Sunday, 19 February 2012

நான் வெளியேறுகை��ில்… - இஸுரு சாமர சோமவீர

- 0 comments


நான் வெளியேறுகையில்
என்னைத் தொடர்ந்து
புன்னகைத்தபடி
வருவதில்லை நீ வாசல்வரை
முன்பு போல

கட்டிலிலே சாய்ந்து
என்னையும் தாண்டி
கதவினூடாகப் பார்த்திருக்கிறாய்
தொலைதூரத்தை

அமைதியாக
பறக்கிறது பட்டம்
மிகத் தொலைவான உயரத்தில்
நூலிருக்கும் வரை

தெரியும் உனக்கும்
என்னை விடவும் நன்றாக

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் மேலும்படிக்க


http://kathaludan.blogspot.com



  • http://girls-tamil-actress.blogspot.com

  • [Continue reading...]

    கைப்பந்து போட்ட��: தமிழக அணிகள் கா���ிறுதிக்கு தகுதி

    - 0 comments


    14-வது தேசிய இளையோர் கைப்பந்து போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழக அணி 25-7, 25-15, 25-16 என்ற நேர் செட்டில் டெல்லியை தோற்கடித்தது. மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://girls-tamil-actress.blogspot.com

  • [Continue reading...]

    ரஜினியின் புகழ்��ெற்ற கேரக்டர் பெயரை தலைப்பாக்கி�� கார்த்தி!

    - 0 comments


    சங்கர் தயாள் இயக்கத்தில் 'சகுனி' படத்தை அடுத்து சுராஜ் இயக்கும் புதிய படமொன்றில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.
     
    பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்போது பெயர் சூட்டியிருக்கிறார்கள். 'மூன்று முகம்' படத்தில் மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://girls-tamil-actress.blogspot.com

  • [Continue reading...]

    தோல்வியை கண்டு த���வளக்கூடாது: இயக��குனர் சசிக்குமா���்

    - 0 comments


    கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்லூரியின் ஆண்டு விழா (பிப்.9) நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேசியதாவது:
     
    நான் இந்த விழாவில் அதிகம் பேசப்போவதில்லை. அதற்கு பதில் செயல்பாட்டில் இறங்க போகிறேன். மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://girls-tamil-actress.blogspot.com

  • [Continue reading...]

    பயணிகள் முன்னில��யில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை

    - 0 comments


    ஓவர்டேக் செய்வதில் ஏற்பட்ட மோதலில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்டார். நூற்றுக்கணக்கான பயணிகள் முன்னிலையில் இந்த கொடூர சம்பவம் திருச்சியில் இன்று (சனிக்கிழமை) நடந்தது.

    திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவெறும்பூர் மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://girls-tamil-actress.blogspot.com

  • [Continue reading...]

    தொடர்ந்து படம் த���ாரிக்க சித்தார்த் முடிவு

    - 0 comments


    காதலில் சொதப்புவது எப்படி?' மூலம் இணை தயாரிப்பாளரான சித்தார்த், தொடர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

    இதுகுறித்து சித்தார்த் கூறும்போது, "இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். 'காதலில் சொதப்புவது எப்படி?'க்கு மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://girls-tamil-actress.blogspot.com

  • [Continue reading...]

    5 கோடி ஆண்டுகளில் இந்தியாவும் ஆஸ்���ிரேலியாவும் இணைந்து புதிய கண்டம��� உருவாகும்

    - 0 comments


    உலகில் 7 கண்டங்கள் உள்ளன. அவை கடல்களால் சூழப்பட்டுள்ளன. அவை நீர் மற்றும் காற்று போக்கால் இழுத்து ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை உருவாக உள்ளது. அதன் மூலம் 'அமாசியா' என்ற ஒரு மிகப்பெரிய மேலும்படிக்க


    http://kathaludan.blogspot.com



  • http://girls-tamil-actress.blogspot.com

  • [Continue reading...]

    நடராஜன் கைது செய்யப்பட்டது ஏன்?

    - 0 comments
     
     
     
    நில அபகரிப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக நடராஜன் கைது செய்யப்பட்டார் என்று தஞ்சாவூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
     
    நேற்று இரவு தனது பெசன்ட் நகர் வீட்டில் வைத்து தஞ்சாவூர் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் நடராஜன். அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தஞ்சாவூர் போலீஸார் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
     
    அதில் கூறப்பட்டுள்ளதாவது:
     
    தஞ்சை அருகே விளார் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தஞ்சாவூர் மாவட்டம் விளார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட விளார் கிராமத்தில் உள்ள தனது தகப்பனார் செங்கமலத்தின் பெயரில் இருந்த 20 ஏக்கர் புஞ்சை நிலத்தில் சுமார் 15 ஆயிரம் சதுரஅடி இடத்தை சட்ட விரோதமாக எம்.நடராஜன், சிலருடன் சேர்ந்து அதில் இருந்த மரங்கள் மற்றும் வேலிகளை சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்.
     
    இதுகுறித்து கேட்டபோது தன்னை அச்சுறுத்தி மிரட்டினார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசாரால் எம்.நடராஜன் சென்னையில் இருந்தபோது சென்னை மாநகர காவல்துறையினர் உதவியுடன் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    [Continue reading...]

    பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது இன்பத்துக்காக மட்டுமல்ல...!

    - 0 comments
     


    பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல... அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.

    செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.

    அவற்றில் சில...

    ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம்.

    ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.

    84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம்.

    வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு.

    ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

    தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்... அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு... செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.

    அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு!
    [Continue reading...]

    சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்தவர் கைது

    - 0 comments
     

    சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று மாலை வேளையில் சிங்கப்பூரிலிருந்து பணயம் செய்த இந்தியர் ஒருவரே இவ்வாறு தங்கத்தை எடுத்து வந்துள்ளார்.

    சட்டவிரோதமாக தங்கத்தை எடுத்து வந்த இந்தியர் கட்டுநாயக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    [Continue reading...]

    கூடங்குளம் அணு உலை மீண்டும் முற்றுகை !

    - 0 comments
     
     
    கூடங்குளம் அணு உலை கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டு வைக்கப் பட்டுள்ளது .இந்நிலையில் தமிழக அரசு அமைத்துள்ள நால்வர் நிபுணர் குழு அணு உலையைப் பார்வையிடுவதற்காக கூடங்குளம் வந்தது .
     
    அதே வேளையில் நிபுணர் குழு அணு மின் நிலையத்திற்குள் செல்வதற்கு முன்னதாக அணு மின் நிலைய அதிகாரிகள் நான்கு வாகனங்களில் அணு மின் நிலையத்திற்குள் சென்றனர் .
     
    இதை அணு மின் நிலையத்திற்கு எதிரில் அமைக்கப் பட்டிருக்கும் அணு உலை எதிப்பு அலுவலகத்திலுள்ள நபர்கள் பார்த்தனர் .அவர்கள் இதை உடனடியாக ஊர் மக்களுக்கு தெரியப் படுத்தினர் .
     
    உடனடியாக ஆலயங்களில் மணியடிக்கப் பட்டு மக்கள் திரண்டு அணு உலை முன்பாக சென்று முற்றுகையிட்டனர் .தமிழக நிபுணர் குழுவை மட்டுமே அணு உலைக்குள் அனுமதிப்போம் என்றும் ,பிரச்சினை முடியும் வரை அணு மின் நிலைய ஊழியர்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்பது மக்களின் கருத்து .
     
    அதன் பின்னர் நிபுணர் குழுவினர் அணு மின் நிலையத்திற்குள் சென்றனர் .அணு மின் நிலைய ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(18 -2 -2012 ) மதியத்திலிருந்து இரவு 9 மணி வரை முற்றுகைப் போராட்டம் நடந்தது.
     
     
     
     
    அணு மின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
    [Continue reading...]

    சென்னையில் விபச்சாரம்! பெண்கள் மீட்பு - புரோக்கர் கைது!!!

    - 0 comments
     


    பாலியல் தொழிலுக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த மும்பையை சேர்ந்த 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்
    சாண்டியாகோ தலைமையிலான தனிப்படையினர், மூலக்கடை அருகே மப்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    அப்போது, போலீஸ் என தெரியாமல் ஒரு ஆசாமி பேசினார். அவர், "மும்பை அழகியுடன் உல்லாசமாக இருக்க ரூபா 5 ஆயிரம் தந்தால் போதும்" என்றார்.
    பின்னர், அந்த ஆசாமி மப்டியில் இருந்த போலீசாரை ஆட்டோவில் ஏற்றி கொடுங்கையூரில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரிந்தது.
    இதையடுத்து, அந்த ஆசாமியை போலீ சார் கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் கமல் (24) என்பது தெரியவந்தது.
    வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மும்பையை சேர்ந்த 2 இளம் பெண்களை போலீசார் மீட்டனர். பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பப்பி என்ற பத்மபிரியா தப்பியோடி விட்டார்.
    அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    [Continue reading...]

    பாலியல் தொந்தரவு கொடுத்த டிக்கெட் பரிசோதகர்கள்!

    - 0 comments
     
     
    ரயிலில் பயணம் செய்த பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகீதா. கொல்லத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள அரசு அலுவலகத்தில் எழுத்தராக அவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கவிஞரும் கூட.

    கொல்லம்-சென்னை ரயிலில் பணிக்கு செல்வது வழக்கம். ரயிலில் பணிக்கு செல்லும் போது டிக்கெட் பரிசோதகர்கள் ஜாபர், பிரவீன் ஆகிய 2 பேரும் வழக்கமாக பயணிக்கும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கின்றனர்.

    இந்த தொல்லையை ஜெயகீதாவும் நாள்தோறும் எதிர்கொண்டிருக்கிறார். பரிசோதகர்களின் அத்துமீறல் அதிகரித்த நிலையில் ரயில்வே மேலாளர் மஜீத்திடம் அவர் புகார் கொடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய பரிசோதகர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    [Continue reading...]

    ரசிகர்களுக்கு பிறந்தநாளுக்கு நிர்வாண விருந்து வைத்த நடிகை

    - 0 comments
     



    ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக டுவிட்டர் பக்கத்தில் நிர்வாண போஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா.

    பாலிவுட் கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத்துக்கு போட்டியாக களத்தில் குதித்திருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. ஐதராபாத்தை சேர்ந்த இவர், 2005ம் ஆண்டு 'டைம் பாஸ் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

    இதையடுத்து பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது பற்றி இவர் வெளிப்படையாக அளிக்கும் பேட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஷெர்லினுக்கு பிறந்தநாள்.

    இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் படுகவர்ச்சி ஸ்டில்கள் வெளியிட்டிருக்கிறார். இதில் முழுநிர்வாண போஸும் அடக்கம். பலவித கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டிருக்கும் அவர், இதுபற்றி கூறும்போது, 'ரசிகர்கள் என்னை நடிகையாக, மாடல் அழகியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
    அவர்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது. அவர்களுக்கு எனது பிறந்த நாள் பரிசாக இந்த புகைப்படத்தை (நிர்வாண போட்டோ) அவர்களது ரசனைக்காக வெளியிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் கவர்ச்சி நடிகைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
    [Continue reading...]

    முன்னணி நடிகர்களின் தூக்கத்தை கெடுத்த புதுமுக நடிகை

    - 0 comments


    அரவான் பட நாயகி அர்ச்சனா கவியை தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலரும் விரும்புகிறார்களாம். இந்த தகவலை அர்ச்சனா கவியே வெளியிட்டுள்ளார்.

    டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரவான் படத்தில் தன்ஷிகாவுடன் இன்னொரு நாயகியாக நடித்திருப்பவர் புதுமுக நடிகை அர்ச்சனா கவி.

    அரவான் படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அர்ச்சனாவை பல முன்னணி இயக்குனர்களும், முன்னணி ஹீரோக்களும் விரும்பி தங்களது படத்தில் நடிக்கும்படி அழைத்திருக்கிறார்களாம்.



    இதுபற்றி அர்ச்சனா அளித்துள்ள பேட்டியில், அரவான் சூட்டிங் முடிந்தவுடனேயே நான் கேரளாவுக்கு வந்து விட்டேன். படத்தின் ரிலீசுக்குப் பின்புதான் சென்னைக்கு வருவேன். தமிழில் பல முன்னணி இயக்குநர்கள் பேசினார்கள். இப்போதைக்கு நடிக்க மாட்டேன். அரவான் படத்தைப் பார்த்து விட்டு பேசுங்கள் என்று சொல்லி விட்டேன்.

    இன்னொரு விஷயம் சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். விஜய், விக்ரம் போன்ற மல்டி ஸ்டார்களின் படங்களில் கூட நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, என்று கூறியிருக்கிறார்.
    [Continue reading...]

    மருமகனை புகழ்ந்து தள்ளும் ஹேமமாலினி

    - 0 comments
     


    என் மருமகன் ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கிறார், என்று நடிகை ஹேமமாலினி பெருமிதத்துடன் கூறியுள்ளார். பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஹேமமாலினி, தர்மேந்திராவின் மகள் இஷா தியோல். இவரும் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார், தமிழில் ஆயுத எழுத்து படத்தில் நடித்திருக்கும் இஷா தியோலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் பரத் தக்தனிக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த காதல் திருமணம் குறித்து ஹேமமாலினி அளித்துள்ள பேட்டியில், இஷா தியோல், பரத்தக்தனி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. திருமண தேதி இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. இஷா திருமணம் செய்து குடும்பத்தோடு செட்டில் ஆக வேண்டும் என்று விரும்பியதால் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளோம். திருமண தேதியை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். எனது மருமகன் பார்க்க ரொம்ப அழகாக, ஸ்மார்ட்டாக இருக்கிறார், என்று கூறியுள்ளார்.
    [Continue reading...]

    அமெரிக்காவிடம் அடமானம் வைக்கப்படும் இந்தியா

    - 0 comments
     
     
    பசுமைப் புரட்சி, மரபணு மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பி.டி. கத்தரிக்காய் உள்ளிட்ட இரண்டாம் பசுமைப் புரட்சி ஆகிய இரண்டுமே அமெரிக்க வல்லரசால்தான் இயக்கப்படுகின்றன. இரண்டுமே சூழல் பாதுகாப்பைவிட நஞ்சை விற்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விவசாய மாதிரியை முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. இதில் மக்களின் ஆரோக்கியத்தைப் பேணுதல், விவசாயிகளின் வாழ்வியல் நிலைமை இரண்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்தியாவில் கடுமையான பஞ்சம் நிலவிய 1965ஆம் ஆண்டு பசுமைப்புரட்சி கொண்டுவரப்பட்டது. அது இந்தியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தியாவின் மீது திணிக்கப்பட்ட ஒன்று. உலக வங்கி அதற்கு ஏற்ற வசதிகளையும் தானே உருவாக்கிக் கொண்டது. நமது விவசாய முறைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், 1965 பஞ்சத்தின்போது நமக்கு அதிகமாகத் தேவைப்பட்ட கோதுமையை கப்பலில் நமக்கு அனுப்பமுடியாது என்று அச்சுறுத்தியது.
     

    லால் பகதூர் சாஸ்திரி பசுமைப் புரட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. சிறிய அளவில் புதுவகை விதைகளையும் வேதியியல் பொருள்களையும் அறிமுகப்படுத்தலாம். ஆனால் முற்றிலுமாக இந்தியா முழுமைக்கும் இதைச் செயல்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்றார். இந்திய - பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்துக்காக தாஷ்கண்ட் சென்றிருந்தபோது மர்மமான முறையில் விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டிருந்தார். பிறகு இந்திரா காந்தியிடமும் பசுமைப்புரட்சி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டது. இதன் பின்னணியில் இருந்த இரண்டு முக்கியமான நபர்கள் சி. சுப்ரமணியமும் எம்.எஸ். சுவாமிநாதனும்.
     

    வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட விதை ரகங்கள் நிறைய வேதியியல் உரத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு அதிக மகசூலையும் குறைந்த வைக்கோலையும் கொடுக்குமென்று பசுமைப் புரட்சியின்போது ஒரு பொய் சொல்லப்பட்டது. இன்று என்ன நடந்திருக்கிறது? கடுமையான நீர்ப்பஞ்சமும் உயிர்ச்சூழல் முழுதும் விஷமூட்டப்பட்டும் இருக்கிறது. பசுமைப்புரட்சி கோலாகலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலமான பஞ்சாப் எங்கும் மக்களுக்கு கடுமையான புற்றுநோய் ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கான வகைவகையான உணவு வகைகளாகச் செழித்திருந்த நமது உணவு, இன்று வெறுமனே அரிசியாகவும் கோதுமையாகவும் குறுகிவிட்டது. நிறைய தானிய வகைகள் மறைந்துவிட்டன. இன்றைக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து போலியான தானிய வகைகள் (துவரம் பருப்பு) இறக்குமதி செய்யப்படுகிறது. சோயா எண்ணெயும் பனை எண்ணெயும் (பாம் ஆயில்) நமது பாரம்பரிய எண்ணெய் வகைகளான தேங்காய் எண்ணேய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெயின் இடத்தை பிடித்துக்கொண்டன.

    தானியங்கள் மற்றும் எண்ணெய்களின் இந்தப் போதாமைதான் பசுமைப் புரட்சி நமக்கு அளித்த மிகப் பெரிய பரிசு. இரண்டாவது பரிசு மரணத்தை உருவாக்கும் விவசாய முறை. செயற்கை உரம் சார்ந்த விதைகளையும் அதிக நீர் தேவையைக் கொண்ட செயற்கை உரத்தையுமே பசுமைப்புரட்சி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது. பசுமைப்புரட்சியின் முதல் சில வருடங்களிலேயே நிலத்தின் மரணத்தினால் விவசாயிகள் அகற்றப்பட்டனர். ஆனால் அதை யாருமே கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. 1984இல் அங்கு ஏற்பட்ட கொடூரமான வன்முறையால் "ஆபரேஷன் புளூ ஸ்டார்" இந்திரா காந்தியைக் கொன்றது.

    முதல் பசுமைப்புரட்சியில் எது எதெல்லாம் தவறானதோ அவற்றை அடிப்படையாகக் கொண்டே இரண்டாம் பசுமைப்புரட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதேமாதிரி, நீர் மிகையாகத் தேவைப்படும் பயிர்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. அதே மாதிரி ஒற்றைப் பயிர்ப் பண்பாடே பயன்படுத்தப்படுகிறது. செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எதுவுமே மாறவில்லை. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நஞ்சூட்டப்பட்ட மரபணுக்களாயின.

    இயற்கையாக கத்தரிக்காயில் உள்ள பாக்டீரியா புரோட்டின் என்பது ஒரு எண்டோ டாக்சின். அது ஒரு குறிப்பிட்ட வகை வெட்டுக்கிளியை மட்டுமே எதிர்க்கக் கூடியது. ஆனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயில் உள்ள எண்டோ டாக்சின் வெட்டுக் கிளிக் குடும்பத்தின் எந்த வகையான பூச்சியையும் தாக்கக் கூடியது. இது உயிர்ச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது. இந்த உயிர்ச்சூழலுக்குள் அடங்கும் எல்லா உயிர்களும் அதனதன் சிறப்பியல்புகளோடு வாழ நாம் அனுமதிக்க வேண்டும்.

    முதல் பசுமைப்புரட்சி வெளிப்புறத்திலிருந்து நஞ்சைப் பரப்பியது. இரண்டாம் பசுமைப்புரட்சி இன்னும் ஒரு படி ஆழமாகப் போய் செடியின் மரபணுக்களிலேயே நஞ்சை விதைக்கிறது. பி.டி கத்தரிக்காய் போல. இப்பொழுது செடியே விஷக்கொல்லி ஆலையாகிவிட்டது. முதல் பசுமைப்புரட்சியின் போது விவசாய வேதித் தொழிற்சாலைகளும் உரத் தொழிற்சாலைகளும் இருந்த நிலை மாறி, இப்பொழுது விதை ஆலைகளாகவும் உயிர்வேதி ஆலைகளாகவும் உருமாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த விதைகள் விஷக்கொல்லிகளுக்கான மாற்று என்று பொய் சொல்கிறார்கள். அதற்கான மாற்றுதான் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் என்கிறார்கள். முதலில் விஷக்கொல்லிகளை விற்றார்கள். இப்பொழுது மரபணு மாற்றப்பட்ட பி.டி. பாக்டீரியா பொதியப்பட்ட விதை விற்க முயற்சிக்கப்படுகிறது. பசுமைப்புரட்சிக்கும் இரண்டாம் பசுமைப்புரட்சிக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு என்பது, இரண்டாம் பசுமைப்புரட்சியில் ஒத்துழைப்பு நேரடியாக அளிக்கப்படுவதுதான். முதலாவதில் அது திரைமறைவிலிருந்து அளிக்கப்பட்டது.

    இரண்டிலுமே ஐக்கிய நாடுகள் நம் மீது மிக வலுவான அழுத்தத்தை செலுத்தின. WTO ஒப்பந்தம் வழியாகவும் TRIPS வழியாகவும் அது தொடர்ந்தது. இந்தியாவுக்குள் மான்சாண்டோவின் வருகை அமெரிக்கா வற்புறுத்தலால்தான் ஏற்பட்டது. பி.டி. கத்தரிக்காய் என்பது கூட பன்னாட்டு நிதி உதவி அமைப்பான US aid- ன் நேரடி நிதியுதவியின் மூலம் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவுதான். இறுதியாக, உயிர்ப்பாதுகாப்பு குறித்த வரையறைகளை மாற்றுவது மற்றும் ஒழுங்கைக் குலைப்பதன் முயற்சிதான். ஆக, காலங்காலமாக இந்தத் தொல்லை தொடர்கிறது. 1987 முதல் இந்தப் போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இயற்கை காலங்காலமாக கருவில் சுமந்து, உருவாக்கிய விதையைச் சோதித்து அதை மரபணு மாற்றப்பட்ட விதையுடன் ஒப்பிட்டு பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள்.

    இயற்கை உருவாக்கிய விதைக்கு காப்புரிமை கிடையாது. இது மிகப் பெரிய ஏமாற்று வேலை. மான்சாண்டோ பயிர்களை மட்டும் பாழ்படுத்தவில்லை விஞ்ஞானத்தையும் பாழ்படுத்திவிட்டது. நமது அன்றாட நடவடிக்கைகளையும் பாழ்படுத்திவிட்டது. இதில் அமெரிக்க அரசின் கை ஓங்கியுள்ளது. வெள்ளை மாளிகையை முழுக்க முழுக்க மான்சேண்டோவின் நிதியுதவியுடன் வாழும் ஒரு மாளிகை தான். நமது ஜனநாயக அரசும் அப்படி மான்சேண்டோவின் கைத்தடியாக மாறுவதை அனுமதிக்க கூடாது. பிரதமரின் அலுவலகமும் அமெரிக்காவின் நேரடி அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது என்று நமக்குத் தெரியும். பிரதமர் மன்மோகன் சிங்கும் U.S. Indian Knowledge Agreement இல் கையப்பமிட்டுக் கொடுத்ததில் நமது ஒட்டுமொத்த விவசாயத்தையும் மான்சாண்டோ, கொனக்ரஸ், வால்மார்ட்டிடம் கொடுத்துள்ளார். ஆக, நமது பிரதமர் அலுவலகத்தை தான் நடத்திக் கொண்டிருப்பதாக அமெரிக்க அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. நமது மக்கள்தான் இந்த நாட்டை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நமது பிரதமருக்குத் தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது.
     
    விதையிலிருந்து உணவு உண்ணும் மேசை வரை புழக்கத்தில் இருக்கும் இயற்கையான நவதானியங்கள் சிறப்பான முறையில் நம் நாட்டில் விளைவிக்கப்படுகின்றன. நாம் இயற்கையான முறையில் அவற்றை வளர்க்கிறோம். அவற்றை ஒவ்வொரு வாரமும் நமது வீட்டிற்கே கூடைகளில் கொண்டுவந்து தரும் சிறு வியாபாரிகளைக் கொண்டிருக்கிறோம். பாரம்பரியமாகவே இத்தகைய இயற்கையான முறையில் விளையும் நவதானியங்களைக் கொண்டிருக்கிறோம். அதனால் ஏதோ இந்தப் பஞ்சம் வந்து நம்மை சாகடித்துவிடும் என்று அஞ்சவேண்டிய தேவையில்லை. இந்த பூச்சிக்கொல்லி மருந்தாலைகள் எல்லாமே, இந்த பாரம்பரிய ரகங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவை என்ற பார்வையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். ஆனால் இந்தத் தடுமாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் அந்தப் பயிர்களை அழிக்கிறார்கள்.
     
    துரதிர்ஷ்டவசமாக, உலக வங்கியால் அறிவிக்கப்பட்ட 1988 கொள்கையின்படி இந்தக் கார்பரேஷன்களை எளிதாக தங்களைச் செயல்படுத்த அனுமதிக்கிறது. மான்சாண்டோவின் விதை மாதிரிகளை அரசு பரிசோதிக்க முடியாது. அந்த விதைகளில் என்ன இருக்கிறது என்று அரசுக்கும் தெரியாது. கம்பெனிகள்தான் இந்த அறிவின் காப்புரிமையை வைத்திருப்பதுடன் இது மிகவும் ரகசியமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த விதையின் காப்புரிமையுடன் அதற்கான தொழில்நுட்பத்தையும் பேணும் உரிமையும் பெற்றிருப்பதுடன் அதன் இனப்பெருக்கத் தொடர்ச்சியைத் துண்டிக்கும் அறிவையும் அவையே பெற்றிருக்கின்றன.
     
    ஆனால் பலரும் நம்புவது போல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. பயிர்களும் இந்த பூச்சித் தொல்லைக்கு நிவாரணம் தரவில்லை. பி.டி. பருத்தி விஷயத்தில் இது தெளிவாகிவிட்டது. அதில் ஒவ்வொரு பருவத்திலும் வித்தியாசமான பூச்சித் தொல்லையை அனுபவித்தோம். அது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எல்லாப் பருவங்களிலும் ஏதோ ஒரு எதிர்பார்க்கப்படாத பூச்சியால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு அறிவியல் பூர்வமான காரணமும் இருக்கிறது. நேரடியான வன்முறை மூலம் நச்சு மரபணு உள்ளே செலுத்தப்படுகிறது. இதில் செடியின் ஒட்டுமொத்தமான வளர்சிதைமாற்ற ஒழுங்கும் பாதிக்கப்படுகிறது. அதன் வளர்சிதைமாற்றம் பாதிக்கப்படும்போது, அதன் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து விடுகிறது. அப்பொழுது எல்லா பூச்சிகளும் அதன் எதிரியாக மாறிவிடுகின்றன. இதனால்தான் பாரம்பரிய பயிர்களில் காணப்படும் பூச்சிகளைவிட மரபணு மாற்றப் பயிர்களில் நாம் நிறைய பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டியிருக்கிறது. எங்களது கணக்கீடுகளின்படி பி.டி.பருத்தி அறிமுகம் செய்யப்பட்ட பின் விதர்பாவில் மட்டும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு 13 மடங்கு அதிகரித்துள்ளது. ஆக, பூச்சிகள் அழிக்கப்படுவதற்கான பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது தெரிகிறது.

    வேளாண் அமைச்சர் சரத்பவார் மான்சாண்டோவுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார். அவருடைய தொடர் வற்புறுத்தலால் தான் மரபணு மாற்றத்தை அனுமதிக்கும் குழு பி.டி. கத்தரியை அனுமதித்து கையப்பமிடுகிறது. இது சரத்பவாரின் அமைச்சகம் இல்லையென்றாலும், அவரது எல்லை தாண்டி மூக்கை நுழைத்துள்ளார். அவருக்கு சர்க்கரைத் தொழிற்சாலை, பி.டி. தொழிற்சாலை மற்றும் பால்பண்ணைகளிடம் நிறைந்த செல்வாக்கு இருக்கிறது. அதனால்தான் சர்க்கரையின் விலை அதிகரிக்க அனுமதித்தார். சர்க்கரையால்தான் 340 மடங்கு லாபம் ஈட்டமுடிகிறது. ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கரும்பு பயிரிட்ட விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட பெருத்த இழப்பால் தற்கொலை செய்து கொண்டனர். ஆக, சரத் பவார் பெருந்தொழிற்சாலைகளின் பக்கம்தான் சாய்ந்திருந்தார்.
     
    பி.டி. தொழில்நுட்பம் பற்றி பொது விசாரணை நடத்தவேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் விசாரணையில் கூறப்பட்டது வேறு. பதிவு செய்யப்பட்டது வேறு. நிறைய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்று விசாரணையில் சொல்லப்பட்டது. ஆனால் பசுமைப்புரட்சி மிகச் சரியான அறிவியல் தொழில்நுட்பம் என்று பதிவுசெய்யப்பட்டது. ஆக, எல்லா பிரச்சனைகளிலுமே அரசு தவறான முடிவுகளைத்தான் எடுக்கும் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
     
    நாம் எல்லா வகைகளிலும் இதற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்கவேண்டும். ஒரு காலத்தில் விவசாயிகளின் இயக்கங்கள் மட்டுமே இதில் பங்கெடுத்தன. உணவு என்பது நமது பிரச்சனை இல்லை என்று பெண்கள் இயக்கங்கள் கருதின. இன்று மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லா பெண்கள் இயக்கங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. இருபத்தைந்து வருடங்களுக்கு சூழல் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கும்போது போராட்டத்தில் சூழலியலாளர்கள் மட்டுமே ஈடுபட்டனர். இரண்டாம் கட்ட போராட்டத்தில் மருத்துவர்கள், பொது சுகாதார நிபுணர்கள், உடல் ஆரோக்கிய வல்லுநர்கள் மற்றும் நுகர்வாளர்கள் அனைவருமே விவசாயிகளுடன் இணைந்து போராட வேண்டும். அதற்கான காலக்கட்டம் இது.
     
    நவதானியா அமைப்பை டாக்டர் வந்தனா சிவா ஏற்படுத்தியது கூட நமது பாரம்பரிய விதைகளை, நமது மண்ணின் விதைகளைப் பாதுகாக்கும் எண்ணத்தில்தான். அயல் மகரந்தச் சேர்க்கையின் வழியாகக் கிடைக்கும் விதைகளைப் பாதுகாப்பதும் எண்ணமாக இருந்தது. இவ்விதைகளைக் கொண்டு 50 சதவிதம் விளைச்சலைப் பெருக்கமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார். ஆக, முதல் வேலையாக நமது விதைகள் பாதுகாக்கவேண்டும்.
     
    இரண்டாவது முக்கியமான வேலை, இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்துவது. மூன்றாவதாக, உணவுப்பொருளை நுகர்வோருக்கும் விவசாயிக்கும் இடையில் ஒரு நேரடியான தொடர்பை ஏற்படுத்துவது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஒதுக்கிவிட்டு இயற்கை விதைகள் மூலம் பயிரிடும் கிராமங்களை நாம் உருவாக்க வேண்டும். பஞ்சாயத்து, ஜனநாயக இயக்கங்களால் 6000-க்கு மேற்பட்ட கிராமங்கள் இவ்வறு இருவாக்கப்பட்டுள்ளது. ஆக எந்த வகையிலும் நஞ்சை விதையாகவோ உணவாகவோ பெற மாட்டோம் என்று நுகர்வோரும் விவசாயியும் சேர்ந்து இந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டால்தான், மான்சாண்டோவின் விதைகள் நமது வயலிலோ வயிற்றிலோ நுழைய வாய்ப்பு கிடைக்காது. ஆனால் முக்கியமான 10 மாநிலங்களின் அரசுகள் பி.டி.க்கு எதிராக கூறியுள்ளன. இதனால் மத்திய அரசு தற்காலிகமாக இதை நிறுத்திவைதுள்ளது. இந்நிலையில் நமது கூட்டாட்சி முறையில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. மரபணு மாற்றுப் பயிர் குறித்த இப்பிரச்சனையில், மத்திய அரசு - மாநில அரசு யார் முடிவெடுப்பது, விதைகளுக்கு யார் காப்புரிமை தருவது, மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிப்பது போன்றவற்றால் தங்கள் விவசாயிகள் கஷ்டப்படுவது குறித்த கவலையில் மாநில அரசுகள் இருக்கின்றன. விவசாய முறைகள் மாநில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும். ஆனால் நடுவண் அரசு கார்பரேஷன் கம்பெனிகள் வழியாகத் தன் முடிவுகளைத் திணிக்கிறது.
     
    ஜெர்மனியில் நடந்ததை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அந்நாட்டு வேளாண் அமைச்சர் மான்சாண்டோவின் செல்வாக்கால் பி.டி. சோளத்தை அறிமுகப்படுத்தினார். அங்கிருந்த விவசாயிகள் 6000க்கும் மேலானோர் பேரணியாகத் திரண்டு போராடினர். அரசுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் மின்னஞ்சல் அனுப்பினர். அரசு முதலில் இதை மிகச் சிறிய விஷயமாகத்தான் எடுத்துக்கொண்டது. ஆனால் விவசாயிகள் பெரிய அளவில் திரண்டதுடன், பி.டி. சோளத்தை அரசு திரும்பப் பெற வில்லையென்றால், தாங்கள் வாக்குகளை இடப்போவதில்லை என்று கூறினார்கள். இந்த எச்சரிக்கைதான் அங்குள்ள அரசியல்வாதிகளின் முடிவை மாற்றியது. ஏனெனில் அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம் வாக்குகள் வழியாக அதிகாரத்தைப் பெறுவதுதான். விவசாயிகளின் இந்த எச்சரிக்கைக்கு அரசியல்வாதிகள் பணிந்தார்கள்.

    மான்சாண்டோவின் அடுத்த கட்ட முயற்சிதான் அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் ( FDI ) தனது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கால்நடைகளின் இறைச்சி இவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை மல்டி பிராண்ட், சிங்கிள் பிராண்ட் வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. இதற்கு வால்மார்ட் போன்ற விற்பனை முதலைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தன் பெரும்பாண்மை பலத்தின் மூலம் கொண்டுவர முயன்ற காங்கிரசுக்கு, தன் முக்கிய கூட்டணி கட்சியான திரினாமுல் காங்கிரசின் தலைவரான மம்தா பானர்ஜியின் கடும் எதிர்ப்பால் தற்சமயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருப்பினும் இதை வெகு விரைவில் கொண்டு வருவோம் என அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ச்சியும், வெளிநாட்டு பயணத்தின் போது ஆனந்த சர்மாவும் உறுதி அளித்துள்ளனர்.

    இந்தியாவிற்கு எதிரி சீனாவோ அல்லது பாகிஸ்தானோ அல்ல! காங்கிரஸ் கட்சிதான் !
    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger