Monday, 26 March 2012

இலங்கை இப்பொழுதாவது பாடம் கற்றுக் கொள்ளுமா?

- 0 comments


தமிழர்களுக்கு எதிரான போரின் போது, இலங்கையின் அரச இராணுவ அமைப்புக்களினால் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் அடங்கலாக பல விடயங்களை உள்ளடக்கிய, அமெரிக்கா முன் மொழிந்த பிரேரணை இன்று ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இ லங்கையில் போரின் போது நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உறுதியான ஒரு நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. அதாவது, குற்றம் இழைத்தவர்களைக் கண்டறிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு சுதந்திரமான ஒரு அனைத்துலக விசாரணை அவசியம் என்பதே எம் நிலைப்பாடாகும்.

இன்று நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது அமெரிக்காவினால் முன்னர் கு� �ிப்பிடப்பட்ட சுயாதீனவிசாரணை என்பதனைத் தரமிறக்கியதோடு படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றல் வேண்டும் எனும் வகையில் அமைந்துள்ளது.

போரின் போது இலங்கை அரசாங்கமும் அதன் அரசபடைகளும் தமிழ் மக்களுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், வயோதிபர், நோயாளிகள் அடங்கலாக ஆயிரம் ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்� �தைப் பாராட்டிய உலக சமூகம், இன்று ஆறுதலாகவும் தீர்க்கமாகவும் ஆராய்ந்து நல்லதோர் நிலைப் பாட்டை எடுத்து, இலங்கை அரசாங்கமும் தான் இழைத்த குற்றங்கள் பற்றி மீளாய்வு செய்வதற்கு ஒரு சந்தர்ப்பர்த்தை வழங்குவதற்கு முன் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கை இழைத்த கொடுமைகளோடு ஒப்பிடுகின்ற போது, இத் தீர்மானம் வலுவிழந்த ஒன்று என்ற போதிலு� ��், இத் தீர்மானத்தை முறியடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என்பதும் இங்கு கவனிக்கற்பாலது.

எது எவ்வாறாயினும், இந்தப் பிரேரணையின் தாற்பரியங்களைக் காட்டிலும் இலங்கை அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதே இங்கு முக்கியமானது.இலங்கைக்கு இது முதலாவது தோல்வி என்பது மட்டுமல்ல இத்தகைய பல்வேறு தோல்விகள் இன்னும் வரவுள்ளன � �ன்பதே நாம் உரத்த குரலில் கூறும் செய்தியாகும்.

அனைத்துலக சமூகம் மிக விழிப்புடன் செயற்பட்டு, இலங்கை அரசின் நெகிழ்வற்ற தன்மையைப் புரிந்து கொண்டு, அங்கு நிகழ்பவற்றை நன்கு அவதானித்து வருதல் அவசியமாகும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குதல் தொடர்பாக, அநியாயங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து நீதி நிலைநாட்டப்படல் வேண்டும்.

அனைத்துலக மட்டத்த� �ல் தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்தல் வேண்டும் எனும் சீரிய நோக்குடன் செயற்பட்டுவரும் அனைத்து குடிசார் அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் நாம் தமிழ் மக்கள் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றியறிதலை இவ்வேளையில் தெரிவிக்கின்றோம். தாய்த் தமிழகத்தின் தொப்புள் குடி உறவுகளுக்கும், அரசியல் பிணைப்புகளைக் கடந்து செயல்பட்டு வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.
தமிழகத்து உறவுகள் மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் தீர்க்கமான தலைமையில் கீழ் நல்லதோர் நிலைப்பாட்டை உலகுக்குக் காட்டி நிற்கின்றார்கள். அதாவது, தமிழீழ மக்களுக்கான போராட்டம் இப்பொழுது தமிழீழ மக்களால் மட்டுமன்றி, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதே அந்த நிலைப்பாடாகும். நீதியின் அடிப்படையிலும் உன்னதம� �ன கோட்பாடுகளின் படியும் ஆறு கோடி தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் இப் போராட்டம் வீண்போகாது.

ஐநா மனித உரிமைப் பேரவையின் 19வது கூட்டத் தொடரூடாக எமக்குக் கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாது புலம் பெயர் தமிழ் சமூகமும், குடிசார் அமைப்புக்களும், தாயகத்திலுள்ள அரசியல் தலைமையும் கடந்த பல வாரங்களாக அயராது, ஒத்த நோக்குடன் செயல் பட்டு வந்துள்ளன. நாம் எதி� �்காலங்களிலும் இத்தகைய ஒருங்கிணைந்த செயற்பாடுகளையே விரும்பி நிற்கின்றோம்.

எனவே, நாம் எமது பொது இலக்காகிய சுதந்திர தமிழ் ஈழம் எனும் இலக்கை அடைவதற்காக ஒன்றிணைந்து, கலந்துரையாடி, திட்டங்களை வகுத்துச் செயற்படல் வேண்டுமென அனைத்துதமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

லிபியா நாட்டில் நிகழ்ந்த கொடுமைகளின் உச்சக் கட்டத்தில் அந்தக் குற்றங்களை இழை� �்தவர்களை நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தல் வேண்டும் எனும் கோரிக்கை உடனடியாகவே முன் வைக்கப்பட்டது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். சிரியாவிலும் தற்போது இத்தகைய நிலையே உள்ளது. அங்கும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிதல் வேண்டும் எனும் குரல்கள் எழுந்துள்ளன.

மனித உரிமையின் அடிப்படைக் கோட்பாடாகிய, எல்லா மக்களும் ஒரேவிதமான பா� �ுகாப்புக்கு உரித்துள்ளவர்கள் என்பதும், எல்லா உயிர்களும் சமமானவை என்பதும் அரசியல் தேவைகளுக்காக தடம் புரட்டப்படாமல் எப்பொழுதுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய தார்மீகக் கோட்பாடுகளாகும்.

இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு, இலங்கை அரசினால் இன்றும் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட அடக்கு முறைகள் என்பவற்றுடன் ஒப்பிடும் பொழுது, லிபியாவிலு� �் சிரியாவிலும் நடந்துள்ள, நடைபெறும் கொடுமைகள் மிகவும் சிறிய அளவிலானவையே.

