Saturday, 1 October 2011

நான் 'கஜினி சூர்யா' ஆயிட்டேன்.. ப.சிதம்பரம்

- 0 comments
 
 
 
2ஜி விவகாரத்தில் நிதியமைச்சகம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் கோபமடைந்த நீங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு ஞாபக மறதி உள்ளது. நான் ராஜினாமா செய்ய முன் வந்தேனா இல்லையா என்று நினைவில்லை என்று ஜோக்கடித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
 
ப.சிதம்பரம் ஒவ்வொரு மாதமும் நிருபர்களை சந்தித்து தனது துறை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். நேற்று அவர் வழக்கம்போல் நிருபர்களை சந்தித்தபோது, அவரது துறை தொடர்பான விஷயங்களை விட்டுவிட்டு 2ஜி விவகாரம் குறித்தே அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டன.
 
ஆனால், அவற்றை தனது புத்திசாலித்தனத்தால் சமாளித்தார் சிதம்பரம். கேள்விகளுக்கு சளைக்காமல் குண்டக்க மண்டக்க பதிலளித்து நிருபர்களை அசர வைத்தார்.
 
கேள்வி: 2ஜி விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு வழியாக சமரசத்தில் முடிந்துள்ளது. இதை உங்களுக்கு கிடைத்த வெற்றியாகவும், பிராணாபுக்கு கிடைத்த தோல்வியாகவும் எடுத்துக் கொள்ளலாமா?
 
ப.சிதம்பரம்: இது உள்துறை அமைச்சகம் சம்பந்தமான கேள்வி இல்லையே. நீங்கள் சொல்வதுபோல் எந்த ஒரு சம்பவமும் உள்துறை அமைச்சகத்தில் நடக்கவில்லையே.
 
கேள்வி: 2ஜி விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்சனையால் நீங்கள் ராஜினாமா செய்ய முன் வந்தீர்களா?
 
ப.சிதம்பரம்: எனக்கு ஞாபக மறதி உள்ளது. நான் ராஜினாமா செய்ய முன் வந்தேனா இல்லையா என்று நினைவில்லை.
 
கேள்வி: சரி, கடந்த ஒரு வாரத்தில் எத்தனை முறை நீங்கள் ராஜினாமா செய்ய முன் வந்தீர்கள்?
 
ப.சிதம்பரம்: எனக்கு ஞாபக மறதி மட்டுமல்ல, கணக்கிலும் பலவீனம் உண்டு.
 
கேள்வி: நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரே ஒரு தடவை ராஜினாமா செய்ய முன் வந்திருப்பீர்களா?
 
ப.சிதம்பரம்: உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இப்போதுதான் நான் எண்ணக் கற்று வருகிறேன்.
 
கேள்வி: நீங்கள் இப்படி பதிலளித்தால் அது மேலும் யூகங்களுக்குத்தானே இடமளிக்கும்?
 
ப.சிதம்பரம்: உண்மைதான். இந்த யூகங்கள் உங்களது பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பப் பயன்படுமே?. அது தொடரட்டும்.
 
கேள்வி: அப்படியென்றால் நீங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததை மறுக்கவில்லை.. அப்படித்தானே?
 
ப.சிதம்பரம்: இது எனது அமைச்சகம் சார்ந்த கேள்வி அல்ல. அதனால் இதற்கு என்னிடம் பதில் இல்லை.
 
கேள்வி: உங்களுக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் இடையே தொடர் மோதல் ஏற்பட்டுள்ளதே?
 
ப.சிதம்பரம்: இதுவும் உள்துறை அமைச்சகம் சார்ந்த கேள்வி அல்ல.
 
மேலும் அவர் கூறுகையில், நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கு தற்போது 9 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 6 எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் அல்லது அதற்கு இணையான ஹெலிகாப்டர்களும் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட உள்ளன. அதேபோல், தற்போது 71,000 துணை ராணுவ வீரர்கள் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் கூடுதலாக 5,000 வீரர்கள் அனுப்பப்பட இருக்கிறார்கள்.
 
நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் போலீஸ் நிலையங்கள் கட்டவும், போலீஸ் நிலையங்களை வலுப்படுத்தவும், போலீஸ் படையை வலுப்படுத்தவும் மத்திய அரசு ரூ.100 கோடியை அனுமதித்துள்ளது.
 
ஹக்கானி இயக்கம் உள்பட பல தீவிரவாத இயக்கங்களுடன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக இந்தியா ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறது. ஆனால், இப்போதுதான் தாமதமாக அமெரிக்கா இதை கண்டுபிடித்துள்ளது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
 
நாம் தேடி வரும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறான் என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம். ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. அவர் அங்கு இல்லை என்று பொய் சொல்லி வருகிறது.
 
அத்வானியின் ரத யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு. ஆனால், பாஜக கட்சியிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வந்தால் நிச்சயம் பரிசீலிக்கப்படும்.
 
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவின் கருணை மனு மீது ஜனாதிபதி இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆகவே அதுபற்றி இப்போது விவாதிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்றார் சிதம்பரம்.



[Continue reading...]

தமிழ்த்தாய் மடியில்தான் என் உயிர் போகும்! - கருணாநிதி

- 0 comments
 
 
தூக்கத்தில் உயிர் போகுமா? தூக்கில் உயிர் போகுமா? என்று ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார். இது அப்படியெல்லாம் போகும் உயிர் அல்ல. எனது உயிர் தமிழ்த்தாய் மடியில் தான் போகும், என்று கருணாநிதி பேசினார்.
 
தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் விழா, முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
 
விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பெரியார், அண்ணா, பாவேந்தர் மற்றும் கலைஞர் விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தி.மு.க.வின் சிறப்பு வாய்ந்த இந்த முப்பெரும் விழாவில் கழகத்தின் பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் இதையும் அரசியலாக்கி விடுவார்கள்.
 
கடந்த சில வாரங்களாக நான் சொல்லியும் கேட்காமல் புயல் வேகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டார். இதனால் 2 நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகவே இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
 
கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று பலரும் சொன்னார்கள். இப்போது தி.மு.க. தோற்று விட்டதா என்று எத்தனையோ பெரியவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் கேட்கிறார்கள்.
 
ஏதோ தவறு செய்து விட்டோம் என்று இப்போது தாய்மார்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள் யோசிக்கிறார்கள். இதில் ஒரு மகிழ்ச்சி. மலையை தூக்கிக் கொண்டு வருவோம் என்று ஏமாற்றிய காரணத்தினால்தான் ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் மலையை உருட்டிக் கொண்டு வரவில்லை. மலையை தலையில் தூக்கி வையுங்கள் உருட்டி விடுகிறேன் என்று கூறுபவர்கள்தான் இப்போது உள்ளார்கள்.
 
ஜனநாயக விளையாட்டு
 
ஜனநாயக விதியால் ஏற்பட்ட ஆட்சியை நாம் தாங்கித்தான் கொள்ள வேண்டும். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது நடைபெற்ற தேர்தலில் ஒரு தொகுதியில்தான் நாம் வெற்றி பெற்றோம். பின்னர் படிப்படியாக வளர்ந்து ஆட்சியை பிடித்தோம். இப்போது தோற்றிருக்கிறோம். இது ஜனநாயகத்தின் விளையாட்டு.
 
இன்றைய தினம் தமிழகத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரை தூக்கில் போடக்கூடாது என்று ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. 3 பேரை காப்பாற்றப்போகிறோம். அந்த உயிர்களை காப்பாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
 
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினால் போதாது. அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி, அதை கவர்னரின் கவனத்துக்கு அனுப்பி, குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்து அனுப்பினால்தான் தண்டனையை தடுக்க முடியும்.
 
அந்த 3 பேரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சி காலத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு நான் கடைபிடித்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
 
என் பார்வையில் இருந்த போலீஸா இது?
 
தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. உங்களுக்கே தெரியும். தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது எதிர்க்கட்சியினரை கைது செய்து இருப்போமா? பொய் வழக்கு போட்டு சிறையில், தனிச் சிறையில் அடைத்திருப்போமா? இப்போது சென்னையில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலும், பாளைங்கோட்டையில் கைது செய்து திருச்சி சிறையிலும் அடைத்து வேதனைப்படுத்தி, வாட்டி வதைக்கிறார்கள். என் பார்வையில் இருந்த போலீஸ்காரர்களா இவர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
 
இதற்கு ஒரு விடிவு காலம் வரும். ஆனால் ஜனநாயக முறைப்படி 5 ஆண்டுக்கு ஒரு முறைதான் ஆட்சி மாறும். துரைமுருகன் கூறியது போல் நாங்கள் மைனாரிட்டி ஆட்சிதான் நடத்தினோம். அது மைனாரிட்டி மக்களுக்கான அரசு. தட்டிக் கேட்டவர்களை தோழமை கட்சிகளாக ஆக்கிக் கொண்டு 5 ஆண்டுகள் ஆட்சியை கட்டி காப்பாற்றினோம்.
 
பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை பெற்றுக் கொடுத்த மக்களை, நம்பி இருந்த தோழமை கட்சிகளை விரட்டலாமா? தி.மு.க. அரசு மைனாரிட்டியாக இருந்தாலும், எல்லோரையும் அரவணைத்து 5 ஆண்டுகால பொற்கால ஆட்சியை தந்தது. அந்த பொற்கால ஆட்சி இப்போது கற்கால ஆட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
 
தமிழ்த்தாய் மடியில் தான் உயிர் போகும்
 
ஒரு அமைச்சர் சொல்கிறார் கருணாநிதியின் உயிர் தூக்கத்தில் போக போகிறதா? அல்லது தூக்கில் போகப் போகிறதா? என்று கேட்கிறார். தூக்கமோ தூக்கோ கருணாநிதி உயிர் தமிழகத்திலே தமிழ்த்தாயின் மடியில்தான் போகும். இவர்களை போல 'அம்மா' மடியில் போகாது.
 
தேசிய கொடி ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தார். அந்த கொடியை மாத்திரம் ஏற்றலாமா? என்று பொன்முடி கேட்டார் என்பதற்காக அவருக்கு ஜாமீன் கூட கொடுக்காத தண்டனை வழக்கு.
 
கருணாநிதியின் உயிர் தூக்கத்திலோ, தூக்கிலோ போகும் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். உயிரைப் பற்றி என்றைக்கும் நான் கவலைப்படுபவன் அல்ல. உயிரை பற்றி கவலைப்பட்டிருந்தால் கல்லக்குடி போராட்டத்திலே அதை போக்கியிருப்பேன். உயிரைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் பாளையங்கோட்டை சிறைச்சாலையிலே பாம்புகளும், தேள்களும் நிரம்பிய அந்த சிறையிலே உயிரைப் போக்கியிருப்பேன்.
 
என் உயிர் தூக்கத்தில் போகிற உயிர் அல்ல. துக்கத்திலே போகிற உயிரும் அல்ல. இந்த உயிர் எப்போது போகும் என்றால் தமிழன் தமிழனாக, தன்மானத்தோடு வாழ்கிறான் என்ற நிலை உருவான பின்பு தான் இந்த உயிர் போகும். எனது உயிரை பணயமாக வைத்து நடைபெறுகின்ற போராட்டத்தில், இனப்போராட்டத்தில் நாம் நிச்சயமாக வெல்வோம்," என்றார்.
 
விருதுகள்
 
'பெரியார்' விருது திராவிட இயக்க சிந்தனையாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கும், 'அண்ணா' விருது தி.மு.க. சட்டத் துறைச் செயலாளரும், சிறந்த தொழிற்சங்கத் தலைவருமான வக்கீல் ஆர்.எஸ்.பாரதிக்கும், 'பாவேந்தர்' விருது நெல்லை மாநகராட்சியின் மேயராக சிறப்பாக பணியாற்றிய திருநெல்வேலி உமாமகேஸ்வரிக்கும், 'கலைஞர்' விருது தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் தி.அ.முகமதுசகிக்கும் வழங்கப்பட்டது.
 
விருதுடன் ரூ.1 லட்சம் பொற்கிழி, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
 
மாணவிகளுக்கு பரிசுத் தொகை
 
பிளஸ்-2 தேர்வில் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சமும், முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பாரதிதாசனார் பாடல் ஒப்பித்தல் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் முதல் இடம் பிடித்த 2 பேருக்கு தலா ரூ.15 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த 2 பேருக்கு தலா ரூ.5 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 4 பேருக்கு தலா ரூ.3 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
 
மேலும், சிறந்த, நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேருக்கு தலா ரூ.20 ஆயிரமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.



[Continue reading...]

அக் 10-க்குள் தயாநிதி, கலாநிதி மாறன்கள் மீது எபஐஆர்! - சிபிஐ

- 0 comments
 
 
 
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு - ஏர்செல் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என சிபிஐ உறுதி கூறியுள்ளது.
 
தயாநிதிமாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் நடந்த முறைகேடு பற்றியும் விசாரணை நடத்தி வருகிறது.
 
இது தொடர்பாக ஏர்செல் முன்னாள் இயக்குனர் சிவசங்கரன் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், "ஏர்செல் நிறுவனத்துக்கு கூடுதல் ஏரியாவுக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தபோது அதன் மீது முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தினார். ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட பிறகுதான் லைசென்ஸ் வழங்கினார். இதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட்டில் முதலீடு செய்தது," என்று குற்றம்சாட்டினார்.
 
இந்த பிரச்சினையில் தனக்கு தயாநிதிமாறனும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் கொலை மிரட்டல்கள் விடுத்தனர் என்றும் சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார்.
 
இந்த புகார்களை தொடர்ந்து தயாநிதி மாறன் பதவி விலகினார். அவரிடமும், கலாநிதி மாறன் மற்றும் மேக்சிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ நிறுவன சேர்மன் ரால்ப் மார்ஷல் ஆகியோரிடமும் சி.பி.ஐ. பல மணி நேரம் விசாரணை நடத்தியது.
 
இந்த வழக்கில் சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களை திரட்டியது. கடந்த வியாழக்கிழமை ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சாதாரண வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 30-ந்தேதி (நேற்று) முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்படும் என்றும் சிபிஐ தெரிவித்தது.
 
ஆனால் பல்வேறு ஆதாரங்களை இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வில்லை.
 
வருகிற 10-ந்தேதி அல்லது அதற்கு முன் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதல் தகவல் அறிக்கையில் தயாநிதிமாறன், கலாநிதி மாறன், ஆஸ்ட்ரோ சேர்மன் ரால்ப் மார்ஷல் மற்றும் சிலரது பெயர்கள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.
 
மேக்சிஸ் நிறுவனத்தை இலங்கை தொழில் அதிபர் அனந்தகிருஷ்ணன் நடத்தி வருகிறார். இவர் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளையும், சிந்தியா செக்யூரிட்டிஸ் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் 24 சதவீத பங்குகளையும் வாங்கியது.
 
தயாநிதிமாறன் நிர்ப்பந்தத்தின் பேரில் ஏர்செல் பங்குகள் கைமாறிய தாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. ஏர்செல் நிறுவனம் கைமாறியதும் அதற்கு கூடுதலாக 14 ஏரியாக்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களையும் சி.பி.ஐ. திரட்டி உள்ளது.
 
எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதும், அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கும் எனத் தெரிகிறது.



[Continue reading...]

ஆசிரியர்கள், அரசு ஊழியருக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு

- 0 comments
 
 
 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
 
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக் கேற்ப அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். ஜனவரி 1-ந்தேதியை மையமாகவும் ஜூலை 1-ந்தேதியை மையமாகவும் வைத்து இந்த அக விலைப்படி கொடுக்கப்படுகிறது.
 
கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே பெற்று வந்த 51 சதவீத அகவிலைப்படியுடன் தற்போது உயர்த்தப்பட்ட 7 சதவீதமும் சேர்த்து 58 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறுகிறார்கள்.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டவுடன் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கு எப்போது உயரும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.
 
அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா அகவிலைப்படியை உடனே உயர்த்தி கொடுக்க முடிவு செய்துள்ளார்.
 
நிதித்துறை செயலாளர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்துட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஓரிரு நாட்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
 
தற்போது இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் மத்திய- மாநில தேர்தல் ஆணையத்திடம் அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக அரசு முறைப்படி அனுமதி பெற்றுள்ளது.
 
அகவிலைப்படி உயர்த்தியதற்கான அரசாணையை மத்திய அரசு இன்னும் வெளியிடாததால் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
 
இதன் மூலம் குறைந்த பட்சம் ரூ. 600 முதல் அதிக பட்சமாக ரூ. 5000 வரை சம்பள உயர்வு கிடைக்கும். 13 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் 5 லட்சத்து 50 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் மற்றும் 3 லட்சம் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பயன் அடைவார்கள்




[Continue reading...]

நடிகர் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் சங்கத்தினர் மோசடி - எஸ்ஏசி புகார்

- 0 comments
 
 
 
 
 
நடிகர் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலர் பண மோசடி செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க பொறுப்புத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் குற்றம் சாட்டினார்.
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
 
இதில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., பி.எல்.தேனப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கலைப்புலி தாணுவும் போட்டியிடுகின்றனர்.
 
இவர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் தியாகராயநகரில் நடந்தது.
 
இதில் பங்கேற்று எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசுகையில், "தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த நிர்வாகத்தில் கேபிள் டி.வி. உரிமை வழங்கியதில் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அணி வென்றால் அந்த தொகை மீட்கப்படும்.
 
முதல்வரிடம் பேசி சிறு தயாரிப்பாளர்களுக்கான மானிய தொகையை பெற்றுத் தருவோம். டெலிவிஷன்களில் விளம்பர கட்டுப்பாடு கொண்டு வரப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
 
கார்த்திக்கிடம் மோசடி
 
நடிகர் கார்த்திக் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது ஒன்பது தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டு அவர்கள் படங்களில் நடிக்கவில்லை என புகார் கூறப்பட்டது. தற்போது கார்த்திக் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் இருந்தும் ரூ.5 லட்சம் வசூலித்து ஒன்பது தயாரிப்பாளர்களுக்கும் பிரித்து கொடுப்பது என சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.
 
அதன்படி கார்த்திக் நடித்து ரிலீசான கலக்குற சந்துரு, ராவணன், மாஞ்சாவேலு ஆகிய படங்களில் இருந்து ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
 
அதில் 7 லட்சம் பணத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. கேபிள் டி.வி. மூலம் வசூலான பணத்திலும் மோசடி நடந்துள்ளது.
 
சங்கம் சார்பில் வெளிவரும் இதழுக்கு விளம்பர கட்டணம் என்ற பெயரில் 400 தயாரிப்பாளர்களிடம் டி.டி. வாங்கி 4 ஆண்டாக வங்கியில் போடப்படவில்லை.
 
இது போன்ற பல குற்றற்சாட்டுகளை போலீசில் புகாராக அளித்துள்ளோம். எங்கள் அணி வென்றால் சேவை மையமாக சங்கம் செயல்படும்," என்றார்.
 
இந்தக் கூட்டத்தில் கே.ஆர்.ஜி., நடிகர் ராதாரவி, முக்தா சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



[Continue reading...]

சோயிப் அக்தர் பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது சச்சின் கால்கள் நடுங்கும்: அப்ரிடி

- 0 comments
 
 
சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கு சர்வதேச கிரிக்கெட் ஆணையம் தடை விதித்து உள்ளது. அவர் கான்ட்ரோ வெர்ஸியலி யூவர்ஸ் என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.
 
இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது. அக்தர் தனது புத்தகத்தில் தெண்டுல்கர், டிராவிட் குறித்து தேவையில்லாமல் விமர்சித்துள்ளார். இருவரும் மேட்ச் வின்னர்கள் இல்லை என்றும், அதோடு தெண்டுல்கர் தனது பந்து வீச்சுக்கு பயப்படுவார் என்றும் கூறியுள்ளார்.
 
இந்த கருத்திற்கு பல கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மும்பையில் புத்தகம் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.
 
இந்நிலையில் (சோயிப் அக்தர்) ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது சச்சின் கால்கள் நடுங்கும். அதை நான் பார்த்துள்ளேன் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.



[Continue reading...]

மங்காத்தா பார்க்கணும்... வெங்கட்பிரபுவுக்கு சல்மான்கான் போன்

- 0 comments
 
 
 
 
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வழக்கத்தை அடித்து நொறுக்குகிறார்கள் நம்ம ஊர் இயக்குனர்களும், அவர்கள் இயக்கிய படங்களும். சல்மான் கான், ஷாரூக்கான் என்று கான்களே கவனம் வைக்கிற அளவுக்கு சிறப்பு 'பொருளாதார' மண்டலமாகிவிட்டது கோடம்பாக்கம்.
 
ஒரு சமீபத்திய ஆச்சர்யம் இது. மங்காத்தா படத்தின் திருட்டு விசிடியை பார்த்தே இம்ரஸ் ஆகிவிட்டாராம் சல்மான். இதன் நல்ல பிரிண்ட்டை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கிளம்பிவிட்டது அவருக்கு. சென்னையிலிருக்கும் வெங்கட்பிரபுவுக்கே போன் அடித்துவிட்டாராம். உங்க மங்காத்தா பார்த்தேன். பிரமாதமா இருந்திச்சு. ஆனால் பிரிண்ட் சரியில்லாத ஒரு டி.வி.டியில் பார்க்கும்படி ஆகிருச்சு. நல்ல பிரிண்ட் ஒன்று அனுப்பி வைக்க முடியுமா என்றாராம்.
 
அவரே லைனில் வந்தபிறகு ஆடிப்போனார் வெங்கட். உடனடியாக ஒரு பிளைட்டில் நல்ல குவாலிடியான டிஜிட்டல் பிரிண்ட்டையே அனுப்பி வைத்தாராம். வெங்கட்டிடமே இப்படி பாராட்டிய சல்மான் அஜீத்திடம் பேசாமலா இருந்திருப்பார்?



[Continue reading...]

சிதம்பரத்தையும் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும்: பாஜக

- 0 comments


2ஜி ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக பெரிய அளவில் ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி, சிதம்பரத்தையும் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சிதம்பரத்தை பாதுகாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ரவிஷங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார். ஆதாரங்கள் பெரிய அளவில் இருந்தபோதிலும் சிதம்பரத்தின் குற்றங்களை மறைக்க அரசு முயற்சித்து வருகிறது. இதுவே இருவேறு அளவுகோல்கள் பின்பற்றப்படுவதை குறிப்பிடுகிறது என பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ராசாவுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்ததால் அவர் இப்போது சிறையில் உள்ளார். சிதம்பரத்துக்கு எதிராகவும் ஆதாரம் உள்ளது. அப்படியிருக்க ராசா மட்டும் உள்ளே இருக்கிறார். சிதம்பரம் வெளியே இருக்கிறார். சிதம்பரமும் திகார் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என பிரசாத் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுப்பதை மத்திய அரசு தடுத்து வருகிறது என அவர் கூறினார். ஸ்பெக்ட்ரம் விலையைத் தீர்மானிப்பது ஏன் அமைச்சர்கள் குழுவிடம் இருந்து விலக்கிவைக்கப்பட்டது என்பதற்கு பிரதமர் பதிலளிப்பது மிகவும் அவசியம் என பிரசாத் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மேலும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் பிரதமரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://tamil-video.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • [Continue reading...]

    இலங்கையை அடியோட�� கைகழுவியது இந்தியா

    - 0 comments


    இறுதிப் போரின்போதும் அதன் பின்னரும் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கி வந்த இந்தியா இப்போது அந்தப் போக்கைக் கைவிட்டுள்ளது. இலங்கையின் எந்தவொரு உள்விவகாரத்திலும் இனி இந்தியா தலையிடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் என்று அறிய வந்தது.

    ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையில் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை டாக்டர் மன்மோகன் சிங் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரியப்படுத்தினார் என அறியமுடிகிறது.

    இலங்கைக்கு எதிராகச் சர்வதேச சமூகம் தொடர்ந்து மேற்கொண்டுவரும் அழுத்தங்கள் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி மஹிந்த இந்தச் சந்திப்பில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதனை நன்கு கவனமாகச் செவிமடுத்த இந்தியப் பிரதமர் இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கும் அழுத்தங்கள் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார். சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாட்டை இலங்கையே இனிமேல் வெளிப்படுத்தவேண்டுமெனவும், இலங்கை விவகாரத்தில் தலையிடாதிருக்க இந்தியா உத்தேசித்திருப்பதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

    இலங்கை விவகாரத்தினால் காங்கிரஸ் அரசுக்கு தமிழ்நாட்டிலிருந்தும், சர்வதேசத்திலிருந்தும் அழுத்தங்கள் வருவதை விலாவாரியாக ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர், இனிமேல் இலங்கைப் பிரச்சினையை இலங்கை அரசே பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்று மேலும் தெரியவருகிறது.

    சர்வதேச நெருக்கடி மிகுந்த காலத்தில் இந்தியா இவ்வாறு இலங்கையைக் கைவிட்டிருப்பது, கொழும்புக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கனடா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகையில் இந்தியா இலங்கையைக் கைவிட்டிருப்பது மஹிந்த அரசுக்கு விழுந்த பேரிடி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    http://tamil-video.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • [Continue reading...]

    உள்ளாட்சி அமைப்��ுகளை நிர்வகிக்க���ம் அதிகாரத்தை ம��்களே கையில் எடுத்துக்கொள்ள வேண்��ும்: சீமான்

    - 0 comments


    நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வாச்சாத்தி தீர்ப்பின் முக்கியத்துவம், அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டதில் மட்டுமே இல்லை.

    மாறாக, பழங்குடியினர் போன்று சமூகத்தின் அடித்தட்டில் வாழும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் காலம் காலமாக அரசு எந்திரங்களின் வன்முறை வெறியாட்டத்திற்கும், பாலியல் வன்முறைக்கும் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் அவர்களில் எவரும் சட்டத்தின் உதவியை நாடியதில்லை. காரணம், சட்டத்தின் காவலர்களே இப்படிப்பட்ட அராஜகத்தில் ஈடுபட்டுவருவதுதான்.

    இப்படிப்பட்ட சூழலை மாற்றியமைக்க வேண்டியது உடனடிக் கடமையாகும்.

    இதற்கு மேலாவது பழங்குடியினர் உள்ளிட்ட சமூகத்தின் நலிவடைந்த மக்களை அநீதிக்கு உட்படுத்தும் அரசு எந்திர அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகல் அவசியமானதாகும்.

    பலமான உள்ளாட்சி தேவை. இதற்கான நிரந்தரத்தீர்வு, உள்ளாட்சி அமைப்புகளை கட்சி அரசியல் பிடியில் இருந்து மீட்பதுதான்.

    உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை மக்களே தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நிர்வகிக்கும்போதுதான் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படும்.

    அதே நேரத்தில் தங்களையும்,தங்கள் வாழ்விற்கு ஆதாரமாகவுள்ள நிலம், நீர் ஆகியவற்றை பாதுகாத்து தக்க வைக்க முடியும். எனவே, உண்மையான மக்களாட்சி மலரவேண்டுமெனில், அது முதலில் உருவாக வேண்டிய இடம் உள்ளாட்சிதான்.

    இந்திய அரசமைப்பும், பஞ்சாயத்து ராஜ் சட்டமும் அளித்துள்ள இப்படிப்பட்ட ஜனநாயக உரிமைகளை உணர்ந்து மக்கள் கடமையாற்ற வேண்டும். அப்போதுதான் சமூக பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்துகொள்ள முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

    http://tamil-video.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • [Continue reading...]

    தர்மபுரியில் நி��ைவுகூரப்பட்ட தி���ாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு! (படங்கள்)

    - 0 comments


    தமிழ்நாடு தர்மபுரியில் தமிழ் இளையோர் சமூகத்தின் ஏற்பாட்டில் தியாகதீபம் திலீபனின் 24 ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியோடு நினைவுகூரப்பட்டது.

    நேற்று முந்தினம் 26-09-2011 திங்கட்கிழமை அன்று தருமபுரி நகரில் அமைந்த்துள்ள இராசகோபால் பூங்கா அருகாமையில் மாலை 5:30 மணிமுதல் நடைபெற்ற இந்த நினைவெழுச்சி நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கட்சி, இன மற்றும் மத பேதமின்றி தமிழர் என்ற ஒருமித்த உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர்.

    நிகழ்வின் ஆரம்பத்தில் தீயில் தம்மை உருக்கி தியாக வேழ்வியாகிய தியாகிகளுக்காகவும், தமிழீழத்தில் விடுதலைப் போராட்டத்தில் வீரகாவியமாகிய மாவீரர்களுக்காகவும், அனியாயமாக படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்க்ஆகவும், சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இந்த நினைவெழுச்சி நிகழ்வில் தமிழ்ஹ் இளையோர் சமூக உறுப்பினர்கள் மட்டும் 320 பேர் கலந்துகொண்ட்இருந்தமையை காணமுடிந்தது.

