Tuesday, 13 September 2011

இதுதான் காந்திய��் போராட்டமா?

- 0 comments


ஊழல் பெருகிவிட்டது என்பதிலும், அரசியல் அமைப்புகளும் அதிகாரிகளும் ஊழல்வாதிகளாகிவிட்டனர் என்பதிலும் அவர்களைத் தடுத்து நிறுத்தியாகவேண்டும் என்பதிலும் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்கமுடியாது. ஆனால், இருக்கின்றன சட்டங்கள் போதாது என்று சொல்லும்போதும், நிறைவேற்றும் முறைகளில் நிறைய போதாமைகள் இருக்கின்றன என்று சொல்லும்போதும், ஒரு புதிய சட்டம் தேவை என்று வாதிடும்போதும் சில விஷயங்களை நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். அண்ணா ஹசாரேவின் போராட்டம் சந்திக்கும் கருத்தியல் பிரச்னை இதுதான். முதலில் அவருடைய வழிமுறையை அலசுவோம். ஊழலை ஒழிக்க ஒரு வடிவத்தினைக் [...]

http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com

  • [Continue reading...]

    புதிய பகுதி : ஹாய�� அட்வகேட்!

    - 0 comments


    சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னிரண்டு ஆண்டு காலம் வழக்கறிஞராக இருக்கும் S.P. சொக்கலிங்கம், சட்டம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு விரிவாக இங்கே பதிலளிக்கிறார்.  அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் இவர் தனிக்கவனம் செலுத்திவருகிறார். காப்புரிமை பற்றிய இவரது புத்தகம் கிழக்கு பதிப்பகத்தில் வெளியாகியுள்ளது. சட்ட இதழ்களில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வருகிறார். உங்கள் கேள்விகளை editor@tamilpaper.net என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று ஹாய் அட்வகேட் வெளிவரும். கேள்வி : ராஜீவ் [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com

  • [Continue reading...]

    ஆழி பெரிது

    - 0 comments


    42. வேதத்தின் சமூகப் பார்வை-1. ஆழியும் பிரமிடும் சென்ற அத்தியாயத்தில் அசுவமேத வேள்வி ஆபாச பாலியல் சடங்கா என்பதைப் பார்த்தோம். இதனுடன் இணைந்த மற்றொரு பிரபலமான, தவறான கண்ணோட்டம் வேதங்கள் குறித்து உண்டு.  வேத காலத்தில் சாதியம் இருந்ததா? வேத கால வர்ண அமைப்பு எத்தகையதாக இருந்தது? இதனை முழுமையாக அறிந்து கொள்ள வேத சமுதாயத்தை மட்டும் தனியாகப் பார்க்காமல் பொதுவாக மானுட சமுதாயங்களில் சமூக படிநிலைகள் எப்படி உருவாகின்றன என்று கவனிக்கவேண்டும். அத்துடன் அத்தகைய படிநிலைகளில் [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com

  • [Continue reading...]

    காதில் பஞ்சு

    - 0 comments


    புதிய கவர்னர் தமிழகத்தில் பொறுப்பேற்றதுமே திமுக எம்எல்ஏக்கள் குழு அவரைச் சென்று சந்தித்து ஒரு புலம்பல் புலம்பி விட்டு வந்து விட்டார்கள். தமிழகமெங்கும் திமுகவினர் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன என்று மூக்கைச் சிந்தியிருக்கிறார்கள். அதிமுகவினர் மீது எந்தப் புகார் கொடுத்தாலும் கண்டுகொள்வதில்லை, ஆனால் திமுகவினர் மீது மட்டும் உடனடியாக வழக்கு தொடுக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்கள். இப்போது பிரச்னை அவர்களைக் கைது செய்ததா, அல்லது அதிமுகவினரைக் கைது செய்யாததா என்று தெரியவில்லை. திமுகவினர் பரவலாக நில அபகரிப்பில் [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com

  • [Continue reading...]

    மீண்டும் எம்.ஜி.ஆர்

    - 0 comments


    தென் தமிழ் மாவட்டங்கள் மீண்டும் ஒரு முறை கலவர பூமியாகியிருக்கின்றன! பரமக்குடி, மதுரை என்று சாதித் தீ கொழுந்து விட்டு எரிகிறது.  'ஜாதி கூடாது. ஜாதி இல்லை' என்று அரசு ஒரு புறம் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நாளொன்றுக்கு முளைக்கும் ஜாதிக் கட்சிகளுக்கும், அவ்வப்போது இப்படி நடக்கும் ஜாதிக் கலவரங்களுக்கும் மட்டும் நாட்டில் பஞ்சமே இல்லை! ஊர்ப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள் விரைவில் நீக்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இப்படி பெயர்ப் பலகைகளில் இருந்து [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com

  • [Continue reading...]

    நாவலர் vs கருணாநி��ி

    - 0 comments


    க – 20 காவிரி ஆறு. தமிழ்நாட்டு விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரம். அன்றைய மைசூர் மாகாணத்துக்கும் (இன்றைய கர்நாடகா) அன்றைய சென்னை ராஜதானிக்கும் (இன்றைய தமிழ்நாடு) தண்ணீரை வாரி வழங்கும் ஆறு. இரு மாநிலங்களும் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியின் உபரி நீரை பகிர்ந்துகொள்ளும் முறைகளைக் கண்டறிந்து, தீர்மானித்துவிடவேண்டும் என்றும் அதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால் மத்திய அரசின் மூலமாகவோ, நடுவர் [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com

  • [Continue reading...]

    ஆதாம் கடித்த மிச���சம் – அத்தியாயம�� 19

    - 0 comments


    ஜனவரி 9,  2007. ‘இன்று நாங்கள் மூன்று புரட்சிகரமான பொருள்களை அறிமுகம் செய்கிறோம். டச் கண்ட்ரோல் இருக்கும் பெரிய ஸ்கீரின் ஐ-பாட், அப்புறம் போன், அப்புறம் இணையத்தை அணுக ஒரு கருவி.’ சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஏன் இப்படி சொல்கிறார் என்று யோசிக்கும் போதுதான் உண்மை புரிந்தது. இந்த மூன்று பொருள்களும் உண்மையில் ஒன்றுதான். ‘அதற்கு ஐ-போன் என்று பெயரிட்டிருக்கிறோம்!’. இப்படி அறிவித்துதான் ஆப்பிள் போனை அவர் அறிமுகப்படுத்தினார். அதே ஸ்டீவ் ஜாப்ஸ், [...]

    http://youngsworld7.blogspot.com



  • http://youngsworld7.blogspot.com

  • [Continue reading...]

    அரசன் என்பவன் [[ள��]] புளியம்பழம் போ��� இருக்கவேண்டும்....!!!???

    - 0 comments


    மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
    முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த துõதுவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

    மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

    பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

    மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

    தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.
    அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.
    அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

    அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.
    ""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

    ""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.
    அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

    ""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

    தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

    அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்....!!!


    ஒரு ஜோக்...

    காலையில் நாயை கையில் பிடித்து வாக்கிங் வருபவரிடம் ஒரு குடிகாரன்...

    குடிகாரன் : என்ன காலையிலேயே ஒரு கழுதை கூட வர்ற...
    வாக்கிங் வந்தவர் : உனக்கு கண்ணு தெரியலையா அது நாய்'டா வெண்ணை...
    குடிகாரன் : நான் கேட்டது நாய்'கிட்டேடா டுபுக்கு....





    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com

  • [Continue reading...]

    கள்ளநோட்டு அச்ச��ிக்கிறானுங்கடோ��்...!!!

    - 0 comments


    2005ம் ஆண்டு அச்சிடப்பட்ட நோட்டுகளின் வடிவமைப்பு ரகசியம் அடங்கிய 'டெம்ப்ளேட்' (template) வெளியில் கசிந்துவிட்டதால் தான் 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிகரித்துவிட்டதாக என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

    நாட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பு அதிகரித்து வருவது குறித்து சிபிஐ, வருவாய் புலனாய்வுப் பிரிவினர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், மத்திய தடயவியல் ஆய்வக அதிகாரிகள் அடங்கிய குழு தீவிர விசாரணை நடத்தியது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

    ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும்போது அதில் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் சங்கேத குறியீடு, வடிவமைப்பு ரகசியங்கள் அடங்கிய 'டெம்பிளேட்' கள்ள நோட்டு அச்சிடும் கும்பல்களின் கையில் எப்படியோ போய்ச் சேர்ந்துள்ளது.

    இதைக் கொண்டு தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இந்தக் கும்பல்கள் அச்சிட்டு வெளியிட ஆரம்பித்துள்ளன.

    கள்ள நோட்டுகள் அச்சடிப்போருக்கு அது எந்த காகிதத்தில் அச்சடிக்கப்படுகிறது, அதற்கு எந்த வகை மை பயன்படுத்தப்படுகிறது, அது எங்கு கிடைக்கும், நோட்டுகளின் மையத்தில் உள்ள சில்வர் பார், வாட்டர் மார்க் வடிவமைபபு போன்ற தகவல்கள் எளிதாகக் கிடைத்து வருகின்றன என்றும் சிபிஐ கூறியுள்ளது.

    மேலும் எந்த வகையான மையை, எந்தெந்த அளவில் பயன்படுத்தினால் உண்மையான நோட்டுகளுக்கு நிகராக தன்மையைக் கொண்டு வர முடியும் போன்ற விவரங்களையும் இந்தக் கும்பல்கள் அறிந்து வைத்துள்ளன என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

    இந்த ரகசியம் வெளியில் கசிந்ததில் பாகிஸ்தானின் உளவுப் பிரிவின் கைவரிசை இருக்கக் கூடும் என்று சந்தேகி்க்கப்படுகிறது.
    நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் வரை ரூ. 1,69,000 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

    டிஸ்கி : நாங்களும் ஒருநாளைக்கு ரெண்டு பதிவு போடுவோம்ல [[சிபி கவனத்திற்கு]]





    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com

  • [Continue reading...]

    கூடங்குளம் சாகு��்வரை உண்ணாவிரதத���தில் நம் பதிவர் "கூடல் பாலா"....!!!

    - 0 comments


    அணுமின் நிலையத்தை மூடக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள் மக்கள் கூடங்குளத்தில், இதில் நம் சக பதிவர் "கூடல் பாலா"வும் பங்கெடுத்துள்ளார். பதிவர்களாகிய நாமும் நம்மாள் முடிந்த ஆதரவினை கொடுக்கவேண்டும்.

    அரசின் இறுக்கத்தை தளர்த்த வேண்டும். ஜப்பானில் அணு நிலையத்தால் அவர்கள் படும்பாடு என்னான்னு நமக்கு நல்லாவே தெரியும், இன்னும் ஜப்பான் வெளியிடாத ரகசியங்களும் இருக்கு என்பதே உண்மை...!!!

    கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டிய அரசாங்கம், அதற்கு ஆபத்து வந்தால் அதை தடுக்கும் உபகரனமில்லாமல் அதை கட்டிக் கொண்டிருக்கிறது, அங்கே வசிக்கும் நாமென்ன பூனையா, நாயா அல்லது குரங்கா சோதனை செய்ய...???

    பல மாநிலங்கள் விரட்டிவிட்ட இந்த திட்டத்தை ஏமாளிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என இங்கே கொண்டு வந்திருகிறார்கள், ஆரம்பத்திலே இருந்தே மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள், செவிசாய்க்காத அரசு தொடர்ந்து உலையை கட்டி வருகிறது...

    அரசாங்கத்தின் முக்கியபுள்ளிகள் தலைநகரில் இருப்பதால் அவர்களுக்கு அச்சமுமில்லை, மக்களை குறித்த கவலையுமில்லை, நாடு எரியும்போது பிடில் வாசித்தவனின் வம்சத்தில் வந்தவர்களுக்கு ஈவு இரக்கம் கிடையாதுன்னு வரலாறே சாட்சி சொல்லுது...!!!

    பதிவர்களே இந்த போராட்டத்தில் நம் சக பதிவரும் நண்பனுமான "கூடல் பாலா" பங்கெடுத்திருப்பது பதிவர்களாகிய [[பதிவுலகம்]] நமக்கு பெருமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உடனே நெட்டை ஓப்பன் செய்யுங்கள் உங்கள் கண்டனத்தை தெரிவியுங்கள், இதற்கும் போராட அண்ணா ஹசாரே வரவேண்டாம், நாம் ஒவ்வொரு பேரும் அண்ணா ஹசாரே'யாக மாறுவோம், வெற்றிமாலை சூடுவோம் நன்றி......
     
    கொசுறு : கூடங்குளம் மக்கள் போராட்டத்தை மறைக்கவே பரமக்குடியில்  கலவரம் உண்டாக்கப்பட்டதான்னு மைல்டா நண்பன் ஒரு டவுட்டு சொல்றான், ஆண்டவனுக்கே வெளிச்சம்.
     
    கூடல் பாலா லிங்க் : http://koodalbala.blogspot.com/2011/09/blog-post_08.html#more
     
     


    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com

  • [Continue reading...]

    பாக்கெட் நிறைய ப���்புகள் வாங்கிய ��ரு பதிவன் பார்ட் 2...!!!

    - 0 comments


    ஏர்போர்ட் டிப்பாச்சர் உள்ளே நுழைந்து, லக்கேஜை பேப்பரில் சுற்றி தந்த மராட்டி பெண்ணுக்கு இருநூறு ரூபாய் [[டிப்ஸ் அல்ல சார்ஜிங்]] குடுத்துட்டு, பஹரைன் தினார் சேன்ஜ் பண்ணும்படி பேங்கை தேடினேன், சுற்றி சுற்றி, பேங்கை தேடும் போது நான் இதே ஏர்போர்டில் வேலை செய்த அந்தநாட்கள் பசுமையாக நினைவில் வந்தது....

    அடேங்கப்பா இந்த ஏர்போர்டில் என் கால்படாத ஒரு இடமும் பாக்கி இருந்ததில்லை. இப்போது இருக்கும் பயங்கர மாற்றங்களும் கெடுபிடிகளும் அன்று சுத்தமாக கிடையாது, ஏன் அன்று போலீசே [[இமிகிரேஷன் தவிர]] கிடையாது, ஆனால் இன்று, ஏர்போர்ட் செக்கியூரிடி, போலீஸ், மிலிட்டரி, சி எஸ் ஐ இப்பிடி பயங்கரமான கண்காணிப்புகள் நடக்கிறது...!!!

    அன்றும் இப்படி அடிக்கடி பாம் பீசனி நடக்கும் எல்லாரும் ஏர்போர்ட்டை விட்டு வெளியே ஒடுங்கன்னு அலவன்ஸ் பண்ணுவாங்க, ஓடுவோம், பாம் இருந்துச்சா இல்லையான்னு வெளியே சொல்லமாட்டாங்க பாம் ஸ்குவாட் ஆளுங்க. இப்போ பாருங்க மும்பையில் குண்டு வெடிப்பு ஒரு பேஷனாகவே ஆகிருச்சி, ஈராக்குக்கு அடுத்து மும்பைதான்னு நினைக்கேன்...

    அப்பிடியே நான் நின்ற இடத்தை அவதானிக்கும் போது, நான் நின்ற இடம், அப்போது விசிட்டர்களுக்கான வரவேற்பு இடம் அது, இப்போது பேங்க் அது இது என செக்யூரிடி பாதுகாப்புடன் நடக்கிறது. சரி இனி நம்ம வேலையை சாரி பல்பை பார்ப்போம்...

    ம்ம்ம் அதோ தாமஸ்குக் பேங்க் தெரியுது. போனேன் கரன்சி ரேட் கேட்டேன் இம்புட்டுன்னு அவன் சொன்னது எனக்கு சந்தேகத்தை கிளப்பவே, அவன் ரெண்டு தினார் ஊழல் பண்ண பிளான் பண்ணது தெரிஞ்சதும் [[ஆமாம் பெரிய அண்ணா ஹசாரே]] கோபப்பட்டதும், என்னை மடக்கினான் பாருங்க, செர் [[சார்'தான்]] பேயிங் பையிங் பண்ணும்போது இந்த மாற்றங்கள் இருக்கும்னு எனக்கு சரியா பல்பு குடுத்து குழப்பினான் ஹி ஹி...ஆக ரெண்டு தினார் போச்சி....

    சரி இந்தியன் மணி எல்லாவற்றையும் தினாராக மாற்றிவிட்டு, எப்போதும் போவதுபோல இமிகிரேஷன் போயி போலீஸ் காட்டுன லைன்ல போயி நின்றேன், என் முறை வந்ததும் கவுன்டரில் போனேன் பெண் ஆபீசர் இருந்தாள்,  பாஸ்போர்ட் போர்டிங் கார்டை குடுத்ததும் இன்னும் ஏதோ வேணும்னு சைகை செய்தாள்.

    என்னா மேடம்னு கேட்டதும், இமிகிரேஷன் பார்ம் எங்கேன்னு கேட்டாள், மேடம் நாங்க லேண்ட் ஆகிற இடத்தில்தானே இமிகிரேஷன் பார்ம் குடுக்கணும் இங்கே எதற்குன்னு கேட்கவும், டென்ஷனான அவள் யோவ் நீயெல்லாம் படிச்சவந்தானே உள்ளே வரும்போது போர்டு எல்லாம் படிகிறதில்லையா என்ன ஊர்ல இருந்து நேரே இங்கேதான் வர்றியா..? [[மேடம் வீடு ஏர்போர்ட் பக்கத்துலதான்]] என்று விரட்ட...

    என்னடா எங்கே இருக்கு அந்த போர்டுன்னு பேக் அடித்தேன், என்ட்ரன்ஸ்லயே போர்டு இருந்தது [[ஹி ஹி பல்பு]]....இதனால் ஆகப்பட்ட எல்லாருக்கும் சொல்லிக்கொள்வது, வெளிநாடு போகிறவர்கள் டேக் ஆஃப் ஆகுற இடத்துலேயே இமிகிரேஷன் பார்ம் ஃபுல் பண்ணிட்டு போங்க ஏன்னா முன்னேமாதிரி இல்லை இப்போ...[[பயங்கரவாதம் காரணம்]]

    ம்ம்ம் அப்புறமா செக்கியூரிடி செக்கிங் எல்லாம் முடிஞ்சி, எனக்கு குடுக்கப்பட்ட அஞ்சாம் நம்பர் கேட் பக்கமா வந்துட்டு பயணிகளுடன் கலந்து அமர்ந்தேன். என் அருகிலிருந்த மலையாளி [[இங்கேயுமா]] பேச்சுகொடுத்தான் என்னோடு, அவனும் பஹ்ரைன் வருவதாக சொல்லவே சற்று நெருக்கமானோம்.

    கேட் திறக்க சமயம் எடுக்கவே, வாய்யா டியூட்டி ஃபிரீயை போயி சுற்றி பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினோம். எல்லா ஐட்டத்துக்கும் கடை இருக்கு சாப்பாடு அடக்கம், ஒவ்வொன்றிலும் இந்தியன் கரன்சி எவ்வளவு யு எஸ் டாலர் எவ்வளவுன்னு போட்டுருக்காங்க, பார்த்துட்டே சுற்றினோம்.

    திடீர்னு எங்கள் பிளேன் நம்பர் சொல்லி ஒரு அலவன்ஸ் சொன்னாங்க எங்களுக்கு புரியலை சத்தம் சரி இல்லாமல் இருந்தது, விரைவாக கேட் பக்கம் ஓடினோம், அது வேறொன்னும் இல்லை ஃபிளைட் ஒருமணி நேரம் லேட் [[பல்பு ஹி ஹி]]...

    டிஸ்கி : பல்பு முடியலை இன்னும் இருக்கு, அடுத்த பதிவோடு முடிக்கிறேன்.

    டிஸ்கி : நேற்று நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளும் மேலே போயி படிச்சி, பலருக்கு தமிமணம் இணைப்பும் குடுத்து, ஒட்டும் போட்டுருக்கேன். ஆனால் எனக்கு தமிழ்மணம் ஓட்டு ரொம்ப கம்மியா வருது ஏன்...??? manaseytrmanasey525@gmail.com வேண்ணா உங்க தமிழ்மணம் ஓட்டு பட்டையை கிளிக் பண்ணி பாருங்க இந்த ஐடி இருக்குதான்னு ஹி ஹி, எலேய்  சிபி நீ எதுக்குலேய் ஓட்டு போடாம ஓடினே ராஸ்கல்...???  இதனால் நண்பர்களுக்கு சொல்லி கொள்[[ல்]]வது என்னான்னா, ஓட்டு போடாதவங்க வீட்டு பாத்ரூமுக்கு எல்லாம் பாம்பு பார்சல் அனுப்பப்படும் [[ஹா ஹா ஹா ஹா இனி பார்ப்போம் ஹி ஹி]]





    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com

  • [Continue reading...]

    பாக்கெட் நிறைய ப���்புகள் வாங்கிய ��ரு பதிவன்....!!!

    - 0 comments




    பஹ்ரைன் வரும்போது மும்பை ஏர்போர்டில் நான் வாங்கிய பல்புகளை சொல்லட்டுமா ஹி ஹி...

    11:55 am ஃபிளைட்டுக்கு ஒன்பது மணிக்கு என்னை பிக்கப் பண்ண [[நடந்தே போகலாம் பக்கம்தான் ஆனால் கனமழை]] காரில் வாரேன்னு சொன்ன நண்பனை காணாமல் போனை போட்டால், சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான் போனை மறதியில். எப்பிடியோ அங்கே இங்கே போனைப்பிடித்து அவன் வந்து சேர்ந்தான்.[[முதல் பல்பு]]

    அடிச்சி பிடிச்சி காரில் ஏறி ஏர்போர்ட் வந்தால் எங்கள் காரை டிப்பாச்சரில் நிற்க விடாமல் போலீஸ் துரத்த, என்னடான்னு பேய் முழி முழிச்சிட்டு காருக்கு பின்னால் திரும்பி பார்த்தால் பாம் ஸ்குவாட் கார் வந்து நிக்குது, பயந்து கொஞ்சம் தூரம் தள்ளி வந்து காரை நிறுத்துனோம். என்னான்னு விசாரிச்சால், பாம் புரளியை எவனோ கிளப்பி விட்டுருக்கான். [[ம்ஹும் ரெண்டாவது பல்பு]]

    கொஞ்சம் நேரம் கழிச்சி மறுபடியும் நான் போயி டிப்பாச்சர் கேட்ல போயி கேட்டேன் எனக்கு ஃபிளைட் லேட்டாகுது போகலாமான்னு, சரி சார் போகலாம்னு சொன்னார் மிலிட்டரி ஆபீசர் [[நம்ம ஆபீசர் அல்ல]] கொய்யால நான் போற நேரம்தான் பாம் வைக்கணுமா ராஸ்கல்...

    சரி வழி அனுப்ப வந்த குடும்பத்தை பை சொல்லிட்டு லக்கேஜை எடுத்துட்டு வருவோம்னு கார் பக்கம் வந்தேன், நண்பன் செல்லப்பாகிட்டே டிக்கியில் இருக்கும் லக்கேஜை வெளியே எடுக்க சொன்னேன், டிக்கி ஓப்பன் ஆகலை, மறுபடியும் ஒப்பன் ஆகலை, அப்புறமா சாவியை உள்ளே நுழைத்து திறந்தாலும் திறக்கவே இல்லை. யாருக்கெல்லாமோ போன் பண்ணி கேட்டும் ஒருத்தனுக்கும் தெரியலை. அது ஜெர்மன் காராம்.[[மூணாவது பல்பு]]

    மிலிட்டரிக்காரவணுவ துப்பாக்கியை பிடிச்சிட்டு  நிக்கானுக எங்களையையே முறச்சி பார்த்துகிட்டு, டிக்கி திறக்கவே இல்லை, என்னவெல்லாமோ செய்துபார்த்தும் திறக்கவில்லை. எனக்கு ஃபிளைட் நேரம் நெருங்கிட்டே இருக்கு, போலீஸ் வேற பாம் பாம்னு போகசொல்லுறான். செல்லப்பா டிக்கியை அமுக்கி குலிக்கிட்டே இருக்கான் போலீஸ் நெர்வெஸ் ஆகிட்டாணுக [[ஹி ஹி]]

    ஆனால் காரை மட்டும் போலீஸ் எவளவோ எடுக்க சொல்லியும் நாங்க எடுக்கவில்லை, ஹி ஹி நாங்க ஏர்போர்ட்ல பாக்காத பாமா ஹி ஹி...அப்புறமா நண்பன்கிட்டே கேட்டேன் வா சீக்கிரமா அருகில் உள்ள ஒர்க் ஷாப் போயி திறக்கலாம்னு, [[அது ஆட்டோமேடிக் லாக்]] மறுபடியும் கார் ஏரியா திரும்பியது.

    போகும் வழியிலேயே கேரேஜ் நண்பனுக்கு போனைப் போட்டு ரெடியா இருக்கசொல்லுன்னு  கிருஷ்ணாவுக்கு போனைப் போட்டான். அங்கேதான் பல்பு கிடைச்சது, அட நாதாரி டிக்கி லாக் ஆகிறிச்சின்னா பேக் சீட்டை முன்னாள் இழுத்தா, டிக்கிகுள்ளே இருக்கும் லக்கேஜை எடுக்கலாம் இது கூட தெரியாம எதுக்குடா வண்டி ஓட்டுறீங்கன்னு செம பரேடு ஹி ஹி...[[நான்காவது செமையான பல்பு]]

    அடுத்து ஏர்போர்ட் ஓடினோம் அப்பாடா செல்லப்பா சிரிச்ச சிரிப்பு இருக்கே [[டியூப் லைட் ராஸ்கல்]] என்னால எம்புட்டு திட்டமுடியுமோ அம்புட்டு திட்டு அவன் மட்டும் கேக்கும்படியா திட்டுனேன், என் வீட்டம்மாவுக்கு தெரிஞ்சின்னா அங்கேயே விழும் அடி வாயிலேயே...அப்பாடா எல்லா செல்லங்களிடமும் விடை பெற்று கிளம்பினேன் ஏர்போர்ட் உள்ளே....

    பல்பு இம்புட்டுதான்னு நம்பி உள்ளே போனேன். அங்கேயும் பெரிய பெரிய பல்பு வாங்கி பாக்கெட்டை நிரச்சதை  அடுத்தடுத்து சொல்றேன்...

    டிஸ்கி : ஆமா தெரியாமதான் கேக்குறேன் நான் போற இடமெல்லாம் ஒரே வன்முறையா நடக்குதே ஹி ஹி அதான் ஏன்னு புரியலை...!!! யாரோ இதுக்கு பின்னால இருந்து சதி பண்ணுராயின்களோ டவுட்டா  இருக்கு அவ்வ்வ்வவ்வ்வ்....

    முடியல : சரக்கடிச்சா கவிதையா வந்து கொட்டுமாம், அப்பிடின்னு எவன் சொன்னான்..?? என் நண்பன் ஒருவன் இதைகேட்டுட்டு போயி சரக்கடிச்சிட்டு கவிதை எழுதி கொண்டு வந்து என்னிடம் காட்டினான், ஐயோ ஒரே கெட்டவார்த்தையா எழுதி வச்சிருக்கான் வாய்கூச, டேய் இது என்னாடான்னு கேட்டா, சரக்கடிச்சா இப்பிடிதாம் மக்கா வருதுன்னு சொல்லிட்டு போறான் அவ்வ்வ்வவ்.....!!!



    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com

  • [Continue reading...]

    தனி ஈழமே நிரந்தர தீர்வாக அமையும்...

    - 0 comments


    இலங்கையைப் பிரித்து தனி ஈழம் அமைக்க வேண்டும். அது மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வைத் தரும் என்று மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

    பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பாக இலங்கை தமிழர் படுகொலை குறித்த ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் பொதுக் கூட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத்,
    அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.நா. அமைப்பு இலங்கை பிரச்சினை குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி ஐ.நா. சபை தலைவர் பான்கிமூனிடம் 196 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த அறிக்கை இப்போது மெல்ல மெல்ல கசிந்து வெளி வருகிறது. அதன்படி இலங்கை தமிழர்கள் தங்கியிருந்த இடம், உணவு கூடங்கள், ஆஸ்பத்திரிகள், செஞ்சிலுவை சங்கத்தினர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசி தாக்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அனுப்பிய மருந்து கப்பல் மீதும் குண்டு வீசியது அம்பலமாகி உள்ளது.

    ஐ.நா.சபை இந்த அறிக்கையை உடனடியாக முழுமையாக வெளியிட வேண்டும். இதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப் பட வேண்டும்.
    இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை ஒரு போதும் செயல்பட்டதில்லை. காங்கிரஸ் தலைவர்களான காந்தி, நேரு, ராஜீவ்காந்தி போன்றோர் இலங்கை சென்ற போது கூட அந்நாட்டு அரசு அவர்களை பேச விடாமல் அவமதித்து அனுப்பி உள்ளது.

    ஸ்பெயின், சீனாவில் மக்கள் பாதிக்கப்பட்ட போது இந்தியா மருந்து கப்பலை அனுப்பி உதவிகள் செய்தது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்தியா முன்வரவில்லை. ராஜீவ்காந்தி படுகொலையை காரணம் காட்டி, ஒரு நாட்டின் சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி, விடுதலைக்கு தடையாக இருந்து விட்டனர்.

    இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மதத்திற்காகவும், பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் மொழிக்காகவும் பிரிந்தது. அதுபோல இலங்கையில் இனத்திற்காக தனி ஈழம் கேட்டு போராட்டம் நடக்கிறது.

    இந்திய விடுதலையும் ஆயுத புரட்சி மூலம் ஏற்பட்டது தான். இதனால் இலங்கை போராட்டத்தை தவறு என்று கூறக்கூடாது. இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் தான் தீர்வு என்றார் சம்பத்.

    டிஸ்கி : எனது பிளாக்குக்கு புத்தம் புது பொலிவூட்டுன அருமை நண்பன் நிரூபனுக்கு, நாஞ்சில் மனோ தளம் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது...நன்றி மக்கா....




    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com

  • [Continue reading...]

    நோய் தடுக்கும் த���ம்பூலம்...!!!

    - 0 comments


    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கிமு 2- ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகா வம்சம் என்னும் நூலில் வெற்றிலை மெல்லுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
    செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள்
    கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

    மருத்துவப்பயன் உடைய பகுதிகள்...

    இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

    தலைவலி:

    வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

    தேள் விஷம்:

    இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

    சர்க்கரை வியாதி:

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

    அல்சர்:

    அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

    தாம்பூலம் தரித்தல்:

    நமது உடலில் சுரக்கும் 24 விதமான "அமினோ அமிலங்கள்" வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த "அமினோ அமிலங்களை" வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் "தாம்பூலம்" தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


    வெற்றிலைப் பாக்குடன் கூடிய தாம்பூலம் "மங்கலப் பொருள்" என்பது பலர் அறிந்த உண்மை. ஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த "நோய்த்தடுப்பு ஆற்றல்" தாம்பூலத்தில் உள்ளது.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது.

    நன்றி : தமிழ்கதிர்.




    http://naamnanbargal.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com

  • [Continue reading...]

    ஒரு பதிவர் மனம் திறக்கிறார்!

    - 0 comments


    நான் ஆகஸ்டு 2008 இல் இப்பதிவை ஆரம்பித்தேன்.என் எண்ண ஓட்டங்களுக்கு ஒரு வடிகால் வேண்டும் என்ற நோக்கில்,ஆரம்பித்தேன்.அப்போதெல்லாம் ஆத்ம திருப்தி ஒன்றே என் நோக்கமாக இருந்தது.தமிழ் மணத்தில் மட்டும் இணைத் திருந்தேன்.பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.ஓட்டுப் போடும் முறை அப்போது இருந்ததா எனத் தெரியாது.இருந்திருந்தாலும் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன்.எழுதுவது ஒன்றே என் நோக்கமாக இருந்தது.

    எப்போதெல்லாம் எழுத வேண்டும் என்ற உந்துதல் என் மனதில் எழுந்ததோ அப்போதெல்லாம் எழுதினேன்.எதையாவது எழுதித் தீர வேண்டும் என்ற வெறி இருந்ததில்லை.வாசகர் வருகை பற்றிக் கவலை அடைந்ததில்லை.2008 இல் 26 பதிவுகள்,2009 இல் 22 பதிவுகள், 2010 செப்டெம்பர் வரை 6 பதிவுகள்-அவ்வளவே.

    2010 நவம்பரில் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.வருகைகளைப் பார்க்கத் தொடங்கினேன்.பின்னூட்டங்களை எதிர் நோக்கத் தொடங்கினேன்.அதிக அளவு பின்னூட்டங்கள்- வராத போது,நவம்பர் 18 இல்" உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும் "என்ற நகைச்சுவைப் பதிவு எழுதினேன் .சில பதிவர்கள் விளக்கம் அளித்தார்கள்.அதில் முதல் பின்னூட்டம் அளித்தவர் LK அவர்கள்.அதன் பின் பல பதிவுகளுக்கும் சென்று படித்து என்ன நடக்கிறது எனக் கவனித்தேன். அதன் விளைவே நவ.21 தேதியிட்ட என் பதிவு " உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?(பாகம்-2).

    அப்போது முடிவு செய்தேன்,சில இலக்குகளை எட்ட வேண்டும் என.அன்றைய நிலையில் வருகை எண்ணிக்கை சுமார் 4500 ஆக இருந்தது.தமிழ் மணம் ரேங்க் தெரியாது-எங்கோ தொலை தூரத்தில் இருந்திருக்கும்.

    பதிவை இண்ட்லி,தமிழ் 10,உலவு,திரட்டி,தமிழ்வெளி ஆகியவற்றில் இணத்தேன். ஓட்டுப் பட்டைகள் சேர்த்தேன். எழுதத் தொடங்கினேன். உண்மையாகச் சொல்வ தென்றால் பந்தயத்தில் ஓடத் துவங்கினேன்!

    இன்று வருகை எண்ணிக்கை 41400 த்தைத் தாண்டி விட்டது.தமிழ் மணம் டிராஃபிக் ரேங்க் 50.(அதுதான் என் லிமிட் போலிருக்கிறது!).இந்த வாரம் தமிழ்மணம் டாப் 20 யில் நான்காம் இடத்தில் இருக்கிறேன்.இந்த ஆண்டு இது வரை 125 இடுகைகள்!


    I have proved a point to myself.

    இனிப் பந்தயத்தில் ஓட வேண்டாம்.

    இதற்குப் பொருள் எழுதுவதை நிறுத்தப் போகிறேன் என்பதல்ல.அப்படி நினைத்து யாரும் மகிழ வேண்டாம்!

    எழுதுவேன்;தொடர்ந்து எழுதுவேன்.

    உள்ளத்தில் எண்ணம் பீறிட்டுக் கிளம்பும்போது எழுதுவேன்.

    எழுத வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும்போது எழுதுவேன்.

    ஆத்ம திருப்திக்காக எழுதுவேன்.

    எனக்காக எழுதுவேன்;உங்களுக்காக எழுதுவேன்.

    ஆனால் ஹிட்டுக்காக எழுத மாட்டேன்.

    ஓட்டுக்காக எழுத மாட்டேன்.

    இந்த ஓட்டத்தில் என் மற்றப் பதிவை அலட்சியம் செய்து விட்டேன்.இனி அங்கும் எழுத வேண்டும்.

    ஒரு தாய்க்குத் தன் குழந்தைகள் எல்லோரும் ஒன்றுதான்!ஆயினும் அதிலும் கொஞ்சம் அதிகப் பிரியம் ஒருவரிடம் இருக்கும்.

    எனக்கு என் பதிவுகள் அனைத்தும் பிடிக்கும்.(எனக்கே பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?!)

    இது வரை எழுதியவற்றில் எனக்குப் பிடித்த சில பழைய பதிவுகளை தேர்ந்தெடுத்து அவற்றை மீள் பதிவாக அளிக்கப் போகிறேன்.

    படித்துப்பாருங்கள் நேரம் இருந்தால்!

    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-vaanam.blogspot.com

  • [Continue reading...]

    கணவனின் தோழன்!

    - 0 comments


    ஒரு நாள் ஒரு மனிதன் உணவு விடுதியில் குழம்பி யருந்திவிட்டு வெளியே வந்தான்.ஒரு வேறுபாடான சவ ஊர்வலம் அவன் கவனத்தைக் கவர்ந்தது.

    ஒரு சவப்பெட்டியைப் பின் தொடர்ந்து ,50 அடி இடை வெளியில் மற்றோர் சவப் பெட்டியும்,அதன்பின் நாயுடன் செல்லும் ஒரு மனிதனையும் கண்டான்.அந்த மனிதனுக்குப் பின் சுமார் 200 ஆண்கள் ஒருவர் பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தனர்.

    அவனது ஆர்வத்தை அவனால் அடக்க இயலவில்லை.

    நாயுடன் செல்லும் மனிதனை அணுகிக் கேட்டான்."உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன். ஆனால் இது போல் ஒரு ஊர்வலத்தை நான் பார்த்தே இல்லை. இறந்தது யார்?"

    மற்றவன் சொன்னான்" முதல் பெட்டியில் என் மனைவி"

    "என்ன நடந்தது.?" எனக் கேட்டான்.

    அவன் சொன்னான்" என் நாய் அவளைத் தாக்கிக் கடித்துக் கொன்று விட்டது"

    இவன் அதிர்ச்சியடைந்தான்.கேட்டான்"அந்த இரண்டாவது பெட்டியில்….?"

    "என் மாமியார்;தன் மகளைக் காப்பாற்ற முயன்றார். அவரையும் என் நாய் கடித்துக் கொன்று விட்டது"

    இவன் சிறிது நேரம் யோசித்தான்.பின் கேட்டான் "உங்கள் நாயை எனக்கு ஒரு நாள் கடனாகத் தர இயலுமா?"

    அவன் சொன்னான் "வரிசையில் வா!!"




    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-vaanam.blogspot.com

  • [Continue reading...]

    அகலிகை ஏன் கல்லா���ாள்?

    - 0 comments


    காத்திருந்தது அந்தக் கல் காலம் காலமாய்

    சாத்திரம் போற்றும் நாயகன் காலுக்காய்

    வேதமறிந்த முனிவன் தன் கோபத்தில்

    பேதையின் நியாயம் மறந்து சபித்தனன்

    இந்திரனின் வஞ்சகத்தால் மனம் கல்லாச்சு

    சொந்த மணாளனின் சாபத்தால் உடலும் கல்லாச்சு!

    வந்தான் ஒரு நன்னாளில் தசரதன் மைந்தனங்கு

    தந்தான் மீண்டும் உரு பேதை அகலிகைக்கு

    அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் வருந்தினான்

    எவளுக்குமே இக்கதி வருவது தவறென்றான்.

    ஆண்டுகள் பல கடந்தன,அகலிகை காத்திருந்தாள்

    மீண்டும் அப்புண்ணியனைக் கண்களால் காண்பதற்கு

    இலங்கையில் போர் வென்று திரும்பும் வழியினிலே

    கலங்கிப் பின் மனம் தெளிந்த சீதையுடன் அங்கு வந்தான்

    நடந்த நிகழ்வுகளைத் தனித்திருந்த போது வினவ

    மடந்தை சீதையும் அனைத்தும் உரைத்தனளே.

    தீக்குளித்த கதை கேட்டாள் அகலிகை உடலெல்லாம்

    தீயினால் சுட்டது போல் கொடுந்துன்பம் எய்தினாள்

    "இராமனா சொன்னான் உன்னைத் தீக்குளிக்க

    இராமலே போனதோ நியாயம் அவனிடமும்

    தன் மனைவி என்றதுமே நியாயம் வேறாயிற்றோ

    என்ன கொடுமையிது "என்றே அரற்றினாள்

    கண் சிவந்தாள்,உள்ளம் மறுகினாள்,உடல் இறுகினாள்

    பெண்ணவள் மீண்டும் கல்லாக மாறினாள்!

    (கரு;புதுமைப் பித்தனின் 'சாப விமோசனம்' சிறுகதை)



    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-vaanam.blogspot.com

  • [Continue reading...]

    துப்பாக்கி முனை��ில்......!(சிறுகதை)

    - 0 comments


    தில்லியிலிருந்து சென்னை செல்லும் அந்த ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. சிலர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.சிலர் அமர்ந்தவாறே அரைத் தூக்க நிலையில் இருந்தனர். சிலர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தனர்.சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

    ஆனால் வெங்கட் மட்டும் தனது மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டிருந்தான் .அவன் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில், பணித்திட்ட மேலாளர். எப்போதுமே அவனுக்கு ஏதாவது ஒரு வேலை,அது பற்றிய கவலை இருந்து கொண்டுதான் இருக்கும்.

    "நீங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றுபவரா?" அவன் அருகில் இருந்த மனிதன் ஆர்வத்துடன் வினவினான்.

    வெங்கட் அந்த மனிதனைத் திரும்பிப் பார்த்து ஆம் என்று தலையசைத்தான்.

    "நீங்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்துக்கு எவ்வளவு உழைக்கிறீர்கள். உங்களால் இன்று எல்லாமே கணினி மயமாகி விட்டது."

    இவ்வாறு சொன்ன மனிதனை பார்த்து லேசாக புன்முறுவல் செய்தான் வெங்கட்.புகழ்ச்சியைக் கேட்பது அவனுக்கு எப்போதுமே பிடிக்கும்.அந்த மனிதன் ஒரு விளையாட்டு வீரன் போல் நன்கு கட்டுமஸ்த்தாக இருந்தான்.அவன் தொடர்ந்தான்.

    "எனக்கு என்றுமே மிக ஆச்சரியம்தான்.நீங்கள் எல்லாம் அலுவலகத்தில் அமர்ந்து கணினியில் ஏதேதோ செய்கிறீர்கள்;அது உலகமெல்லாம் பெரிய விஷயங்களைச் செய்கிறது!"

    வெங்கட் சொன்னான்"அது அவ்வளவு எளிதில்லை ;அதற்குப்பின் மணிக்கணக்கான, நாட்கணக்கான உழைப்பு இருக்கிறது"

    "ஆம்! இது எனக்கெல்லாம் புரியாத சிக்கலான விஷயம்.அதற்காகத்தான் உங்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள்" அவன்.

    வெங்கட்டுக்குக் கோபம் வந்தது."நீங்கள் எல்லோரும் சம்பளத்தை மட்டும் பார்க்கிறீர்கள், இப்போது இந்த ரயில் பதிவு விஷயத்தையே எடுத்துக்கொள். எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த ரயிலுக்கு வேண்டுமானாலும்,பதிவு செய்ய முடிகிறது.இதைத் தயார் செய்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்?நான் மேலாளராக இருக்கிறேன்.ஒரு புறம் வாடிக்கையாளர்,தினம் ஒரு புதிய கட்டளையுடன்,ஒரு புறம் வேறெதையோ கேட்கும் உபயோகிப்பாளர்,மற்றொரு புறம் வேலையை நேற்றே முடித்திருக்க வேண்டும் என விரட்டும் மேலதிகாரி.

    துப்பாக்கி முனையில் நிற்பது போன்றது எங்கள் நிலை .உங்களுக்கு என்ன தெரியும்?"

    அந்த மனிதன் ஒன்றும் பேசாமல் கண்ளை மூடிச் சிந்தனையில் ஆழ்ந்தவன் போல் இருந்தான்.பின் கண் விழித்தான்.பார்வை எங்கொ நிலைத்திருக்கச் சொன்னான் "தெரியும்;துப்பாக்கிகளின் முனையில் நிற்பது என்ன வென்று தெரியும்."

    "அந்த இரவு, குறிப்பிட்ட பகுதியை கைப்பற்ற எங்களுக்கு உத்தரவு வந்த போது எங்கள் பிரிவில் 30 பேர் இருந்தோம்.எதிரிகள் மேலிருந்து சரமாரியாகச் சுட்டுக் கொண்டிருந்தனர்.எப்படியோ அந்த இடத்தைப் பிடித்து விட்டோம்,நம் கொடியையும் ஏற்றி விட்டோம்.மிச்சமிருந்தவர்கள் 4 பேர் மட்டுமே!

    "நீ...நீங்கள்?'

    "சுபேதார் சுஜித்.நான் என் குறிப்பிட்ட கால எல்லைக்காவல் பணியை முடித்து விட்டேன் என்று கூறி,என்னை எளிய வேலை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். முடியுமா?என் கடமையை நான் விட முடியுமா? அந்த மறக்க முடியாத நாளில் நாங்கள் பாதுகாப்புக் குழியில் பதுங்கி யிருந்தோம்.எங்களில் ஒருவர் சிறிது தூரத்தில் அடி பட்டு விழுந்து கிடந்தார்.அவரைக் குழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு என்னுடையது.ஆனால் எங்கள் கேப்டன் அது அவரது கடமை என்று சொல்லித் ,தானே அவரை எடுத்து வரச்சென்றார்.தன்னை ஒரு கவசமாக உபயோகித்துக் ,குண்டையெல்லாம் தான் ஏற்றுக் கொண்டு அவரைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்து விட்டு இறந்து போனார்.

    "அதற்குப் பின் அங்கு காவல் இருந்த ஒவ்வோரு நாளிலும்,என் மீது பாய வேண்டிய குண்டுகளை அவர் ஏற்றுக்கொண்டது என் கண் முன் தெரிந்து கொண்டே இருந்தது.

    ஆம் ,சார்,துப்பாக்கி முனையில் நிற்பது என்னவென்று எனக்கும் தெரியும்!"

    வெங்கட் திகைத்துப்போய் அமர்ந்திருந்தான்.ரயில் ஒரு நிலையத்தை அடைந்தது.

    சுபேதார் சுஜித் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானார் "உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.சென்று வருகிறேன்"

    இறங்கிப் போய் விட்டார்.

    வெங்கட் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தான்.

    (ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது)



    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-vaanam.blogspot.com

  • [Continue reading...]

    இரு பதிவர்கள் சந���திக்கிறார்கள்!

    - 0 comments


    பதிவர் மதுரை சொக்கன் நேற்று மாலை பதிவர் சென்னை பித்தனைச் சந்தித்தார். அப்போது அவர்கள் பேசிக்கொண்டவை……….

    செ.பி-வாங்க சொக்கன்.நல்லாருக்கீங்களா?

    சொக்கன் -திருச்சிற்றம்பலம்.நலமே.நட்சத்திர வாரத்தைச் சிறப்பாக முடித்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

    செ.பி-எல்லாம் உங்கள் வாழ்த்துகளின் பலம்தான்.

    சொக்கன் – நான் ஏழு நாட்களின் பதிவுகளையும் படித்தேன்.ஆறு நாட்கள் சிறப்பாக இருந்தன. கடைசி நாள் அப்படி ஒரு பதிவு தேவையா?சர்தார்ஜி ஜோக்கைச் சொல்கிறேன்.ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்!

    செ.பி.-இதெல்லாம் சும்ம ஜாலிதான் சொக்கன்.

    சொக்கன் – என்ன ஜாலி?எதை வேண்டுமானாலும் எழுதுவதா?படிப்பவர்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டாமா?

    செ.பி-.சொக்கன்!நான் ஒரு போதகன் அல்ல.ஒரு பல்சுவைப் பதிவன்.நீங்கள் சொல்கிறீர்கள் நல்ல கருத்துகள் மட்டுமே சொல்ல வேண்டும் என்று.பாருங்கள்-அன்பே சிவம் என்ற பதிவுக்குக் கிடைத்த தமிழ்மண வாக்குகள்-14;அன்னையைப் போலொரு பதிவுக்கு 15 ;ஆனால் இந்த புரியாத புதிர் என்ற சர்தார்ஜி ஜோக் பதிவுக்கு 17 வாக்குகள்.வாசகர்களின் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தானே இது காட்டுகிறது?அவர்கள் விருப்பத்தை நான் பூர்த்தி செய்கிறேன். அவ்வளவுதான்!

    சொக்கன் –சினிமாக்காரர்கள் மாதிரிப் பேசுகிறீர்கள் பித்தன்.ரசிகர்கள் விரும்புகிறார்கள், நாங்கள் கொடுக்கிறோம் என்று அவர்கள்தான் சொல்வார்கள்.இப்படிச் சொல்கிறீர்களே,இந்த வாரத்திலேயே வந்த "எழுத்தறிவித்தவன் -சிறுகதை"க்கு 22 வாக்குகள் கிடைத்தனவே.அதை சௌகரியமாக ஒதுக்கி விட்டீர்கள்.நான் சொல்வது இதுதான் .இந்த மாதிரிப் பதிவெல்லாம்,பிரபா,சிவகுமார்,கோகுல் போன்ற இளைஞர்கள் எழுதலாம்.நீங்கள் எழுதலாமா?

    செ.பி-ஐயா,நீங்கள் சொல்வது போல் நான் எழுத ஆரம்பித்தால் உங்களை மாதிரி ஈ ஓட்ட வேண்டியதுதான்.

    சொக்கன் –ஈ ஓட்டினாலும் பரவாயில்லை.நான் நல்லதையே சொல்வேன்.அது தவிர மொய் வைத்து மொய் எடுக்கும் வழக்கம் எனக்கு வேண்டாம்.நான் சொல்லும் கருத்துக்களை விரும்புவோர் மட்டும் வரட்டும்;படிக்கட்டும்.உங்களுக்கு ஏற்கனவே சுமாரான எண்ணிக்கையில் தொடர்பவர்கள் இருக்காங்க!நல்லதே எழுதலாம்.

    செ.பி- இதெல்லாம் ஒரு போதை மாதிரி சொக்கன்!பழக்கமாயிட்டா விட முடியாது.நீங்க ஏதோ திருமூலர்,ஆன்மீகம் என்று காலத்தை ஓட்டறீங்க. எல்லோராலும் அது முடியுமா?உங்க பாணியில் நீங்க போங்க;என் பாணியில் நான் போகிறேன்.நீங்க கிழக்கு;நான் மேற்கு.

    "East is east and west is west and never the twain shall meet" .இதை இத்தோடு நிறுத்தி விட்டுக் காஃபி சாப்பிடுவோம் வாங்க!"

    இருவரும் காஃபி சாப்பிட ஆரம்பித்தனர்.



    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-vaanam.blogspot.com

  • [Continue reading...]

    நகைச்சுவைப் பரல���கள்!

    - 0 comments


    ஒருவர் சொந்த விஷயமாக வெளியூர் சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்தார். அறைக்குள் நுழைந்தவுடன் ஒரு கணினி இருப்பதைப் பார்த்தார். இண்டெர்னெட் தொடர்பும் இருந்தது.

    உடனே தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பத் தீர்மானித்தார். அனுப்பும் போது மின்னஞ்சல் முகவரியைத் தவறாக அடித்து விட்டார்!

    ஏதோ ஒரு ஊரில் தன் கணவனை முதல் நாள்தான் பறி கொடுத்த ஒரு மனைவி, அனுதாபம் தெரிவிக்கும் மின்னஞ்சல்கள் வந்துள்ளனவா என்று பார்ப்பதற்காகத் தன் அஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தாள். மின்னஞ்சலில் வந்த தகவலைப் பார்த்தாள்;மயங்கிக் கீழே விழுந்தாள்.

    அவள் மகன் பதறிப்போய் ஓடோடி வந்தான்.அம்மாவைத்தூக்கும்போதே கணினியைப் பார்த்தான்.அதில் இருந்த செய்தி----

    "என் அன்பு மனைவிக்கு

    என்னிடமிருந்து இவ்வளவு விரைவில் மின்னஞ்சல் வருவது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

    வந்து சேர்ந்தவுடனேயே கணினி கிடைத்தது!

    உடனே உனக்குத் தகவல் அனுப்புகிறேன். இங்கு எல்லாம் வசதியாக இருக்கிறது.

    உன் வருகைக்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
    நாளை உன் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    உன் அன்புக் கணவன்."

    மயங்கி விழாமல் என்ன செய்வாள்!

    .........................................................
    இரண்டு ஜோக்ஸ்

    ராமு:-எனக்குச் சமைப்பது,கழுவுவது,துவைப்பது இதெல்லாம் செய்து அலுத்து விட்டது;எனவேதான் கல்யாணம் செய்து கொண்டேன்.

    சோமு:-அடடே! அதே காரணத்துக்காகத்தான் நான் மணவிலக்கு வாங்கினேன்!

    ……………….

    ராமு:-நான் தினமும் அலுவலகத்துக்குச் செல்லுமுன் என் மனைவியை முத்தமிடுவேன்.நீ எப்படி?

    சோமு:-நானும்தான்,நீ சென்றபின்.

    --------------------------

    தர்மம்--ஒரு கவுஜ


    அன்றொரு நாள்.....

    ஒரு மாலை வேளை........

    ரயில்வே ஸ்டேஷன் அது!

    நான் டிரெயினின் உள்ளே,

    நீ வெளியே.

    நம் இருவரின் கண்களும்

    ஒரே நேரத்தில் சந்தித்தபோது

    உன் முகத்தில் தான்

    எத்தனை உற்சாகம்?

    அப்போது தான்

    அப்போது தான்

    அந்த வார்த்தையை நீ சொன்னாய்

    "அய்யா...... தர்மம் போடுங்க சாமி! "

    ................



    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-vaanam.blogspot.com

  • [Continue reading...]

    வாழ்க்கையும்,வீ��ும்

    - 0 comments



    இன்று நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் வருகையால்,அக்கால வீடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பதையே மறந்து விட்டோம்.அந்த வீடுகளின் கட்டிட அமைப்பில் ஒரு சீர்மை இருக்கும்.அவை வாழ்க்கையின் தத்துவங்களை உணர்த்துவதாக அமைந்தன.


    முதலில் படி.படியேறித்தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.படி என்றால் மற்றொரு பொருள் படிப்பது.ஆக வாசல் படி நமக்கு உணர்த்துவது 'கற்க'.எதைப்படிக்க வேண்டும்? கற்பவை கற்க. பயனுள்ள வற்றைக் கற்க.அவற்றைக் கசடறக்கற்க.


    நன்கு படித்ததால் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு வந்தால்,தலை கனத்து விடும்; அகந்தை வந்து விடும்.அது இருக்கக்கூடாது என்பதற்காகவே,பெருக்கத்து வேண்டும் பணிவு என்பதை உணர்த்து வதற்காகவே ,வீடு பெரிதாக இருப்பினும்,நிலையை உயரம் குறைவாகவே வைத்தனர். அனைவரும் குனிந்துதான் செல்ல முடியும்.


    அடுத்து வருவது நடை என்னும் பகுதி.அதைத்தாண்டியே வீட்டின் முக்கியப் பகுதிக்குப் போக முடியும்.இது எதை உணர்த்துகிறது?படித்த பின் படித்ததைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும்நிற்க அதற்குத் தக.படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்றில்லாமல்!


    பின் வருவது கூடம்.ஹால்.இது எதைக் குறிக்கிறது?கூடுதல் என்றால் சேர்தல்கூட்டம் கூடுதல் என்று சொல்கிறோம் அல்லவா?கற்றுத்தெளிந்த பின் நல்ல அறிஞர்களின் சேர்க்கை வேண்டும்."சத்சங்கம்" என்று வடமொழியில் குறிக்கப்படுவது இதுவே.


    அதன் பின் சமையல் அறை.சமை என்றால் சமைப்பது மட்டுமன்று.முதிர்வடைவதையும் குறிக்கும்-கல்வியால்,கற்றோர் தொடர்பால்,அனுபவத்தால் அடையும் முதிர்வு.


    அதோடு தொடர்புடைய மற்றோர் இடம் முற்றம்.அநேகமாகத் திறந்த பகுதியாக இருக்கும். வாழ்க்கையில் எல்லாம் முடிந்து, வாழ்வாங்கு வாழ்ந்தபின் முற்றும் என்று சொல்ல வேண்டியதை உணர்த்துகிறது.

    வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட அக்கால வீடுகள் எப்படி?


    வாழ்க்கை நெறிகளை வட மொழியில் தர்மம்,அர்த்தம்,காமம், மோட்சம் எனப் பகுத்தார்கள்.தமிழில் அதுவே அறம்,பொருள்,இன்பம்,வீடு எனச் சொல்லப் படுகிறது .வீடு பேறு என்பது மோட்சத்தைக் குறிக்கிறது.நாம் வசிக்கும் இடத்தையே மோட்சமாக்குவது நம் கையில்தானே இருக்கிறது?



    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-vaanam.blogspot.com

  • [Continue reading...]

    விழிக்கும் இரவு��ள்

    - 0 comments




    தினமும் இரவில் 
    சீக்கிரம் உறங்க வேண்டும்
    என்ற நினைப்பை 
    சுத்தமாய் துடைத்தெறிந்து விட்டு 
    என் மூளையில் நிரம்புகிறது
    உன்னை பற்றிய சிந்தனைகள்.

    பூனைகள் கலவி கொள்ள
    அழைப்பு விடுக்கும் சத்தங்கள் 
    தொல்லை கொடுத்து
    உன் நினைவை கலைக்கின்றன.
    அவைகளை விரட்டி விட்டு
    தலையோடு போர்த்தி 
    உடல் வளைத்து நெளித்து 
    மண் புழு போல
    மீண்டும் உன் நினைவுகளுக்குள்
    புதைந்து கொள்கிறேன்.

    மெல்ல நகரும் நிலவு
    சொல்லி நகரும் இரவு
    நீளும் வானம்
    தீரா இரவு.




    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    டெல்லி போலீஸின் ���ெல்லியை கலக்கிய டாக்டர் விஜய்

    - 0 comments
    [Continue reading...]

    தெய்வீக காதல்

    - 0 comments




    அவள் எனக்கு இல்லை என்று
    தெரிந்த பின்
    தினம் தினம் அவளை பார்க்கும்
    மரண அவஸ்தை
    தாங்க முடியவில்லை.

    எங்கேயாவது அடிபட்டு
    செத்தொழியட்டும் அவள்.




    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    தெய்வ திருமகள் - ��மீதா விமர்சனம்

    - 0 comments





    இயக்குனரின் மதராசபட்டினம் படத்தால் கவரப்பட்டு காண சென்றேன் தெய்வ திருமகள். மதராசப்பட்டினம், டைட்டானிக் படத்தை இன்ஸ்பிரேசனாக வைத்து எடுத்திருந்தாலும், அதன் நேர்த்தியான திரைக்கதை மற்றும் எமி ஜாக்சனின் அழகு மற்றும் நடிப்பு அதை கண்டுகொள்ளாமல் பார்க்க செய்தது. விக்ரமும் அப்படியே நம்பி அவர் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பார்.

    ஆனால் தெய்வ திருமகள் "ஐ ஆம் சாம்" படத்தை முக்கால்வாசி அப்படியே உருவி எடுக்கப் பட்டிருக்கிறது. அதன் ட்ரைலர் பார்த்தாலே புரியலாம். இப்படத்தின் திரைக்கதையை பார்த்தால், மதராசப்பட்டினம் படத்தின் திரைக்கதையை இவர் எழுதியிருப்பாரா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது.  நல்லவேளை நான் இன்னும் ஒரிஜினல் படம் பார்க்க வில்லை. இல்லையென்றால் என்னால் இந்த படத்தை கடைசி வரை பார்த்திருக்க முடியாது. விக்ரமின் ஹேர் ஸ்டைல் கூட ஒரிஜினல் படத்தின் ஹீரோவை போல உள்ளது.

    தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு சொந்த சரக்கு தீர்ந்து விட்டதை சமீப காலமாய் வரிசையாய் வரும் ஆங்கில படத்தின் காப்பி கொட்டைகளே உதாரணம். அந்த வகையில் வேங்கையை காப்பி அடிக்காமல் சொந்தமாய் எடுத்திருக்கும் ஹரி வைரமாய் மிளிர்கிறார்.

    எனக்கு விமர்சனம் எழுதும் போது அவ்வளவாய் கதை சொல்ல பிடிக்காது. இந்த படத்திற்கு அதை சொல்வதும் தேவை இல்லாதது.

    விக்ரமின் நடிப்பு கதைக்கு ஏற்றார் போல நடிக்காமல், அவார்டுக்கு ஏற்றார் போல் நடித்திருக்கிறார். அடுத்த உலக நாயகன் ;-) கஷ்டப்பட்டு நடிச்சதுக்கு ஒரு அவார்ட் கொடுத்திருங்கப்பா! பாவம்.

    அந்த குட்டி பெண்ணின் அழகையும், சந்தானத்தின் காமெடியையுமே அதிகமாய் நம்பியிருக்கிறார் இயக்குனர். இது சத்தியமாய் குழந்தைகளுக்கான படமில்லை.

    தெய்வ திருமகனா? தெய்வ திருமகளா? என்று இந்த படத்தின் தலைப்பை மையப் படுத்தி பிரச்சினை ஏற்படுத்தியவர்களுக்கு தெரியவில்லை பிரச்சினை தலைப்பில் இல்லை என்று.

    இதில் இந்த விசிலடிச்சான் பன்றிகளின் அலம்பல் வேறு. அடுத்த முறை போகும் போது அவர்கள் வாயில் கட்டையை எடுத்து கொண்டு போய் சொருகி விட வேண்டும்.

    தொப்புள் காட்சி, ஆபாசம் இல்லாமல் எடுப்பது குடும்ப படம் என்றால், குடும்ப படம் என்ற ஒரே காரணத்துக்காக படத்திற்கு போக விருப்பப் பட்டால் போகலாம்.

    படத்திற்கு போகும் போது மறக்காமல் ஒரு கர்ச்சீப் எடுத்துட்டு போங்க. கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒரே உணர்ச்சி திருவிழா நடக்கிறது. இயக்குனருக்கு சன் டீவில ஒரு ப்ரைம் ஸ்லாட் ஒதுக்கி கொடுத்தால் சிறப்பாய் ஒரு சீரியல் எடுக்கக் கூடிய ஒளிவட்டம் தெரிகிறது.


    நமீதா டச்: தெய்வ திருமகள், பரிதாபமான கோலம்.





    http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger