Wednesday, 22 February 2012

ஈழப்போராட்டத்தை கருவறுக்கத் துணை புரிந்த சமாதான உடன்படிக்கை!- பத்தாண்டு நிறைவு இன்று

- 0 comments
 
 
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சியிலிருந்த சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டு இன்றுடன் பத்தாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
 
கடந்த 2002ம் ஆண்டு சிறிலங்காப் பிரதமராக இருந்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நோர்வே நாட்டின் அனுசரணையில் சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
 
அதன்மூலம் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதுடன் தெற்கையும் யாழ்ப்பாணத்தையும் நீண்டகாலம் பிரித்து வைத்திருந்த ஏ9 கண்டி வீதி திறக்கப்பட்டது. தமிழ் மக்கள் சமாதானக் காற்றை சுவாசிப்பதாக பெருமூச்சு விட்டுக்கொண்ட நாளாக அது அமைந்தது.
 
போரினால் சிதைவுற்றிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பு போர்க் காயங்களை மாற்றுவதற்கு மருந்து அளிக்கப்பட்டது. காடுகள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் நிறுவப்பட்டது. பலவகையான வாகனங்கள் வன்னியை அடைந்த காலம். போராளிகள் விடுப்பில் வீடு வந்து தமது பெற்றோரைச் சந்தித்து மகிழ்ந்து கழித்த காலம்.
 
அதேநேரம், தமிழ் மக்களுக்காக போராட்டம் மேற்கொண்ட புலிகளை பலமிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரணில் அரசு மேற்கொண்டு அதன் மூலம் கிழக்குத் தளபதி கருணாவை பிரித்து தமிழீழப் போராட்டத்தில் பெரியதொரு தாக்கத்தை வழங்கியதன் ஊடாக தமிழ் மக்களின் இன்றைய சூழலுக்கு வித்திட்ட பெருமையையும் இவ் ஒப்பந்தம் பெற்றுக்கொண்டுள்ளது.
 


 
தமிழீழ மண் மீட்புப் போராட்டத்தை நசுக்குவதற்கு சிங்களம் மேற்கொண்ட 'மெல்லக் கொல்லும் நஞ்சு' நடவடிக்கையாக இவ் ஒப்பந்தம் அமைந்தது.
 
அவ்வாறான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பத்து ஆண்டுகள் கழிந்துள்ளன. சமாதான உடன்படிக்கை மூலமாக எம் மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை விட அதன் மூலம் எம் மக்கள் சந்தித்த துன்ப துயரங்கள் இன்றும் சாட்சியாக நிற்கின்றன.
 
எனினும் எம் மக்களின் மனதிலிருந்து அந்நாளை எளிதில் மறந்துவிட முடியாது என்பதே நிதர்சனம்.
[Continue reading...]

துணை நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்த பிரபல நடிகை கைது

- 0 comments
 


துணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விபசார கும்பல் கிண்டி பகுதிக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து, பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் இதுபற்றி நடத்திய விசாரணையில் பிரபல அம்மா நடிகை சோபனா (40) இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நடிகை சோபனாவிடம் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பேசுவதுபோல பேசினார்கள். பின்னர் உல்லாசமாக இருக்க சோபனா கேட்ட தொகையுடன் சோபனா சொன்ன இடத்துக்கு மாறுவேடத்தில் போலீசார் சென்றனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பிறகு நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து 1 மணி நேரம் கழித்து துணை நடிகைகள் இருவர் வந்தனர். அவர்கள் வந்தவுடன் மாறுவேட போலீசார் சோபனாவை கைது செய்தனர். இதையடுத்து சோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
[Continue reading...]

பொய் சொன்ன அசின் - கடுப்பில் இயக்குனர்

- 0 comments


வாய்ப்புக்காக கண்டபடி பேட்டி கொடுத்து பொய் சொல்கிறார் அசின் என கோபமாகத் திட்டியுள்ளார் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.

சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கப் போகிறார் ரோஹித் ஷெட்டி. இதில் ஷாரூக்கான்தான் ஹீரோ.

இந்தப் படத்தில் யார் ஹீரோயின் என்பதில் இப்போதே பெரும் போட்டி கிளம்பிவிட்டது.

ஆளாலுக்கு நான் நீ என பேட்டி கொடுத்து வருகிறார்கள். ஆனால் இப்போது போல் பச்சன் என்ற படத்தை இயக்கி வரும் ரோஹித் ஷெட்டி இன்னும் ஹீரோயினை முடிவு செய்யவே இல்லையாம்.

இந்தப் படத்தில் நடிப்பதாக கரீனா கபூர், தீபிகா படுகோன் இருவரும் கூறியதாக செய்தி வந்ததை மறுத்துவிட்டார் ரோஹித்.

இதற்கிடையே, அவரது போல் பச்சானில் நாயகியாக நடித்து வரும அசின், தான்தான் சென்னை எக்ஸ்பிரஸ் நாயகி என்றும், ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்றும் கூறியதாக செய்திகள் வர டென்ஷனாகிவிட்டார் இயக்குநர்.

'அசின் சொல்லியிருப்பது பொய். போல் பச்சனில் நடிப்பதால் அவர் சென்னை எக்ஸ்பிரஸிலும் ஹீரோயின் என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது.

இப்போதைக்கு போல் பச்சான் முடித்தபிறகுதான், சென்னை எக்ஸ்பிரஸ் குறித்துப் பேசுவேன். அதுவரை தீபிகா – அசின் இருவர் சொல்வதையும் நம்ப வேண்டாம்," என்றார்.
[Continue reading...]

கொள்ளையர் குறித்து துப்பு கொடுத்த ரவுடியின் மகள்!

- 0 comments
 
 
வங்கிக் கொள்ளையர்கள் பதுங்கியிருந்தது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது முன்னாள் ரவுடி ஒருவரின் மகள் என்று தெரிய வந்துள்ளது.
 
வேளச்சேரி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள ஏ.எல்.முதலி 2வது தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில்தான் இந்தக் கொள்ளையர்கள் கடந்த 3 மாதமாக தங்கியிருந்தனர்.
 
மொத்தம் 3 மாடிகளைக் கொண்ட இந்த அபார்ட்மென்ட்டில் கீழ்த்தளத்தில் இந்த வீடு உள்ளது. ரூ.20,000 அட்வான்ஸ் மற்றும் மாத வாடகை ரூ. 5000 கொடுத்துத் தங்கியிருந்தனர்.
 
தங்களைக் கல்லூரி மாணவர்கள் என்று இவர்கள் கூறியுள்ளனர். மாணவர்கள் என்பதால் வீட்டை வாடகைக்குக் கொடுத்துள்ளார் இந்த வீட்டின் உரிமையாளர். வீட்டு உரிமையாளர் ஒரு முன்னாள் ரவுடி ஆவார். தற்போது திருந்தி வாழ்ந்து வருகிறார்.
 
வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டதும் அதைப் பார்த்த வீட்டு உரிமையாளரின் மகள் அதிர்ச்சி அடைந்தார். தங்களது வீட்டில்தான் கொள்ளையர்கள் தங்கியிருப்பதை அறிந்த அவர் உடனடியாக போலீஸார் கொடுத்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதுதான் போலீஸாருக்கு பெரும் உதவியாக அமைந்தது.
 
உடனடியாக விரைந்து வந்த போலீஸார், கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோதுதான் அவர்கள் துப்பாக்கியால் சுடவே போலீஸார் திருப்பிச் சுட்டனர். இதில் ஐந்து பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.



[Continue reading...]

வாளமீன் பாடலில் நடித்த நடிகர் மரணம்

- 0 comments
 
பிரபல காமெடி நடிகர் முத்துராஜா இவரை வாளமீன் முத்து ராஜா என்று அழைப்பது உண்டு. சித்திரம் பேசுதடி படத்தில் இடம் பெற்ற வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் முத்துராஜா நடித்து இருந்தார். இதில் உலகநாதன் பாடும்போது முழுக்க அவருக்கு மைக் பிடித்தபடி நடித்தார்.
 
மேலும் வெளுத்துக்கட்டு, வேங்கை, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, மருதவேலு, உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முத்துராஜாவுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி திருமணம் நடந்தது. மனைவியுடன் சொந்த ஊரான தேனி கே.கே. பட்டியில் தங்கி இருந்தார். இரு தினங்களுக்கு முன் வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.
 
அப்போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். உடனடியாக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.



[Continue reading...]

Super Baby World Record !!!

- 0 comments

 

HAVE A LOOK!!!!
Age: 11 Months
Weight: 52..5kg
Per Day Diet: 1 kg Rice and 5 liters Milk, 2kg Beef

Birth Place:
India-Rajasthan

Super Baby World Record: Age 11 months, Weight 52.5 kgs

.

[Continue reading...]

துணை நடிகைகளை வைத்து விபச்சாரம் ..நடிகை சோபனா கைது.

- 0 comments

சென்னை நகரில் ஞாயிற்றுக்கிழமைதோறும், ஒரு விபசார கும்பல் கிண்டி ரேஸ் கிளப் அருகே ரகசியமாக காரில் வந்து உட்கார்ந்து, வாடிக்கையாளர்களை அங்கு வரவழைத்து, பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து உல்லாச விருந்து படைப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பிரபல அம்மா நடிகை சோபனா (வயது 40) இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவதாகவும் கண்டறியப்பட்டது. இந்த விபசார கும்பலை மடக்கிப்பிடிக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், விபசார தடுப்பு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

விபசார கும்பல் தலைவியாக செயல்பட்ட அம்மா நடிகையை போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். கம்ப்ழூட்டர் என்ஜினீயர் பேசுவதுபோல போலீசார் பேசினார்கள். அம்மா நடிகை சோபனா, நல்ல வாடிக்கையாளர் சிக்கிவிட்டார் என்று சந்தோஷமாக பேசினார்.

பிரபலமான படங்களில் துணை நடிகை வேடத்தில் நடித்துள்ள அக்கா தங்கை நடிகைகள் இருவரது பெயரைச் சொல்லி, அவர்களை அழைத்து வருவதாக சொன்னார். பெரிய தொகையையும், சோபனா கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்டு மாறுவேட போலீசார் வாடிக்கையாளர் போல கிண்டி ரேஸ் கிளப் அருகே காரில் காத்திருந்தனர்.

சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பிறகு அம்மா நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து 1 மணி நேரம் கழித்து அக்கா தங்கை துணை நடிகைகள் இருவரும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்தவுடன் மாறுவேட போலீசார் சோபனாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அடுத்து அக்கா தங்கை இருவரும் பிடிபட்டனர்.

சோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகரின் உறவினர் என்றும் போலீசார் தெரிவித்தனர். அக்கா தங்கை துணை நடிகைகள் இருவரும் பாதிக்கப்பட்ட பெண்களாக கருதப்பட்டு, மைலாப்பூர் அரசு பெண்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதேபோல, சூளைமேடு பகுதியில் போலீசார் நடத்திய வேட்டையில் சாந்தி என்ற துணை நடிகையும், ஜெயராஜ் மோசஸ் என்ற புரோக்கரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்தும் 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு, மைலாப்பூர் அரசு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger