Sunday 25 December 2011

ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங்

- 0 comments
 
 
ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத நிலையில், சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அசின் நடிக்கலாம் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் ரஜினி இன்னும் படத்தில் நடிக்கும் அளவிற்கு உடல் தகுதி அடையவில்லை. இதனையடுத்து ஜனவரி 2 முதல் கோச்சடையான் ஷூட்டிங் நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



[Continue reading...]

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு விபத்து: 22 பேர் பலி?

- 0 comments
 
 
சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வாடிக்கையானது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுற்றுலா செல்வதற்காக ஒரு படகில் பயணம் செய்தனர்.
 
இதில் எதிர்பாராத விதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் ஏரியில் முழ்கினர். இதில் சுமார் 21 பேர் பயணித்திருக்கலாம் எனவும், இதுவரை 4 பேர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தகவல் அறிந்ததும் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.



[Continue reading...]

டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோன்ஸ் வியப்பு

- 0 comments
 
 
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனின் கிரிக்கெட் திறமை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் வியப்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அர்ஜூன் மிகப் பெரிய வீரராக உருவெடுப்பார் என்றும் பாராட்டியுள்ளார் ஜோன்ஸ்.
 
அரசியல், சினிமாவில் மட்டுமா வாரிசுகள் வர வேண்டும். கிரிக்கெட்டிலும் கூட ஏகப்பட்ட வாரிசுகள் கிட்டத்தட்ட அத்தனை நாடுகளிலுமே உள்ளனர். அந்த வரிசையி்ல் சச்சினின் வாரிசான அர்ஜூன் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் இப்போதே பிரமாதப்படுத்தி வருகிறார்.
 
பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் அவர் ஜொலிக்கிறார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வந்துள்ள சச்சினுடன் அர்ஜூனும் வந்துள்ளார். மெல்போர்ன் மைதானத்தில் வெள்ளிக்கிழமையன்று அவர் தந்தை சச்சின் மற்றும் வீரேந்திர ஷேவாக்குடன் இணைந்து பந்து வீசி, பேட்டிங் செய்து பயிற்சியும் எடுத்தார்.
 
கிட்டத்தட்ட அரை மணி நேரம், நடந்த இந்த பயிற்சியின்போது சச்சின் தனது மகனுக்கு பந்து வீசினார். அதேபோல அர்ஜூன், ஷேவாக்குக்குப் பந்து வீசினார்.
 
இந்த பயிற்சியை டீன் ஜோன்ஸ் அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்து ரசித்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அசத்துகிறார் அர்ஜூன். அவருடைய தந்தையின் திறமையில் 100ல் ஒரு பகுதியை மட்டும் அவர் வெளிப்படுத்தினால் போதும் மிகப் பெரிய வீரராக முடியும்.
 
தனது மகனின் கிரிக்கெட் திறமை குறித்து கூர்ந்து கவனித்து வருகிறார் சச்சின் என்று நினைக்கிறேன். சமீபத்தில் அர்ஜூனுடன் நான் பேசியபோது, தான் பள்ளி கிரிக்கெட் போட்டி ஒன்றில் சதம் அடித்தது குறித்தும், ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியது குறித்தும் அர்ஜூன் சிலாகித்துக் கூறினார்.
 
அவருக்குள் நல்ல திறமை உள்ளது. நிச்சயம் பெரிய வீரராக வருவார் என நம்புகிறேன் என்றார் ஜோன்ஸ்.
 
மேலும் அவர் கூறுகையில், அர்ஜூனுக்கு யார் பயிற்சி தருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுபோல முக்கிய வீரர்களுடன் அவர் பயிற்சியின்போது உடன் இருந்து கவனித்தாலே போதும் நல்ல பயிற்சி கிடைக்கும் என்றார் ஜோன்ஸ்.



[Continue reading...]

பாரதிராஜாவின் இயக்கம் நிறுத்தம்

- 0 comments
 
பாரதிராஜா கேரள நாயகிகளான இனியா, கார்த்திகா, ஆகியோரை வைத்து அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படத்தை இயக்கி வந்தார்.
முல்லை பெரியாறு பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் படப்பிடிப்பு வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி இரு நாயகிகளையும் ஊருக்கு அனுப்பி விட்டாராம் இயக்குநர். பிரச்சினைகள் முடிந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் முடிவில் இருக்கிறார்.


[Continue reading...]

இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.கவினர் ஆர்ப்பாட்டம்

- 0 comments
 
 
கேரளத்தைச் சேர்ந்த மலபார் கோல்ட் நிறுவனத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இசைஞானி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.
 
கேரளத்தவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கடையடைப்பு உள்ளிட்டவை நடந்து வருகின்றன.
 
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். டிசம்பர் 28ம் தேதி மலபார் கோல்ட் நிறுவன இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்கிறார். இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். மலபார் கோல்ட் நிறுவனம் கேரளாவைச் சேர்ந்ததாகும். இதனால் இதில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளக் கூடாது, அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.கவினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
பின்னர் அவர்களில் சிலர் வீட்டுக்குள் சென்று இசை நிகழ்ச்சியை இளையராஜா புறக்கணிக்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றையும் அளித்தனர்.
 
இந்தப் போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது



[Continue reading...]

முல்லைப் பெரியாறு - மெரீனாவில் ஒன்றுகூடல்..!

- 0 comments
 

நேற்று காவிரியை மறுத்தார்கள்; இன்று முல்லைப் பெரியாறை மறுக்கிறார்கள். நாளை பாலாறு, பவானி ஆறு மறுக்கப்படும். தமிழகம் பாலையாகும்; தமிழன் தமிழ்நாட்டிலேயே அகதியாவான்.





நேற்று தமிழீழத்தில் 1.5 லட்சம் தமிழர்களும், தமிழகக் கடற்கரையோரங்களில் 543 மீனவர்களும் கொல்லப்பட்டனர். இன்று கேரளாவாழ் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். நாளை தமிழகத்தில் வாழும் நாமும் தாக்கப்படலாம். நம் தமிழனைக் காக்க, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க, நம் வாழ்வின் ஒரு மணி நேரத்தை நாம் ஒதுக்கமாட்டோமா?

நம் தமிழ் சொந்தங்களுக்காக வரும் டிசம்பர் 25 ஞாயிறு அன்று மெரீனா கடற்கரையில், நீதி கேட்ட கண்ணகி சிலை அருகே மாலை 3 மணிக்கு ஒன்று கூடுவோம். கம்பம், போடி, தேனி மக்களுக்காக துணை நிற்போம்
[Continue reading...]

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்,christmas valthukkal 2011

- 0 comments
 



இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
[Continue reading...]

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 24-வது ஆண்டு நினைவு தினம்(புகைப்படங்கள்)

- 0 comments
 
 
 
1970 களில் சினிமா உலகையும், தமிழக அரசியல் உலகையும் எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம் கட்டி ஆண்டது என்றால் அது மிகையாகா. திரைப்படத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு மன்னாதி மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன் ஆவார்.
 
1972-ல் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க. என்ற கட்சியை ஆரம்பித்து
1977-ல்ஆட்சியைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கட்டில் ஏறிய பிறகு அசைக்கமுடியா சக்தியாக விளங்கினார். 11 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த போது காலன் அவரை கவர்ந்து கொண்டான். இதே தேதியில் கடந்த 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இயற்கையோடு கலந்து போனார். இன்று அவரது 24-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் பற்றிய சில நினைவுக் குறிப்புகள் இங்கே...
 
* இலங்கையில் உள்ள கண்டியில் எம்.ஜி.ஆர் பிறந்தார். தந்தையை இழந்த பிறகு தாயார் சத்தியபாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.
 
* மக்களின் மனங்களை படித்த எம்.ஜி.ஆரின் பள்ளி வாழ்க்கை மூன்றாம் வகுப்போடு நின்று போனது
 
* எம்.ஜி.ஆரின் குடும்பம் சென்னைக்கு வந்தது 1932-ல். இங்கு வந்து வசித்த முதல் இடம் யானை கவுனியில் இருக்கும் பங்காரம்மாள் வீதி ஆகும்.
 
* நாடக உலகில் அறிமுகமாகி திரு. கந்தசாமி முதலியாரால் சினிமா உலகிற்கு அறிமானார் எம்.ஜி.ஆர்.
 
* எம்.ஜி.ஆர் முதன் முதலில் அறிமுகமான படம் சதிலீலாவதி. கதாநாயகனாக அறிமுகமான படம் ராஜகுமாரி. இருப்பினும் மலைக்கள்ளன் படத்திற்கு பிறகே எம்.ஜி.ஆர் வெற்றி கதாநாயகனாக அறியப்பட்டார்.
 
* எம்.ஜி.ஆர். சினிமா உலகில் காலடி எடுத்த வைத்த காலத்திலேயே அவரது அன்னை சத்தியபாமாவின் கட்டாயத்தால் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் வி.என் .ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.
 
* ஏழு என்ற எண் எம்.ஜி.ஆரின் வாழ்வின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவருடனேயே இணைந்து வந்திருக்கிறது. அவர் பிறந்த தேதியும் வருடமும் ஒன்றே ஆகும். (17.01.1917).
 
* எம்.ஜி.ஆர். தனது 7வது வயதில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.
 
* எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டில் ஏறிய வருடம் 1977 ஆகும்.
 
* எம்.ஜி.ஆர் மறைந்த வருடம் 1987 ஆகும்.
 
* அதுமட்டுமின்றி ஏழு என்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எண்ணாகும். அவரது வெள்ளை அம்பாசிடர் காரின் எண் 4777 ஆகும். இதன் கூட்டுத் தொகை 7 ஆகும்.
 
* எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 137.
 
* இதில் 115 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
 
* எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்று போன படங்களும் இருக்கின்றன. அதன் பட்டியல் இதோ: பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம்.
 
* 1951-ல் எம்.ஜி.ஆருக்கு கல்கண்டு ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள் 'மக்கள் திலகம்' என்ற பட்டத்தை வழங்கினார்.
 
* 1963-ல் எம்.ஜி.ஆருக்கு கிருபானந்த வாரியார் அவர்கள் 'பொன்மனச் செம்மல்' என்ற பட்டத்தை வழங்கினார்.
 
* 1967-ல் எம்.ஜி.ஆருக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் 'இதயக்கனி' என்ற பட்டத்தை வழங்கினார்.
 
* 1972-ல் எம்.ஜி.ஆருக்கு ஏ.கே.கிருஷ்ணசாமி அவர்கள் 'புரட்சித் தலைவர்' என்ற பட்டத்தை வழங்கினார்.
 
* விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
 
* எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் 'மலைக்கள்ளன்'. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா படம் என்ற பெருமையை 'மலைக்கள்ளன்' பெற்றது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
 
* 'கர்ணன்' படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். 'புராணப் படம் பண்ண வேண்டாம்' என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !
 
* 'அடிமைப்பெண்' பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
 
* அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து 'நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்' என்று அறிமுகம் செய்துகொள்வார் !
 
* முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம்.
 
* சினிமா உலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் 24.12.1987ல் மறைந்தார். இன்று அவரது
24-வது ஆண்டு நினைவு நாளில் அன்னாரை நினைவு கூர்ந்து அவருக்கு மாலைமலர் இணையதளம் அதன் வாசகர்கள் சார்பில் அஞ்சலி செலுத்துகிறது.
 


 


[Continue reading...]

தமிழகத்தில் இ-ரேஷன் கார்டுகளை அறிமுகப்படுத்த திட்டம்

- 0 comments
 
 
தமிழகத்தில் இ-ரேஷன் கார்டுகளை பயன்பாட்டில் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
 
தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் காலகேடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய ரேஷன் கார்டுகள் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளின் காலகெடுவை மேலும் ஒராண்டிற்கு நீட்டிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளின் காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, ஒரே நபர் பல இடங்களில் ரேஷன் அட்டைகளில் தனது பெயரை பதிவு செய்து இருந்தால் அதனைக் கண்டுபிடிக்க வழிவகைகள் இல்லை.
 
இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் ஒரே நபரின் பெயர் இடம் பெற்றுள்ளது. போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கும் நிலையும் உள்ளன. இந்த குறைபாடுகளைக் களைய தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளுக்குப் பதிலாக மின்னணு ரேஷன் அட்டைகளை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ், கைகளின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி உள்ளிட்டவை பதிவு செய்து, பிரத்யேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு நடைபெற்ற வருகின்றது.
 
இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தி, மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொகுப்பு முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால், ஒரே நபர் பல ரேஷன் அட்டைகளில் தனது பெயரை பதிவு செய்வதும், போலி ரேஷன் அட்டைகளும், ரேஷன் கடைகளில் போலி பட்டியலிடுவதும் தடுக்கப்படும்.
 
இந்த மின்னணு ரேஷன் அட்டைகளை வழங்குவதற்குச் சில காலம் ஆகும் என்பதால், இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை 2012, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் 1 கோடியே 94 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். செல்லுபடியாகும் காலம் ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பெயர் நீக்கம், சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் வழக்கம் போல நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



[Continue reading...]

கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன்எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம்

- 0 comments
 
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார்.
 
சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஷுடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த விழாவை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் காட்டிக் கொடுத்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூர் கட்சிகள் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் வரை ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
 
இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டதாக ஜீவா அறிவித்துள்ளார்.
 
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன். எனவே எனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டேன்," என்று அறிவித்துள்ளார்.



[Continue reading...]

தெண்டுல்கரை 100வது சதம் அடிக்க விடமாட்டோம்: மைக்கேல் கிளார்க்

- 0 comments
 
 
 
 
 
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தெண்டுல்கர் 100வது சதம் அடிக்க விடமாட்டோம் என்று கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
 
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
 
தெண்டுல்கர் தனது 100 வது சர்வதேச சதத்தை அடிப்பது நிச்சயம் நிகழக்கூடிய ஒன்றாகும். ஆனால் இந்த டெஸ்ட் போட்டி தொடரில் அது நடக்காது என்று நான் நம்புகிறேன். தெண்டுல்கர் தனது 100 வது சதத்தை அடுத்த தொடரில் அடிப்பார் என்று நம்புகிறேன். தெண்டுல்கர் நீண்டகாலமாக நம்பமுடியாத வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உண்மையிலேயே அவர் பேட்டிங் செய்யும் விதத்தை நான் பார்த்து ரசிக்க கூடியவன். அவர் 100 வது சதத்தை அடித்தால் எல்லா புகழுக்கும், பாராட்டுக்கும் தகுதியானவர். இவ்வாறு மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger