Monday, 30 September 2013

ஸ்ரேயா இளமையின் ரகசியம்

- 0 comments

ஸ்ரேயா இளமையின் ரகசியம்

யோகா, தியானம்தான்
by abtamil
... - Tamil newsToday,
எனக்கு 20 உனக்கு 18 படத்தில் தமிழுக்கு வந்தவர் ஸ்ரேயா. அதன்பிறகு ஜெயம்ரவியுடன் நடித்த மழை படத்தில் மழையில் நனைந்தபடி இவர் ஆடிய கலக்கல் ஆட்டம் தமிழக இளவட்ட ரசிகர்களை கலக்கி எடுத்தது. அதனால் அந்த படத்திலிருந்தே ஸ்ரேயாவுக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவானது. அதன்பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்ததின் மூலம் டாப்மோஸ்ட் ஹீரோயினியானார் ஸ்ரேயா.

இருப்பினும் அந்த பெயரை அவரால் நீண்டகாலம் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. வேகமாக ஏறிய மார்க்கெட் அதே வேகத்தில் இறங்கி விட்டதால், பின்னர் சரியான படங்கள் இன்றி மீண்டும் தெலுங்கு, கன்னடம் என்று செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் நடிகை. ஆனால், இந்த நேரத்தில் மாதக்கணக்கில் படமே இல்லாமல் அவர் வீடே கதியென்றும் இருந்திருக்கிறார்.

ஆனபோதும், தனது உடல்கட்டை சரியாக மெயின்டெயின் பண்ணி வந்திருக்கிறார் ஸ்ரேயா. இதன் காரணமாகத்தான் தற்போது நாகார்ஜூனாவின் மனம் மெகா படத்தில் நடிப்பதற்கு ஸ்ரேயாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

இந்த நிலையில், சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகி விட்டபோதும், இன்னும் உடல்கட்டை அப்படியே இளமையாக வைத்திருப்பதின் ரகசியம் குறித்து சில இளவட்ட நடிகைகள் அவரிடம் கேட்டபோது, தினமும் நான் கடைபிடித்துவரும் யோகா மற்றும் தியான பயிற்சிதான் என் இளமையின் ரகசியம் என்றாராம் ஸ்ரேயா.

அதோடு, தினமும் ஜிம்முக்கு சென்று வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வதை விட யோகா பயிற்சி பெரிய பலனை தருகிறது என்றும் அனுபவத்தை சொன்னாராம் ஸ்ரேயா.

Show commentsOpen link

[Continue reading...]

மிஷ்கின் இயக்கத்தில் கமல்? Kamal in Miskin direction

- 0 comments

மிஷ்கின் இயக்கத்தில் கமல்?
by veni
is Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்துள்ள 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இப்படம் வெளிவந்த சில நாட்களிலேயே பலருடைய பாராட்டுக்களையும் பெற்ற வண்ணம் உள்ளது.  வழக்கமான மசாலா படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான படமாக வெளிவந்துள்ள இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஹீரோயின், பாடல்கள், குத்து பாடல், பகல் காட்சிகள் ஆகியவை இல்லாமல் இருட்டில் மட்டுமே கதை நகரும் இந்த படத்தில் சமீபகால தமிழ் சினிமாக்களில் வித்தியாசமான, சிறந்த படம் என ரசிகர்களே பாராட்டுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் கமலஹாசனை இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு பிரத்யேகமாக அழைத்து இப்படத்தை அவருக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்.

முழு படத்தை பார்த்து பிரமித்துப்போன கமல், நெகிழ்ந்துபோய் மிஷ்கினை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். மேலும், சீக்கிரமாக நாம இரண்டு பேரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று சொல்லி மிஷ்கினை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளாராம் கமல்.

The post மிஷ்கின் இயக்கத்தில் கமல்? appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர் US police man helps woman in delivery process

- 0 comments

அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர் US police man helps woman in delivery process
Tamil NewsYesterday,

நியூயார்க், அக்.1-

அவசர அழைப்பையடுத்து உருவிய துப்பாக்கியுடன் திருடனை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர், உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது.

டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி வழியாக சென்ற போலீஸ் ரோந்து காருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.

மறுமுனையில் பேசிய சிறுவன் ஒரு விலாசத்தை குறிப்பிட்டு மேற்கண்ட விலாசத்தில் எமர்ஜன்ஸி . உடனடியாக உதவி தேவை என்று கூறினான்.

ஏதோ திருட்டு சம்பவம் நடந்திருக்க வேண்டும் என யூகித்துக்கொண்டு உருவிய துப்பாக்கியுடன் அந்த விலாசத்தில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்காரர் ஜீன் கிம்ப்டன் என்பவரை வரவேற்ற ஒரு சிறுவனை அவரை வீட்டின் உட்புறத்தில் இருந்த குளியலறைக்கு அழைத்து சென்றான்.

உள்ளே, குழந்தையின் தலை பாதி வெளியேறிய நிலையில் அந்த சிறுவனின் தாயார் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

சற்றும் தயங்காமல் தனது கைகளில் உறைகளை மாட்டிக்கொண்ட ஜீன் கிம்ப்டன், அந்த பெண்ணுக்கு தைரியம் கூறி, தாயையும் சேயையும் பிரித்தெடுத்தார். பின்னர், ஆம்புலன்சை வரவழைத்த அவர் பிரசவித்த பெண்ணையும், பிறந்த ஆண் குழந்தையையும் கரோல்டனில் உள்ள பேய்லர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உதவினார்.

இச்சம்பவம் தொடர்பாக புல்லரிப்புடன் பேட்டியளித்த ஜீன் கிம்ப்டன், எமர்ஜன்சி என்று அந்த சிறுவன் போன் செய்ததும் ஒரு திருடனை பிடிக்கப் போகிறோம் என்ற சுதாரிப்புடன் நான் துப்பாக்கியுடன் அந்த வீட்டினுள் நுழைந்தேன். ஆனால், இந்த பூமிக்கு ஒரு புதிய உயிரை அறிமுகப்படுத்திய பணியில் எனது பங்கும் உண்டு என்பதை எண்ணி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன் என்றார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

9 ஆண்டு கால பெட்ரோல் விலை உயர்வு சதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்: ஞானதேசிகன் பேட்டி I will vote in parliamentary elections the 9 year record gnanadesikan interview

- 0 comments

பாராளுமன்ற தேர்தலில் 9 ஆண்டு கால சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்: ஞானதேசிகன் பேட்டி I will vote in parliamentary elections the 9 year record gnanadesikan interview
Tamil NewsToday,

கோவை, செப். 30–

தமிழக காங்கிரஸ் சார்பில் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் கோவையை அடுத்த சாடிவயலில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தொடங்கி வைத்தார். முன்னாள் மத்திய மந்திரி பிரபு முன்னிலை வகித்தார். புறநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து 150 பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமை தொடங்கி வைத்த ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருச்சியில் நரேந்திர மோடி பங்கேற்ற பாரதீய ஜனதா கூட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மைதானத்தில் 35 ஆயிரம் பேர்தான் பங்கேற்க முடியும். லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்று திரித்து கூறுகிறார்கள்.

காங்கிரசில் வாரிசு அரசியல் உள்ளது என்று கூறுகிறார்கள். அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் உள்ளது. அதனை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புகிறோம். பாரதீய ஜனதா கட்சியினர் மோடியை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்போம். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பான விஷயத்தில் ராகுல் காந்தி கருத்தை வரவேற்கிறோம்.

பிரதமர் மன்மோகன்சிங் கிராமத்து பெண் போல பேசுகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் பிரதமர் அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை.

கோவை மாநகர் மாவட்டத்தில் டிவிசன் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில தலைவர் அனுமதி இல்லாமல் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த நியமனம் செல்லாது. பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டை வைத்து கூட்டணி அமையும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

தரங்கம்பாடி அருகே பலாத்கார முயற்சியில் இளம் பெண் தற்கொலை: 2 பேர் கைது try to woman molested two arrested

- 0 comments

தரங்கம்பாடி அருகே பலாத்கார முயற்சியில் இளம் பெண் தற்கொலை: 2 பேர் கைது try to woman molested two arrested

Tamil NewsToday,

குத்தாலம், செப்.30-

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கொத்தங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 35). இவரது மனைவி விஜயராணி (26). இவர்கள் குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலச்சந்திரன், அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் வேலி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. புஷ்பராஜ் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.

வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் விஜயராணியிடம், பாலச்சந்தரும், ரவிச்சந்திரனும் தகராறு செய்தனர். அப்போது தட்டிக்கேட்க வந்த புஷ்பராஜியின் தந்தை கணபதியையும் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயராணி வீட்டிற்கு வந்தவுடன் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.

பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி விஜயராணி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த விஜயராணி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது விஜயராணி, போலீசாரிடம் கூறியதாவது:–

எனது கணவர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலச்சந்திரன், அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோர் என் கையைப் பிடித்து இழுத்தனர். இதனால் மனவேதனை ஏற்பட்டு, மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விஜயராணி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

பாலச்சந்திரன் மயிலாடுதுறை கிளை சிறையிலும், ரவிச்சந்திரன் மைனர் என்பதால் தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger