காங்கிரஸ்தான் மதச்சார்புடன் செயல்படுகிற ஒரு வகுப்புவாத கட்சி : ராஜ்நாத் சிங் Congress the most communal party Rajnath says
கொச்சி, அக். 24-
ராஜஸ்தானில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கோபம் மற்றும் வெறுப்பான அரசியலை பாரதிய ஜனதா நாட்டில் விதைத்து வருகிறது. இது மதச்சார்பற்ற கட்டமைப்புகளுக்கு ஊறுவிளைக்கும் என்று கூறினார்.
இந்நிலையில் கேரள மாநில கொச்சியில் நாளை தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் தலைவர்களை சந்தித்து பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிதான் மதவாதக் கொள்கையுடன் செயல்படும் முக்கியமான வகுப்புவாத கட்சி என்று கண்டித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்நாத் சிங் மேலும் கூறியதாவது:-
மிகப்பெரிய வகுப்புவாதக் கட்சியாக காங்கிரஸ் தான் நாட்டில் செயல்படுகிறது. அந்த கட்சிதான் ஆங்கிலேயர்களின் பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகும் கூட காங்கிரசார் அதை கைவிடாமல் பின்பற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?