
மனிதனுக்கு அடையாளங்கள் தவிர்க்க முடியாதவை. நினைவுகளும் அடையாளங்களும் இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய வீட்டிற்கே திரும்பிச்செல்ல முடியாது. காலத்தின் மாற்றமும் எம் எதிர்கால சந்ததிக்கு நினைவுகளை மட� ��டுமே கடத்திச்செல்ல முடிகின்றது....
பொங்கல் வருசம் வந்தாமட்டும் பாரம் பரிய நிகழ்சிகளில் இந்த கிளித்தட்டும் அரங்கேறும் எங்காவது ஒரிரு கழகங்கள் அதை அரங்கேற்றும். வென்றால் பரிசு என்று தான் விளையாடுறாங்க ஆனால் அதைபார்க்க ஒரு கூட்டம் வரும் அப்போது பார்ப்பவர்களின் நக்கல் பேச்சும் பன்பல்களும் விளையாட்டுபவர்களுக்கு எரிச்சல் ஊட்டுதாக இர ுந்தாலும் சந்தோசமாய் இருக்கின்றது. தொலைக்காட்சியின் ஊடாக பாரம் பரிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படும் போது அனைவரும் கண்டு கிளித்தட்டையும் கண்டு கொள்ள கூடியதாக உள்ளது. அப்போது பாட்டன் பாட்டிகள் தம் இளவட்ட நினைவுகளை மீட்டிப்பார்ப்பார்கள். தம் பேரன் பேத்திகளுக்கு சொல்லி தம் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறார்கள்
விஞ்ஞானம் வள்ர்� ��்தாலும் அறிவியல் வள்ர்ந்தாலும் எம் பாரம் பரியத்தின் தனித்துவமும் சந்தோசமும் கிடைக்குமா. கால மாற்றம் சந்தோஸங்களையும் மாற்றி விடுகின்றன. இன்றைய இளைஞர்களின் சந்தோஸங்களும் தேவைகளும் வேறுபட்டவை. அவர்கள் புதிய புதிய விடயங்களை தேடிப்பார்க்கவே விரும்புவார்கள். பழயன கழித்தலும் புதியன புகதலும் வழமையான ஒன்று என்று மனதை தேற்றிக்கொள்ள மட்டும்தான் முடியும்.
http://tamil-cininews.blogspot.com