TV channel Editor arrested on molest harassment charges in Chennai பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது TV channel Editor arrested on molest harassment charges in Chennai
சென்னை, டிச.22-
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு
பாலியல் தொந்தரவு தந்ததாக அந்த ஊடகத்தின் ஆசிரியரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அதில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் அந்த பெண் ஊழியர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த கைது விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்த தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம், அந்த பெண் அளித்த பொய்யான புகாரின் அடிப்படையில் எங்கள் தொலைக்காட்சியின் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
எங்கள் தொலைக்காட்சியில் செய்து வந்த வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட பின்னரே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் நம்பகத்தன்மையைப் பற்றி ஆராயாமல் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என கூறியுள்ளது.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?