தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை All parties courtesy to Thevar statue
சென்னை, அக்.30–
முத்துராமலிங்க தேவரின் 106–வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், தங்கபாலு, தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நாச்சிகுளம் சரவணன், அரிகிருஷ்ண ரெட்டி, சாந்தி, காஞ்சி பன்னீர்செல்வம், எஸ்.,கே.அன்பழகன், சீதாராமன், சொர்ண சேதுராமன், குமாரமுருகன், தி.நகர் கார்த்திக், கொய்யாதோப்பு ராம்குமார், பட்டுக்கோட்டை ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த்சாகர், சித்ரா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்..
பா.ஜனதா சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்தர் ராஜன், சக்கரவர்த்தி, பிரகாஷ், திருப்புகழ், ஆறுமுக ராஜ், கேன்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், மாவட்ட செயலாளர் சி.ராஜா, ஏ.பி.எஸ்.பொன்னரசன், எஸ்.பிரசாத், பாபு ஆகியோர் மாலை அணிவித்தனர்.
லட்சிய தி.மு.க. சார்பில் அதன் தலைவர் டி.ராஜேந்தர், எம்.எம்.ஆர். மதன் மரியாதை செலுத்தினர்.
அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் மணியரசன், தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரிஅருண் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
தமிழக யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷேக்தாவூத் மாலை அணிவித்தார்.
வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் உள்ள தேவர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர் தலைமையில் பகுதி செயலாளர் முருகேச பாண்டியன், ரஞ்சன், அருள் ராஜ், எட்.ராஜா, மாரிமுத்து உள்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்து சத்ய சேனா சார்பில் மாநில தலைவர் வசந்த குமார் தலைமையில் சீனிவாசன், காந்தி உள்பட அமைப்பின் நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர். தேவர் புலிப்படை சார்பில் நிர்வாகிகள் சுரேஷ் காந்தி, நீலகண்டன், ஆதிமூலம், அன்பழகன், நீதிராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். தேவர் பேரவை சார்பில் நிர்வாகிகள் செல்லம், சந்திரன், சித்திரை குமார், தர்மராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
...
shared via
[Continue reading...]