Saturday 17 March 2012

மே 17 இயக்கம் அழைக்கிறது..தமிழர்களாய் கூடுவோம் மெரினாவில் மார்ச் 18 அன்று

- 0 comments
 



சாதி மதம் கட்சி என அனைத்து பிரிவினைகளையும் களைந்து தமிழராக ஒன்று கூடுவோம்.... இப்போதாவது...
[Continue reading...]

தமிழுக்கு வரும் ஏக்தா கபூர்!

- 0 comments
 
 
இந்தி திரையுலகில் வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை தயாரிப்பவர் ஏக்தா கபூர்.
 
சமீபத்தில் இவர் தயாரித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் 'THE DIRTY PICTURE'. வித்யா பாலன் அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றார்.
 
தமிழ் நடிகையான சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'THE DIRTY PICTURE' படத்திற்கு கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பால், ஏக்தா கபூர் தமிழ் திரையுலகிலும் தயாரிப்பாளராக வலம் வர திட்டமிட்டு இருக்கிறாராம்.
 
ஏக்தா கபூர் தயாரிக்கும் முதல் படத்தினை 'கற்றது தமிழ்' படத்தின் இயக்குனரான ராம் இயக்க இருக்கிறாராம். தற்போது கெளதம் மேனன் தயாரிப்பில் 'தங்க மீன்கள்' படத்தினை இயக்கி வரும் ராம், அப்படத்தினை முடித்துவிட்டு ஏக்தா கபூர் தயாரிக்கும் படத்தினை துவங்குவாராம்.
 
'கொசுறு' கபாலி : " கோலிவுட்டுக்கு வரதுக்கு முன்னாடி பாலிவுட் இயக்குனர்கள் ராஜ்குமார் சந்தோஷி, கோவிந்த் நிஹ்லானி கிட்ட ராம் வேலை பார்த்திருக்காரு.."



[Continue reading...]

tamil ina thurogi karunanidhi,koodankulam protest

- 0 comments

[Continue reading...]

கருப்பசாமி தாய் -தந்தையுடன் வைகோ, விஜயகாந்த் : அதிமுக டென்ஷன்

- 0 comments
 
 
 
சங்கரன்கோவில் முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினருக்கு சீட் தரப்படவில்லை என்பதில் உறவினர்களிடையே வருத்தம் இருந்தது. சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்திற்கு கருப்பசாமியின் கிராமமான புளியம்பட்டிக்கு வைகோ சென்றிருந்தார்.
 
 
அப்போது அவர், கருப்பசாமியின் தந்தை சொக்கனை சந்தித்து வாழ்த்து பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
எனவே மறுதினமே கருப்பசாமியின் குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா சென் னைக்கு வரவழைத்து சந்தித்தார்.கருப்பசாமியின் மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கினார்.
 
இந்நிலையில் நேற்று புளியம்பட்டிக்கு சென்ற விஜயகாந்த், கருப்பசாமியின் தாயார் லட்சுமியை சந்தித்து நலம் விசாரித்தார். சில போட்டோக்களையும் எடுத்துக்கொண்டார்.
 
 
வைகோவை தொடர்ந்து விஜயகாந்தும் புளியம்பட்டிக்கு சென்று அளவளாவிய சம்பவம் அ.தி.மு.க.,வினரிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தங்கள் பாட்டியை காணவில்லை என கூறி தே.மு.தி.க.,வினர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
 
 

 


[Continue reading...]

சீமான் மற்றும் பலர் கலந்து கொள்ளும் தமிழ் ஊடக /ஈழத் தமிழர் வாழ்வியல் பதிவுகள் (நேரலை / Live )

- 0 comments
 

லொயோலா கல்லூரியில் நடைபெற இருக்கும் ஆய்வரங்கம் நிகழ்ச்சி எமது இணையம் ஊடாக நேரலை செய்யபடுகின்றது. இதில் சீமான் , அற்புதத்தம்மாள், கவிஞர் அறிவுமதி, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர் பீ. லெனின், முனைவர் ஜோ அருண், பேராசிரியர் அ. மார்க்ஸ், எழுத்தாளர் சி. மகேந்திரன், எழுத்தாளர் பாமரன், ஊடகக் கலைகள் துறைத் தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார், முனைவர் ரேவதி ராபர்ட், முனைவர் ஞான பாரதி, பல்துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்… பலர் பங்கு பற்றுகின்றனர்.

முதுகலை ஊடகக் கலைகள் துறை (தமிழ்வழி), லொயோலா கல்லூரி
மற்றும் மக்கள் ஆய்வகம் இணைந்து நடத்தும்

தமிழ் ஊடக/இலக்கிய/அரசியல்/ஈழத் தமிழர் வாழ்வியல் பதிவுகள்

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தைத் தொடக்கப்புள்ளியாய் வைத்து…

ஆய்வரங்கம்

நாள் & நேரம்
17.03.2012, பிற்பகல் 02.30 முதல் 05.30 வரை

இடம்
லொயோலா கல்லூரி, சென்னை

ஆய்வரங்க நோக்கம்

இன்று அனைத்து உலக நாடுகளின் கவனமும் குவிந்துள்ள
ஈழத் தமிழரின் சமகால வாழ்வியல் அனுபவங்களைத்
தமிழக அரசியல் பின்புலத்தில்
தமிழ் ஊடகங்களும் இலக்கியங்களும்
எப்படிப் பதிவுசெய்துள்ளன /செய்து வருகின்றன என்பதை
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தைத்
தொடக்கப்புள்ளியாக வைத்து ஆய்வுக்கு உட்படுத்த…

ஆய்வரங்கத் தலைப்புகள்

தமிழக அரசியல் சுழலில் ஈழம் / தமிழினம்…
ஈழ வாழ்வியல் குறித்த தமிழ்த் திரைக் கலைஞர்களின் நிலைப்பாடு…
தமிழ்த் திரைப்படங்களில் ஈழ வாழ்வியல் பதிவுகள் – உச்சிதனை முகர்ந்தால் வரை
தமிழ்ச் செய்தி ஊடகங்களில் ஈழ நிகழ்வுகள்…
தமிழ்ப் படைப்பாளிகள் பார்வையில் ஈழத் தமிழர் வாழ்வியல்…
பன்னாட்டுப் பார்வையில் ஈழ நிகழ்வுகள்…
ஈழ நிகழ்வுகள் குறித்த தமிழக மக்கள் உணர்வலைகள்;…
மானுடவியல் நோக்கில் தமிழின மீட்சி

ஆய்வரங்கப் பகிர்வாளர்கள்

அற்புதத்தம்மாள், கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர்
பீ. லெனின், முனைவர் ஜோ அருண், பேராசிரியர் அ. மார்க்ஸ், எழுத்தாளர் சி. மகேந்திரன்,
எழுத்தாளர் பாமரன், ஊடகக் கலைகள் துறைத் தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார், முனைவர்
ரேவதி ராபர்ட், முனைவர் ஞான பாரதி, பல்துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்…

…கலந்துரையாட ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
சாரோன் செந்தில்குமார் (ஊடகக்கலைகள் துறை) 9444285103 /
அடைக்கலராஜ் (மக்கள் ஆய்வகம்) 9940365485

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger