Tuesday, 6 August 2013

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில், நாளை கருணாநிதி உண்ணாவிரதம்

- 0 comments
 ஏன்  ?  இந்த கொலைவெறி ....!
யாருக்காவது சீட்  வேணுமா ? 


இல்லை தாயாளு அம்மாளை  காபாத்தவா ?
நல்லதொரு குடும்பத்தலைவன் நீ !



இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 13–வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள   ‘‘காமன்வெல்த்’’ மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களை பாது காத்திடவும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தை தடுத்திடவும், டெசோ அமைப்பு சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் நாளை காலை 9.30 மணிக்கு நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார். தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் பேராசிரியர் சுபவீர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.
தென் சென்னை மாவட்ட சென்னை மாவட்டம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல் காஞ்சீபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்பரசன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
[Continue reading...]

கள்ளக் காதலியின் 2 மாத குழந்தையை ஆன்லைனில் 100 டாலருக்கு விற்க முயன்றவன் கைது

- 0 comments
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பால் மார்குவெஸ்(23) என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் ஆன் லைன் மூலம் ஓர் இளம் பெண்ணுக்கு அறிமுகம் ஆனார்.

கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்த அந்த பெண்ணுடன் பால் மார்குவெஸ் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு ஒரே வீட்டில் சந்தோஷமாக வசித்து வந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கள்ளக் காதலிக்கு பழைய கணவன் மூலம் கருத்தரித்த குழந்தை பிறந்தது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger