நடிகர் மம்முட்டியின் மகன் திருமணம், சென்னையில் நடந்தது. அதில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மலையாள பட உலகின் `சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மம்முட்டிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. மகன் துல்கார் சல்மானுக்கும், சென்னையை சேர்ந்த அமல் சுபீயாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்கள் திருமணம், சென்னை அடையாரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் பிரபு, திலீப், சுரேஷ்கோபி, நடிகை ஷீமா, பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். அனைவரையும் மம்முட்டி வரவேற்றார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ராமதா ரிசார்ட்டில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?