பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 106–வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலையின் கீழ் பகுதியில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலை 10.30 மணிக்கு தேவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவி வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினார்கள். தொண்டர்களை பார்த்து ஜெயலலிதா இரட்டை விரலை காட்டி கையசைத்தார். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வரவேற்றனர். அந்த பகுதி முழுவதும் அ.தி.மு.க. கொடி, தோரணங்களுடன் விழாக் கோலம் பூண்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி, எம்.பி.க்கள் வேணு கோபால், சிட்லபாக்கம் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, கலைராஜன், வி.என்.ரவி, எம்.எல்.ஏ.க்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, செந்தமிழன், வெற்றிவேல், நீலகண்டன், துணைமேயர் பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் லட்சுமி நாரயணன், டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தயாரிப்பாளர் டி.டி.ராஜா, ஆர்.டி.சாம்சன், ஏ.என். சுப்பிரமணி, மகிழன்பன், பேச்சாளர் ஜெயகோவிந்தன், அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் கே.பாண்டுரங்கன், தென் சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன், கவுன்சிலர்கள் சிவராஜ், நுங்கைமாறன், ஆறுமுகம், சின்னையன், கடலூர் ரா.ராஜேந்திரன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?