Sunday 22 December 2013

இலங்கை மன்னார் பகுதியில் சவக்குழி கண்டுபிடிப்பு: நீதி விசாரணை இன்று தொடக்கம் Sri Lanka to investigate mass grave in former war zone

Img இலங்கை மன்னார் பகுதியில் சவக்குழி கண்டுபிடிப்பு: நீதி விசாரணை இன்று தொடக்கம் Sri Lanka to investigate mass grave in former war zone

கொழும்பு, டிச. 22-

2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப்போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது என்று ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையமும் வரும் மார்ச் மாதம் பாதுகாப்பு சபையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

உலக நாடுகளும் இலங்கையில் நடந்துள்ள போர் குற்றம் குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று நெருக்கடிகள் கொடுத்துவருகின்றன. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் பகுதியில் தேசிய குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பாக குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது எலும்புக்கூடுகளுடன் 6 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து வடக்குப்பகுதியில் மேலும் சவக்குழிகள் இருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்தன. நேற்று மேலும் 4 பேரின் மண்டை ஓடுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.  

இதையடுத்து இங்கு யாரேனும் சட்டவிரோதமாக கொன்று புதைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து இன்று நீதி விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இலங்கையின் மத்தியிலுள்ள மடேலாவிலும் கடந்த ஆண்டு மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஜே.வி.பி. கட்சியை சேர்ந்தவர்களை இலங்கை அரசு கொன்று புதைத்தது என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger