இத்தாலியின் வெனிஸ் நகரிலுள்ள உணவுவிடுதியொன்றில் கணினி மற்றும் பொருட்களை திருடிய நபர்களை அதன் உரிமையாளர்கள் பேஸ் புக் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார்.திருடர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் திணறிக்கொண்டிருந்த நிலையில், அத்திருட்டுச் சம்பவத்தின்போது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த நபர்களின் படங்களை ….திருடர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் திணறிக்கொண்டிருந்த நிலையில், அத்திருட்டுச் சம்பவத்தின்போது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த நபர்களின் படங்களை உணவு விடுதியின் உரிமையாளர் டென்னிஸ் மொன்டினோ அவ்விடுதியின் பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டார்.
அதையடுத்து இரு நாட்களில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டனர். "'நான் பொலிஸாரை விமர்சிக்கவில்லை. ஆனால் இக்காலத்தில் மிக விரைவான, நவீன முறைமைகள் இருக்கும்போது அதை பயன்படுத்துவது அவசியம்" என டென்னிஸ் மொனிட்டோ கூறியுள்ளார்.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவரையும் யுவதியொருவரையும் கைது செய்து விசாரித்து வருவதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?