Sunday, 22 December 2013

UN India Embassy work appointed devayani special offers receiving problem

- 0 comments

UN India Embassy work appointed devayani special offers receiving problem

ஐ.நா. இந்திய தூதரகத்தில் பணி அமர்த்தப்பட்டாலும் தேவயானிக்கு சிறப்பு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்? UN India Embassy work appointed devayani special offers receiving problem

நியூயார்க், டிச.23-

ஐ.நா. இந்திய தூதரகத்தில் பணி அமர்த்தப்பட்டாலும், தேவயானிக்கு சிறப்பு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில், நியூயார்க் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டார். அவர் கைவிலங்கிடப்பட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு ஆளாக்கப்பட்டது இந்தியாவில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால் இந்தியா-அமெரிக்கா இடையே தூதரக அளவில் மோதல் உருவாகி உள்ளது.

'வியன்னா உடன்படிக்கை' யின்படி, தூதரகப்பணியில் உள்ள தேவயானிக்கு விலக்குரிமை உள்ளிட்ட சலுகைகளை தர முடியாது என அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து அவரை ஐ.நா. தூதரகத்தில் கவுன்சலராக (ஆலோசகராக) நியமித்து, இந்தியா கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் அவருக்கு விலக்குரிமை உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில், தேவயானியின் பணி நியமனம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு இந்தியா முறைப்படி கடிதம் எழுதி உள்ளது. இந்தக் கடிதத்தை இந்தியாவின் சார்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி எழுதி உள்ளார். அத்துடன், தேவயானி தொடர்பான ஆவணங்கள், பாஸ்போர்ட்டு விவரங்களையும் அவர் அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளேன். அதில் எங்கள் தூதரகக்குழுவில் ஆலோசகராக தேவயானி கோப்ரகடே நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றியும், அவருக்கு தூதரக அதிகாரிக்குரிய அனைத்து சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் எழுதி உள்ளேன். அவரது பெயர், எங்கள் தூதரகக்குழுவில் எந்த இடத்தில் இடம்பெறும் என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.

நான் அனுப்பியுள்ள ஆவணங்களை ஐ.நா. சபை, அமெரிக்காவில் வெளியுறவுத் துறையின்கீழ் இயங்கி வருகிற வெளிநாட்டு தூதரகங்களுக்கான அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும். அங்குதான் மரபுரிமைப்படி அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

ஐ.நா. துணைப்பொதுச்செயலாளர் ஜன் எலியாசனையும் நேரில் சந்தித்துப் பேசினேன். தேவயானி தொடர்பான பிரச்சினைகளை ஐ.நா. அறியும். எங்கள் தரப்பில் அனைத்து ஆவணங்களையும் அனுப்பியாகிவிட்டது. அந்த ஆவணங்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை பதில் அளிக்க வேண்டும். இனி இந்த விவகாரம் ஐ.நா.வுக்கும், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் இடையேதான் கையாளப்படும்.

தேவயானியைப் பொறுத்தமட்டில், அவர் ஆலோசகர் பதவியுடன் தூதரக அதிகாரியாக இருப்பார். அந்த வகையில் தூதரக அதிகாரிக்கான அடையாள அட்டையை அவருக்கு எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவயானி ஐ.நா.வில் பணியில் சேர்ந்த பிறகுதான் அவருக்கு விலக்குரிமை உள்ளிட்ட சிறப்புச் சலுகைகள் வந்து சேரும், தேவயானிக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டியது தொடர்பாக ஐ.நா. பங்களிப்பு ஏதும் கிடையாது, இதில் முடிவு எடுக்க வேண்டியது அமெரிக்காதான் என தகவல்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவது தொடர்பாக ஐ.நா.வுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உடன்படிக்கை உள்ளது. தேவயானிக்கு புதிய பதவி காரணமாக கூடுதல் சிறப்புச்சலுகை வந்து சேர முடியும், ஆனால் கிரிமினல் வழக்கிலிருந்து விலக்கு கிடைக்குமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

தற்போது விசா மோசடி வழக்கில் சிக்கியுள்ள நிலையில், தேவயானிக்கு சிறப்புச்சலுகைகளை அமெரிக்கா வழங்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஐ.நா.வில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டையையே அமெரிக்க வெளியுறவுத்துறை தான் வழங்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
...
UN India Embassy work appointed devayani special offers receiving problem

[Continue reading...]

இலங்கை மன்னார் பகுதியில் சவக்குழி கண்டுபிடிப்பு: நீதி விசாரணை இன்று தொடக்கம் Sri Lanka to investigate mass grave in former war zone

- 0 comments

Img இலங்கை மன்னார் பகுதியில் சவக்குழி கண்டுபிடிப்பு: நீதி விசாரணை இன்று தொடக்கம் Sri Lanka to investigate mass grave in former war zone

கொழும்பு, டிச. 22-

2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப்போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது என்று ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையமும் வரும் மார்ச் மாதம் பாதுகாப்பு சபையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

உலக நாடுகளும் இலங்கையில் நடந்துள்ள போர் குற்றம் குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று நெருக்கடிகள் கொடுத்துவருகின்றன. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் பகுதியில் தேசிய குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பாக குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது எலும்புக்கூடுகளுடன் 6 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து வடக்குப்பகுதியில் மேலும் சவக்குழிகள் இருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்தன. நேற்று மேலும் 4 பேரின் மண்டை ஓடுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.  

இதையடுத்து இங்கு யாரேனும் சட்டவிரோதமாக கொன்று புதைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து இன்று நீதி விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இலங்கையின் மத்தியிலுள்ள மடேலாவிலும் கடந்த ஆண்டு மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஜே.வி.பி. கட்சியை சேர்ந்தவர்களை இலங்கை அரசு கொன்று புதைத்தது என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
...

[Continue reading...]

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் TV channel Editor arrested on molest harassment charges in Chennai

- 0 comments

TV channel Editor arrested on molest harassment charges in Chennai பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது TV channel Editor arrested on molest harassment charges in Chennai

சென்னை, டிச.22-

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு
பாலியல் தொந்தரவு தந்ததாக அந்த ஊடகத்தின் ஆசிரியரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அதில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் அந்த பெண் ஊழியர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த கைது விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்த தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம், அந்த பெண் அளித்த பொய்யான புகாரின் அடிப்படையில் எங்கள் தொலைக்காட்சியின் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எங்கள் தொலைக்காட்சியில் செய்து வந்த வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட பின்னரே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் நம்பகத்தன்மையைப் பற்றி ஆராயாமல் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என கூறியுள்ளது.
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger