Thursday, 1 December 2011

வரதட்சினை வாங்க��னால், அவளுக்கு ந�� அடிமை....!!!

- 0 comments


ஒரு வாரத்துக்கு முன்பு பஹ்ரைனில் நடந்த சம்பவம், என் மனதை பாதித்து, அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

மாலை சமயம் எட்டு மணி, நானும் எனது நண்பர்களும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவகம், அங்கே சாப்பிடுவதற்காக நண்பர்களோடு சென்றிருந்தேன், உள்ளே நுழைந்ததும், இன்னும் இரண்டு நண்பர்கள் உள்ளே அமர்ந்திருந்ததை நாங்கள் கண்டதும், அவர்கள் எங்களையும் அழைத்ததால், அவர்களுடன் போயி அமர்ந்தோம்.


அதில் ஒருவன் மலையாளி, ஒருவன் கர்நாடகா, ஒருத்தனுடைய குடும்பம் கேரளாவில் இருக்கிறது இன்னொருவனுடைய குடும்பம் பஹ்ரைனில் அவன் கூடவே உள்ளது....


சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு ஜாலியா பழைய நினைவுகளை சொல்லி சிரி சிரி என சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தோம், எல்லாருமே ஹோட்டல் ஃபீல்டுல வேலை பார்ப்பவர்கள், சாப்பாடும் பரிமாறப்பட்டது. ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருக்கும் போதே மலையாளி நண்பனுக்கு ஒரு மிஸ்கால் வந்தது,


எடுத்துப்பார்த்தவன் பதறியபடி போன் பேச எச்சில் கையோடு வெளியே போனான், திரும்பி வந்தவன் என் மனைவியின் போன் என்றான் நாங்கள் ஒன்றுமே சொல்லவில்லை, கொஞ்சநேரம் கழித்து போனே வருகிறது, இவன் சாப்பிட்டபடி போனை அட்டன்ட் பண்ணினான்....


ஐயோ நான் நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன், என்னது மணி ஒன்பதரையா இதோ இப்பவே போறேன் வீட்டுக்கு சரி சரி என போனை கட் செய்தான், என்னடான்னு கேட்டா அவன் சொன்னது, ராத்திரி ஒன்பது மணி ஆச்சுன்னா நான் என் ரூமில் இருக்கணும் என்பது என் மனைவியின் ஆர்டர் என்றான்...


அதான் உன் மனைவி கேரளாவில் அல்லவா இருக்கிறாள் நீ ரூமில் இருப்பதாக பொய் சொல்லவேண்டியதுதானே என்றால், டேய் அவள் சித்தப்பா மகன் என் பக்கத்து ரூமில் இருக்கிறான், அவனுக்கு போன் செய்து கேட்டு விடுவாள், நான் என்னென்ன பண்ணிட்டு இருக்கேன்னு அவன் அவளுக்கு சொல்லிருவான் என சொல்லி வேதனைபட்டு கொண்டிருக்கும் போதே....


கர்நாடகா நண்பனுக்கு போன் வருகிறது, அவனும் போனை எடுத்து இதோ பத்து நிமிஷத்தில் வந்துடுறேன் செல்லம்னு அலறினான், இப்படியாக மறுபடியும் மறுபடியும் இவர்களுக்கு போன் வந்து கொண்டிருக்க கடுப்பான மற்ற நண்பர்கள் அவர்களை பயங்கரமாக கிண்டல் செய்து கொண்டிருந்தோம்...


கொஞ்சநேரம் கழித்து மலையாளி நண்பனின் போனடிக்க எடுத்தவன் தாறுமாறாக திட்டி விட்டான் மனைவியை, என் என்னை இப்படி படுத்துகிறாய், நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு அரைமணி நேரம் தாமதமாக நான் ரூமுக்கு போனால் என்ன, என்ன நீ பஹ்ரைன்லையா இருக்கிறாய்..? ஊரில்தானே இருக்கிறாய் என திட்டுகிறான், எங்களுக்கு சங்கடமாக இருந்தது...


அடுத்தவனுக்கும் போன் வந்தது, அவனும் தாறுமாறாக திட்ட தொடங்கினான், என்ன எல்லா நாளும் ஒன்பது மணின்னா உன் மடியிலதானே இருக்கிறேன், ஒருநாள் அரைமணி நேரம் லேட்டா வந்தா என்னா குறைஞ்சி போகும் உனக்குன்னு திட்டுறான்....

நாங்கள் அமைதியாக இருந்து விட்டு அவர்களை உடனே கிளம்ப சொன்னோம், பாதி சாப்பாட்டுலையே எழும்பி நண்பர்கள் போவதை கண்டு மனசு தாங்காமல் நாங்களும் சாப்பிடாமல் எழும்பி விட்டோம்...

ஏன் இப்படி சில மனைவிகள் புருஷனை படுத்துகிறார்கள் என்பதை விசாரித்தபோது, என் அனுபவத்தையும் வைத்து சோதித்தபோது எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள்.....

மலையாளி நண்பன் வாங்கிய வரதட்சனை நூறு பவுன் நகை, பத்து லட்சம் ரூபாய் கேஷ், கர்நாடகா நண்பன் வாங்கிய வரதட்சனை நூற்றி இருவது பவுன் நகை, எட்டு லட்சம் ரூபாய் கேஷ் கறாராக கேட்டு வாங்கி இருக்கிறார்கள்.....!!!! இது என் நண்பர்களே சொன்னது, பின்னே எப்பிடிய்யா மனைவி உங்களை மதிப்பார்கள், நீங்கள் ஒரு விற்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட ஒரு ஜடமாகதானே உங்களை கருதுவார்கள் மனதில்...?!!!!


அப்போ நீ என்ன யோக்கியமான்னு நினைப்பவர்களுக்கு, நான் வரதட்சிணையாக ஒன்றுமே வேண்டாம் என சொல்லியே திருமணம் செய்தேன், நாங்கள் தங்கம் உபயோகிப்பது கிடையாது, நான் வரதட்சனை வாங்கி திருமணம் செய்யதால் பத்து லட்சம் ரூபாய்க்கு வரன் ரெடியாக இருந்தது..!!!


நான் வரதட்சணை வேண்டாம் என்று சொன்னதால் சம்பிரதாயத்துக்கு ஏதும் கொடுக்கவேண்டும் என சொல்லி எழாயிரம் ரூபாய் தந்தார்கள் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்...

என் மனைவி குடும்பத்தில் என்னை மிகவும் மதிப்பார்கள், மாமியார் வீட்டில் போயி விறைத்து கொண்டு அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் குழந்தையாக என்னையும் ஏற்று கொண்டார்கள், என் மனைவி இப்போதும் என்மீது மரியாதையும் அன்பு, பாசம் காட்ட இந்த வரதட்சினை விஷயத்தை சொல்லி காட்டி கிண்டலடிப்பாள், பிழைக்க தெரியாத மாப்பிளைன்னு ஹி ஹி...


நான் எங்கேயும் விருந்தினர் வீட்டிற்கோ, கல்யாணம் போன்ற நிகழ்ச்சிக்கோ, லேட்டாக போகும் போது, மனைவி இருக்கும் இடம் வந்ததும் அவள் எழும்பி நின்று விடுவாள், ஏன் என்று புரியாமல் ஒருநாள் கேட்டேன், என்னன்னு தெரியலை அத்தான், உங்களை பார்த்ததும் என்னை அறியாமலே எழும்பிருதேன் என்றாள்...!!! யோசிச்சு பாருங்க பத்து லட்சம் ரூபாய் வரதட்சினை வாங்கி இருந்தால் என் நிலை என்ன..?


என் பிளாக்கை என் குடும்பத்தில் பலரும் படிக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்....!!!

பாதியில் சாப்பாட்டை விட்டு ஓடிய அதே நண்பர்கள் இப்போது சொல்கிறார்கள், வரதட்சினை வாங்கி சாபத்தை வாங்காதீங்கடான்னு சொல்லி அழுகிறார்கள்....!!!

டிஸ்கி : இது என் அனுபவம்.



http://galattasms.blogspot.com



  • http://masaalastills.blogspot.com


  • [Continue reading...]

    என்னை நீ காப்பி அடிச்சா நான் உன்ன��� காப்பி அடிப்பே��்....!!!

    - 0 comments


    நாமதான் சில நேரம் முக்கியமான, உபகாரமான பதிவுகளை ரசிச்சு படிச்சிட்டு மற்றவங்களும் தெரிஞ்சிகிடட்டுமேன்னு காப்பி பேஸ்ட் பண்ணி இன்னாருக்கு நன்றின்னு போடுறோம்னு பார்த்தா கொய்யால நான் சிவாஜி சந்தானம் சாரை பேட்டி எடுத்த பதிவையும் ஒருத்தன் நன்றி கூட போடாமல் தினமலர் பெயர்ல பிளாக் வச்சு காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கான்...!!!



    சரி பேட்டியைத்தான் போட்டுருக்கான்னு பார்த்தால், தமிழ்வாசி பிரகாஷ் சாட்டுல வந்து மக்கா உங்க "பிரபல பதிவர்களின் பாடல் காமெடி கும்மி'யையும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறான்னு லிங்க் குடுத்தாரு, அட கொய்யால...!!!


    ஏற்கனவே டினமலர் பத்திரிக்கைக்கும் எனக்கும் வாய்க்கா சண்டை நடந்துட்டு இருக்கு, ஏன்னு கேக்குறீங்களா...? டினமலர் பத்திரிக்கை நடுநிலை இழந்து பலகாலம் ஆயாச்சு, என்னைக்கு நடிகைகள் விஷயத்தில் அண்ணாச்சி கைதாகி உள்ளே போனாரோ, அதோடு அந்த பத்திரிக்கை டமால், மறை கழண்டு போச்சு...!!! [[ஜெயில்ல என்னத்தை திங்க குடுத்தானுகளோ தெரியலை]]


    விக்கிக்கு ஆன்லைன்ல போயி டேய் அண்ணா தினமலர் என் பதிவை திருடிட்டான்னு சொன்னேன் மூதேவி கிடந்தது சிரியா சிரிக்கிறான் ராஸ்கல், நீ காப்பி பேஸ்ட் பண்ணினேதானே அதான் உன்னையும் காப்பி பேஸ்ட் பண்ணுரானுகன்னு சிரிக்கிறான் [[இருடி வச்சிருக்கேன் உனக்கு]] 


    அப்புறம் சொன்னான் மெயில் அனுப்பி கேளுடா தினமலருக்குன்னு சொல்லிட்டு, பதில் வரலைன்னா சாணியை கரைச்சிருவோம் நாளைக்குன்னு சொல்லிட்டு [[சண்டைன்னா என்னா சந்தோஷம்ய்யா இவனுக்கு ஆகிர்ர்ர் த்தூ]]  குளிக்க போயிட்டான் குளிச்சி பலகாலம் ஆச்சாம்...!!!


    சரி மெயில் அனுப்புவோம்னு கிளம்பும்போது, பிரகாஷ் ஆன்லைன்ல இருப்பதை கண்டு, அவருக்கு சாட் பண்ணி விஷயத்தை சொன்னேன், அவரும் செக் பண்ணிட்டு இது தினமலர் பத்திரிக்கை இல்லை அண்ணே, இது தமிழ் தினமலர் அப்பிடின்னு இருக்குன்னு சொல்லிட்டார், ஆஹா தினமலர் தப்பிடுச்சே....!!!


    அடுத்து ஆன்லைன்ல வந்த "நாய் நக்ஸ்"நக்கீரனும் அதை உறுதி செய்தார் ஹி ஹி சண்டை போடணும்னு இருந்த தக்காளி ஆசையில மண்ணு விழுந்துருச்சுன்னு மண்ணுல உருண்டு அழுதேன் ஹி ஹி.....


    அந்த லிங்க் கீழே குடுத்துருக்கேன், அதை ஒப்பன் பண்ணுனா ரொம்ப ஸ்லோவா இருக்கு, தகராறும் செய்யுது எனவே சிபி அண்ணனை போல தைரியம் உள்ளவர்கள் [[ஓஹோ]] போய் பாருங்கள்.
    ஒப்பன் பண்ணாதீங்க வைரஸ் இருக்கிறதாம்...!!!





    டிஸ்கி : ஏண்டா காப்பி பேஸ்ட் போடுறதுதான் போடுறே சிபி அண்ணன் "முன்பு" செய்தது போல ஒரு நன்றியாவது போடப்டாதா ஆக்கங்கெட்டவனே...!!!


    பஸ்கி : எலேய் இனியும் இப்பிடி செஞ்சேன்னா, மவனே நம்ம திவானந்தா'வின் அல்லக்கை சண்முகபாண்டியனை அருவாளோடு அங்கே அனுப்பிருவேன் சாக்குரதை...!!!

    மனோ'தத்துவம் : தோல்விதான் வெற்றியை நிர்ணயிக்கிறது...!!!






    http://galattasms.blogspot.com



  • http://masaalastills.blogspot.com


  • [Continue reading...]

    போதை தலைக்கு ஏறி���ால் பாட்டு வரும��....!!!

    - 0 comments




    பிளாக் லேபல் விஸ்கி அடிச்சுட்டு, இசை அமைப்பாளரை என்னா கொடுமை பண்ணுகிறார் சல்'மான் கான் பாருங்கள், இசை அமைப்பாளர் நாலடி தள்ளி நின்றே பாடுகிறார், எங்கே நம்மீது விழுந்து கடிச்சிருவானோ என்று பயந்து பாடுகிறார்...

    நேற்றுதான் இந்த வீடியோ கிளிப்பை பார்த்தேன் ஆத்தாடி நேற்று முழுவதும் விழுந்து விழுந்து சிரிச்சேன், ஆனானப்பட்ட இவரே இந்த புடுங்கு புடுங்குறார்னா நம்ம தமிழ் நடிகருங்க என்னா ரப்சு பண்ணி இருப்பாங்க ஹா ஹா ஹா ஹா...!!!



    http://galattasms.blogspot.com



  • http://masaalastills.blogspot.com


  • [Continue reading...]

    ஈத்துவக்கும் இன��பம்-(தொடர்ச்சி)

    - 0 comments


    தொடர்கிறது--

    கேள்வி.4-யாருக்குக் கொடுப்பது?

    பல நேரங்களில் நாம் நம்மிடம் கேட்கும் நபர் பெறத்  தகுதியானவர் அல்ல என்ற ஒரு தவறான  அபிப்பிராயத்தை நாமே உருவாக்கிக் கொண்டு கொடுப்பதைத் தவிர்க்கிறோம்.அது தவறான அணுகு முறையாகும்.எனவே கொடுக்கும்போது   இது போன்ற முன் முடிவுகள் எடுக்காமல் கொடுக்க வேண்டும்.

    கேள்வி.5-எப்படிக் கொடுக்க வேண்டும்?

    யாருக்குக் கொடுக்கிறோமோ அவர் சிறுமைப்படும் விதத்தில் கொடுக்கக் கூடாது.கொடுப்பதில் அளவற்ற பெருமை காட்டி வாங்குபவரைச் சிறுமைப் படுத்தக் கூடாது.

    கொடுக்கும்போது கூடப் பெறுபவர் கைதாழ்ந்தும் தன் கை உயர்ந்தும் இருக்கலாகாது என்னும் எண்ணத்தில் ,கர்ணன் கொடுக்க வேண்டிய பொருளைத் தன் கையில் வைத்து நீட்டப் பெறுபர் அதை எடுத்துக் கொள்வராம். சொல்வார்கள்"வலது கை கொடுப்பது,இடது கைக்குத் தெரியக்கூடாது" என்று. தான் கொடுப்பதை விளம்பரப்படுத்திப் பெருமை தேடாமல் பிறர் அறியாமல் கொடுப்பதே சிறந்தது.

    கேள்வி.6- கொடுத்தவர் மன நிலை எப்படி இருக்க வேண்டும்?

    இப்படிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்ததே என மகிழலாம்.ஆனால் நான் கொடுத்தேன் என்ற கர்வம் இருக்கலாகாது.கொடுத்து விட்டோமே என்ற வருத்தமும் இருக்கலாகாது.

    ஆனால் ஏகலைவன் வருத்தம் வேறு விதமானது

    ஏகலைவன் தனது வலது கைக் கட்டை விரலை துரோணருக்குக் குரு தக்ஷிணையாகக் கொடுத்த கதை நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால்       அதற்குப் பின் நடந்த ஒரு நிகழ்ச்சி அறியப்படாத ஒன்று.

    ஏகலைவன் இறக்கும் நேரத்தில் அவனிடம் கேட்கப்பட்டது,அவன் தனது கட்டை விரலை வெட்டிக் கொடுத்ததற்காக எப்போதாவது வருந்திய துண்டா என்று.அவன் சொன்னான்"ஆம் .ஒரே ஒரு முறை வருந்தினேன். குருக்ஷேத்ரப் போரில், அஸ்வத்தாமன் இறந்தான் என்ற பொய்ச் செய்தியால், மனமுடைந்து,போரிடுவதை நிறுத்தியிருந்த ஆச்சாரியாரை பாண்டவர்கள் கொல்வித்தபோது வருந்தினேன்,என் வலது கைக் கட்டைவிரல் இல்லையே என்று.இருந்திருந்தால்,என் குருநாதரை யார் கொன்றிருக்க முடியும்?"

    இந்த வருத்தம் முன்பே கொடுத்துவிட்டதால் ,மேலும் கொடுக்க இயலாமல் போய்விட்டதே என்னும் வருத்தம்.ஆக்க பூர்வமான வருத்தம்

    கேள்வி.7-என் மக்களுக்கு நான் எவ்வளவு விட்டுச் செல்ல வேண்டும்?

    வாரென் பஃபெட் அழகாகச் சொன்னார்"அவர்களுக்கு ஏதாவது செய்வதற்குத்தேவையானதை விட்டுச் செல்லுங்கள்.எதுவுமே செய்யாமல் இருப்பதற்குத் தேவையானதை அல்ல!"

    ஆம்!அவர்களிடமிருந்து உழைப்பென்னும் உன்னதமான பொருளைப் பறித்து விடக்கூடாது.

    கடைசியாக கபீர் அவர்களின்  அழகிய கூற்றுடன் முடிக்கிறேன்.

    "உங்கள் வீடு செல்வத்தால் நிறையும்போதும்,நீங்கள் பயணிக்கும் படகு தண்ணீரால் நிறையும்போதும்,இரண்டு கைகளாலும் அள்ளி எடுங்கள். இறையுங்கள்.அதுவே நன்மை பயக்கும்"

    டிஸ்கி:-இதை எழுதி முடித்ததும் ஒரு குறள் நினைவுக்கு வந்தது.யாராவது இதையும் சொல்வார்களோ? :))  

    "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
     சொல்லிய வண்ணம் செயல்"                          !!

    இயன்ற அளவு செய்யலாமே!



    http://dinasarinews.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com


  • [Continue reading...]

    பறவைகள் பலவிதம்-���ரியவை

    - 0 comments


    பாருங்கள்,ரசியுங்கள்,!

         அரியவை!

                                                              இமாலய மோனல்

                                                            ஃபார்மோசன் மேக்பை

                                                  லேடி ஆம்ஹெர்ஸ்ட்'ஸ்  ஃபெசண்ட்

                                                 குருதி  வடியும்  இதயக் குருவிகள்

                                                             பெயர் தெரியவில்லை!

                                                                    நிகோபார் புறா


                                                          வின்சன் சொர்க்கப் பறவை

                                                          கோல்டன் ஃபெசண்ட்
                                                                                                                        
                                                                           

                                                       


                                                                          


                                                        







    http://dinasarinews.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com


  • [Continue reading...]

    கட்சி கலைக்கப் ப���ுகிறது!தலைவர் வ��ுத்தம்!

    - 0 comments



    தனது கட்சி கலைக்கப்படுவதாக தலைவர் செ.பி. அவர்கள்  இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.அவரது கட்சி பற்றிய தகவல்கள் முன்பே இங்கு வெளியிடப்பட்டன. பாருங்கள்!

    அறிக்கையின் விவரம்-

    //இந்த ஆண்டு சனவரி மாதம் மிகுந்த எதிர்பார்ப்புடன் எனது "அனைத்திந்திய அண்ணா,பெரியார்,காமராஜ் ,ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம்" தொடங்கப்பட்டது.கட்சியின் அடிப்படைக் கொள்கையாக நேருவின் சோசலிஸம், காமராஜின் ஜனநாயக சோசலிஸம் ,ராஜாஜியின் தாராள மயமாக்கல்,பெரியார்,அண்ணாவின் சுயமரியாதைக் கொள்கைகள் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதக் கலவையான "அநேகாபெராயிசம்" உருவாக்கப் பட்டது.மிக நல்ல திட்டங்களை மக்கள் முன்,குறிப்பாகப் பதிவர்கள் முன் வைத்தேன்.எதிர்கால இந்தியாவின் சுபிட்சத்துக்கான தாரக மந்திரம் அநேகாபெராயிசம் என்பதில் எனக்கு இப்போதும் ஐயமில்லை.

    பதிவர் வாரியம் ஒன்று அமைத்துப் பதிவர்களுக்கு வீடு கட்டித்தருதல், இலவசக் கணினி வழங்குதல் போன்ற பல நல்ல திட்டங்களை பதிவர்கள் முன் வைத்தேன்.

    பின் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கிடலாம் எனத்தீர்மானித்து அது பற்றிக்  கட்சியின் ஆதரவாளரான நாஞ்சில் மனோ அவர்களுடன் கலந்தாலோசித்தேன்.

    ஆனால் இன்று நாடு இருக்கும் நிலையைப் பார்த்தால் என் கட்சி இந்த ஊழல் சூழலில் நிலைத்து நிற்க இயலாது எனத் தோன்றி விட்டது!விலைவாசி கட்டுக்கடங்காமல் ஏறி விட்டது .எந்தக்கட்சியும் அது பற்றி உண்மையான கவலை கொள்ளாமல் முதலைக் கண்ணீர் வடிக்கும் அவல நிலையைப் பார்க்கிறேன்.மக்கள் படும் இன்னல் என்னால் காணச் சகிக்கவில்லை.இயலாமையில் மனம் புழுங்குகிறேன்.

    எனவே சில நாட்கள் இந்தத்துன்பங்களைக் காணாத தூரத்துக்குப் போய்விடத் தீர்மானித்திருக்கிறேன். ஸ்விட்சர்லாந்து சென்று சில நாட்கள் இருந்து வருவேன்.
    அதற்கு முன் கட்சியைக் கலைக்கும் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

    நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

    அநேகாபெராயிசம் வாழ்க! //

    வெல்க தமிழகம்!

    இந்த அறிக்கை வெளியிடும்போது கட்சியின் மற்ற இரண்டே உறுப்பினர்களான அவரது மகளும்,மகனும் உடன் இருந்தனர்!




    http://dinasarinews.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com


  • [Continue reading...]

    அப்படிப் போடு!

    - 0 comments


    சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிப் பகுதியில் இருந்த பையனிடம் ஒரு பெரியவர் வந்தார்.

    "ஒரு அரைக்கட்டு பாலக் கீரை வேண்டும்"என்றார்.

    பையன் சொன்னான்"ஒரு கட்டாகத்தான் வாங்க வேண்டும் .அரைக் கட்டெல்லாம்  விற்பதில்லை."

    அவர் கேட்கவில்லை.பையனிடம் தகராறு செய்தார்,

    பையன் பார்த்தான்."நான் போய் மேலாளரைக் கேட்டுச் சொல்கிறேன்" என்று  சொல்லி மேலாளர் அறைக்குப் போனான்.மேலாளர் ஒரு பெண்.

    " மேடம், ஒரு கிழட்டு முட்டாள் வந்து அரைக்கட்டுக் கீரை கேட்டுக் கழுத்தறுக் கிறான்" என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்த்தான்.அந்தப் பெரியவரும் அவன் பின்னாலேயே அங்கு வந்திருந்தார்.

    பையன் மேலாளரிடம் சொன்னான்"மேடம்,மீதிப்பாதியை இந்தப் பெரியவர் வாங்கிக் கொள்கிறாராம்."

    மேலாளர் புரிந்து கொண்டு அரைக் கட்டுக் கொடுக்கச் சொல்லி விட்டார்.

    சிறிது நேரம் கழித்து மேலாளர் பையனைக்கூப்பிட்டார்.

    "மிகப் புத்திசாலித்தனமாக நிலைமையை சமாளித்தாய்.உனக்கு எந்த ஊர்?

    "இல்லாதபுரம்"என்றான் சிறுவன்

    (நான் ஏதாவது ஊர்ப் பேரைச் சொல்லி யாரிடமாவது வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாமே!)

    "ஏன் ஊரை விட்டு வந்தாய்"மேலாளர்

    "அங்கே  இருக்கிறவரெல்லாம் ஒண்ணு  அலுவகத்தில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்,  இல்லை பொறுக்கியாய்  ஊர் சுற்றுகிறார்கள்"

    "அப்படியா?என் கணவர் அந்த ஊர்தான்"என்றார் மேலாளர்.

    பையன் கேட்டான்"எந்த அலுவலகத்தில் வேலை பார்த்தார்?"



    http://dinasarinews.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com


  • [Continue reading...]

    யார் தெரியுமா?!

    - 0 comments


    படத்தில் இருப்பவர்களில் கலைஞரைத் தெரியும்;பெரியாரைத் தெரியும்;ஜகஜீவன்ராமைத்தெரியும் ஆனால் -----

    அந்த மணமகன் -மணமகள் யார்?தெரிகிறதா?

    புகைப்படம் -ஹிண்டு


    http://dinasarinews.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com


  • [Continue reading...]

    சூப்பர் சாப்பாட��.

    - 0 comments


    நமது தமிழ்நாட்டுத்  தினசரி சைவ உணவு  மூன்று  வரிசை முறைகளைக் கொண்டதாக  இருக்கிறது.



    --முதலில் சாம்பார் சாதம்,அடுத்து ரசம் சாதம்,கடைசியில் மோர் சாதம் என்று.



    இவை மனிதனின் மூன்று குணங்களின் குறியீடு.



    சாம்பார் என்பது பருப்பு சேர்ந்த குழம்பு.பருப்பு இல்லாமல் செய்தால் அதுவே 

    காரக்குழம்பு,  புளிக்குழம்பு,வற்றல் குழம்பு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.


    (இங்கு ஒரு செய்தியைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.அந்தக்காலத்தில்

     மதுரை கணேஷ் மெஸ்ஸில்,சாம்பாரோடு,வெந்தயக் குழம்பு அல்லது மிளகு 

    குழம்பு  ஏதாவது கொடுப்பார்கள்.ஆகா!!




    குழம்பு என்றால்,குழம்பியிருப்பது.  குழம்பில் காய் சேர்க்கப் படுகிறது;ஆனால்

    ரசத்தில் காய் சேர்க்கப் படுவதில்லை,குழம்பில் சேர்க்கப்படும் காயைத் தான் 

    என்றும் சொல்வார்கள். 

    கி.வா.ஜ.அவர்கள் அழகாகச் சொல்வார்,குழம்பில் 'தான்' இருக்கிறது எனவே


     குழம்பியிருக்கிறது.ரச்த்தில் 'தான்' இல்லை ;அதனால் தெளிவாக 

    இருக்கிறது.

     எங்கு "தான்" இருக்கிறதோ அங்கு குழப்பம்தான் இருக்கும்.


      
    குழப்பம் என்பது  தமோ குணத்தைக் குறிக்கும். எனவே குழம்பிய சாம்பார்  

     குழப்பம் நிறைந்த  தமோ குணத்தையும்,தெளிவான ரசம் ரஜோ 

    குணத்தையும்,  மோர் சத்துவ குணத்தையும்  குறிக்கும்.

    நமது இந்த உணவு நமக்கு அறிவுறுத்துவது நாம் செல்ல வேண்டிய பாதையை-

    குழப்பம் நிறைந்த செயலற்ற நிலையிலிருந்து, தெளிவான செயல்பாட்டுக்குச் சென்று பின் கடைசியில்  'அறிந்துகொள்ளும்" நிலையை அடைவது.



    இதெல்லாம் எழுதியதில் பசி வந்து விட்டது!

    ஆனால் இப்ப  டிஃபன்தான்.

    நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் இந்த.சாம்பார்,ரசம்,மோர் எல்லாம்..

    சாப்பிட்டு விட்டு "ஐ வாண்ட் சம் மோர் "என்று சொல்லலாம்!

    (இப்போதுதான் கவனித்தேன்.இந்த ஆண்டில் ஜனவரி முதல் இன்று வரை இப்பதிவுடன் 200 பதிவுகள் எழுதி விட்டேன்! நன்றி!நன்றி!!நன்றி!!!)





    http://dinasarinews.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com


  • [Continue reading...]

    யாருக்காக யார் ச���வது?

    - 0 comments



    இராமன் என்பவர் இறந்து விட்டார்.அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.

    அவரது மனைவி,9 வயதான மகன்,பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

    இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் ஒருவர் அப்போது அங்கு வந்தார்.

    அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.

    இராமனின் மனைவி சொன்னாள்"குருஜி!இவ்வளவு இளம் வயதில் என்னையும்  என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே? நான்  என்ன செய்வேன்?அவர் உயிருடன் வருவாரென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்"

    குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த  முயன்றார்.ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை.

    கடைசியில் அவர் கேட்டார்"ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்"

    தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

    பின் சொன்னார்"இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,இந்தத் தண்ணீரை அருந்தலாம்.இராமன் திரும்பி வருவார்.ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்"

    அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.ஆனால் யாரும் முன் வரவில்லை.

    அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்" ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக   உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?"

    தந்தை சொன்னார்"நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு?அளுக்காக நான் வாழ வேண்டும்"

    தாயைக் கேட்க அவள் சொன்னாள்"அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?"

    மனைவி சொன்னாள்"நான்  இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? அவனுக்காக நான் வாழ வேண்டும்"

    குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்"குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?"

    அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள் "குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமா?அவன் ஒரு குழந்தை.இனிமேல்தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?"

    குருஜி சொன்னார்"உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது  என்று  நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவேதான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் .இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்"

    சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.

    ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.

    எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு.
    நாம் யார் அதைக் குறை சொல்ல? கேள்வி கேட்க?

    "நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம்,அதில் பச்சை இலைகள்   இருக்கும் வரை.இலைகள் வாடிப்போய்,அது உயிரற்ற குச்சியானால்   அதை நாம் கவனிக்கப் போவதில்லை. அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை."

    "உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்"

    "பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே"




    http://dinasarinews.blogspot.com



  • http://sex-story-indian.blogspot.com


  • [Continue reading...]

    Silk Smitha’s story in Tamil

    - 0 comments
     

    Abhirami Ramanathan has procured the distribution rights of The Dirty Picture. He will distribute the film in Tamil Nadu and Kerala regions. The Dirty Picture is due to be released tomorrow and its Tamil version will also hit the screens simultaneously.

    The film is based on the life of late actress Silk Smitha and therefore producer Ekta Kapoor has decided to release the Tamil version to attract the audiences to the theatres. Vidya Balan essays the role of Silk Smitha in the film with Naseeruddin Shah playing an important role. Milan Luthria has directed this film.

    [Continue reading...]

    கனிமொழி ‘வாங்கி��’ ஜாமீன்

    - 0 comments


    கிட்டத்தட்ட 192 நாட்களாக இதோ ரிலீஸாகும், அதோ ரிலீஸாகும் என்று திமுக குடும்பத்தினர் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த திரைப்படம் ஒரு வழியாக வெளியாகிவிட்டது! ‘கனிமொழி உள்ளே இருக்கும் வரையில் சோனியாவை சென்று சந்திப்பது சரியாக இருக்காது!’ என்று சொன்னவர், இதற்கு மேல் முரண்டு பிடித்தால் தனக்குதான் ஆபத்து என்று உணர்ந்து, 'உடல் நலம் சரியில்லாத சோனியாவை' சந்திக்க எப்போது ஓடோடிச் சென்றாரோ அப்போதே இந்த ரிலீஸை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். 60 சதவிகிதம் வைத்திருந்தவரை வயதான [...]


    http://kathaludan.blogspot.com



  • http://kannottam.blogspot.com


  • [Continue reading...]

    கலைஞருக்கே விடு��லை!

    - 0 comments


    கடந்த ஆறு மாதங்களாக கலைஞரின் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருஞ்சி முள் இன்று அகன்றது. அவ்வகையில் திமுக சார்பு சிந்தனைகள் கொண்டவன் என்கிற வகையில் கனிமொழிக்குக் கிடைத்திருக்கும் ஜாமீன் எனக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதாவின் ஆட்சி, முன்னெப்போதும் இல்லாத வகையில் கொடுங்கோல் ஆட்சியாக தற்போது மலர்ந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு எதிரான கலைஞரின் குரல் வலுவற்றதாகவே இருந்து வருகிறது. இது கலைஞரின் வழக்கமில்லை. மிக வலுவான எதிரியாக இருந்த எம்.ஜி.ஆருக்கே 'தண்ணி' காட்டிக் கொண்டிருந்தவர், இப்போது ஏன் [...]


    http://kathaludan.blogspot.com



  • http://kannottam.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger