Thursday, 13 February 2014

2–வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 192 ரன்னில் சுருண்டது 2nd Test New Zealand got all out for 192 in their first innings



வெலிங்டன், பிப். 14–

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தது.

2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதல் டெஸ்டில் இந்தியா 40 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

இரு அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் செய்யப் படவில்லை. நியூசிலாந்து அணியில் லதம், நீசம் ஆகியோர் அறிமுகமானார்கள்.

டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இஷாந்த் சர்மா பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவரது பந்தில் தொடக்க வீரர்கள் புல்டான் (13 ரன்), ரூத்போர்டு (12 ரன்) ஆட்டமிழந்தனர். அதன்பின் லதமை (0 ரன்) இஷாந்த் சர்மா வெளியேற்றினார்.

முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து கேப்டன் மெக்குல்லம் 8 ரன்னில் முகமது சமி பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 45 ரன் இருந்தது. அதன்பின் வில்லியம்சன்– ஆண்டர்சன் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்தது.

ஆண்டர்சன் (24 ரன்), வாட்லிங் (0 ரன்) ஆகியோர் இஷாந்த் சர்மா பந்தில் வீழ்ந்தனர். அப்போது நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 86 ரன் இருந்தது. அடுத்து வில்லியம்சன்–நீசம் ஜோடி துரிதமாக ரன்களை சேர்த்தது. வில்லியம்சன் 47 ரன்னிலும், நீலும் 33 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இருவரது விக்கெட்டையும் முகமது சமி கைப்பற்றினார்.

அதன்பின் இஷாந்த் சர்மா பந்தில் டிம் சவுத்தி (32 ரன்) வெளியேற்றினார். கடைசி விக்கெட்டாக போல்ட் விக்கெட்டை முகமது சமி வீழ்ந்தார்.

நியூசிலாந்து அணி 192 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், முகமது சமி 4 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் இந்திய அணி முதல் இன்னிஸ்சை விளையாடியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவான் களம் இறங்கினர். தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.

முரளி விஜய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். டிம் சவுத்தி வீசிய பந்தை அடிக்காமல் விக்கெட் கீப்பரிடம் விட முயற்சித்த போது பந்து கையுறையில் உரசியபடி சென்று கேட்ச் ஆனது. அடுத்து ஷிகர் தவானுடன் புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger