"வந்தார்; ஓரமாய் உட்கார்ந்தார்; சென்றார்…" : இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு நடந்த அவமரியாதை!
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,
அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா பங்ஷனில் அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா மாதிரியான பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை.
இது ஒருபுறமிருக்க இன்விடேஷன் கொடுத்து அழைக்கப்பட்ட நடிகர் விஜய்க்கோ அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் எங்கோ ஒரு மூலையில் உட்கார இடம் கொடுத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள் விழாக் குழுவினர்.
முக்கியமான நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவின் போது தமிழ்சினிமாவை போற்றும் வகையில் அனைத்து நடிகர் படங்கள் அடங்கிய சிறிய வீடியோ க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது. இதில் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகரான அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகர் விஜய்யின் வீடியோ க்ளிப்பிங்ஸ்கள் மட்டும் திட்டமிட்டு புறக்கணிப்பட்டது.
அது மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த நடிகர், நடிகைகளுக்கு கூட முன் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் நடிகரான விஜய்க்கு வி.ஐ.பி இருக்கைகளின் கடைசி வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்ற விஜய் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவரைப் பார்த்த பல முண்ணனி நடிகர்கள் அனைவரும் அமைதி காக்க, இளம் நடிகர்கள் மட்டும் அவரை முன் பக்கம் வந்து உட்காருமாறு அழைத்தனர். ஆனால் யாரும் அவர் பக்கத்தில் வரவில்லை.
இருப்பினும் சைகையால் இங்கேயே அமர்ந்து கொள்வதாக கூறினார் விஜய். இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விக்ரம் மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் சென்று விஜய்க்கு அருகில் அமர்ந்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
பிறகு விழா முடியும் போது விக்ரமிடம் மட்டும் சொல்லி விட்டு தானாகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்றாராம் விஜய்.
Show commentsOpen link