Thursday, 29 August 2013

தேர்தலுக்காக, உணவு பாதுகாப்பு சட்டம் For the election Congress introduced food safety

- 0 comments

தேர்தலுக்காக, உணவு பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது: சீமான் பேச்சு For the election Congress introduced food safety law seeman speech 

 காரைக்கால் நகராட்சி திடலில், நாம் தமிழர் கட்சியின் புதுச்சேரி மாநில மகளிர் பாசறை சார்பில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவுநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

செங்கொடி ஏன் வீரத்தமிழச்சியாக, வீரமங்கையாக போற்றப்படுகிறாள்? 10 பேர்கள் சேர்ந்து ஒருவனை வீழ்த்துவது வீரம் அல்ல. தனது உயிரைக் கொடுத்து இன்னொரு உயிரை காப்பதுதான் வீரமாகும். அப்படித்தான் தனது உயிரைக் கொடுத்து 3 அண்ணன்களின் உயிரை அவள் காத்துள்ளார். அதனால்தான் அவள் வீரத்தமிழச்சியாகவும், வீரமங்கையாகவும் போற்றப்படுகிறாள்.

தமிழர்களை இனவெறியால் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் ஏற்றி அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். அவனுக்கு ஒரு தோட்டா போதாதா? அது தேவையில்லை. எங்களுக்கு வேண்டியது எல்லாம் நாடு ஒன்று மட்டும்தான்.

மரணம் தண்டனையாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. உணவுப்பாதுகாப்பு மசோதா என்ற ஒரு மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் சோற்றுக்கு உத்தரவாதம் கொண்டு வருகிறார்கள்.

இது சோனியாவின் கனவுத் திட்டமாம். 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, 10-வது ஆண்டு இறுதியில் இந்த உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வருவதன் அவசியம் என்ன? ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே? தேர்தல் வர உள்ளதால், இதன் மூலம் ஓட்டை பிரிக்க நினைக்கிறார்கள்.

நமது நாட்டு ரூபாயின் மதிப்பு சர்வதேச அளவில் சரிந்துள்ளது. உலகளவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நிலக்கரி ஊழலில் பிரதமர் சம்பந்தப்பட்டிருக்கிறார். கூட்டி சொல்ல முடியாத அளவிற்கு அவர்கள் ஊழல் செய்து மொத்தத்தையும் கூட்டி அள்ளிச் சென்றுள்ளார்கள்.

இன்று நம்மிடையே வலிமை இல்லை. எல்லோரும் கெஞ்சி பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நமது நிலை நிச்சயம் உயரும். பசி, பட்டினி போக்கப்படும். நம்மிடம் எந்த வலிமையும் இல்லை. ஆனால் வாக்கு உரிமை என்ற ஆயுதம் உள்ளது. அதுதான் அறிவாயுதம். அந்த அறிவாயுதத்தால் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

அந்த புரட்சித் தீயை செங்கொடி, முத்துக்குமார் போன்றவர்கள் ஏற்றி வைத்துள்ளார்கள். என்ன விலை கொடுத்தேனும் நமது இனத்தை காப்பாற்ற வேண்டும். மூன்று பேர்களும் விடுதலை ஆகும் வரை களத்தில் இருப்போம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

 

[Continue reading...]

வன்முறையை தூண்டும் வகையில் திருமாவளவன் case of violent spoken thirumavalavan cuddalore court order appear

- 0 comments

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: திருமாவளவன் ஆஜராக கடலூர் கோர்ட்டு உத்தரவு case of violent spoken thirumavalavan cuddalore court order appear 

கடலூர் அருகே உள்ள கீழ் குமாரமங்கலம் புதுக்கடை வீதியில் கடந்த 18.10.1997 அன்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.

அவர்கள் வன்முறையை தூண்டும் வகையிலும், ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் கடலூர் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் நீதிபதி பிரபாவதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில் தொடர்புடைய சித்திரைமூர்த்தி, திருவள்ளுவன் ஆகிய 2 பேரும் ஆஜராகினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமுதவன் ஆகிய 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ்வழக்கு தொடர்பான நகல்களை அடுத்த மாதம் 6-ந் தேதி திருமாவளவன், அமுதவன் ஆகிய 2 பேரும் நேரில் ஆஜராகி பெற்று செல்ல வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

[Continue reading...]

இன்னும் 5 வருடங்கள் காங்கிரஸ் வசம் கொடுங்கள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தியா மீளும் - கருணாநிதி

- 0 comments

தி.மு.க. தலைவர்
கருணாநிதி வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின்
மதிப்பு தொடர்ந்து சரிந்து 68.80 என
வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார
நெருக்கடியிலிருந்து அமெரிக்கா
தன்னைப் பாதுகாத்துக்
கொள்வதற்காகத்தான் டாலரின்
மதிப்பை உயர்த்துவதற்கான
நடவடிக்கைகளில்
இறங்கியிருப்பதாகவும், அதன்
விளைவாகத்தான் இந்தியா,
இந்தோனேசியா, பிரேசில்,
தென்னாப்பிரிக்கா, துருக்கி போன்ற
நாடுகளின் நாணயங்களின்
மதிப்பு வேகமாக
சரிந்து வருவதாகவும்
சொல்லப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள்
பிரதமராக இருந்தார்.
அப்போது டாலருக்கு நிகரான இந்திய
ரூபாய் மதிப்பு 4.76 ஆகும்.
இந்திராகாந்தி 15 ஆண்டுகள் பிரதமராக
இருந்தபோது, ரூபாய் மதிப்பு 11.36
ஆகும். ராஜீவ்காந்தி காலத்தில் ரூபாய்
மதிப்பு 16.22 ஆகும். பி.வி.நரசிம்மராவ்
காலத்தில் 35.43 ஆகும். வாஜ்பாய்
காலத்தில் ரூபாய் மதிப்பு 45.31 ஆகும்.
மன்மோகன் சிங்கின் 9 ஆண்டு கால
ஆட்சியில் 68.80 ஆகும்.
இது வரலாறு காணாத வகையில் மிகப்
பெரிய வீழ்ச்சியாகும்.
தொய்வடைந் திருக்கும் இந்தியப்
பொருளாதாரத்தைத்
தூக்கி நிறுத்தி வலுவூட்டாவிட்டால்,
டாலருக்கு நிகரான ரூபாயின்
மதிப்பு 75 ஆகச் சரியும்
நிலைமை உள்ளது என்று வல்லுநர்கள்
எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், நடப்பாண்டு,
ஜனவரி முதல், இதுவரை, அமெரிக்க
டாலருக்கு எதிரான ரூபாயின்
மதிப்பு 19.50 சதவிகிதத்திற்கும்
அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது இந்தியப் பொருளாதாரத்தில்
இதுவரை கண்டும் கேட்டுமிராத
காரிருளாகும்.
அமெரிக்க டாலரின்
நிலைமை இவ்வாறிருக்க,
இங்கிலாந்து பணமான
“பவுண்டு”க்கு நிகராகவும் ரூபாயின்
மதிப்பு சரிந்துள்ளது.
ஒரு “பவுண்டு”க்கு நிகரான
ரூபாயின் மதிப்பு 106 ஆகக்
குறைந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய
பணமான “யூரோ” வுக்கு நிகரான
ரூபாயின் மதிப்பு 92 ஆகவும், சுவிஸ்
“பிராங்க்” மதிப்பில் ரூ.75 ஆகவும்,
கனடா டாலர் மதிப்பில் ரூ. 65 ஆகவும்,
ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் ரூ. 60
எனவும், நியூசிலாந்து டாலர் மற்றும்
சிங்கப்பூர் டாலர் மதிப்பில் ரூ.50க்கும்
சரிந்துள்ளது. குவைத் “தினார்”
மதிப்பு இந்திய ரூபாயில்
ரூ.240க்கு அதிகம் என்ற
நிலையை எட்டியுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சங்கிலித்
தொடர் போன்ற விளைவுகள்
ஏற்படுவது தவிர்க்க முடியாதது. கடந்த
சில நாட்களாக பங்கு சந்தையிலும்
சரிவு ஏற்பட்டு வருகிறது.
முதலீட்டாளர்களின் பங்குகளின்
மதிப்பு 170 லட்சம்
கோடி குறைந்துள்ளது. ரூபாய்
மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க மத்திய
அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருவதாகக் கூறப்பட்டாலும்,
எதுவும் உடனடியாகப் பயனளிப்பதாகத்
தெரியவில்லை.
பொதுத்துறை எண்ணெய்
நிறுவனங்களும்,
இறக்குமதி நிறுவனங்களும்
டாலரை அதிக அளவில்
கொடுத்தே கொள்முதல் செய்கின்றன.
எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில்
அமெரிக்க டாலர்களை வாங்குவதால்,
அன்னிய நாடுகளில் வெளிச்சந்தையில்
இந்திய ரூபாயின்
மதிப்பு சரிந்து வருகிறது.
சிரியா நாட்டில் நடைபெற்று வரும்
கலவரத்தால் 27-8-2013 அன்று லண்டன்
வர்த்தக சந்தையில் கச்சா எண்ணெய்
விலை 0.4 சதவிகிதம் உயர்ந்தது.
விலை மேலும் அதிகரிக்கும்
என்று கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் நிறைவான
பொருளாதார அறிவு படைத்தவர்தான்.
அவர்தான்
இருபதாண்டுகளுக்கு முன்பு நடை
பெற்ற புதிய பொருளாதாரச்
சீர்திருத்தங்களுக்குக் காரணகர்த்தாவாக
இருந்தவர். பழைய பொருளாதார
உத்திகள் பலனளிக்காது என்றால், புதிய
முறைகளைக்
கையாண்டு வெகுவிரைவில்
தீர்வு காண வேண்டும்.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்,
ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த
மத்திய அரசு தீவிர
நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும்
, நிதிப் பற்றாக்குறையை மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 4.8
சதவிகிதமாகக் குறைக்க
நடவடிக்கை எடுத்து வருவதாகவும்
சொல்லியிருக்கிறார். மேலும்
நடப்பு கணக்குப் பற்றாக்குறையை 7
ஆயிரம் கோடி டாலருக்குள் அடக்க
வேண்டுமென்று நம்முடைய
நிதியமைச்சர்
கருத்து தெரிவித்துள்ளார்.
நாம் அதிக
அளவுக்கு ஏற்றுமதி செய்தால் நடப்புக்
கணக்கில் உபரி ஏற்படும். நாம் அதிக
அளவுக்கு இறக்குமதி செய்தால்
நடப்புக் கணக்கில்
பற்றாக்குறை ஏற்படும். இந்தப்
பற்றாக்குறை அதிகமாக
ஏற்படும்போது, பொருளாதார
நெருக்கடியை உண்டாக்கும். நடப்புக்
கணக்கு பற்றாக்குறை என்பதுதான்;
தற்போது 8900 கோடி டாலர்
பற்றாக்குறையாக அதிகரித்துள்ளது.
இந்த அளவிற்கு நடப்புக் கணக்கு பற்றாக்
குறை அதிகமாகக் காரணம்,
கச்சா எண்ணெய், தங்கம்
ஆகியவற்றை அதிகமாக
இறக்குமதி செய்வதுதான்
என்று அரசு தெரிவிக்கும் காரணம்
மட்டுமே உண்மையானதல்ல.
நாம் இறக்குமதியைப் பற்றிப்
பேசும்போது,
இறக்குமதி செய்யப்படும் மூலப்
பொருள்களைப் பற்றியும்
புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு தயாரிப்பாளர்
ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி
செய்வதற்காக மூலப்
பொருளை இறக்குமதி செய்வதுதான்
மூலதனப் பொருள் இறக்குமதி.
அப்படி மூலப்
பொருளை இறக்குமதி செய்து, புதிய
பொருள்களைத் தயாரித்து அதிக
விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம்
இறக்குமதியால் ஏற்படும் நடப்புக்
கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட
முடியும்.
2004-2005இல் மூலப் பொருள்களின்
இறக்கு மதி 2550 கோடி டாலர்
அளவுக்கு இருந்தது. தற்போது 58700
கோடி டாலருக்கு மூலப் பொருள்கள்
இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதுபோன்ற காரணங்களால்தான் டாலர்
மதிப்பு மிகவும் உயர்ந்து,
அதற்கு நிகரான இந்திய ரூபாயின்
வெளி மதிப்பு வரலாறுகாணாத
அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இந்த
ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை
ரூபாய் மதிப்பு 18 சதவிகிதம்
வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக
இந்த நிதி ஆண்டில் பொருளாதார
வளர்ச்சி 5 சதவிகிதத்திற்கும்
கீழே செல்லும் என்று கூறப்படுகிறது.
நமது இயற்கை வளங்கள் எல்லை யற்றவை.
நமது மனித வளம் ஈடு இணையற்றது.
இந்தியா விடுதலை அடைந்ததற்குப்
பின்னர் எத்தனையோ சவால்களைச்
சந்தித்து முன்னேறி வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்தப்
பொருளாதாரச் சோதனையிலும்
இந்தியா நிச்சயம் வெற்றிபெறும் என
எதிர்பார்ப்போம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

[Continue reading...]

பா.ஜனதா தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு bjp leaders house petrol bomb throw in dindigul

- 0 comments
திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (27). இவர் 10–ம் வார்டு பா.ஜனதா கிளை தலைவராக உள்ளார். இவருக்கு சத்தியமீனாட்சி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாவார்.
வேன் டிரைவராக வேலைபார்த்து வரும் பிரவீன்குமார் தினமும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் இருந்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஏற்றி கொண்டு வருவது வழக்கம். பிரவீன்குமார் வேலைக்கு சென்று விட்டு சுமார் 10 மணிக்கு தான் வீடு திரும்புவாராம்.

நேற்று காலை வழக்கம்போல பிரவீன்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். இரவு 11 மணி ஆகியும், கணவர் பிரவீன்குமார் வீடு திரும்பாததால் அவரது வருகைக்காக சத்தியமீனாட்சி தனது மாடி வீட்டு வாசலில் காத்து கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் பிரவீன்குமார் வீட்டு முன்பு உள்ள தெருவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் நீண்ட நேரமாக அங்கும், இங்குமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

இதை கவனித்த சத்தியமீனாட்சி ஒருவித பயத்துடனேயே தனது கணவர் வருகைக்காக வீட்டு வாசற்படியில் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென கீழே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை பிரவீன்குமார் வீட்டின் மீது சரமாரியாக வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
பெட்ரோல் நிரப்பிய பாட்டில்கள் வெடித்து தீப்பிடித்தது. அந்த சமயத்தில் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டிருந்த சத்தியமீனாட்சிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி கதவை பூட்டி கொண்டார்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பிரவீன்குமார் வீட்டின் அருகே சென்ற கேபிள் வயர்கள் தீயில் கருகி நாசமானது. மேலும் அவரது வீட்டின் சுவரில் பல இடங்களில் லேசான கீறல்கள் ஏற்பட்டன. மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதில் பிரவீன்குமார் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் போஸ், தனபாலன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பிரவீன்குமார் வீட்டின் முன்பு குவிந்தனர். அந்த சமயத்தில் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய பிரவீன்குமார் தனது வீட்டின் முன்பு பொதுமக்கள் குவிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அப்போது தனது மனைவியிடம் நடந்த சம்பவத்தை பற்றி கேட்டு அறிந்தார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் அங்கு சிதறி கிடந்த பாட்டில்கள் துண்டுகளை சேகரித்தனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger