ஒரு வாரத்துக்கு முன்பு பஹ்ரைனில் நடந்த சம்பவம், என் மனதை பாதித்து, அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
மாலை சமயம் எட்டு மணி, நானும் எனது நண்பர்களும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவகம், அங்கே சாப்பிடுவதற்காக நண்பர்களோடு சென்றிருந்தேன், உள்ளே நுழைந்ததும், இன்னும் இரண்டு நண்பர்கள் உள்ளே அமர்ந்திருந்ததை நாங்கள் கண்டதும், அவர்கள் எங்களையும் அழைத்ததால், அவர்களுடன் போயி அமர்ந்தோம்.
அதில் ஒருவன் மலையாளி, ஒருவன் கர்நாடகா, ஒருத்தனுடைய குடும்பம் கேரளாவில் இருக்கிறது இன்னொருவனுடைய குடும்பம் பஹ்ரைனில் அவன் கூடவே உள்ளது....
சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு ஜாலியா பழைய நினைவுகளை சொல்லி சிரி சிரி என சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தோம், எல்லாருமே ஹோட்டல் ஃபீல்டுல வேலை பார்ப்பவர்கள், சாப்பாடும் பரிமாறப்பட்டது. ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருக்கும் போதே மலையாளி நண்பனுக்கு ஒரு மிஸ்கால் வந்தது,
எடுத்துப்பார்த்தவன் பதறியபடி போன் பேச எச்சில் கையோடு வெளியே போனான், திரும்பி வந்தவன் என் மனைவியின் போன் என்றான் நாங்கள் ஒன்றுமே சொல்லவில்லை, கொஞ்சநேரம் கழித்து போனே வருகிறது, இவன் சாப்பிட்டபடி போனை அட்டன்ட் பண்ணினான்....
ஐயோ நான் நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன், என்னது மணி ஒன்பதரையா இதோ இப்பவே போறேன் வீட்டுக்கு சரி சரி என போனை கட் செய்தான், என்னடான்னு கேட்டா அவன் சொன்னது, ராத்திரி ஒன்பது மணி ஆச்சுன்னா நான் என் ரூமில் இருக்கணும் என்பது என் மனைவியின் ஆர்டர் என்றான்...
அதான் உன் மனைவி கேரளாவில் அல்லவா இருக்கிறாள் நீ ரூமில் இருப்பதாக பொய் சொல்லவேண்டியதுதானே என்றால், டேய் அவள் சித்தப்பா மகன் என் பக்கத்து ரூமில் இருக்கிறான், அவனுக்கு போன் செய்து கேட்டு விடுவாள், நான் என்னென்ன பண்ணிட்டு இருக்கேன்னு அவன் அவளுக்கு சொல்லிருவான் என சொல்லி வேதனைபட்டு கொண்டிருக்கும் போதே....
கர்நாடகா நண்பனுக்கு போன் வருகிறது, அவனும் போனை எடுத்து இதோ பத்து நிமிஷத்தில் வந்துடுறேன் செல்லம்னு அலறினான், இப்படியாக மறுபடியும் மறுபடியும் இவர்களுக்கு போன் வந்து கொண்டிருக்க கடுப்பான மற்ற நண்பர்கள் அவர்களை பயங்கரமாக கிண்டல் செய்து கொண்டிருந்தோம்...
கொஞ்சநேரம் கழித்து மலையாளி நண்பனின் போனடிக்க எடுத்தவன் தாறுமாறாக திட்டி விட்டான் மனைவியை, என் என்னை இப்படி படுத்துகிறாய், நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு அரைமணி நேரம் தாமதமாக நான் ரூமுக்கு போனால் என்ன, என்ன நீ பஹ்ரைன்லையா இருக்கிறாய்..? ஊரில்தானே இருக்கிறாய் என திட்டுகிறான், எங்களுக்கு சங்கடமாக இருந்தது...
அடுத்தவனுக்கும் போன் வந்தது, அவனும் தாறுமாறாக திட்ட தொடங்கினான், என்ன எல்லா நாளும் ஒன்பது மணின்னா உன் மடியிலதானே இருக்கிறேன், ஒருநாள் அரைமணி நேரம் லேட்டா வந்தா என்னா குறைஞ்சி போகும் உனக்குன்னு திட்டுறான்....
நாங்கள் அமைதியாக இருந்து விட்டு அவர்களை உடனே கிளம்ப சொன்னோம், பாதி சாப்பாட்டுலையே எழும்பி நண்பர்கள் போவதை கண்டு மனசு தாங்காமல் நாங்களும் சாப்பிடாமல் எழும்பி விட்டோம்...
ஏன் இப்படி சில மனைவிகள் புருஷனை படுத்துகிறார்கள் என்பதை விசாரித்தபோது, என் அனுபவத்தையும் வைத்து சோதித்தபோது எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள்.....
மலையாளி நண்பன் வாங்கிய வரதட்சனை நூறு பவுன் நகை, பத்து லட்சம் ரூபாய் கேஷ், கர்நாடகா நண்பன் வாங்கிய வரதட்சனை நூற்றி இருவது பவுன் நகை, எட்டு லட்சம் ரூபாய் கேஷ் கறாராக கேட்டு வாங்கி இருக்கிறார்கள்.....!!!! இது என் நண்பர்களே சொன்னது, பின்னே எப்பிடிய்யா மனைவி உங்களை மதிப்பார்கள், நீங்கள் ஒரு விற்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட ஒரு ஜடமாகதானே உங்களை கருதுவார்கள் மனதில்...?!!!!
அப்போ நீ என்ன யோக்கியமான்னு நினைப்பவர்களுக்கு, நான் வரதட்சிணையாக ஒன்றுமே வேண்டாம் என சொல்லியே திருமணம் செய்தேன், நாங்கள் தங்கம் உபயோகிப்பது கிடையாது, நான் வரதட்சனை வாங்கி திருமணம் செய்யதால் பத்து லட்சம் ரூபாய்க்கு வரன் ரெடியாக இருந்தது..!!!
நான் வரதட்சணை வேண்டாம் என்று சொன்னதால் சம்பிரதாயத்துக்கு ஏதும் கொடுக்கவேண்டும் என சொல்லி எழாயிரம் ரூபாய் தந்தார்கள் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்...
என் மனைவி குடும்பத்தில் என்னை மிகவும் மதிப்பார்கள், மாமியார் வீட்டில் போயி விறைத்து கொண்டு அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் குழந்தையாக என்னையும் ஏற்று கொண்டார்கள், என் மனைவி இப்போதும் என்மீது மரியாதையும் அன்பு, பாசம் காட்ட இந்த வரதட்சினை விஷயத்தை சொல்லி காட்டி கிண்டலடிப்பாள், பிழைக்க தெரியாத மாப்பிளைன்னு ஹி ஹி...
நான் எங்கேயும் விருந்தினர் வீட்டிற்கோ, கல்யாணம் போன்ற நிகழ்ச்சிக்கோ, லேட்டாக போகும் போது, மனைவி இருக்கும் இடம் வந்ததும் அவள் எழும்பி நின்று விடுவாள், ஏன் என்று புரியாமல் ஒருநாள் கேட்டேன், என்னன்னு தெரியலை அத்தான், உங்களை பார்த்ததும் என்னை அறியாமலே எழும்பிருதேன் என்றாள்...!!! யோசிச்சு பாருங்க பத்து லட்சம் ரூபாய் வரதட்சினை வாங்கி இருந்தால் என் நிலை என்ன..?
என் பிளாக்கை என் குடும்பத்தில் பலரும் படிக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்....!!!
பாதியில் சாப்பாட்டை விட்டு ஓடிய அதே நண்பர்கள் இப்போது சொல்கிறார்கள், வரதட்சினை வாங்கி சாபத்தை வாங்காதீங்கடான்னு சொல்லி அழுகிறார்கள்....!!!
டிஸ்கி : இது என் அனுபவம்.
http://galattasms.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?