மாறாக, பழங்குடியினர் போன்று சமூகத்தின் அடித்தட்டில் வாழும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் காலம் காலமாக அரசு எந்திரங்களின் வன்முறை வெறியாட்டத்திற்கும், பாலியல் வன்முறைக்கும் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்களில் எவரும் சட்டத்தின் உதவியை நாடியதில்லை. காரணம், சட்டத்தின் காவலர்களே இப்படிப்பட்ட அராஜகத்தில் ஈடுபட்டுவருவதுதான்.
இப்படிப்பட்ட சூழலை மாற்றியமைக்க வேண்டியது உடனடிக் கடமையாகும்.
இதற்கு மேலாவது பழங்குடியினர் உள்ளிட்ட சமூகத்தின் நலிவடைந்த மக்களை அநீதிக்கு உட்படுத்தும் அரசு எந்திர அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகல் அவசியமானதாகும்.
பலமான உள்ளாட்சி தேவை. இதற்கான நிரந்தரத்தீர்வு, உள்ளாட்சி அமைப்புகளை கட்சி அரசியல் பிடியில் இருந்து மீட்பதுதான்.
உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை மக்களே தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நிர்வகிக்கும்போதுதான் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படும்.
அதே நேரத்தில் தங்களையும்,தங்கள் வாழ்விற்கு ஆதாரமாகவுள்ள நிலம், நீர் ஆகியவற்றை பாதுகாத்து தக்க வைக்க முடியும். எனவே, உண்மையான மக்களாட்சி மலரவேண்டுமெனில், அது முதலில் உருவாக வேண்டிய இடம் உள்ளாட்சிதான்.
இந்திய அரசமைப்பும், பஞ்சாயத்து ராஜ் சட்டமும் அளித்துள்ள இப்படிப்பட்ட ஜனநாயக உரிமைகளை உணர்ந்து மக்கள் கடமையாற்ற வேண்டும். அப்போதுதான் சமூக பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்துகொள்ள முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.
http://tamil-video.blogspot.com
http://tamil-video.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?