இந்தக் காரணிகளின் அடிப்படையிலும், ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் சுட்டிக் காட்டப்பட்டது போன்று இலங்கைக்கு சுயாதீன விசாரணை பற்றிய அரசியல் முனைப்பு இல்லாத காரணத்தினாலும் தான் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் பற்றாக்குறை கொண்டது என்பது ந ாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தாக அமைகிறது.

எனவே, அனைத்துலக விசாரணையை வற்புறுத்தும் நோக்குடன் நாங்கள் அனைத்துலக மட்டத்திலும், தேசங்களின் மட்டங்களிலும் கலந்துரையாடல்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2012ஆம் ஆண்டினை அனைத்துலக விசாரணைக்கான ஆண்டாக ஏற்கனவே பிரகடனப் படுத்தியுள்ளது.

வேறு நாடுகளில் பல்நாட்டு, உள்நாட்டு மட்ட� ��்திலான கூட்டங்களை நடாத்தி அனைத்துலக விசாரணையைக் கோரவுள்ளோம்.

அத்துடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பேரவையில் இலங்கைத் தீவில் உள்ள எமது உடன் பிறப்புக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு பொறி முறையினை உருவாக்கக் கோரும் பிரேரணை ஒன்றையும் நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் உலகிலுள்ள வெவ்வேறு பாதுகாப்புப் பொறி முறைகள் பற்றியும் ஆராய்ந்து வருகின்றோம்.

2009ஆம் � ��ண்டில் இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதையும் விட, அவை இன அழிப்பு என்பதே எமது நிலைப்பாடாகும். இன அழிப்பு இடம் பெற்றுள்ளது என நிலை நாட்டுவதன் மூலம்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க முடியும்.

இப்பணியினை முன்னெடுத்துச் செல்வதற்காக நாங்கள் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியுள்ளோம். தமிழ் இனத்தை முற்றான அழிவிலிர� �ந்து காப்பாற்றுவதற்கு சுதந்திர தமிழீழமே வழி என நாங்கள் நம்புகின்றோம்.

அத்தகைய நிலை உருவாகும் வரை எம் முன்னால் உள்ள வினா ஒன்றே ஒன்றுதான். 'அநாவசியமாக ஒரு உயிர் இழக்கப்படுவது கூடத் தவிர்க்கப்படக்கூடியது என்ற உண்மையை உலக சமூகம் உணரும் வரை இன்னும் எத்தனை தடவைகள் இத்தகைய பாடம் கற்றுக் கொள்ளும் அனுபவங்களூடாகப் பயணித்தாக வேண்டும்?' என்பதே எமது வினாவாகும்.

மனி� � உரிமைகள் - போர்குற்றங்கள் - இனப்படுகொலை தடுப்பு விவகாரங்களுக்கான அமைச்சகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

http://tamilfashionshow.blogspot.com

[Continue reading...]

யேர்மனியில் நடைபெற்ற "தியாகச் சுடர்கள்" வீரவணக்க நிகழ்வு

- 0 comments


தமிழீழ விடுதலையினை வென்றெடுக்கும் போராட்டத்திற்கு, பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் தமது உயிரை ஈகம் செய்த தியாகிகளிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று யேர்மனி பீலபெல்ட் நகரில் வெகு சிறப்� �ாக நடைபெற்றுள்ளது.

1995 ஆம் ஆண்டு தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத மிகப்பெரும் இடப்பெயர்வை யாழ். மக்கள் சந்தித்ததுடன், விடுதலைப் போராட்டமும் காடுகளால் சூழப்பட்ட வன்னிப் பகுதிக்குள் நகர்த்த, வரலாற்றால் நிர்ப்பந்திக்கப்பட்டது.

இந்நிகழ்வு சாதாரண நிகழ்வாக அமைந்துவிடவில்லை. தமிழர்களின் விடுதலைப் போராட்டமே முடிந்து போய்விட்டதாக எல்லோராலும் கருதப்பட்டது. � ��ன் உலக இராணுவ அரசியல் ஆய்வாளர்களால் கூட விடுதலைப்புலிகள் இனி அவ்வளவுதான் அவர்களை நம்பிய தமிழர்களின் கதி அதோகதிதான் என அடித்துக் கூறுமளவிற்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்ட நிகழ்வாகும்.

உலகத் தமிழர்களை நிலைகுலைய வைத்த இந்நிகழ்வின் தாக்கத்தால், தமிழகத்தில் ஒரு உயிர் வெளி உலகிற்குத் தெரியாமல் இழக்கப்பட்டிருந்தத� �. அப்போது தமிழகத்து ஊடகங்கள் ஈழப் பிரச்சினையினை அவ்வளவாக கண்டு கொள்ளாத காலமாகவும், ஜெயலலிதாவின் கடுமையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த காலமாகவும் இருந்தமையால், அப்துல் ரவூப் என்கின்ற தமிழனின் தியாக மரணம் உலகம் கண்டுகொள்ளாமல் போன துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

2009 சனவரி 29 அன்று வன்னியில் தமிழினம் மாபெரும் இனச்சுத்திகரிப்பை நோக்கி தள்ளப்பட்டது கண்டு அதனை தமிழ� �ம் இந்தியா உள்ளிட்ட உலகம் கண்டு கொள்ளாது சிங்களத்தை ஊக்குவித்து வருவதை கண்டித்து, தனது ஒப்பற்ற உயிரை தீச்சுவாலைக்கு கொடுத்த நெருப்புத் தமிழன் முத்துக்குமார் வரலாறாகிப் போயிருந்தான்.

முத்துக்குமார் வழியில் தமிழகத்தில் மேலும் 15 தமிழர்கள் தீச்சுவாலைகளை மேனி படரவிட்டு தமிழன அழிப்பை தடுக்க முற்பட்டு தியாக வரலாறு படைத்திருந்தனர்.

முத்துக்குமார் தமிழகத்த ில் கொதிநிலையினை ஏற்படுத்தியிருந்த சமயத்தில், மலேசியாவிலும் தமிழ்ச் சகோதரர்கள் இருவர் தமதுயிரை இனவிடுதலைக்காக ஈகம் செய்தார்கள்.

உலகின் மனச்சாட்சியின் இருப்பிடமாக கருதப்படும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்னால், ஐரோப்பாவை சூழ்ந்து கொண்டிருந்த பனிப்படலத்தையும் வல்லரசுகளின் கண்ணை மறைத்து நின்ற வல்லாதிக்க நலனையும் அகற் றுவதற்காக தீச்சுவாலையினை மேனி படரவிட்டு உலகத்தின் முகத்திரையினை கிழித்து வரலாறுபடைத்தான் நெருப்புத் தமிழன் முருகதாசன்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருபது ஆண்டுகளிற்கு மேலாக நீதி மறுக்கப்பட்டு, சோனியாவின் பழிவாங்கும் நிலைப்பாட்டின் நிகழ்கால சாட்சிகளாக விளங்கிக் கொண்டு இருக்கும் அருமைச் சகோதரர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோ� ��ின் தூக்கு உறுதிப்படுத்தப்பட்டு, உலகத்தமிழினமே ஆடிப்போயிருந்த நிலையில் தீச்சுவாலை தனது உடலை பற்றிக்கொள்ள அனுமதித்து சகோதரி செங்கொடி தீக்குளிப்பு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை திறந்துவைத்து சரித்திரமாகியிருந்தார்.

இப்படி தமிழின விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தீக்குளித்து வரலாறாகிப் போன தியாகச்சுடர்களிற்கு ஒருங்கே வீரவணக்கம் செலுத்தி நினைவில் ந� �றுத்தி, ஆராதிப்பதற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி கிளை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று மதியம் 2மணியளவில் ஆரம்பித்த வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியோடு நடைபெற்றுள்ளது. நிகழ்வின் ஆரம்பமாக தமிழீழத் தேசியக் கொடியினை பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் சகோதரர் திருமலைச்செல்வன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அகவணக்கத்தை தொடர்ந்து, ஈகைச்சுடரினை மனிதநேய செயற்பாட� ��டாளர் ரூபன் அவர்களும் பீலபெல்ட் இளையோர் அமைப்பை சேர்ந்த செல்வன் ஜெனா அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பொதுச்சுடரினை செல்வன் ம.நிலவன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து மலரஞ்சலியும் இடம்பெற்றதையடுத்து, இளஞ்சூரியன் இசைக்குழுவினரின் இசைவணக்கம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக விடுதலை நடனங்கள், நாடகங்கள் என்பன மிகுந்த எழுச்சியுன் நடைபெற்றன. நிகழ்வில், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திருமலைச்செல்வன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

இன்று தமிழினத்தின் விடுதலைக்களம் ஜெனீவாவில் புதிய வடிவெடுத்து நிற்கின்ற வேளையில், தீக்குளித்து வரலாறாகிப்போன நெருப்புத் தமிழர்களை நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தியது முக்கியத்துவம் பெபற்றுள்ளது. இந்த வீரவணக்க நிகழ்வில் யேர்மனிவாழ் ஈழத் தமிழர்கள் பலர் கலந� ��து கொண்டு தமது வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

http://tamilfashionshow.blogspot.com

[Continue reading...]

கூடங்குளம் போராட்டம் ஒரு 'அங்கிட்டு இங்கிட்டு' அதிரடி பார்வை

- 0 comments




கூடங்குள அணு உலை திறந்தது சரிதான் என்கின்ற மனநிலைக்குதமிழகத்தின் மற்ற பகுதி மக்கள் வந்துவிட்ட நிலையில்,  தற்போது இடிந்தகரையில் சுமார் ஐயாயிரம் மக்களுடன்அணு உலை திறப்புக்கு எதிரானவர்களின் உண்ணாவிரத போராட்டம் நடத்து வருகிறது.

"தமிழக முதலமைச்சரை மட்டுமே நம்பியிருக்கிறோம்"- சமீபத்தில் முதல்வரை பார்த்து விட்டு வந்த பின்னர் கூடங்குள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்சுப.உதயகுமார் சொன்ன வார்த்தைகள் இது.

ஆனால் அரசியல்வாதிகளுக்கே உரிய ராஜதந்திரத்தோடு,அணு உலையை திறந்து விட்டார் ஜெயலலிதா. ஒருவேளை கலைஞர் முதல்வராக இருந்திருந்தாலும்கூட இதை தான் செய்திருப்பார். இருவரின் ராஜ(?!?)தந்திரங்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாககூட தெரியவில்லை.

அணுசக்தியின் ஆக்கம் நாட்டின் நலனுக்� ��ு மிக முக்கியம்என்று 'சாதா' விஞ்ஞானிகளும், 'அரசியல்' விஞ்ஞானிகளும் சொல்லி விட்ட நிலையில், தற்போதுகூடன்குளத்தில், 8வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தை அரசும், ஒரு  சில பத்திரிக்கைகளும் கையாண்ட விதம் சரியா என்பதைஆராய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.

"அணு உலை ஆபத்தில்லை என்று சொல்பவர்கள் தங்கள்ஊ ரில் அணு உலையை அமைத்துகொள்ள முன் வருவார்களா?" என்ற அந்த பகுதி அப்பாவி மக்களின்ஐயம் அர்த்தமுள்ள கேள்வியாகவே தெரிகிறது.

தங்கள் வாழ்வாதாரம் அழிந்து விடுமோ என்று அச்� ��ம்கொள்கின்ற சாமானிய மக்களின் ஐயத்தை நீக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை அல்லவா?

ஆரம்பத்தில் போராட்டத்தை ஒடுக்க போராட்டத்திற்குமதசாயம் பூச நினைத்தார்க� ��். இயலவில்லை.

அடுத்து போராட்டக்காரர்கள் வெளிநாட்டு சக்திகளின்கைக்கூலிகள் என்றார்கள்.

வெளிநாட்டு நிதியுதவியின் மூலமாக தான் இந்த மக்களின்போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக சொன்ன அதே மத்திய (உளறல் துறை) இணை அமைச்சர் நாராயணசாமி..,சில நாட்களுக்கு பிறகு, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குநிதியுதவி வந்தது பற்றி இது வரை நிரூபிக்க இயலவில்லை என்று மாநிலங்கவையிலேயே பல்டிஅடித்தார்.

இந்த பருப்பு எல்லாம் வேகாமல் போனதால், இப்போது"நக்சலைட் பின்ணணி" என்ற பீதியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்களத்தின் நந்திகிராம் கிராமத்தில், டாடாநானோ தொழிற்சாலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்திய போது, அந்த போராட்டம் நீண்டநாள்களுக்கு இடைவெளியில்லாமல் நடந்ததற்கு நக்சலைட்கள் தான் காரணம்., அதே போன்று இடிந்தகரைமக்களுக்கு நக்சலைட்டுகள் பின் புலமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்அளவுக்கு நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்  என்பதை தமிழக அரசு ஒப்புக்கொள்ளுமா?

அப்படியெனில் தமிழகத்தில் நக்சலைட்டுகளே இல்லை என்றதமிழக காவல் துறையின் வாதம் பொய்யா?

இதில் தினமலரின் கடுமையான தாக்குதல் பிரச்சாரம்வேறு. உண்மையின் உரைக்கல் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள், போராட்டக்காரர்களை"உதயகுமார் கும்பல்" சொல்லுவதும், தினமும் போராட்டக்காரகளைப் பற்றி  ஜோசியம் சொல்வதும், அபாண்டபழிகளை சுமத்துவதும்  நியாயமான முறையாகத்தெரியவில்லை.

இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் பாணியில் இடிந்தகரையில்காவல்துறை குவிப்பு, ராதாபுரம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு, வஜ்ரா போன்ற பாதுகாப்புவாகனங்கள் அணிவகுப்பு போன்ற அத்துணை விஷயங்களையும் தாண்டி போராடிக்கொண்டிருக்கும் அ ந்தபகுதி மக்களின் வாழ்வாதார, ஜீவாதார பயத்தை நீக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

அணு உலையை ஆதரிக்கும் மக்கள் கூட, அறவழியில் போராடும்மக்கள் மீது திணிக்கப்படும் கொடுமைகளை கட்டாயம் கண்டிக்க வேண்டும்.

சில நாட்கள் மின்தடையால் வெப்பத்தில் புழுங்கியதற்கே,"ஐய்யோ அணு உலை தேவை" என கூக்குரலிட தொடங்கிய நமக்கு, வாழ்க்கைப்போராட்டத்தை,உயிர் வாழும் உரிமைக்காக போராடும் கிராம மக்களின் போராட்டத்தை கிண்டலடிக்க என்ன தகுதிஇருக்கிறது?

[Continue reading...]

விவாகரத்து வழங்கக் கோரி நடிகை விந்தியா மனு தாக்கல்

- 0 comments


விவாகரத்து கேட்டு நடிகை விந்தியா, குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தார். 'சங்கமம்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை விந்தியா. பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் கோபி (எ) மேலும்படிக்க
[Continue reading...]

யேர்மனியில் நடைபெற்ற "தியாகச் சுடர்கள்" வீரவணக்க நிகழ்வு

- 0 comments


தமிழீழ விடுதலையினை வென்றெடுக்கும் போராட்டத்திற்கு, பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் தமது உயிரை ஈகம் செய்த தியாகிகளிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று யேர்மனி பீலபெல்ட் நகரில் வெகு சிறப்� �ாக நடைபெற்றுள்ளது.

1995 ஆம் ஆண்டு தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத மிகப்பெரும் இடப்பெயர்வை யாழ். மக்கள் சந்தித்ததுடன், விடுதலைப் போராட்டமும் காடுகளால் சூழப்பட்ட வன்னிப் பகுதிக்குள் நகர்த்த, வரலாற்றால் நிர்ப்பந்திக்கப்பட்டது.

இந்நிகழ்வு சாதாரண நிகழ்வாக அமைந்துவிடவில்லை. தமிழர்களின் விடுதலைப் போராட்டமே முடிந்து போய்விட்டதாக எல்லோராலும் கருதப்பட்டது. � ��ன் உலக இராணுவ அரசியல் ஆய்வாளர்களால் கூட விடுதலைப்புலிகள் இனி அவ்வளவுதான் அவர்களை நம்பிய தமிழர்களின் கதி அதோகதிதான் என அடித்துக் கூறுமளவிற்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்ட நிகழ்வாகும்.

உலகத் தமிழர்களை நிலைகுலைய வைத்த இந்நிகழ்வின் தாக்கத்தால், தமிழகத்தில் ஒரு உயிர் வெளி உலகிற்குத் தெரியாமல் இழக்கப்பட்டிருந்தத� �. அப்போது தமிழகத்து ஊடகங்கள் ஈழப் பிரச்சினையினை அவ்வளவாக கண்டு கொள்ளாத காலமாகவும், ஜெயலலிதாவின் கடுமையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த காலமாகவும் இருந்தமையால், அப்துல் ரவூப் என்கின்ற தமிழனின் தியாக மரணம் உலகம் கண்டுகொள்ளாமல் போன துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

2009 சனவரி 29 அன்று வன்னியில் தமிழினம் மாபெரும் இனச்சுத்திகரிப்பை நோக்கி தள்ளப்பட்டது கண்டு அதனை தமிழ� �ம் இந்தியா உள்ளிட்ட உலகம் கண்டு கொள்ளாது சிங்களத்தை ஊக்குவித்து வருவதை கண்டித்து, தனது ஒப்பற்ற உயிரை தீச்சுவாலைக்கு கொடுத்த நெருப்புத் தமிழன் முத்துக்குமார் வரலாறாகிப் போயிருந்தான்.

முத்துக்குமார் வழியில் தமிழகத்தில் மேலும் 15 தமிழர்கள் தீச்சுவாலைகளை மேனி படரவிட்டு தமிழன அழிப்பை தடுக்க முற்பட்டு தியாக வரலாறு படைத்திருந்தனர்.

முத்துக்குமார் தமிழகத்த ில் கொதிநிலையினை ஏற்படுத்தியிருந்த சமயத்தில், மலேசியாவிலும் தமிழ்ச் சகோதரர்கள் இருவர் தமதுயிரை இனவிடுதலைக்காக ஈகம் செய்தார்கள்.

உலகின் மனச்சாட்சியின் இருப்பிடமாக கருதப்படும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்னால், ஐரோப்பாவை சூழ்ந்து கொண்டிருந்த பனிப்படலத்தையும் வல்லரசுகளின் கண்ணை மறைத்து நின்ற வல்லாதிக்க நலனையும் அகற் றுவதற்காக தீச்சுவாலையினை மேனி படரவிட்டு உலகத்தின் முகத்திரையினை கிழித்து வரலாறுபடைத்தான் நெருப்புத் தமிழன் முருகதாசன்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருபது ஆண்டுகளிற்கு மேலாக நீதி மறுக்கப்பட்டு, சோனியாவின் பழிவாங்கும் நிலைப்பாட்டின் நிகழ்கால சாட்சிகளாக விளங்கிக் கொண்டு இருக்கும் அருமைச் சகோதரர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோ� ��ின் தூக்கு உறுதிப்படுத்தப்பட்டு, உலகத்தமிழினமே ஆடிப்போயிருந்த நிலையில் தீச்சுவாலை தனது உடலை பற்றிக்கொள்ள அனுமதித்து சகோதரி செங்கொடி தீக்குளிப்பு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை திறந்துவைத்து சரித்திரமாகியிருந்தார்.

இப்படி தமிழின விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தீக்குளித்து வரலாறாகிப் போன தியாகச்சுடர்களிற்கு ஒருங்கே வீரவணக்கம் செலுத்தி நினைவில் ந� �றுத்தி, ஆராதிப்பதற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி கிளை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று மதியம் 2மணியளவில் ஆரம்பித்த வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியோடு நடைபெற்றுள்ளது. நிகழ்வின் ஆரம்பமாக தமிழீழத் தேசியக் கொடியினை பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் சகோதரர் திருமலைச்செல்வன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அகவணக்கத்தை தொடர்ந்து, ஈகைச்சுடரினை மனிதநேய செயற்பாட� ��டாளர் ரூபன் அவர்களும் பீலபெல்ட் இளையோர் அமைப்பை சேர்ந்த செல்வன் ஜெனா அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பொதுச்சுடரினை செல்வன் ம.நிலவன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து மலரஞ்சலியும் இடம்பெற்றதையடுத்து, இளஞ்சூரியன் இசைக்குழுவினரின் இசைவணக்கம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக விடுதலை நடனங்கள், நாடகங்கள் என்பன மிகுந்த எழுச்சியுன் நடைபெற்றன. நிகழ்வில், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திருமலைச்செல்வன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

இன்று தமிழினத்தின் விடுதலைக்களம் ஜெனீவாவில் புதிய வடிவெடுத்து நிற்கின்ற வேளையில், தீக்குளித்து வரலாறாகிப்போன நெருப்புத் தமிழர்களை நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தியது முக்கியத்துவம் பெபற்றுள்ளது. இந்த வீரவணக்க நிகழ்வில் யேர்மனிவாழ் ஈழத் தமிழர்கள் பலர் கலந� ��து கொண்டு தமது வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.
[Continue reading...]

சர்வதேச சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட சிறிலங்கா: அனலை நிதிஸ் ச. குமாரன்

- 0 comments


எந்தவொரு நாடும் சர்வதேசச் சட்டங்களை உள்வாங்கியே உள்நாட்டுச் சட்டங்களை இயற்றுகின்றன. சர்வதேச சட்ட விதிமுறைகளை புறம் தள்ளிவிட்டு உள்நாட்டுச் சட்டங்களைச் சர்வாதிகார நாடுகளே இயற்றுகின்றன.

சீனா சர்வாதிகார நாடாக இருந்தாலும் ப� � சர்வதேசச் சட்ட வரைமுறைகளைப் பின்பற்றியே நடக்கிறது. சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேண வேண்டுமாயின், பெரும்பாலான சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்ட சர்வதேசச் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகாலப் போரில் சர்வதேசச் சட்ட விதிமுறைகளை மீறியே செயற்பட்டார்கள் சிறிலங்கா அரசுகள்.

சிறிலங்காவில் வாழும் பலருக்கு சர்வதேச சட்டத்தைப் பற்றிய அறிவு இல்� �ை. சிறிலங்கா அரசு எதனை செய்கிறதோ அதுவே சட்டம் என்கிற மனநிலையிலேயே பெரும்பான்மையான சிங்கள மக்கள் இருக்கிறார்கள்.

சுதந்திரம் அடைந்த பின்னர் பல வன்முறைகளைச் செய்தே வந்தார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சர்வதேசப் படுத்தப்படாத சூழ்நிலை பல காலங்களாக நீடித்ததனால், சிங்கள அரசுகள் வெற்றிகரமாக தமது அராஜகங்களை செய்தார்கள். மே 2009 ஆம் ஆண்டுடன் முடிவுற்ற நான்காம் கட்ட ஈழப் போர் சர்வதேசக் கவனத்தை ஈர்ந்தது.

சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான ஒப்பந்தம் 2002 இல் இடம்பெற்றது. அக்கால கட்டத்திலிருந்தே ஈழத் தமிழர் பிரச்சினையை நன்கே ஆராய ஆரம்பித்தன பல உலக நாடுகள். விடுதலைப்புலிகளின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரு வெற்றியாகவே இதனை கருத வேண்டும்.

விடுதலைப்புல ிகள் நினைத்திருந்தால் தமிழீழத்தை அன்றே அடைந்திருப்பார்கள் என்று பலர் அப்போது கூறினார்கள். விடுதலை என்பது இரவோடு இரவாக வருவதில்லை. இரத்தம் சிந்திப் பெறுவதே விடுதலை. அப்போதுதான் விடுதலையின் மதிப்பு என்னவென்று அனைவருக்கும் தெரியும். விடுதலைக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் அதிகமான விலை கொடுத்துள்ளார்கள் என்பது உண்மைதான். விடுதலைக்காக கொடுத்த விலைக்கான அறுவடைய ைச் செய்யும் காலமே இனிவரும் காலம் என்றால் மிகையாகாது.

கடத்தல், நியாயமற்ற கைதும் தடுப்பும், பயங்கரவாதம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் (கொலை, இனச் சுத்திகரிப்பு, சித்திரவதை, பாலியல் வன்முறைகள், விமானத் தாக்குதல்கள்) போன்ற விடயங்கள் சர்வதேசச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நாடும் குறித்த சர்வதேசச் சட்டங்களை மதித்தே நடக்க வேண்டும். லிபியா போன் ற நாடுகள் சர்வதேசச் சட்டங்களை மதித்து நடக்கவில்லை. அதனுடைய விளைவு என்னவென்பதை கடந்த வருடம் பலர் அறிந்து இருப்பர். இதைப்போலவேதான் இன்னும் சில நாடுகள் பிரச்சினைகளை இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதில் சிறிலங்காவும் அடக்கம் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.

சிறிலங்காவிற்கு சர்வதேச சட்டங்களே பொறியாகியது

சர்வதேச நாடுகள், சிறிலங ்காவிற்கு எதிராக எதனையும் செய்யாது என்கிற மமதையில் சிறிலங்கா அரசுகள் செயற்பட்டன. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் துணையே சிறிலங்காவின் தைரியத்திற்கு காரணம். அதன் அடிப்படையிலேயேதான் சிறிலங்கா அரசு தமிழர்கள் மீதான போரை திணித்து பல்லாயிரம் மக்களைக் கொன்றது.

சர்வதேசச் சட்டங்களில் எவைகளெல்லாம் குற்றங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனவையோ அவைகள் அனைத்தையு ம் மீறியே ஈழத் தமிழர்கள் மீது போரை மேற்கொண்டு வந்துள்ளன சிங்கள அரசுகள்.

விடுதலைப்புலிகளின் தலைமை வைத்த பொறியே 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமாதான ஒப்பந்தம். ஈழ விடுதலைக்கான அடுத்த கட்டத்தை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றது குறித்த ஒப்பந்தத்திற்கு பிற்பாடான காலமே. சர்வதேசச் சட்டத்தில் ஓர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப்படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட் கடத்தல் அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமல் போகச் செய்தல் எனப்படுகிறது.

காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல் போனோர் பற்றிய விபரத்தை மறைத்தலானது வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல் தொகுப்பில் இதனைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த � �ாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும்.

நியாயமற்ற கைதும் தடுப்பும் என்பது எந்தவித தகுந்த ஆதாரங்களும் இல்லாமல், தக்க சட்ட முறை இல்லாமல் ஒருவரைக் கைது செய்வதாகும். பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் நியாயமற்ற கைதும் தடுப்பும் சட்டத்துக்கு புறம்பானது. இவை பெரும� �பாலும் சர்வாதிகார அல்லது படைத்துறை ஆட்சியுடைய நாடுகளிலேயே நடைபெறுகிறது.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள் என்பது அரசியல், தொழிற்சங்க, சமய தலைவர்களை அல்லது எதிர்ப்புப் போராட்டக்காரர்களை,சமூக செயற்பாட்டாளர்களை அரசு அல்லது அரச படையினர் போன்றோரால் படுகொலைகள் மேற்கொள்வதாகும். சிறிலங்காவில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்ச்சியாக பல காலங்களாக நடந்து வருக� �றது.

குறிப்பாக, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்றோர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இனச் சுத்திகரிப்பு என்பது ஐ.நா நிபுணர் (Commission of Experts Established Pursuant to United Nations Security Council Resolution 780) ஒன்றால் வரையறை செய்யப்படுகிறது. அதாவது, "ஒரு இன அல்லது சமயக் குழு திட்டமிட்ட கொள்கை மூலம், இன்னொரு இன அல்லது சமயக் குழு ஒன்றை வன்முற ையாக, பயங்கரவாத வழிமுறைகளால் ஒரு குறிப்பிட்ட புவியியல் நிலப்பரப்பில் இருந்து அழித்தொழிக்கல் அல்லது வெளியேற்றல் ஆகும்." சிறிலங்கா அரசுகள் பல காலங்களாக இவ்வாறான செயற்பாடுகளை செய்து தமிழ் பேசும் மக்களின் அடையாளங்களை அழிப்பதில் முனைப்புக் காட்டியே வந்துள்ளன.

சித்திரவதை என்பது சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி: "உடலுக்கோ மனதிற்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயலை, அவரிடமிருந்தோ அல்லது மூன்றாம் மனிதரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புமை பெறவோ நடத்தப்படின், அவரோ அல்லது மூன்றாமவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்கு தண்டனையாக வழங்கப்படின், அவரை அல்லது மூன்றாமவரை அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க அல்லது வேறு ஏதேனும் பாகுபாட்டினுற்காக செய்யப்படின், அதற்கு அரசின் அனுமத� ��யோ ஆணையோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடோ இருப்பின் (இந்த சாசனத்தில்) சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலாலான வலியோ துன்பமோ கருத்தில் கொள்ளப்படாது."

அரச பயங்கரவாதம் (state terrorism) எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். ஒரு அரசு கடைப்பி� ��ிக்க வேண்டிய அடிப்படை அரச சட்டத் திட்டங்களையும் உலக பொது மனிதவுரிமை சட்டத்திட்டங்களையும் மதிக்கத் தவறி அல்லது புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் அரச பயங்கரவாதம் எனப்படும்.

மானுடத்திற்கு எதிரான குற்றங்கள என்பது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளதாவது: "மனிதரின் தன்மானத்திற்கு எதிரான தீவிரமான தாக்குதல்கள், அவமதித� ��தல் அல்லது இழிவுபடுத்தல் ஆகியன. இவற்றுள் மேலும் பின்வரும் குற்றங்கள் உள்ளடங்கும்: "கொலை, முழுமையாக அழித்தொழித்தல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்புனர்வு."

போர்க் குற்றம் எனப்படுவது, போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதே போர்க்குற்றங்களாகும். அவ்வாறான சில விதிமுறை மீறல்களில் கொலை, வலிந்து கவரப்பட்ட நிலப்பரப்பில் குடி� ��ிருக்கும் அப்பாவி குடிமக்களை சரிவர நடத்தாதல் மற்றும் அவர்களை வதை முகாம்களுக்கு குடியேற்றல், போர் பிணையாளர்களை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல், பிணையாளர்களை கொல்லுதல், இராணுவ அல்லது குடிசார் தேவை ஏதும் இல்லாத நிலையில் ஏதேனும் அழிவுகள் மற்றும் நகர்ப்புறங்களையோ அல்லது நாட்டுப்புறங்களையோ அழித்தல் என்பனவும் உள்ளடங்கும். அப்பாவிகள் குடியிருக்கும் மற்றும் பொ து இடங்கள் மீது விமானத் தாக்குதல் போர்க் குற்றமாகவே சர்வதேச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இனப்படுகொலை (genocide) என்பது, ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.

1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடை செய்யபட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ.நா.சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ,மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ� ��வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படி குற்றச் செயலாகும்.

சிறிலங்கா அரசு மேற்குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை சர்வதேசச் சட்ட விதிமுறைகளையும் மீறியுள்ளது என்பது தற்போது ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. காலம் கடந்தாலும் நீதிக்குக் கிடைத்த வெற்றியாகவே சிறிலங்காவிற்கு எதிராக மேற ்கொள்ளப்படும் அத்தனை நடவடிக்கைகளும் சர்வதேச அரங்கில் இடம்பெற்று வருகிறது.

தொடர்ந்தும் உண்மையை மூடிமறைக்க முனையும் சிறிலங்கா

தனது அரசு எந்தவித பாரதூரமான குற்றங்களையும் தமிழ் மக்கள் மீது செய்யவில்லை எனவும், புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே போர் செய்ததாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார்.

இவருடைய கூற்றையே அ வரின் அமைச்சர்களும் மற்றும் அவரது சகோதரர்களும் தொடர்ந்தும் கூறி வருகிறார்கள். இவர்களுடைய கூற்றுக்களை ஏற்கத் தயாராக இல்லையென சர்வதேசச் சமூகம் கூறிவிட்டது. சிறிலங்கா என்னவெல்லாம் சொல்கிறதோ அவற்றை உண்மையெனப் பறைசாற்றியே வந்தது இந்தியா.

இந்திய மத்திய அரசிற்கே வேட்டு வைத்தாற்போல் செயற்பட்டார்கள் இந்தியாவில் வாழும் தமிழர்கள். தமிழகத் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்களைக் கண்டு கதி கலங்கியது இந்திய நடுவன் அரசு. இந்தியாவும் சிறிலங்காவை கைவிட்டு விட்டது என்று சொல்வதற்கில்லை காரணம் உள்நாட்டு நிலவரங்களுக்கு ஏற்றால்போல்த்தான் இந்தியா செயற்படுகிறது.சிறிலங்கா விடயத்தில் இந்தியா இன்னும் தனது தெளிவற்ற வெளிநாட்டு கொள்கையையே பேணுகிறது.

சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாப்பதில் சிறிலங்கா அர்ப்பணிப்புடன் செயற� ��பட்டு வருவதாக, ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையின் ஆரம்ப தினமற்று ஆற்றிய விசேட உரையில் சிறிலங்காவின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அவர் தனதுரையில் தெரிவிக்கையில், "யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளும் ஒன்பது மாதங்களுக்கும் கடந்துள்ள நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்களவு வெற்றியீட்டியுள்ளது. நிலையான சமாதானத்தை நாட்� ��ில் ஏற்படுத்துவதற்கான மெய்யான அவசியத்தை அரசாங்கம் உலக சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னரான சிறிலங்காவில் கிரமமான முறையில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்படுத்தப்படுகின்றது."

"மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தம் மக்களை மட்டுமன்றி அவர்களின் வாழ்வாதாரம், உட்கட்டுமான வசதிகள், சமூகக் கட ்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பாதித்துள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. பொருளாதார அபிவிருத்தி, மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்ட காரணிகளை முதனிலைப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமர்வுகளின் போது, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் � �ணிகளை செவ்வனே மேற்கொள்ள போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென கோரியிருந்தோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளதுடன், சில முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. கடந்த கால சமாதான முனைப்புக்களில் ஏற்பட்ட தோல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ளடப்பட்டுள்ளது.

"ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்க� ��் நேரடியாக சாட்சியமளித்த அதேவேளை, 5,000 இற்கும் மேற்பட்ட எழுத்து மூல சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றன. சுதந்திரமாகவும், பகிரங்கமாகவும் இந்த சாட்சியங்கள் அளிக்கப்பட்டன.

எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. நிபுணர் குழு பகிரங்கமான சாட்சியங்கள் திரட்டவில்லை . உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையிலேயே நிபுணர் இறுதி அறிக்கையை சமர்ப்பித்த அதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நம்பகமான மூலங்களின் ஊடாக தகவல்களை திரட்டி யதார்த்தமான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது."

"குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட ஒட்டு மொத்தவிடயங்கள் தொடர்பிலும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இடம்பெய� �் மக்களை மீள்குடியேற்றல், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல், தடுத்து வைக்கப்பட்ட கைதிகள், சட்டவிரோத ஆயுதங்களைக் களைதல், காணிப் பிணக்குகள், மொழிக் கொள்கைகளை அமுல்படுத்தல், சமூகப் பொருளதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், நிர்வாக சர்ச்சைகள் உள்ளிட்ட பலவிடங்கள் தொடர்பில் ஆணைக்குழு பரிந்துரைகளை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கனவே அம ுல்படுத்த ஆரம்பித்துள்ளது.

"திட்டமிட்ட முறையில் மிகவும் கிரமமான இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், நிலக்கண்ணி வெடிகளை அகற்றுதல், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளித்தல், வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல், தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களை நியமித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஏற் கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன."

"இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் பேணப்பட்டனவா என்பது குறித்து ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பில் மிகத் து� �்லியமானதும், விரிவானதுமான புள்ளி விபரத் தரவுகள் விரைவில் வெளியிடப்படும். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்வோர், ஆயுதமேந்தி உயிரிழந்தோர் உள்ளிட்ட சகல விடயங்கள் பற்றியும் கண்காணித்து அறிக்கை வெளியிடப்பட உள்ளது."

"இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் அபரிமிதமான கற்பனை என்பதனை அறுதியிட்டு குறிப்பிட ம� ��டியும். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்படும்.

குற்றச் செயல்கள் தொடர்பில் முதலில் தரவுகள் திரட்டப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும்.இதற்காக சட்ட மா அதிபரின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில வி� �யங்கள் குறித்து இராணுவ நீதிமன்றமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது."

"சனல்-4 ஊடகத்தின் ஆவணப்படம், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் உயிரிழந்தமை போன்ற விடயங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. நாட்டின் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் தேசிய மனித உரிமை செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அ� �ிக்கையின் அடிப்படையில் சிவில் மற்றும் இராணுவ மட்டத்திலான விசாரணைகள் நடத்தப்படும்," என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.

சர்வதேசச் சட்டங்களை ஒட்டுமொத்தமாகவே உதறித் தள்ளிவிட்டு அடக்குமுறை ஆட்சிகளை மேற்கொண்ட சிங்கள தலைமைகள் இன்று நேற்றல்ல கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கு இன்னல்களை விளைவித்தார்கள்.

2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட சமாதான ஒ ப்பந்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலேயேதான் ஈழத் தமிழருக்கு எதிராக எவ்வகையான குற்றங்கள் இடம்பெறுகிறது என்பதனை உலகம் அறிந்தது. சர்வதேசச் சட்டங்களை ஏற்று ஆட்சி செய்வதாக மார்தட்டிக் கொண்ட சிறிலங்கா அரசுகள் அடக்குமுறை ஆட்சிகளையே மேற்கொண்டன.

சர்வதேசச் சட்டங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் மீறி சிறிலங்கா அரசுகள் தமிழ் மக்கள் மீது போரை ஏவி, ஒன்� �ரை லட்சம் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றார்கள். இன்னும் பல சொல்லொணாத் துயரை தமிழ் மக்கள் மீது ஏவியது சிங்கள இனவெறி அரசுகள்.

சர்வதேசச் சட்டம் தம் மீது திரும்பும் என்று ஒரு போதும் எண்ணியதில்லை சிங்களத் தலைமைகள். சிங்கள அரசுகள் இயற்றிய உள்நாட்டுச் சட்டங்களிலிருந்து பாதுகாப்பாக இருந்த சிங்களத் தலைமைகள், சர்வதேசச் சட்டங்களிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. தான் � �விய அம்பு தன் மீதே திரும்பியுள்ளதைக் கண்டு கதி கலங்கியுள்ளது சிங்கள அரசு என்பதுதான் உண்மை. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

nithiskumaaran@gmail.com
[Continue reading...]

அய்யோ பாவம் விராத் கோஹ்லி!

- 0 comments


திறமை இருக்கிறது. வேகம் இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள விராத் கோஹ்லிக்கு எல்லாம் இருக்கிறது. இத்தனைக் குறுகிய காலத்தில் பதினோரு சதங்களை அடித்துள்ளது நம்ப முடியாத சாதனைதான். பெரிய அணி, சிறந்த பந்துவீச்சாளர் என்று எதைப் பற்றியும் கோஹ்லி கவலைப்படுவது இல்லை; எதிரணி பந்துவீச்சாள� ��்கள் கொடுக்கும் நெருக்கடிகளைக் கண்டு கலங்குவதில்லை; விக்கெட் விழுவதைக் கண்டு பதற்றம் கொள்வதில்லை. இமால இலக்குகளைக் கண்டு மலைப்பதில்லை; வெற்றி.. வெற்றி. அதை மட்டுமே [...]
[Continue reading...]

பேஸ் புக் மூலம் திருடர்களை இனங்கண்ட உணவு விடுதி உரிமையாளர்.

- 0 comments
 

இத்தாலியின் வெனிஸ் நகரிலுள்ள உணவுவிடுதியொன்றில் கணினி மற்றும் பொருட்களை திருடிய நபர்களை அதன் உரிமையாளர்கள் பேஸ் புக் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார்.திருடர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் திணறிக்கொண்டிருந்த நிலையில், அத்திருட்டுச் சம்பவத்தின்போது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த நபர்களின் படங்களை ….திருடர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் திணறிக்கொண்டிருந்த நிலையில், அத்திருட்டுச் சம்பவத்தின்போது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த நபர்களின் படங்களை உணவு விடுதியின் உரிமையாளர் டென்னிஸ் மொன்டினோ அவ்விடுதியின் பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டார்.

அதையடுத்து இரு நாட்களில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டனர். "'நான் பொலிஸாரை விமர்சிக்கவில்லை. ஆனால் இக்காலத்தில் மிக விரைவான, நவீன முறைமைகள் இருக்கும்போது அதை பயன்படுத்துவது அவசியம்" என டென்னிஸ் மொனிட்டோ கூறியுள்ளார்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவரையும் யுவதியொருவரையும் கைது செய்து விசாரித்து வருவதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[Continue reading...]

அரசின் அடக்கு முறைக்கு ஒரு அளவில்லையா...?

- 0 comments


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின்மீது அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பு
இடம்:பத்திரிகையாளர் மன்றம்.
நாள் - 22-03-2012, வியாழன்

அருள் எழிலன் கருத்துரை 

http://www.youtube.com/watch?v=GvLotfwKFu4

பா.செயபிரகாசம் கருத்து

http://www.youtube.com/watch?v=-58prUXyMns

அ.மார்க்ஸ் கருத்து

http://www.youtube.com/watch?v=vE2ijK_wbUU

மனுஷ புத்திரன் கருத்து

http://www.youtube.com/watch?v=b4N9fKEfSrY

சீனிவாசன் கருத்து

http://www.youtube.com/watch?v=rvYwlajDtQw

ஞானி கருத்து

http://www.youtube.com/watch? v=CsGzeRaF7dM

பாஸ்கர் சக்தி கருத்து

http://www.youtube.com/watch?v=wQfX0U1oSFc

அஜயன் பாலா கருத்து

http://www.youtube.com/watch?v=r7a723CSzag

அமுதன் கருத்து

http://www.youtube.com/watch?v=O7n0n8RcC1w

சுந்தர்ராஜன் கருத்து

http://www.youtube.com/watch?v=aWmDNUJ2Cfw

கேள்வி பதில் - சல� ��லப்பு

http://www.youtube.com/watch?v=GIA_l74MTUM

http://thamizharparai.blogspot.in/2012/03/blog-post_23.html

தமிழர் பறை நண்பர்கள் எனக்கு அனுப்பிய மெயில்இது......!



http://tamilfashionshow.blogspot.com

[Continue reading...]

26-3-2012 தினத்தந்தி, தினகரன் டவுன்லோட் செய்ய

- 0 comments
 
 
தினகரன்

26ம் தேதி தினத்தந்தி, தினகரன் தரவிறக்க


26-3-2012 தினத்தந்தி

26-3-2012 தினகரன்





[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger