Thursday, 13 February 2014

2–வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 192 ரன்னில் சுருண்டது 2nd Test New Zealand got all out for 192 in their first innings

- 0 comments


வெலிங்டன், பிப். 14–

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தது.

2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதல் டெஸ்டில் இந்தியா 40 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

இரு அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் செய்யப் படவில்லை. நியூசிலாந்து அணியில் லதம், நீசம் ஆகியோர் அறிமுகமானார்கள்.

டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இஷாந்த் சர்மா பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவரது பந்தில் தொடக்க வீரர்கள் புல்டான் (13 ரன்), ரூத்போர்டு (12 ரன்) ஆட்டமிழந்தனர். அதன்பின் லதமை (0 ரன்) இஷாந்த் சர்மா வெளியேற்றினார்.

முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து கேப்டன் மெக்குல்லம் 8 ரன்னில் முகமது சமி பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 45 ரன் இருந்தது. அதன்பின் வில்லியம்சன்– ஆண்டர்சன் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்தது.

ஆண்டர்சன் (24 ரன்), வாட்லிங் (0 ரன்) ஆகியோர் இஷாந்த் சர்மா பந்தில் வீழ்ந்தனர். அப்போது நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 86 ரன் இருந்தது. அடுத்து வில்லியம்சன்–நீசம் ஜோடி துரிதமாக ரன்களை சேர்த்தது. வில்லியம்சன் 47 ரன்னிலும், நீலும் 33 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இருவரது விக்கெட்டையும் முகமது சமி கைப்பற்றினார்.

அதன்பின் இஷாந்த் சர்மா பந்தில் டிம் சவுத்தி (32 ரன்) வெளியேற்றினார். கடைசி விக்கெட்டாக போல்ட் விக்கெட்டை முகமது சமி வீழ்ந்தார்.

நியூசிலாந்து அணி 192 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், முகமது சமி 4 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் இந்திய அணி முதல் இன்னிஸ்சை விளையாடியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவான் களம் இறங்கினர். தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.

முரளி விஜய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். டிம் சவுத்தி வீசிய பந்தை அடிக்காமல் விக்கெட் கீப்பரிடம் விட முயற்சித்த போது பந்து கையுறையில் உரசியபடி சென்று கேட்ச் ஆனது. அடுத்து ஷிகர் தவானுடன் புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.
[Continue reading...]

சல்மான் ருஷ்டிக்கு ஈரான் மரண தண்டனை விதித்த நாள் (பிப். 14 1989) iran death penalty to salman rushdie

- 0 comments

Img சல்மான் ருஷ்டிக்கு ஈரான் மரண தண்டனை விதித்த நாள் (பிப். 14 1989) iran death penalty to salman rushdie

சர் அகமத் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர். இவரின் 1981-ல் வெளிவந்த இரண்டாம் நாவல் மிட்னைட்ஸ் சில்ட்ரென் காரணமாக முதலாக புகழுக்கு வந்தார். இந்நாவல் புக்கர் பரிசு வென்றுள்ளது. இவரது நாவல்கள் இந்திய தீபகற்பம் இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள். தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.

1988-ல் இவரின் நான்காம் நாவல், த சாத்தானிக் வெர்சஸ், வெளிவந்தது. இந்நாவல் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டிக்கு எதிராக போராட்டம் செய்தனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டார். இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1966 - ஆஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த ஆஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது. * 1979 - ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இறந்தார். * 1981 - டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ர தீயில் 48 பேர் கொல்லப்பட்டனர். * 1987 - யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். * 1987 - தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி நிதர்சனம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. * 1989 - ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது. * 1989 - யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்ட ஈடாக வழங்க சம்மதித்தது.

* 1990 - பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர். * 2000 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும். * 2005 - லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார். * 2005 - பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.
...

[Continue reading...]

கோவையில் தொடர் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த நாள் (பிப்.14 1998) coimbatore continue bomb blast day

- 0 comments

Img கோவையில் தொடர் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த நாள் (பிப்.14 1998) coimbatore continue bomb blast day

1998-ம் ஆண்டு கோவையில் நடந்த இனக்கலவரம் குண்டுவெடிப்பாக மாறியது. பிப்ரவரி 14-ந்தேதி கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்குண்டு வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1804 - ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான செர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது. * 1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர். * 1879 - சிலியின் ராணுவப்படைகள் பொலீவியாவின் அன்டோபகாஸ்டா நகரைக் கைப்பற்றினர். * 1900 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன. * 1918 - சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).

* 1919 - போலந்து- சோவியத் போர் ஆரம்பமானது. * 1924 - ஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்டது. * 1927 - யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர். * 1929 - சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் காப்போன் என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது. * 1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது. * 1956 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மாஸ்கோவில் ஆரம்பமானது. * 1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
...

[Continue reading...]

சிறையிலேயே வாழ்வதற்காக குற்றங்கள் செய்யும் வினோத மனிதர் Former prisoner commits arson to go back to jail in China

- 0 comments

Img சிறையிலேயே வாழ்வதற்காக குற்றங்கள் செய்யும் வினோத மனிதர் Former prisoner commits arson to go back to jail in China

பீஜிங், பிப். 13-

சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் நபர்களுக்கு, சிறைவாசம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்காக யாரும் சிறையிலேயே பொழுதைக் கழிக்க மனதார விரும்புவதில்லை.

ஆனால், சிறையில் வழங்கும் சாப்பாடு மற்றும் பாதுகாப்பான தங்கும் இடத்துக்காக சீனாவைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் குற்றச் செயலைச் செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வாங் என்று அழைக்கப்படும் 60 வயது முதியவர்தான் இந்த வினோதமான குற்றவாளி.

திருட்டு, பொது இடங்களில் சண்டையிடுதல் போன்ற குற்றங்களுக்காக 7 முறை வாங் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு வழக்கில் ஒருமுறை 14 வருடங்கள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். ஆனால் சிறை வாசம் முடிந்தபிறகு வெளியில் இருக்க பிடிக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங்கின் பெங்காட்டி பகுதியில் பேருந்தில் சென்றபோது, டிரைவர் இருக்கைக்கு வேண்டுமென்றே தீ வைத்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாங்கிற்கு, சமீபத்தில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதுபற்றி வாங் அளித்த பேட்டியில், "எனக்கு வீடு ஏதும் கிடையாது. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் என்னசெய்வதென்றே எனக்கு தெரியவில்லை. சிறையில் நல்ல உணவும் இருக்க பாதுகாப்பான இடமும் கிடைப்பதால் நான் மீண்டும் சிறைக்கு திரும்பி வர முடிவு செய்தேன். எனவே இக்குற்றத்தை செய்தேன்" என்று தெரிவித்தார்.
...

[Continue reading...]

தே.மு.தி.க., காங்கிரசுடன் கூட்டணிக்கான சூழ்நிலை இல்லை: கருணாநிதி DMDK congress not conditions alliance Karunanidhi

- 0 comments

Img தே.மு.தி.க., காங்கிரசுடன் கூட்டணிக்கான சூழ்நிலை இல்லை: கருணாநிதி DMDK congress not conditions alliance Karunanidhi

சென்னை, பிப். 13-

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் சூழ்நிலை உள்ளது. இதற்காக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை விஜயகாந்த் சந்திக்க உள்ளார். அதேசமயம் தி.மு.க.வும் அந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இதனை தி.மு.க. மறுத்துள்ளது.

திருச்சி மாநாட்டுக்குப் புறப்படும் முன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் இதுபற்றி கூறுகையில், "தே.மு.தி.க., காங்கிரசுடன் கூட்டணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை. திருச்சி மாநாடு என்றாலே திருப்பு முனைதான். எனவே, இந்த மாநாடு தி.மு.க.விற்கு திருப்புமுனையாக அமையும்" என்றார்.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களை தாக்கியுள்ள பட்ஜெட் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

...

[Continue reading...]

சோனியா காந்தியின் முதுகில் குத்தியவர் சரத்பவார்: மத்திய மந்திரி கே.வி.தாமஸ் கடும் தாக்கு Union Minister KV Thomas condemns Saradhpawar

- 0 comments

Img சோனியா காந்தியின் முதுகில் குத்தியவர் சரத்பவார்: மத்திய மந்திரி கே.வி.தாமஸ் கடும் தாக்கு Union Minister KV Thomas condemns Saradhpawar

புதுடெல்லி, பிப்.13-

கடந்த 2009-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்த போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உணவு மற்றும் விவசாய துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். அந்த இலாகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.வி.தாமஸ் ராஜாங்க மந்திரி ஆனார். அதன்பிறகு 2011-ம் ஆண்டு கே.வி.தாமஸ் உணவு இலாகாவுக்கு தனிப்பொறுப்புடன் மந்திரி ஆனார். சரத்பவார் விவசாய இலாகாவை கவனித்து வருகிறார்.

அப்போது முதலே உணவு சட்டம், சர்க்கரை பற்றிய கொள்கைகள் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கச்சா சர்க்கரைக்கு மானியம் வழங்குவது தொடர்பாக இருவரும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததால் 3 தடவை நடந்த மந்திரிசபை கூட்டங்களில் அந்த பிரச்சினையில் முடிவு எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், உணவு மந்திரி கே.வி.தாமஸ் 110 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், முதுகில் விழுந்த குத்து என்ற பெயரில் ஓர் அத்தியாயம் இடம்பெற்று உள்ளது. 5 பக்கங்கள் கொண்ட அந்த அத்தியாயத்தில் அவர் விவசாய மந்திரி சரத்பவாரை கடுமையாக தாக்கி எழுதி இருக்கிறார்.

அந்த அத்தியாயத்தில் எழுதப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 1999-ம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்ற பிரச்சினையை கிளப்பி அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் சரத்பவார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பி.ஏ.சங்மா தான் முதன் முதலில் இந்த பிரச்சினையை கிளப்பினார். பின்னர் சங்மா இந்த பிரச்சினையை கைவிட்ட போதிலும் சரத்பவார் அதை பிடித்துக்கொண்டார்.

கட்சியில் ஒற்றுமையை ஏற்படுத்தி அதற்கு வலுவூட்டியவர் என்று சோனியா காந்தியை சரத்பவார் புகழ்ந்த போதிலும், அவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்று மேற்கொள்ளப்படும் பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியால் முறியடிக்க முடியாது என்றும் கூறினார். அந்த பிரச்சினையை பெரிதாக்கி சோனியா காந்தியின் முதுகில் குத்தியது போன்ற காரியத்தை செய்தவர் சரத்பவார்.

அவர்கள் அவ்வாறு பேசியது குறித்து சோனியா காந்தி மிகுந்த வருத்தம் அடைந்தார். பின்னர் சரத்பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்கள்.

சரத்பவார் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் அவருக்கும், சோனியா காந்திக்கும் சுமுகமான உறவு இருந்தது இல்லை. சரத்பவார் திறமையானவர் என்ற போதிலும் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்ற ராஜீவ் காந்தியின் கருத்தை மனதில் கொண்டு அவரிடம் இருந்து சோனியா காந்தி சற்று விலகியே இருந்தார்.

காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் 2-வது நிலையில் இருந்த அர்ஜூன் சிங் வகித்த இடத்தின் மீது சரத்பவார் கண் வைத்து இருந்தார். 13-வது பாராளுமன்ற தேர்தலுக்கு பின் சோனியா காந்தி பிரதமர் ஆகிவிட்டால், பிரதமராகும் தனது கனவு ஒருபோதும் பலிக்காது என்ற எண்ணம் சரத்பவாருக்கு இருந்தது.

சோனியா காந்திக்கு எதிராக பேசியவர்களில் சிலர் பின்னர் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு காங்கிரசுக்கு கடிதம் எழுதிய போது, சோனியா காந்தி அதை பொருட்படுத்தவில்லை. அந்த கடிதங்களுக்கு அர்ஜூன் சிங்தான் பதில் எழுதினார்.

இவ்வாறு அந்த அத்தியாயத்தில் எழுதப்பட்டு உள்ளது.

இந்த புத்தகம் முதலில் கடந்த 2006-ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியானது. அதன்பிறகு கூடுதலாக சில அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு அதன் ஆங்கில பதிப்பு வெளியாகி உள்ளது.
...

[Continue reading...]

ஒட்டு மொத்த தமிழ் பெண்களுக்காக பா.ம.க. குரல் கொடுக்கிறது: ராமதாஸ் பேச்சு PMK for whole of Tamil women Speaks in Ramadoss speech

- 0 comments

ஒட்டு மொத்த தமிழ் பெண்களுக்காக பா.ம.க. குரல் கொடுக்கிறது: ராமதாஸ் பேச்சு PMK for whole of Tamil women Speaks in Ramadoss speech

நெய்வேலி, பிப்.12–

நெய்வேலியை அடுத்த வடக்குத்து கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் எழுச்சி மாநாடு நடந்தது. கடலூர் வடக்கு மாவட்டச்செயலாளரும், வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவருமான ஜெகன் தலைமை தாங்கினார்.

மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில துணை பொது செயலாளர் பழ.தாமரைக் கண்ணன், திருஞானம், மாநில வன்னியர் சங்க தலைவர் குரு எம்.எல்.ஏ. மாநில துணை தலைவர் வைத்தியலிங்கம், மாவட்ட செயலாளர்கள் தர்மலிங்கம், வேங்கை, சேகர், மாநில மகளிர் அணி செயலாளர் சிலம்புச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:–

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் சாலைதோறும் சாராயக்கடைகளை திறந்து மகளிரின் வாழ்க்கையை மண்ணோடு மண்ணாக்கி வருகின்றனர். பா.ம.க. மக்கள் கட்சி வன்னியர் சமூக மக்களுக்காக மட்டும் பாடுபடவில்லை.

ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி. சாராயத்தை அறவே ஒழிக்க வேண்டுமென்றால் அது பெண்களால் மட்டுமே முடியும். உங்கள் வாக்குகளை சரியான நேரத்தில் பயன்படுத்தினால் மட்டுமே முடியும். இதன் மூலம் சமுதாய மாற்றத்தை பெண்களால் மட்டுமே கொண்டு வர முடியும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளுக்காக பணம் வாங்காமல், வன்னியர் இன மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டு வரும் டாக்டர் கோவிந்தசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.

பாராளுமன்றத்தில் நமது உரிமைகளை பெற கடலூர் தொகுதி மக்களாகிய நீங்கள் கோவிந்தசாமியை வெற்றியடைய செய்ய வேண்டும். ஓட்டுகளை விலைக்கு விற்பது பெற்ற குழந்தையை விற்பதற்கு சமம். நல்ல படிப்பு, தரமான விதை–உரம், பூச்சி மருந்து, ஏழைகளுக்கு தரமான மருத்துவம். இதுவே பா.ம.க.வின் அரசியல் கொள்கை. படைப்பாற்றல் கொண்ட பெண்களால் மட்டுமே இது முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சிவகாமி, சுசிலா, நெய்வேலி நகர வன்னியர் சங்க தலைவர் ஜோதிலிங்கம் உள்பட சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். முடிவில் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger