Monday, 5 March 2012

அல்போன்சா வீட்டில் காதலர் தற்கொலை

- 0 comments
 
 
 
பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. இவர் விருகம்பாக்கம், ஆற்காடு ரோட்டில் உள்ள சியாமளா கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இதேவீட்டில் கல்பாக்கம் புதுப்பட்டனத்aதை சேர்ந்த வினோத்குமார் என்ற வாலிபரும் தங்கி இருந்தார். இவர் சினிமாவில் டான்சராக பணியாற்றினார்.
 
ஒரு படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அல்போன்சாவும், வினோத்குமாரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். எனவே இருவரும ஒரே வீட்டில் குடியிருந்தனர். நேற்று இரவு சாப்பிட்டு முடித்ததும் வினோத்குமார் படுக்கை அறைக்கு சென்றார். சில நிமிடங்கள் கழித்து அந்த அறைக்குள் அல்போன்சா சென்றபோது வினோத்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.
 
உடனடியாக பக்கத்து வீட்டில் இருந்த டாக்டரை அழைத்தனர். அவர் பரிசோதித்தபோது வினோத்குமார் இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து குடியிருப்பின் காவலாளி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதனால் நள்ளிரவில் விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அல்போன்சாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அல்போன்சா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், கணவரை பிரிந்து வாழ்கிறார் என்றும் கூறுப்படுகிறது.
 
அல்போன்சாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வினோத்குமார் அடிக்கடி வற்புறுத்தி வந்தாராம். ஆனால் திருமணத்துக்கு அல்போன்சா சம்மதிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.



[Continue reading...]

சட்டத்தை ஏய்க்கும் சட்டமன்ற உறுப்பினர்கள்..!

- 0 comments
 
 
இந்தியாவில் உள்ள சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்போது அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரிப் பிடித்தம் செய்யப்படவில்லை என்றும் எனவே அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் கோரி ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வருமான வர வரம்புக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு – சம்பளம் கொடுக்கப்படும் முன் – அவர்கள் செலுத்த வேண்டிய வரிப் பணத்தை பிடித்தம் செய்த பிறகே சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை அரசுத் துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.இது போன்ற சட்டம் நமது மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த வித கட்டுபாடும் இல்லை.அவர்கள் வருமானவரி கட்டுவதில்லை.அவர்கள் கிட்டதட்ட 50 ஆயிரம் ஊதியமாக பெற்றாலும் அவர்கள் சம்மளத்தில் வருமான வரி கழிக்கப்படுவதில்லை.அவர்கள் அரசு ஊழியர் ஊதிய ஒதுக்கீடு நிதியில் இருந்துதான் ஊதியம் பெறுகிறார்கள்.ஆனால் அரசு ஊழியர்கள் பெப்ரவரி மாதம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால்தான் அம்மாத சம்பளம் வழங்கப்படும்.இன்று வருமான வரை,சேவை வரி, தொழில் வரி ஒழுங்காக செலுத்துபவர்கள் அரசு ஊழியர்கள் மட்டும்தான்.[வேறு வழி ?]
இப்போது மக்களுக்கு சேவை செய்வதாக பதவிக்கு வந்து அதன் பின் ஆயிரக்கணக்கில் தங்களுக்கு ஊதியம் ஏற்றத்தை மட்டும் கட்சி வேறுபாடின்றி சட்டசபையில் குரல் கொடுத்து பெற்றுக்கொள்ளும் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருமான வரி கட்டுவது தொடர்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச்சேர்ந்த சி.செல்வராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தேர்தலில் போட்டியிலும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் அளித்த வருமான வரி விபரங்கள் தொடர்பான செய்திகளை ஆதாரமாக முன்வைத்து இந்த வழக்கை அவர் தொடர்நதுள்ளார்.
தமிழக சட்டசபை உறுப்பினர்களில் எட்டு பேர் வருமான வரித்துறை அளிக்கும் நிரந்தர அடையாள எண் அட்டை தம்மிடம் இல்லை என்று தெரிவித்துள்ளதாகவும், இந்த அட்டை இருக்கிறது, ஆனால் வரி செலுத்தும் அளவுக்கு தமக்கு வருமானம் இல்லை என்று ஆறு பேர் தெரிவித்துள்ளதாகவும் இந்த வழக்கைத் தொடுத்துள்ள வெளிப்படை மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் தலைவர் சி செல்வராஜ் கூறினார்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் பல்வேறு படிகள் என மாதம் 50 ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் ஊதியம் பெற்றுவருவதாகத் தெரிவித்த செல்வராஜ்,ஆனாலும் 47 சட்டமன்றஉறுப்பினர்கள் தமது வருமானத்தை குறைத்துக் காட்டி அரசி ஏமாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர்கள் மட்டுமல்ல சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வருமானத்தை குறைத்துக் காட்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.
ஜார்ஜ் கோட்டை
ஒரு அரசிடம் இருந்து பெறும் ஊதியத்தையே அதே அரசுக்கு குறைத்துக்காட்டி வருமானவரி துறையையும்,அரசையுமே ஏமாற்றும் இவர்களுக்கு தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவது பெரிய காரியமா?
இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் வருமானவரித்துறையும்,அரசும் நடுத்தர மக்கள்.அரசு ஊழியர்களிடம் மட்டும் வரியை கசக்கிப்பிழிந்து பெறுவது சரியா?
தமக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்பது வருமான வரி வரம்புக்கு கீழாகவே இருப்பதாகவும், படியாக கொடுக்கப்படும் பணம் குறிப்பிட்ட தேவைகளுக்காக செலவிடப்படுவதால் தாம் வரிகட்டத் தேவையில்லை என்ற புரிதலில் இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பாலபாரதி கூறியுள்ளார்.இவரைப்போன்ற கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நிலமையே வேறு.இவர்கள் பெறும் ஊதியத்தை அப்படியே கட்சியிடம் ஒப்படைத்து விட வேண்டும்.கட்சியில் இருந்து இவர்களைப்போன்ற முழு நேர ஊழியர்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தான் இவர்கள் பெற்று வாழ வேண்டும்.அது காலத்தின்[கட்சியின்]கட்டாயம்.அதற்காக வருமானவரியை கட்சியில் இருந்து வாங்கிக்கொடுக்க வேண்டும் இவரைப்போன்ற கம்யூனிஸ்ட் ச.ம.உ,க்கள்.
ஆனால் மற்றைய கட்சிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயணக்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வாகனம்,உதவியாளர். போன்ற அனைத்துக்கும் படிகள்அளிக்கப்படுகிறதுமுன்பு ஐந்தாண்டுகள் முழுமையாக பத்வி வகித்தால்தான் ஓய்வூதியம் உண்டு.ஆனால் தற்போது பதவி ஏற்று சில நாட்களே ஆனாலும் அவர்களுக்கும் ஓய்வூதியம் உண்டு.மேலும் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியமும் உண்டு.அரசு ஊழியர்கள் போல் அவர்கள் இறந்தால் கட்சி மூலம் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை போல் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.ஆக வாக்களித்தவன்தான் வக்கற்றவனாகிறான்.
சட்டத்தை ஏய்க்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நமது சட்டம் என்ன சொல்லப்போகிறதோ?
___________________________________________________________________________________________________________
 
உணவுக்கான போராட்டம்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மவுனம் ஏன் அம்மா?
________________________
கேட்கிறது தினமலர்.
____________________________________

தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு, "கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது' என, தனது அறிக்கையை அளித்து ஒரு வாரமாகியும், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்காமல், தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. நேற்று, அவசர அவசரமாக நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும், கூடங்குளம் விவகாரம் பற்றி விவாதிக்கப்படவில்லை.மின் வெட்டு கடுமையாக நீடிக்கும் நிலையில், கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மின் வெட்டின் அவதி இன்னும் அதிகமாகும். தேர்தலில் தி.மு.க., தோல்வியடைவதற்கு, மின் வெட்டு பிரச்னையும், முக்கிய காரணமாக இருந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, "தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போக்குவோம்' என்ற வாக்குறுதியை, அ.தி.மு.க., அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மின் பற்றாக்குறையை போக்க, உடனடி தீர்வாக கூடங்குளம் அணு மின் நிலையம் தான் இருந்தது.ஆனால், அந்த அணு மின் நிலையத்தை மூட வேண்டுமென சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், கடந்த ஜூலை மாதம் முதல், கூடங்குளம் மின் நிலையப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.கூடங்குளம் பகுதி மக்களின் அச்ச உணர்வு போக்கப்படும் வரை, அணு மின் நிலையப் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என, தமிழக அமைச்சரவை, தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசும் பணிகளை நிறுத்தியது; அதன் பின்பும் போராட்டங்கள் தொடர்ந்தன; அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்தமிழக அரசு எடுக்கவில்லை. கடந்த ஜனவரி மாத இறுதியில், மின் பற்றாக்குறை அதிகமாகி, மின் வெட்டும் அதிகமானதால், மக்கள் மத்தியில், அ.தி.மு.க., அரசு மீது கடும் அதிருப்தி ஏற்படத் துவங்கியது. தற்போதைக்கு, மின் பற்றாக்குறையை சமாளிக்க, வேறு உடனடித் திட்டங்கள் இல்லாததால், கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு குறித்து ஆராய, நிபுணர் குழுவை தமிழக அரசே அமைத்தது.பிப்ரவரி மாத துவக்கத்தில் அமைக்கப்பட்ட இக்குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை நேரில் ஆய்வு செய்து, தங்களது அறிக்கையை முதல்வரிடம் கடந்த வாரம் அளித்தது. அந்த அறிக்கையில், அணு மின் நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படியிருந்தும், அந்த அறிக்கை மீது முடிவு எடுக்காமல், போராட்டக்காரர்களை அழைத்து முதல்வர் பேசினார். அப்போது, அவர்கள் தரப்பில் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டது. அப்போதும் கூட, போராட்டக்காரர்களிடம், தமிழக அரசின் நிலை குறித்து எவ்வித கருத்தையும் முதல்வர் தெரிவிக்கவில்லை என, அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம், நேற்று அவசரமாக கூடியது. நிபுணர் குழு அறிக்கை அளித்து ஒரு வாரம் ஆவதால், அதுபற்றி இக்கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இக்கூட்டத்துக்காக, சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர்கள் அனைவரும், அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.-
மதுரையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்து, கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னை பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை என, தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்பட்டது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடப்பதால், அதுவரை இவ்விஷயத்தில் மவுனம் காக்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் தொடர்பாக துறைவாரியாக மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழக அரசு தயாரித்து வரும், "தொலைநோக்குத் திட்டம் - 2025' தொடர்பாக, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கூடங்குளம் பகுதியை சுற்றியுள்ள சிலரும், போராட்டக்காரர்கள் சிலரும் என, தமிழகம் முழுவதும் சில ஆயிரம் பேர் தான், கூடங்குளம் திட்டத்துக்கு எதிராக உள்ளனர். சங்கரன்கோவில் தொகுதி மக்கள் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாகத் தான் உள்ளனர்.அப்படி இருந்தும், தமிழக அரசு இப்பிரச்னையில் எந்த முடிவும் எடுக்காமல், மூச்சு விடாமல்மவுனம் காப்பது, மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் துறை, விவசாயத் துறை, பொதுமக்கள் என, அனைத்துத் தரப்பினரும், மின் வெட்டு பிரச்னையால் சிக்கித் தவிக்கும் நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, அரசு தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. தமிழக அரசின் இந்த மவுனத்தால், மின் வெட்டு நிலைமை இன்னும் மோசமாகும். ஏற்கனவே, பல சிறுதொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்குச் சென்று, கடன் வாங்கி தொழில் செய்வோரும், அவர்களிடம் பணிபுரிந்தோரும் நடுத்தெருவுக்கு வந்து, செய்வதறியாது, கடும் வெறுப்பிலும், கோபத்திலும், ஆத்திரத்திலும் உள்ளனர்; மின் வெட்டு மோசமாகும் சூழ்நிலையில், மக்களின் அவதியும், கோபமும் மேலும் அதிகமாகும்.

தினமலரே இப்படி எழுத ஆரம்பித்து விட்டது.அதனாலும் ஜெனரேட்டரில் பத்திரிகை வேலை பார்த்து கட்டுப்படியாக வில்லை .போல் தெரிகிறது.அம்மா
மீதும் அவரின் ஆட்சியீன் மீதும் குற்றம் இல்லை.எனக்கூறி வரும் தினமலரையும் மின் வெட்டு இப்படி பேச வைத்து விட்டது.ஆட்சிக்கே ஆபத்து சங்கரன் கோவிலில் .ஆப்பு வைத்துவிடும் மின் வெட்டு என்ற பயம்தான் காரணமா?.
_________________________________________________________________________________

கென்யா ஆதிவாசிகள் திருவிழா.புத்தர் சிலைமுன் ஒரு ஆட்டம்.
_________________________________________________________________________________
 
 
 
 
 
 
 
[Continue reading...]

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு

- 0 comments
 

சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரத்தை போலீசாருக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெயிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது


சென்னை பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வாடகை தாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருந்து வருவதாகவும், அவர்களால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இங்கு தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளும் புகலிடம் தேடி குடியேற வாய்ப்பிருப்பதும் தகவல்களில் தெரியவந்துள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருப்போர் குறித்த விவரம் அல்லது வேறு நபருக்கு தங்குவதற்காக அனுமதி வழங்கியிருந்தால் அது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு வாடகைதாரர் புகைப்படத்துடன் கூடிய உரிய படிவம் வாயிலாக வீட்டு உரிமையாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் போலீசாரின் தண்டணைக்குள்ளாவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger