்டு விட்டதால்
வீட்டு உபயோகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல்
தவிக்கிறார்கள். குடி நீருக்கு தினமும் ரூ.35
விலையில் கேன் தண்ணீர்
வாங்கி வருகிறார்கள். வீட்டு தேவைக்காக பல
அடுக்கு மாடி குடியிருப்புகளில் லாரிகளில்
தண்ணீர் வாங்குகிறார்கள்.
குடியிருப்பவர்களிடம் ஒவ்வொரு வீட்டிலும்
உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தண்ணீர்
கட்டணம் வாங்கப்படுகிறது. 2 ஆயிரம் லிட்டர்
தண்ணீர் ரூ.600–க்கு வாங்கி டேங்குகளில்
நிரப்பி வீடுகளுக்கு சப்ளை செய்கிறார்கள்.
இதற்கு ஒரு நபருக்கு ரூ.40 முதல் 50
வரை செலுத்த வேண்டி உள்ளது.
ஏற்கனவே வீட்டு வாடகை ரூ.7 ஆயிரம்
அல்லது 8 ஆயிரம் செலுத்தும் நிலையில்
தண்ணீருக்காகவும் மாதம் குறைந்த பட்சம்
ரூ.4000 ஆயிரம் முதல் 5 ஆயிரம்
வரை செலவு செய்ய வேண்டி உள்ளது.
இதனால் நடுத்தர குடும்பத்தினர் கடுமையான
நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். ஒரு சிலர்
வீடுகளை காலி செய்து தண்ணீர் கிடைக்கும்
பகுதிகளுக்கு செல்கிறார்கள். குழந்தைகள்
பள்ளிக்கு செல்லும் வசதி மற்றும்
அலுவலகங்களுக்கு செல்லும்
வசதிகளை நினைத்து வேறு வழியில்லாமல்
தண்ணீருக்காக கண்ணீர் விட்ட
படி ஒவ்வொரு நாளையும்
கடத்தி கொண்டிருக்கிறார்கள். வருண பகவான்
கண் திறந்தால் தான் இவர்களின்
கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger