தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் முல்லைப் பெரியாறு பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை, காவிரி பிரச்சினை ஆகியவற்றில் மத்திய அரசு காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்து சென்னைக்கு வந்த இந்திய பிரதமருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் பனகல் மாளிகை முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத்தின் மாநில நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்,
தமிழக பிரச்சனைகளில் பிரதமர் மன்மோகன் சிங் கவனம் செலுத்தவில்லை. 2 தனியார் நிகழ்ச்சிகளுக்காக தமிழகத்துக்கு பிரதமர் வந்தது ஏன். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை தீர்க்க முதல் அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
http://tamil-cininews.blogspot.com
http://youtube-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?