    அமைதி என்ற போர்வையில் இலங்கத் தீவினுள் பிரவேசித்த இந்திய அமைதிப்படையினர் ஈழத்தமிழர்களையும் ஈழவிடுதலைக்காகப் போராடிய போராளிகளையும் கொடூரமாகக்கொன்றும், எம சக உறவுகளான தமிழீழப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும் படுகொலைகளை அரங்கேற்றிய வேளை கொதித்தெழுந்த தமிழினத்தின் மத்தியில் அகிம்சை ஆயுதத்தை கையில் ஏந்தி காத்தி தேசத்திடம் நீதி கேட்டு 15 / 09 / 1987 அன்று தனது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபந் தொடர்பான விபரங்கள் அடங்கிய 50,000 துண்டுப்பிரசுரங்கள் நிகழ்வு மண்டபத்திலும், வீதிகளிலுமாக மக்களுக்கு தமிழ் இளையோர் சமூகத்தினரால் வழங்கப்பட்டது.

    அண்மையிலேயே தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இத் தமிழ் இளையோர் சமூகம் எனும் அமைப்பு துரித கெதியில் வலுப்பெற்ற ஓர் இளையோர் அமைப்பாக வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    தமிழ் இளையோர் அமைப்பினரால் அண்மையில் முதலாவது நிகழ்வாக வீரத் தமிழ்மகள் தோழர் செங்கொடிக்கஅன நினைவுவணக்க நிகழ்வு நடாத்தப்பட்டிருந்ததும், தற்போது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் தம்திசையை திருப்பி அதே உணர்வோடு தியாக தீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வை மிகவும் எழுச்சியாகவும் சிறப்பாகவும் நடாத்தியுள்ள தமிழ்நாடு இளையோர் சமூகத்தினரின் திடீர் வளர்ச்சி கண்டு "கியூ" பிரிவினரும் இளையோரை துருவித் துருவி விசாரணை மேற்கொண்டும் இருந்தனர் என்பது குறிப்பிடத்த்அக்கது.







    http://tamil-video.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • [Continue reading...]

    தூக்கமோ தூக்கோ எ���் உயிர் தமிழகத்��ிலே தான் போகும்: ���லைஞர் பேச்சு

    - 0 comments


    தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் விழா, முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் 30.09.2011 அன்று மாலை நடைபெற்றது.

    பெரியார்' விருது திராவிட இயக்க சிந்தனையாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கும், அண்ணா' விருது தி.மு.க. சட்டத் துறைச் செயலாளரும், சிறந்த தொழிற்சங்கத் தலைவருமான வக்கீல் ஆர்.எஸ்.பாரதிக்கும், பாவேந்தர்' விருது நெல்லை மாநகராட்சியின் மேயராக சிறப்பாக பணியாற்றிய திருநெல்வேலி உமாமகேஸ்வரிக்கும், கலைஞர்' விருது தி.மு.க. சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் தி.அ.முகமதுசகிக்கும் வழங்கப்பட்டது.

    விருதுடன் ரூ.1 லட்சம் பொற்கிழி, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    பிளஸ் 2 தேர்வில் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சமும், முரசொலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பாரதிதாசனார் பாடல் ஒப்பித்தல் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் முதல் இடம் பிடித்த 2 பேருக்கு தலா ரூ.15 ஆயிரமும், 2 ம் இடம் பிடித்த 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், 3 ம் இடம் பிடித்த 2 பேருக்கு தலா ரூ.5 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 4 பேருக்கு தலா ரூ.3 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    மேலும், சிறந்த, நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேருக்கு தலா ரூ.20 ஆயிரமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டு பெரியார், அண்ணா, பாவேந்தர் மற்றும் கலைஞர் விருதுகளை வழங்கினார். தி.மு.க. முதன்மைச் செயலாளர் ஆற்காடு நா.வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

    விழாவில் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

    தி.மு.க.வின் சிறப்பு வாய்ந்த இந்த முப்பெரும் விழாவில் கழகத்தின் பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் இதையும் அரசியலாக்கி விடுவார்கள். கடந்த சில வாரங்களாக நான் சொல்லியும் கேட்காமல் புயல் வேகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டார். இதனால் 2 நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகவே இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

    கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று பலரும் சொன்னார்கள். இப்போது தி.மு.க. தோற்று விட்டதா என்று எத்தனையோ பெரியவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் கேட்கிறார்கள்.

    ஏதோ தவறு செய்து விட்டோம் என்று இப்போது தாய்மார்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள் யோசிக்கிறார்கள். இதில் ஒரு மகிழ்ச்சி. மலையை தூக்கிக் கொண்டு வருவோம் என்று ஏமாற்றிய காரணத்தினால்தான் ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் மலையை உருட்டிக் கொண்டு வரவில்லை. மலையை தலையில் தூக்கி வையுங்கள் உருட்டி விடுகிறேன் என்று கூறுபவர்கள்தான் இப்போது உள்ளார்கள்.

    ஜனநாயக விதியால் ஏற்பட்ட ஆட்சியை நாம் தாங்கித்தான் கொள்ள வேண்டும். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது நடைபெற்ற தேர்தலில் ஒரு தொகுதியில்தான் நாம் வெற்றி பெற்றோம். பின்னர் படிப்படியாக வளர்ந்து ஆட்சியை பிடித்தோம். இப்போது தோற்றிருக்கிறோம். இது ஜனநாயகத்தின் விளையாட்டு.

    இன்றைய தினம் தமிழகத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரை தூக்கில் போடக்கூடாது என்று ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. 3 பேரை காப்பாற்றப்போகிறோம். அந்த உயிர்களை காப்பாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினால் போதாது. அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி, அதை கவர்னரின் கவனத்துக்கு அனுப்பி, குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்து அனுப்பினால்தான் தண்டனையை தடுக்க முடியும்.

    அந்த 3 பேரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சி காலத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு நான் கடைபிடித்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

    தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. உங்களுக்கே தெரியும். தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது எதிர்க்கட்சியினரை கைது செய்து இருப்போமா? பொய் வழக்கு போட்டு சிறையில், தனிச் சிறையில் அடைத்திருப்போமா? இப்போது சென்னையில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலும், பாளைங்கோட்டையில் கைது செய்து திருச்சி சிறையிலும் அடைத்து வேதனைப்படுத்தி, வாட்டி வதைக்கிறார்கள். என் பார்வையில் இருந்த போலீஸ்காரர்களா இவர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

    இதற்கு ஒரு விடிவு காலம் வரும். ஆனால் ஜனநாயக முறைப்படி 5 ஆண்டுக்கு ஒரு முறைதான் ஆட்சி மாறும். துரைமுருகன் கூறியது போல் நாங்கள் மைனாரிட்டி ஆட்சிதான் நடத்தினோம். அது மைனாரிட்டி மக்களுக்கான அரசு. தட்டிக் கேட்டவர்களை தோழமை கட்சிகளாக ஆக்கிக் கொண்டு 5 ஆண்டுகள் ஆட்சியை கட்டி காப்பாற்றினோம்.

    பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை பெற்றுக் கொடுத்த மக்களை, நம்பி இருந்த தோழமை கட்சிகளை விரட்டலாமா? தி.மு.க. அரசு மைனாரிட்டியாக இருந்தாலும், எல்லோரையும் அரவணைத்து 5 ஆண்டுகால பொற்கால ஆட்சியை தந்தது. அந்த பொற்கால ஆட்சி இப்போது கற்கால ஆட்சியாக மாற்றப்பட்டுள்ளது.

    ஒரு அமைச்சர் சொல்கிறார் கருணாநிதியின் உயிர் தூக்கத்தில் போக போகிறதா? அல்லது தூக்கில் போகப் போகிறதா? என்று கேட்கிறார். தூக்கமோ தூக்கோ கருணாநிதி உயிர் தமிழகத்திலே தமிழ்த்தாயின் மடியில்தான் போகும். இவர்களை போல அம்மா மடியில் போகாது.

    தேசிய கொடி ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தார். அந்த கொடியை மாத்திரம் ஏற்றலாமா? என்று பொன்முடி கேட்டார் என்பதற்காக அவருக்கு ஜாமீன் கூட கொடுக்காத தண்டனை வழக்கு . கருணாநிதியின் உயிர் தூக்கத்திலோ, தூக்கிலோ போகும் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். உயிரைப் பற்றி என்றைக்கும் நான் கவலைப்படுபவன் அல்ல. உயிரை பற்றி கவலைப்பட்டிருந்தால் கல்லக்குடி போராட்டத்திலே அதை போக்கியிருப்பேன். உயிரைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் பாளையங்கோட்டை சிறைச்சாலையிலே பாம்புகளும், தேள்களும் நிரம்பிய அந்த சிறையிலே உயிரைப் போக்கியிருப்பேன்.

    என் உயிர் தூக்கத்தில் போகிற உயிர் அல்ல. துக்கத்திலே போகிற உயிரும் அல்ல. இந்த உயிர் எப்போது போகும் என்றால் தமிழன் தமிழனாக, தன்மானத்தோடு வாழ்கிறான் என்ற நிலை உருவான பின்பு தான் இந்த உயிர் போகும். எனது உயிரை பணயமாக வைத்து நடைபெறுகின்ற போராட்டத்தில், இனப்போராட்டத்தில் நாம் நிச்சயமாக வெல்வோம். இவ்வாறு கலைஞர் பேசினார்.

    http://tamil-video.blogspot.com



  • http://tamil-video.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger