சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிப் பகுதியில் இருந்த பையனிடம் ஒரு பெரியவர் வந்தார்.
"ஒரு அரைக்கட்டு பாலக் கீரை வேண்டும்"என்றார்.
பையன் சொன்னான்"ஒரு கட்டாகத்தான் வாங்க வேண்டும் .அரைக் கட்டெல்லாம் விற்பதில்லை."
அவர் கேட்கவில்லை.பையனிடம் தகராறு செய்தார்,
பையன் பார்த்தான்."நான் போய் மேலாளரைக் கேட்டுச் சொல்கிறேன்" என்று சொல்லி மேலாளர் அறைக்குப் போனான்.மேலாளர் ஒரு பெண்.
" மேடம், ஒரு கிழட்டு முட்டாள் வந்து அரைக்கட்டுக் கீரை கேட்டுக் கழுத்தறுக் கிறான்" என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்த்தான்.அந்தப் பெரியவரும் அவன் பின்னாலேயே அங்கு வந்திருந்தார்.
பையன் மேலாளரிடம் சொன்னான்"மேடம்,மீதிப்பாதியை இந்தப் பெரியவர் வாங்கிக் கொள்கிறாராம்."
மேலாளர் புரிந்து கொண்டு அரைக் கட்டுக் கொடுக்கச் சொல்லி விட்டார்.
சிறிது நேரம் கழித்து மேலாளர் பையனைக்கூப்பிட்டார்.
"மிகப் புத்திசாலித்தனமாக நிலைமையை சமாளித்தாய்.உனக்கு எந்த ஊர்?
"இல்லாதபுரம்"என்றான் சிறுவன்
(நான் ஏதாவது ஊர்ப் பேரைச் சொல்லி யாரிடமாவது வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாமே!)
"ஏன் ஊரை விட்டு வந்தாய்"மேலாளர்
"அங்கே இருக்கிறவரெல்லாம் ஒண்ணு அலுவகத்தில் நல்ல வேலையில் இருக்கிறார்கள், இல்லை பொறுக்கியாய் ஊர் சுற்றுகிறார்கள்"
"அப்படியா?என் கணவர் அந்த ஊர்தான்"என்றார் மேலாளர்.
பையன் கேட்டான்"எந்த அலுவலகத்தில் வேலை பார்த்தார்?"
http://dinasarinews.blogspot.com
http://sex-story-indian.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?