சுவிஸ் மண்ணில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எம்மால் புத்தாண்டு தின கலைநிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. புத்தாண்டும் புதுநிமிர்வும் என பெயரிடப்பட்டு தொடர்ச்சியாக நடைபெறும் இந்நிகழ்வு இந்த ஆண்டும் எம்மால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
எமது செயற்பாடுகளில் குழப்பம் விளைவிக்க எண்ணும், எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள், தெரிந்தோ தெரியாமலோ உள்வாங்கப்பட்டுள்ள சிலர், குறித்த நிகழ்வுகள் போன்றே தாமும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளனர் என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
எமது நிகழ்வு போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், எமது நிகழ்வு போன்றே பெயர் மற்றும் நிகழ்வு வடிவமைப்பு என்பவற்றையும் செய்துள்ளனர். மேலும் கடந்த காலங்களில் எமது கட்டமைப்பினூடாக கிடைக்கப்பெற்ற அறிமுகங்களை பயன்படுத்தி, போலியாக விளம்பரங்கள், பணவசூலிப்புகள், கலை நிறுவனங்களிலிடமிருந்து நிகழ்வுகள் என்பவற்றையும் பெற்றும் வருகின்றனர்.
எமது அமைப்பின் பெயரால் இடம்பெறும் மேற்படி மோசடிச்செயற்பாடுகளை நாம் ஒருபோதும் விரும்பவில்லை. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் தங்கள் தவறுகளின் தன்மையை உணர்ந்து, அவற்றிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
தமது குறுகிய சுயலாப நோக்கில், இவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்களின் மோசடிச் செயற்பாடுகளுக்கு வர்த்தக பெருமக்கள், கலைநிறுவனங்களின் ஆசிரியப் பெருந்தகைகள், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகிய எவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாமென பணிவன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
மெல்ல இனி இருள் கலையும். காலவோட்டத்தில் நம் கனவுகள் மெய்ப்படும். கிடைத்துள்ள குறுகிய கால இடைவெளியில் இடம்பெறும் குழுச்செயற்பாடுகளை வென்று, தேசிய பேரெழுச்சியுடன் ஒண்றிணைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நன்றி.
வி.ரகுபதி
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
சுவிற்சர்லாந்து 25.12.2011
http://tamil-cininews.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
[Continue reading...]