Saturday, 12 April 2014

அதிர்ச்சியில் நயன்தாரா!: மருத்துவர்கள் கூறிய தகவல்

- 0 comments


இறால் அதிகமாக சாப்பிடுவதால்தான் தோல் சம்பத்தப்பட்ட நோய் வருகிறது என்று மருத்துவர்கள்  கூறியது நயன்தாராவிற்கு பெரும் கவலை அளித்துள்ளதாம்.

நயன்தாரா ஒரு இறால் பிரியை. என்ன சாப்பாடு சாபிடாலும் கூடவே இறாலையும் ஒரு பிடி பிடித்து விடுவாராம்.. இப்படி இறாலுக்கு அடிமையான நயன்தாராவிற்கு சில தோல் சம்பந்தப்பட்ட நோய் வருவற்கான அறிகுறிகள் தெரிந்ததால் இறாலை சில நாட்கள் சாபிடாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்களாம்.

[Continue reading...]

சிம்புவுடன் காதல் முறிவு: பார்ட்டி வைத்து கொண்டாடிய "அம்மா"

- 0 comments



வாலு படத்தில் இணைந்துநடித்த போது சிம்பும் ஹன்சிகாவும் காதலிப்பதாக தகவல்கள் கசிந்தன. இதுகுறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் புது படத்தில் சிம்புவும், நயன்தாராவும். மீண்டும் ஜோடி சேர்ந்ததால். இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்பட்டது .இதுகுறித்து இருவருமே பரஸ்பரம் பிரிந்து விட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர்,

 இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த காதல் விவகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த ஹன்சிகாவின் அம்மா, தனது மகளின் காதலை எப்படி முறிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்ததாகவும்,. ஆனால்  மகளுக்கு நெருக்கடி கொடுத்தால், அதுவே காதலை தீவிரப்படுத்தி விடுமோ என்று பயந்து மகள் முடிவிற்கே விட்டுவிட்டாரம்.

இந்நிலையில் திடீரென ஒருநாள், நான் இப்போது சிங்கிளாகத்தான் இருக்கிறேன். சிம்புவுடனான காதல் முறிந்துவிட்டது என்று ஹன்சிகா டுவிட் செய்ததையடுத்து  அவரது அம்மா மிகுந்த உற்சாகம் அடைந்தாராம். இதனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறாராம்.காதல் முறிவுக்கு பிறகு மகளுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் தேடி வருவதால் அவர் உற்சாகமாக உள்ளாராம்.
[Continue reading...]

சிவகார்த்திகேயன் படத்துக்கு நாகி ரெட்டி விருது!

- 0 comments
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சிறந்த பொழுதுபோக்குப் படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது.

மறைந்த மாபெரும் தயாரிப்பாளரான பி.நாகிரெட்டி நினைவாக ஆண்டு தோறும் சிறந்த படங்களுக்கான விருது ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2013-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்குப் படம் என்ற பிரிவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாகிரெட்டி அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கடந்தாண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. பொன்ராம் இயக்கியிருந்த இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது. தற்போது அந்தப் படம் நாகிரெட்டியார் விருதையும் கைப்பற்றி மேலும் பெருமை சேர்த்துக்கொண்டுள்ளது.

 

[Continue reading...]

சைவம் திரைப்படத்தை வெளியிடத் தடை

- 0 comments


சைவம் திரைப்படத்தை வெளியிட ஏப்ரல் 17-ஆம் தேதி வரை தடை விதித்து 12-ஆவது உதவி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்.ஜி.பிலிம் நிறுவனத்தின் இயக்குநர் பி.ராமதாஸ் தாக்கல் செய்த மனு விவரம்: இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு எங்கள் நிறுவனம் ரூ. 1.5 கோடி நிதி வழங்கி உள்ளது. நாங்கள் அளித்த பணத்தை வைத்து விஜயின் தந்தை ஏ.எல்.அழகப்பன் சைவம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் விஜய் இயக்கியுள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பு பணத்தைத் தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆனால், இசை வெளியீட்டு விழா முடிந்தும் எங்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. தற்போது படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தை வெளியிட்டால் எங்களது பணத்தை திருப்பித் தர மாட்டார்கள். எனவே, எங்களுக்கு பணம் தரும் வரை சைவம் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு 12-ஆவது உதவி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 17-ஆம் தேதி வரை சைவம் படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.

[Continue reading...]

வடிவேலு நடித்த "தெனாலிராமன்' படத்துக்கு தடை கோரி வழக்கு

- 0 comments



தெனாலிராமன்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாடெர்ந்துள்ளது.

இது தொடர்பாக அந்தப் பேரவையின் தலைவர் பாலகுருசாமி மற்றும் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் நடிகர் வடிவேலு நடிப்பில் "தெனாலிராமன்' என்ற படத்தை தயாரித்துள்ளது.

அந்தப் படம் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்தப் படத்தை திரையிட்டுக் காட்டுமாறு ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.

அதற்கு அவர்கள் கிருஷ்ணதேவராயரை தவறாக சித்திரிக்கவில்லை என பதில் அளித்தனர். ஆனால், படத்தின் நாயகனான வடிவேலு, கிருஷ்ணதேவராயராக தான் நடிக்கவில்லை எனவும், வேங்கை மன்னன் என்ற கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்

துள்ளார். ஆனால், தணிக்கைச் சான்றிதழில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய கதாபாத்திரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்த தகவல்கள் மாறுபட்டவையாக உள்ளன.

வரலாற்றுக் கதை என்றால், வரலாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகத்தின் அடிப்படையில் படத்தை எடுக்கலாம். ஆனால், ஏ.ஜி.எஸ். நிறுவனம் கிருஷ்ணதேவராயரின் உண்மையை மறைத்து வணிக நோக்கத்துக்காக இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.

அவர்களது சொந்தக் கருத்தில், உண்மை வரலாற்றை திரித்து, தவறான நிகழ்வை உருவாக்கி படத்தை தயாரித்துள்ளனர்.

மேலும் பட நிறுவனமும், இயக்குநரும் தெலுங்கு அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டுக் காண்பிப்பதாக தெரிவித்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் ஏப்ரல் 18-ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே, "தெனாலிராமன்' படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். தெலுங்கு அமைப்புகளுக்கு அந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வுக்கு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வேறு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger