மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு உங்களது பெயர் சூட்டுவதை அனுமதிக்க வேண்டாம்: சச்சினுக்கு ஆம் ஆத்மி கட்சி கடிதம் Mumbai cricket club please do not let your name Aam Admi letter to Sachin
மும்பை, அக்.25-
மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் மேற்கு புறநகர் பகுதியான காந்திவிலியில் கிளப் ஹவுஸ் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் மதுபான விடுதிகள், உணவகங்கள், சூதாட்ட விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கட்டப்படுவதாக கிரிக்கெட் சங்கம் சார்பில் கூறப்படுகிறது. இந்த கிளப் ஹவுசுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் பெயரை சூட்டுவதற்கு மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் இந்த முடிவிற்கு சிவசேனா கட்சியின் கவுன்சிலர் யசோதர் பன்சே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள காந்திவிலி கிளப் ஹவுசிற்கு சச்சின் தெண்டுல்கர் பெயரை சூட்டுவதற்கு ஆம் ஆத்மி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மராட்டிய மாநில ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி தமானியா சச்சின் தெண்டுல்கருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில், நீங்கள் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பிரபலம். ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் நீங்கள் துடித்துக்கொண்டே இருக்கின்றீர்கள். அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கிளப் ஹவுசுக்கு உங்களுடைய பெயர் வைக்கப்போவதாக அறிந்தோம். இதனை ஒருபோதும் நீங்கள் அனுமதிக்காதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
...
shared via